சுட்டெரிக்கும் வெயிலில் சுவையான தர்பூசணி ஐஸ்கிரீம்...செய்வது எப்படி தெரியுமா?
ஒரு முழு தர்பூசணி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை கரண்டி கொண்டு நன்கு நசுக்கி சாறு எடுக்க வேண்டும்.
பின்னர் அந்த சாரை மிதமான தீயில் வைத்து சூடு படுத்தி திடமான கலவையாக வந்த உடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
அடுத்ததாக சர்க்கரை மற்றும் கிரீம் மில்க்கை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.
பின்னர் தயாரித்து வைத்துள்ள தர்பூசணி திரவத்தை அதனுடன் சேர்த்து, கலக்கி ஒரு நல்ல கிரீம் பதத்திற்கு கொண்டு வரவேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் மாற்றி, பிரிட்ஜில் 4 முதல் 5 மணி நேரம் வைக்க வேண்டும்.
5 மணிநேரம் கழித்து எடுத்து பரிமாறினால் சுவையான தர்பூசணி ஐஸ்கிரிம் ரெடி.