இளம் வயதிலேயே தோல் சுருங்குவதற்கான காரணம் என்ன தெரியுமா?
புற ஊதாக்கதிர்கள் தோலில் உள்ள கொலாஜன் உற்பத்தியை குறைத்து தோலினை சுருங்கச்செய்கிறது.
மது மற்றும் புகைப்பழக்கம் உடலின் ரத்த ஓட்டத்தை குறைப்பதால் தோல்கள் சுருங்க ஆரம்பித்துவிடும்.
மன அழுத்தத்தில் இருப்பவர்களின் உடலில் கொலாஜன் உற்பத்தி பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு தோல் சுருக்கம் ஏற்படக்கூடும்.
வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு எளிதில் தோல் சுருக்கம் ஏற்படக்கூடும்.
உடலில் சத்துக்குறைபாடு காரணமாக தோல் சுருக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.