.
சற்று முன் :
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 140 ரன்கள் குவிப்பு
இந்தியா வலிமையடைய எனது தாயார் சோனியா காந்திக்கு வாக்களியுங்கள் பிரியங்கா பேச்சு
வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்தார்

Advertisement

அ.தி.மு.க. நிர்வாகி கொலை கைதானவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செசன்சு கோர்ட்டு உத்தரவு

சென்னை,

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் மோசஸ். இவர், அ.தி.மு.க. வட்டச்செயலாளராக பதவி வகித்தார். இவர் கடந்த மார்ச் 28–ந்தேதி ராயப்பேட்டை பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருண் (வயது 20), பிரதீப்குமார் (19), மணிகண்டன் (20), ஸ்ரீதர் (19), உசேன்அலி (26) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று அருண் உட்பட 5 பேரும் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆதிநாதன், ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

category:

News Group Category:

Advertisement

Advertisement

Most Read