.
சற்று முன் :
பத்மநாபசுவாமி கோயில் சொத்து; சிறப்பு கணக்கு தணிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
வாரணாசி தொகுதியில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்
பாராளுமன்றத் தேர்தலில் நல்லவர் வெல்வது நிச்சயம் - விஜய்காந்த்

Advertisement

அமெரிக்காவில் தொடரும் வன்முறை சிகாகோ நகர பூங்காவில் புகுந்து மர்ம நபர் சுட்டதில் 12 பேர் காயம்

Syndicate

Subscribe to Syndicate

Text Resize

-A +A

சிhttp://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/us20.jpgகாகோ,

அமெரிக்காவில் துப்பாக்கியால் சுடும் கலாச்சாரம் சமீபத்தில் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசாங்கம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வாஷிங்டனில் அதிபரின் வெள்ளைமாளிகை அருகேயுள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் ஆரோன் அலெக்சிஸ் (34) என்பவர் கண்மூடித்தனமாக சுட்டதில் இந்தியர் உள்பட 12 பேர் செத்தனர். ஆரோனும் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இந்நிலையில் சிகாகோ நகரிலுள்ள பிரபல பூங்காவிற்குள் நேற்று  இரவு மர்ம நபர் நுழைந்து அங்கிருந்தவர்கள் நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் 3 வயது குழந்தை உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். உடனே இவர்களை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். இவர்களில் குழந்தை மற்றும் 2 பேர் கவலைக்கிடமாக இருக்கிறார்கள். சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறும்போது, ‘பூங்காவிலுள்ள கூடைப்பந்து மைதானம் பகுதியில் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். அப்போது காரில் வந்து இறங்கிய நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடி விட்டார்’ என்றார். இந்த மர்ம நபர் இன்னும் சிக்கவில்லை.

இந்த சிகாகோ நகர் அமெரிக்காவிலேயே வன்முறை நகராக மாறி வருகிறது. எப்.பி.ஐ. வெளியிட்ட அறிக்கையில், சிகாகோவில் 2012–ம் ஆண்டில் 500 கொலைகள் நடந்தன. இதற்கு அடுத்த இடத்தை நியூயார்க் பெற்று அங்கு 419 கொலை நடந்துள்ளது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

image: 

category:

News Group Category:

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read