.
சற்று முன் :
வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்தார்

Advertisement

சென்னை ரேஷன் கடைகளில் மிளகாய் பொடி, தேங்காய் எண்ணெய் வாங்கச் சொல்லி ஊழியர்கள் வற்புறுத்தல் பொதுமக்கள் புகார்

Syndicate

Subscribe to Syndicate

Text Resize

-A +A

சென்னை

சென்னை ரேஷன் கடைகளில், மானிய விலை பொருட்களுடன் மிளகாய் பொடி, தேங்காய் எண்ணெய் பாக்கெட் வாங்கச் சொல்லி ஊழியர்கள் வற்புறுத்துவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தேங்காய் எண்ணெய் – மிளகாய் பொடி

தற்போது, ரேஷன் கடைகளில் இலவச அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மண்எண்ணெய் ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், தேயிலை, சிறுபருப்பு, கொண்டைக்கடலை, கடுகு, கடலை பருப்பு, பொரி கடலை ஆகியவை பாக்கெட் செய்து விற்பனை செய்யப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் இந்த பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்ற நிலை உள்ளது.

ஆனால், சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த சில மாதங்களாக, ‘ஜெய் அம்மா’ என்ற பெயரில் குழம்பு மிளகாய் பொடியும் (50 கிராம்), ‘கங்கா கோல்டு’ என்ற பெயரில் தேங்காய் எண்ணெயும் (50 மி.லி.) விற்கப்படுகிறது. ஆனால், இந்த 2 பொருட்களில் ஒன்றை கண்டிப்பாக வாங்கினால்தான் மற்ற பொருட்கள் வழங்க முடியும் என்று ஊழியர்கள் கூறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பொதுமக்கள் புகார்

பலர் வேண்டா வெறுப்பாக, இந்த பொருட்களில் ஒன்றை கூடுதலாக வாங்கிச்செல்கின்றனர். இதுகுறித்து, ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டபோது, ‘‘நாங்கள் என்ன செய்வது, எங்களை கண்டிப்பாக விற்க சொல்கின்றனர்’’ என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

கொடுங்கையூரை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் கூறும்போது, ‘‘மாதந்தோறும் ரேஷன் கடைகளில் வாங்கும் 15 கிலோ இலவச அரிசியை வைத்துத்தான் பட்டினி இல்லாமல் சாப்பிட்டு வருகிறோம். ஆனால், அரிசி வாங்க ரேஷன் கடைகளுக்கு சென்றால், மிளகாய் பொடி, தேங்காய் எண்ணெய் போன்றவற்றை வாங்கச் சொல்கின்றனர். எங்களைப் போல் குறைந்த சம்பளம் வாங்குபவர்கள், கொஞ்சம் பணத்தை வைத்துக்கொண்டுதான் ரேஷன் கடைக்கு வருகிறோம். இப்படி வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினால் என்ற செய்வது?’’ என்று கேள்வி எழுப்பினர்.

சென்னையில் இயங்கும் முழு நேர ரேஷன் கடைகள் பெரும்பாலும் மதியத்திற்கு மேல் இயங்குவது கிடையாது என்றும், பொருட்கள் எவ்வளவு இருக்கிறது? என்று கணக்கு பார்க்க வேண்டியுள்ளது என்று ஊழியர்கள் கூறிவிடுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

 
 

News Group Category:

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read