.
சற்று முன் :
காங்கிரஸ் கட்சி மாலுமி இல்லாத கப்பல் போன்றது: ராஜ்நாத் சிங்
பிரதமரின் செயல்பாடுகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தரவில்லை: பிரதமர் ஊடக ஆலோசகர்
அமித் ஷாவிற்கு ஆதரவாக செயல்படவில்லை: தேர்தல் கமிஷன் விளக்கம்
”உயிருக்கு ஆபத்து” பிரியங்கா , ராபர்ட் வதொரா மீது ஆம் ஆத்மி தலைவர் குமார் விஷ்வாஸ் புகார்
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பம்
தேர்தலுக்கு பிறகு தி.மு.க.வின் ஆதரவு தேவைப்பட்டால் பரிசீலிப்போம் சசிதரூர்
ராஜ்நாத்சிங் இன்று தமிழகம் வருகை

Advertisement

ரேசன் கடை பெண் ஊழியர் அடித்து, தீ வைத்து எரித்து கொலை

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

கஞ்சாம்,

ஒடிசா மாநிலம் ராம்பா பகுதியில் உள்ள ரேசன் கடையில் வேலை பார்க்கும் பிராந்தி நாய்க் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றுவிட்டு தனியாக தனது வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் அங்கு வந்துள்ளனர். மின்சாரம் இல்லாத அந்த பகுதியில் பிராந்தியை மறித்து கூர்மையான ஆயுதங்களால் குத்தி கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

காயம் அடைந்த பெண் உதவி என்று அலறிகொண்டே வீடு நோக்கி தீ காயங்களுடன் தொடர்ந்து ஓடிவந்துள்ளார். அவரை ஊர் மக்கள் காப்பாற்றி அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக விசாகப்பட்டிணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். அவர் இறப்பதற்கு முன்னதாக குற்றவாளிகளின் பெயரை போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொருட்களை முறைகேடாக விநியோகம் செய்ததாக ரேசன் பெண் ஊழியர் மீது குற்றச்சாட்டு இருந்துள்ளது. ஆனால் இது தொடர்பாக எந்த ஒரு புகாரும் தெரிவிக்கப்படவில்லை.
 

category:

News Group Category:

தொடர்புடைய செய்திகள்

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement