கேப்டன் பதவியில் இருந்து டோனி தானாக விலகவில்லை, கேட்டுக் கொள்ளப்பட்டார்||Mahendra-Singh-Dhoni-did-not-quit-he-was-asked-to
home
கேப்டன் பதவியில் இருந்து டோனி தானாக விலகவில்லை, கேட்டுக் கொள்ளப்பட்டார்
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
172
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
திங்கள் , ஜனவரி 09,2017, 3:08 PM IST
பதிவு செய்த நாள்:
திங்கள் , ஜனவரி 09,2017, 3:08 PM IST
மும்பை, 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் டோனி தானாக விலகவில்லை என்றும் அவர் பதவியில் இருந்து விலக கேட்டுக் கொள்ளப்பட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி கடந்த 4-ம் தேதி விலகினார். அதே சமயம் ஒரு வீரராக தொடர்ந்து விளையாடுவேன் என்றும் அறிவித்துள்ளார். டோனி தானாகவே இம்முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் டோனி தானாக விலகவில்லை என்றும் அவர் பதவியில் இருந்து விலக கேட்டுக் கொள்ளப்பட்டார் என்ற தகவல்கள் தெரிவித்து உள்ளன என இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு உள்ளது. மகேந்திர சிங் டோனி தானாகவே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தகவல்கள் தெரிவித்து உள்ளதாக செய்தி வெளியிட்டு உள்ளது. நாக்பூரில் ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் அணிகள் இடையே நடைபெற்ற ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், மகேந்திர சிங் டோனியை சந்தித்து பேசினார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் செயல்பாட்டை அடுத்து டோனி கேப்டன் பதவியில் இருந்து விலகவேண்டும் என்ற நெருக்கடியானது அதிகரித்து உள்ளது. நாக்பூரில் டோனியுடன் இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதனையடுத்தே டோனி பதவி விலகல் என்ற அறிவிப்பை வெளியிட்டார் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன.

டோனி விலகல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுகையில் பிரசாத் அவருடைய முடிவை பாராட்டினார். “சரியான நேரத்தில் அவருடைய உணர்வுக்கு, அவருக்கு நான் பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன். டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை ஏற்று சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி சரியானவர் என்பதை நிரூபித்து உள்ளார் என டோனி தெரிந்திருப்பார்,” என்று பிரசாத் மீடியாவிடம் தெரிவித்து இருந்தார். ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடாமல் டோனி ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிசிசிஐ உயர் அதிகாரியை எரிச்சல் அடைய செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது, அதன் விளைவாக கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவும் டோனிக்கு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

முன்னாள் பிசிசிஐ தலைவர் என் ஸ்ரீனிவாசனின் விருப்பத்திற்குரியவராக டோனி கருதப்படுகிறார். 2014-ம் ஆண்டு இங்கிலாந்து தொடரை அடுத்து டோனி கேப்டன் பதவியை இழந்து இருக்கவேண்டும். முன்னாள் தேர்வு குழு தலைவர் மொகிந்தர் அமர்நாத் இம்முடிவை முன்னெடுக்க விரும்பினார், ஆனால் பெரும் அழுத்தத்தில் இருந்த டோனியை ஸ்ரீனிவாசன் காப்பாற்றினார். இதற்கிடையே அமர்நாத் தேர்வுக்குழு தலைவர் என்ற பொறுப்பை இழந்தார். பின்னர் நிலை மாறியதும் விராட் கோலியிடம் டெஸ்ட் கிரிகெட் கேட்பன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

35 வயதான டோனி, 2007–ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011–ம் ஆண்டு ஒரு நாள் போட்டி (50 ஓவர்) உலக கோப்பையையும் இந்தியாவுக்கு வென்றுத்தந்த மகத்தான சாதனையாளர். மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையையும் 2013–ம் ஆண்டு இவரது தலைமையில் இந்திய அணி ருசித்துள்ளது. ஐ.சி.சி.யின் இந்த மூன்று பெரிய போட்டிகளிலும் மகுடம் சூடிய ஒரே கேப்டன் என்ற அரிய பெருமைக்குரியவர் டோனி ஆவார்.
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
172
பிரதி
Share

கருத்துக்களை பதிவு செய்ய இங்கே லாக் ஆன் செய்யவும்:
OR
*  
இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.
அதிகபட்ச எழுத்துக்கள் - 1500
முக்கிய குறிப்பு: தினத்தந்தி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு தினத்தந்தி நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு webeditor@dt.co.in என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
அதிக கருத்துக்கள் பதிவு செய்தவர்கள்
img
Bronze 3191 crone
1
img
Bronze 2817 crone
2
img
Bronze 995 crone
3
img
Bronze 832 crone
4