.
சற்று முன் :
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பம்
பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சபரிமலை அய்யப்பன் கோவிலில் சிறப்பு தரிசன வசதி
தேர்தலுக்கு பிறகு தி.மு.க.வின் ஆதரவு தேவைப்பட்டால் பரிசீலிப்போம் சசிதரூர்
ராஜ்நாத்சிங் இன்று தமிழகம் வருகை
குஜராத்தை விட தமிழ்நாடு தான் முதன்மை மாநிலம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா
ராகுல்காந்தி 21-ந்தேதி ராமநாதபுரம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
மோடியுடன் கொள்கை ரீதியாக ஒத்துப்போகும் கட்சி அ.தி.மு.க-கனிமொழி
தேசிய நதிகள் இணைக்கப்பட்டு தமிழக பாசன நீர் பிரச்சனை தீர்க்கப்படும் நரேந்திர மோடி
தோல்வி பயணத்தினால் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தேர்தலில் போட்டியிடவில்லை: மோடி
ராமேசுவரம் சிறந்த சுற்றுலா தலமாக மாற்றப்படும் நரேந்திர மோடி

Advertisement

2004 முதல் 2013–ஆம் ஆண்டில் இதுவரை உணவுப்பொருள்கள் விலை 157 சதவீதம் அதிகரிப்பு காய்கறி விலை 350 சதவீதம் உயர்வு

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

2004 முதல் 2013–ஆம் ஆண்டில் இதுவரை அனைத்து வகை உணவுப் பொருள்களின் விலையும் விஷம் போல் உயர்ந்துள்ளது. இது தொடர்பாக தற்போது வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் தலையை சுற்ற வைக்கின்றன. ஒட்டுமொத்த அளவில் உணவுப் பொருள்களின் விலை 157 சதவீதம் உயர்ந்துள்ளது. காய்கறி விலை மட்டும் 350 சதவீதம் அதிகரித்துள்ளது.

வெங்காயம்

கணக்கீடு செய்ய எடுத்துக் கொண்ட காலத்தில் வெங்காயம் விலை மட்டும் 521 சதவீதம் உயர்ந்துள்ளது. மற்ற உணவுப் பொருள்களைப் போலன்றி வெங்காயம் விலை மட்டும் படிப்படியாக ஏறுவது இல்லை. சில சமயங்களில் வெங்காயம் விலை ஒரு சில வாரங்களுக்குள் இரண்டு அல்லது மூன்று மடங்கு உயர்ந்து விடுவது சகஜமாக இருந்து வந்திருக்கிறது. 2010–11–ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் இவ்வாறு விலை திடீரென எகிறியது. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ.70–80 என்ற அளவில் உள்ளது.

நம் நாட்டில் மிகப் பிரதானமாக பயன்படுத்தப்படும் காய்கறிகளில் உருளைக்கிழங்கு மிக முக்கியமானது. 2009–ஆம் ஆண்டின் இரண்டாவது பகுதியில் உருளைக்கிழங்கு விலை ஏறக்குறைய 100 சதவீதம் ஏறியது. அதன் பிறகு 2010 ஜனவரியில்தான் விலை இறங்கியது.

இந்தியர்களின் மற்றொரு அபிமான உணவுப் பொருள் கத்தரிக்காய். 2004–ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது கத்தரிக்காய் விலை 311 சதவீதம் உயர்ந்துள்ளது. முட்டைக்கோஸ் விலை போட்டி போட்டிக் கொண்டு 714 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே போன்று பல்வேறு காய்கறிகளின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு சென்றுள்ளது.

2006–ஆம் ஆண்டில் ஒரு புதிய அச்சுறுத்தல் தோன்றியது. பருப்புதான் இதற்கு காரணமாக இருந்தது. இந்திய மக்களுக்கு புரதச் சத்தை வழங்கும் ஒரே உணவுப் பொருள் இது. 2005 தொடக்கத்திலிருந்து 2010–ஆம் ஆண்டு முடிவதற்குள் பருப்பு வகைகளின் விலை ஏறக்குறைய இரண்டு மடங்கு உயர்ந்தது. 2012–ஆம் ஆண்டில் மேலும் விலை உயர்ந்து, அந்த ஆண்டு செப்டம்பரில் வரலாறு காணாத அளவைத் தொட்டது. அதன் பிறகு பருப்பு விலை சற்றே இறங்கினாலும், 2004–ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இப்போது 123 சதவீதம் அதிகமாகத்தான் உள்ளது.

இந்தியாவின் பிரதான உணவு தானியங்கள் அரிசி மற்றும் கோதுமை. கணக்கீட்டு காலத்தில் அரிசி விலை 137 சதவீதமும், கோதுமை விலை 117 சதவீதமும் உயர்ந்துள்ளது. பழங்கள் விலை 95 சதவீதம் உயர்ந்துள்ளது. மா, வாழை, ஆரஞ்சு, பப்பாளி போன்ற பல முக்கிய பழங்களின் விளைச்சல் அதிகமாக இருந்து வரும் நிலையிலும் விலை அதிகரிப்பு என்பது ஒரு கட்டாய நடைமுறை போலவே இருந்து வந்துள்ளது.

உப்புக்கு நேர்ந்த கதி

உப்புக்கு நேர்ந்த கதி வியப்பாக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் உப்பு விலை 85 சதவீதம் உயர்ந்துள்ளது. பால் விலை 119 சதவீதம் அதிகரித்துள்ளது. முட்டை விலை 124 சதவீதமும், மசாலா பொருள்களின் விலை 119 சதவீதமும் உயர்ந்துள்ளது. சர்க்கரை விலை 106 சதவீதம் உயர்ந்துள்ளது.

category:

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read