.
சற்று முன் :
வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்தார்

Advertisement

இந்திய முஜாகிதீன் தீவிரவாதி தப்பி ஓட்டம்; பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் டிமிக்கி கொடுத்ததால் பரபரப்பு

Syndicate

Subscribe to Syndicate

Text Resize

-A +A

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/gujblast_0.jpgமும்பை,

மும்பை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த கைதி அப்சல் உஸ்மானி போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பியோடினான்.

பயங்கர குண்டுவெடிப்பு

குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் 2008–ம் ஆண்டு ஜூலை 26–ந் தேதி தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. 21 இடங்களில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 56 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 200–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த பயங்கர குண்டுவெடிப்பில் தொடர்புடையவன் அப்சல் உஸ்மானி. இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவன். அங்கு குண்டுவெடிப்பு நடந்த ஒரு மாதத்துக்கு பிறகு போலீசில் சிக்கினான். அவனிடம் நடத்திய விசாரணையில் சூரத் நகரிலும் குண்டுவைத்த பகீர் தகவல் தெரியவந்தது. ஆரம்ப காலத்தில் மும்பை தாதா கும்பலில் ஈடுபட்டு பல்வேறு குற்றங்களை செய்து வந்தான். இது தொடர்பாக மும்பை போலீசார் அவன் மீது பல வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். நவிமும்பையில் உள்ள தலோஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான்.

ஆஜர்படுத்தினர்

இந்த நிலையில் வழக்கு ஒன்றில் அப்சல் உஸ்மானி உள்பட 19 பேரை தலோஜா சிறையில் இருந்து மும்பை செசன்சு கோர்ட்டு வளாகத்தில் உள்ள ‘‘மோக்கா’’ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நேற்று மதியம் 1.30 மணிக்கு போலீசார் அழைத்து வந்தனர். இந்த வழக்கில் மேலும் 4 பேர் ஜாமீனில் வெளியில் உள்ளனர். அவர்களும் ஆஜராகி இருந்தனர். கோர்ட்டில் குற்றவாளிகள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக அவர்கள் அழைத்து வரப்பட்டு இருந்தனர்.

குற்றவாளிகளை அழைத்து வரப்பட்டபோதும், கோர்ட்டு வளாகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

தப்பியோட்டம்

இந்த நிலையில் அப்சல் உஸ்மானி கழிவறை சென்று வருவதாக போலீசாரின் கூறி சென்றான். ஆனால் திரும்பி வரவில்லை. அங்கிருந்து மாயமாகி விட்டான். இது பாதுகாப்புக்கு நின்ற போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அப்சல் உஸ்மானியை அந்த பகுதி முழுவதும் தேடினர். ஆனால் அவன் போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

இதற்கிடையே மதியம் 2.45 மணிக்கு நீதிபதி ஏ.எல்.பன்சாரே முன்னிலையில் கோர்ட்டு கூடியது. அப்போது குற்றவாளி அப்சல் உஸ்மானி தப்பியோடிய தகவலை அரசு வக்கீல் நீதிபதியிடம் தெரிவித்தார். அவனுக்கு கைது வாரண்டு பிறப்பிக்குமாறும் முறையிட்டார்.

நீதிபதி அதிருப்தி

இந்த சம்பவத்துக்கு நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார். ‘‘இது ஒரு தீவிர குற்றம். பாதுகாப்பு போலீசாரின் அலட்சியத்தால் சம்பவம் நடந்து உள்ளது. கைதி தப்பியோடிய சம்பவம் மற்ற வழக்குகளிலும் விளைவை ஏற்படுத்தும்’’ என்று கருத்து தெரிவித்தார். பின்னர் அப்சல் உஸ்மானியை கைது செய்ய வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய அப்சல் உஸ்மானி 4 கார்களை திருடி, அந்த வாகனங்களில் ஆமதாபாத் மற்றும் சூரத்துக்கு வெடிபொருட்களை கடத்தினான். மேலும் வெடிகுண்டு வைத்த குற்றச்சாட்டும் அவன் மீது பதிவு செய்யப்பட்டது. மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு பல்வேறு வழக்குகளில் துப்பு துலக்க அவன் முக்கிய புள்ளியாக இருந்தான்.

பாதுகாப்பு போலீசாரே அவனை நழுவ விட்டு இருக்கலாம் என்ற புகாரும் எழுந்து உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, தப்பியோடிய அவனை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

image: 

category:

News Group Category:

தொடர்புடைய செய்திகள்

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read