.
சற்று முன் :
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 140 ரன்கள் குவிப்பு
இந்தியா வலிமையடைய எனது தாயார் சோனியா காந்திக்கு வாக்களியுங்கள் பிரியங்கா பேச்சு
வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்தார்

Advertisement

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.23½ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் விற்பனை

Syndicate

Subscribe to Syndicate

Text Resize

-A +A

அந்தியூர்,

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.23½ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் விற்பனை ஆனது.

தேங்காய்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடைபெற்ற ஏலத்துக்கு அந்தியூரை சுற்றியுள்ள கிராமம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த விவசாயிகள் விவசாய விளைபொருட்கள் கொண்டு வந்து இருந்தனர். ஒழுங்குமுறைக்கூட கண்காணிப்பாளர் சுப்புராமன் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.

25 ஆயிரம் தேங்காய்கள் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்து இருந்தனர். இதில் சிறிய தேங்காய் ஒன்று ரூ.5–க்கும், பெரிய தேங்காய் ஒன்று ரூ.13–க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. கோவில் விழா என்பதால் தேங்காய் விலை உயர்ந்துள்ளது.

கொப்பரை தேங்காய்

கொப்பரை தேங்காய் 200 மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தது. அவற்றில் குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்து 416–க்கும், அதிகபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 639–க்கும் ஏலம் விடப்பட்டது. மொத்தம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆமணக்கு 5 மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தது. அவற்றில் குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக 3 ஆயிரத்து 186 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 3 ஆயிரத்து 710 ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டது. மொத்தம் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

மக்காச்சோளம்

மக்காச்சோளம் 150 மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தது. அவற்றில் குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.1,464–க்கும், அதிகபட்ச விலையாக ரூ.1,522–க்கும் ஏலம் விடப்பட்டது. மொத்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

பருத்தி 600 மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தது. அவற்றில் பி.டி. காட்டன்பருத்தி குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக 5 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்துக்கும் ஏலம் விடப்பட்டது. கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 500–க்கும், அதிகபட்ச விலையாக ரூ.3 ஆயிரத்திற்கும் ஏலம் விடப்பட்டது.

ரூ.23½ லட்சத்துக்கு...

நிலக்கடலை 200 மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தது. இதில் காய்ந்த நிலக்கடலை குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.3 ஆயிரத்து 244–க்கும், அதிகபட்ச விலையாக ரூ.4 ஆயிரத்து 300–க்கும், பச்சை நிலக்கடலை குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.1,707–க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 850–க்கும் ஏலம் விடப்பட்டது. மொத்தம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

நேற்று நடந்த ஏலத்தில் விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.23 லட்சத்து 60 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

====

category:

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read