Daily Thanthi World news | Tamil News | Tamil Newspaper | Online Tamil News Jhodhidam Details
home
Rasi Image
இன்றைய ராசி பலன்கள்
Up

காலையில் சலசலப்பும், மாலையில் கலகலப்பும் ஏற்படும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலுமா என்பது சந்தேகம் தான். நண்பர்களை ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும்.

வார பலன்கள்
Up

13.1.2017 முதல் 19.1.2017 வரை

செய்வதை சிறப்பாக செய்யும் மகர ராசி அன்பர்களே!

ஞாயிறு முதல் செவ்வாய் காலை 9.15 மணி வரை
சந்திராஷ்டமம் உள்ளதால், முடிவுகளில் நிதானம் அவசியம்.

உத்தியோகம்: உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த காரியங்கள் இனிதே நடைபெறலாம். தள்ளிவைத்த காரியம் ஒன்றை உடனே செய்யும் சூழல் ஏற்படும்.

தொழில்: சொந்தத்தொழில் செய்பவர்கள் புதிய நவீன  பொருட்களின் விற்பனையை அனுசரித்து புதிய தொழில் தொடங்க எண்ணுவீர்கள். நிலுவைகள் வசூலாகும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். என்றாலும், அலைச்சலும், முயற்சியும் அதிகரிக்கும். பங்குச்சந்தை வியாபாரிகள் கணிசமான லாபம் பெறலாம். புதிய பங்குகளின் வரவால் லாபம் அதிகரிக்கும்.

கலை: கலைஞர்கள் தங்கள் பணிகளில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து வாய்ப்பையும் வசதியையும் அதிகரிக்கும். பழைய துணிகளிலும் நல்ல வருமானம் உண்டு.

குடும்பம்: குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். அவற்றை சமாளித்து விடுவீர்கள். இல்லத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

வார வழிபாடு:– நவக்கிரகத்தில் உள்ள சனி பகவானுக்கு
நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபட மனசாந்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 3,5,8
அதிர்ஷ்ட நிறம்:– கருநீலம்
அதிர்ஷ்டக்கிழமை:– சனி

தமிழ் மாத ஜோதிடம்
Up
தை மாத ராசி பலன்கள்

14.1.2017 முதல் 12.2.2017 வரை

உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதம் வரை

விரயங்கள்  கூடும்  நேரம்!

கல்வியைக் காட்டிலும் அனுபவத்தால் பெருமை பெறும் மகர ராசி அன்பர்களே!

உங்களின் தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே அஷ்டமாதிபதி சூரியன் சஞ்சரிக்கிறார். அதுமட்டுமல்லாமல் 2–ல் கேதுவும், 8–ல் ராகுவும் உலா வருகிறார்கள். எனவே விரயங்கள் ஏற்படா திருக்க விழிப்புணர்ச்சி அதிகம் தேவைப்படும்.

இருந்தாலும் குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதிவதால் மலைபோல் வந்த துயரம் பனி போல விலகும். ஆனால் அந்த குரு மாதத் தொடக்கத்திலேயே இரண்டு தினங்களில் பெயர்ச்சியாகி விடுகிறார். அவர் வக்ர இயக்கத்தில் வந்தாலும் கூட 10–ம் இடத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. பணிச்சுமை அதிகரிக்கும். பல காரியங்கள் செய்ய நினைத்தும் செய்ய இயலாமல் போகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத மாற்றங்கள் உருவாகலாம். குருவினுடைய பார்வை பதியும் இடங்கள் சிறப்பாக இருந்தாலும், இருக்குமிடத்தைப் பொறுத்தவரை கர்ம ஸ்தானம் என்பதால், பெற்றோர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் வழியிலும் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். சில பிரச்சினைகளைக் கண்டும் காணாமல் இருப்பதுதான் நல்லது.

வாக்கு ஸ்தானத்தில் கேது இருப்பதால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலுமா? என்பது சந்தேகம் தான். யாருக்கும் வாக்குக் கொடுக்கும் முன் ஒருகணம் யோசித்துச் சொல்வது நல்லது. அரசியலிலோ, பொதுநலத்திலோ இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மாற்றப்படும். பொறுப்புகள் மனதிற்கு பிடிக்காவிட்டாலும் கூட அதை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை உருவாகிவிடும். பொதுவாக ராகு–கேது பெயர்ச்சிவரை சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டினாலும் அல்லது புதியதொழில் தொடங்க திட்டங்கள் தீட்டினாலும் கொஞ்சம் யோசித்துச் செய்யுங்கள். திட்டங்கள் தீட்டுவதில் தவறில்லை. தீட்டிய திட்டங்கள் வெற்றி பெற வேண்டுமல்லவா? அதற்கு உகந்த விதத்தில் நேரமும் நமக்கு ஒத்துழைக்க வேண்டும். நினைத்தது நிறைவேற வழிபாடுகளையும் நாம் மேற்கொள்ளவேண்டும்.

பொதுவாக இம்மாதம் குரு தட்சிணாமூர்த்திக்கு முல்லைப்பூ மாலை அணிவித்து மஞ்சள் வண்ண வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்து வழிபட்டு வருவது நல்லது. விரதங்கள் இருப்பதன் மூலமும் வீடு தேடி நன்மைகள் வந்துசேரும். பிரதோ‌ஷ நாளில் நந்தியை வழிபட்டு வாருங்கள். மேலும் நின்ற கோலத்து ஆஞ்சநேயரை கொண்டாடி மகிழுங்கள். அவருக்கு வடை மாலை அணிவிப்பதன் மூலம் தடைகள் நிவர்த்தியாகும்.

மீன செவ்வாயின் சஞ்சாரம்!

ஜனவரி 16–ந் தேதி மீனராசிக்குச் செவ்வாய் செல் கிறார். உங்கள் ராசிக்கு 4,11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது ஒருவழிக்கு நன்மைதான். இடம், பூமி வாங்குவதில் இருந்த தடைகள் அகலும். கடன் சுமை குறையும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்துசேரும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

குருவின் வக்ர இயக்கம்!

குரு, ஜனவரி 16–ந் தேதி துலாம் ராசிக்கு வக்ரமாக வருகிறார். அதன் பார்வை 2,4,6 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றிகிடைக்கும். வாகனப்  பழுதுகளால் வாட்டம் ஏற்பட்டு பழைய வாகனங்களைக் கொடுத்து விட்டுப் புதிய வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.

மீன சுக்ரனின் சஞ்சாரம்!

ஜனவரி 27–ந் தேதி மீனத்திற்கு, சுக்ரன் செல்கிறார். 5,10–க்கு அதிபதியான சுக்ரன் அந்த வீட்டில் உச்சம் பெறுகிறார். எனவே இந்தநேரம் ஒரு இனிய நேரமாகும். வந்த துயர் விலகும். வளர்ச்சி கூடும். எந்த விதத்திலும் உங்கள் முன்னேற்றம் பாதிக்காது. இடையில் வந்த சொந்தங்களால் ஏற்பட்ட இடையூறுகள் அகலும். கடைதிறப்பு விழாக்களையும், கட்டிடத் திறப்பு விழாக்களையும் காண்பீர்கள்.

மகர புதனின் சஞ்சாரம்!

ஜனவரி 30–ந் தேதி மகர ராசிக்கு, புதன் செல்கிறார். 6–க்கு அதிபதியான புதன் 8–க்கு அதிபதியான சூரியனுடன் இணையும் பொழுது, திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திடீர் திருப்பங்கள் உங்களுக்கு நன்மையாகவே அமையும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த பகை மாறும்.

இம்மாதம் பெருமாள், லட்சுமி, அனுமன் வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

இம்மாதம் வரவும், செலவும் சமமாகவே இருக்கும். வாய்ப்புகள் வந்தாலும் உபயோகப்படுத்திக் கொள்ள  முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். அஷ்டமாதிபதி உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால் கடைசி நேரத்திலேயே பணத்தேவைகள் பூர்த்தியாகும். கணவன்–மனைவிக்குள் அனுசரித்துச் செல்வதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உடன்பிறப்புகள் சுக்ரப் பெயர்ச்சிக்குப் பின்னால் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு குறையலாம். நீண்ட தூர மாறுதல் ஏற்படலாம். சனிக்கிழமை ஆதியந்தப் பிரபு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். செவ்வாய் தோறும் முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–

ஜனவரி: 17,18,22,24,31 பிப்ரவரி: 3,4

மகிழ்ச்சிதரும் வண்ணம்:– நீலம்
ஆண்டு பலன்
Up
01-01-2017 முதல் 31-12-2017  வரை

உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)

வழிபாட்டால்  வளர்ச்சி கூடும்  ஆண்டு!

கடமையிலேயே கண்ணும் கருத்துமாக விளங்கும்  மகர ராசி அன்பர்களே!

பொதுவாக கிரகங்களில் வலிமையானவர் சனி. அவரை ராசிநாதனாகப் பெற்ற நீங்கள், நல்ல உழைப்பாளிகளாகத் திகழ்வீர்கள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். சுற்றத்தார்களைப் போற்றிக் கொண்டாடி, நல்ல பெயர் எடுத்துக்கொள்வீர்கள். எல்லோருக்கும் நல்லவராக வாழ ஆசைப்படும் நீங்கள், அதனால் ஏமாற்றங்களையும் சந்திப்பீர்கள். எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் ஒரு தனி முத்திரையைப் பதிப்பீர்கள். படிப்பறிவை விட அனுபவம் தான் உங்களுக்கு கைகொடுக் கும். தெரியாத பல விஷயங்களைக் கூட தெரிந்தது போல் காட்டிக் கொள்வீர்கள். தீட்டிய திட்டங்கள் வெற்றிபெற தெய்வ வழிபாடுகள் கைகொடுக்கும்.

உங்கள் ரகசியங்களை யாரிடமும் வெளிப்படுத்த மாட்டீர்கள். உடைமைகளைப் பாதுகாப்பதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வியக்கும் விதத்தில் உபசரிப்பீர்கள். எல்லா நெளிவு சுழிவுகளையும் கற்று வைத்திருக்கும் நீங்கள் நிதானத்தால் நினைத்ததை எல்லாம் சாதிக்கலாம் என்று சொல்வீர்கள்.

இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு இந்தப் புத்தாண்டு எப்படி அமையப்போகிறது என்று பார்ப்போம். உங்கள் ராசியிலேயே இந்தப் புத்தாண்டு பிறப்பதால், உங்கள் ஜாதகத்தில் வலிமையான கிரகங்களின் பலமறிந்தும், தசாபுத்தி பார்த்து வழிபாடுகளை மேற்கொண்டால் இந்த ஆண்டு இனிமை தரும் ஆண்டாக அமையும்.

புத்தாண்டின் தொடக்கம்

உங்கள் ராசியிலேயே சந்திரன் வீற்றிருக்க, அவரைக் குரு பார்க்க, குரு– சந்திர யோகத்தோடு புத்தாண்டு பிறக்கிறது. அதுமட்டுமல்லாமல் உங்கள் ராசிக்கு 4,11 ஆகிய இடங்                 களுக்கு அதிபதியான செவ்வாய், உங்கள் ராசிநாதனான சனி வீட்டிலும், சனி–செவ்வாய் வீட்டிலும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார்கள். இந்த கிரக அமைப்பில் பிறக்கும் ஆண்டு, உங்களுக்கு யோகங்களையே வரவழைத்துக் கொடுக்கும். பொருளாதாரத்தில் உயர்வும், பொன், பொருள் வாங்கும் அமைப்பும், திருமண காரியங்கள் முதல் தெய்வீக காரியங்கள் வரை தடையின்றி நடைபெறும் சூழ்நிலை அமையப் போகிறது.

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 2–ல் கேதுவும், 8–ல் ராகுவும் இருக்கிறார்கள். 9–ம் இடத்தில் குரு சஞ்சரிக்கிறார். லாப ஸ்தானத்தில் சனி வீற்றிருக்கிறார். அவரோடு புதனும் லாப ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். கேதுவுடன் செவ்வாயும், சுக்ரனும் சேர்ந்து சஞ்சரிக்கின்றனர். சூரியன் 12–ல் இருக்கிறார். எனவே இப்படிப் பிறக்கும் புத்தாண்டில் ஒப்பந்தங்கள் வந்து உள்ளத்தை மகிழ்விக்கும். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிகளில் வெற்றியை வழங்குவதோடு, புதிய தொழில் தொடங்கும் எண்ணமும் உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மங்கள ஓசை மனையில் கேட்க வைப்பது குருவின் பார்வை. எனவே செப்டம்பர் 2–ந் தேதி வரை சுப நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறும்.

இதுபோன்ற காலங்களில் வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டலாம். சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால், பணிகளில் தொய்வு ஏற்படுமோ என்று கவலைப்பட வேண்டாம். உங்கள் ராசிக்கும், தன ஸ்தானத்திற்கும் அதிபதி சனி என்பதால், குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வெளிநாட்டில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும். சனிக்கிழமை தோறும் விரதமிருந்து துளசிமாலை அணிவித்து, பஞ்சமுக அனுமனை வழிபட்டு வருவது நல்லது. புத்தாண்டில் ராகு–கேது, குரு, சனி ஆகிய கிரகங்களின் மாற்றங்கள் நிகழ உள்ளது. ஏழரைச் சனி தொடங்கப் போகிறது.

அதே நேரத்தில் குரு 10–ம் இடத்திற்கு அல்லவா வரப்போகிறார். 10–ல் குரு வந்தால் பதவியில் மாற்றம் வரும் என்பது முன்னோர் வாக்கு. உங்கள் சுய ஜாதகத்தில் உத்தியோக ஸ்தானமும், திசாபுத்தியும் நன்றாக இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்படியிருக்கும் பட்சத்தில் குருப்பெயர்ச்சிக்கு முன்னதாகவே திசைமாறிய தென்முகக் கடவுளை வழிபட்டு வருவது நல்லது.

ஜென்ம கேதுவும், சப்த ராகுவும்

27–7–2017 அன்று ராகுவும், கேதுவும் பெயர்ச்சியாகப்போகிறார்கள். இதுவரை 8–ல் சஞ்சரித்த ராகு, இனி 7–ல் சஞ்சரிக்கப் போகிறார். 2–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த கேது, இனி ஜென்மத்தில் சஞ்சரிக்கப் போகிறார்.  ஆன்மிக நாட்டத்தை அதிகரிக்க வைக்கும். அருகில் இருப்பவர்களோடு கருத்து வேறுபாடுகளை அதிகரிக்கச் செய்யும். எனவே உறவினர்

களாக இருந்தாலும் சரி, உடன் இருப்பவர்களாக இருந்தாலும் சரி கவனத்தோடு பேசுவது நல்லது. ஒற்றுமை பலப்பட விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.  குடும்பப் பிரச்சினையை சமாளிக்க தன்னம்பிக்கை அதிகம் தேவை. உறவினர்களில் ஒருசிலர் உங்களை விட்டுப் பிரிந்து செல்ல நேரிடும். எனவே, சமயமறிந்து சந்திரபலம் அறிந்து நடந்து கொள்வதன் மூலமே, பகையை மாற்றிக் கொள்ள இயலும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக் காது.

சப்த ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால், வாழ்க்கைத் துணை வழியே மனக்கசப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துங்கள். வெளியூர் செல்ல நேரிடலாம். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது நல்லது.  பணிபுரியும் இடத்தில் ஒருவருக்கு இடமாற்றம் கிடைத்தால் மனமாற்றம் ஏற்படத்தான் செய்யும். சர்ப்ப சாந்தி பரிகாரங்களை முறையாகச் செய்தால் தடைகள் அகலும். தாங்கள் நினைத்த படியே உத்தியோக மாற்றங்களும் அமையும்.

பத்தாமிடத்தில் குருபகவான்

2.9.2017–ல் உங்கள் ராசிக்கு 3,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு, 10–ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். நல்ல இடத்தில் வேலை பார்க்கிறோமே இந்த இடத்தில் திடீரென மாறுதல் வந்து விடுமோ? என்று நீங்கள் நினைக்க வேண்டாம். குரு வின் பார்வை உங்கள் ராசிக்கு 2,4,6 ஆகிய இடங்களில் பதிகிறது. குரு இருக்குமிடத்தை காட்டிலும் பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம் உண்டு. எனவே அந்த இடங்களெல்லாம் புனிதமடைகின்றன.

குருப்பெயர்ச்சியால் ஜீவன ஸ்தானம் பலமடைகிறது. எனவே உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகப் போகிறது. அடுத்தவர்களுக்காக உழைத்தது மாறி, இனி உங்களுக்காக உழைக்கப் போகிறீர்கள். ஒரு சிலருக்கு வேலையிலிருந்து விருப்ப ஓய்வில் வெளிவரும் வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு பொறுப்புகள் அதிகரிக்கலாம். பொறுமையாகச் செயல்படுவது நல்லது. அலுவலகப் பணிகளில், அதிகாரிகளால் மனக்கசப்பு உருவாகலாம். குருவின் பார்வை பதியும் இடங்கள் பலம் பெறுவதால் குடும்பத் தகராறுகள் குறையும். பக்கத்து வீட்டாரின் பகைமாறும். உடல்நலம் சீராகும்.

சனிப் பெயர்ச்சிக் காலம்

இதுவரை உங்கள் ராசிக்கு 11–வது இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான், இந்த ஆண்டு கடைசியில் 16.12.2017–ல் விரய ஸ்தானத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். வீடு மாற்றங்களும், நாடு மாற்றங்களும் விரும்பும் விதத்தில் அமையும். எனவே  எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நேரம் இது. பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படும். தொழிலில் இழப்புகள் ஏற்படாமலிருக்க பங்குதாரர்களை கண்காணிப்புடன் பார்த்துக் கொள்வது நல்லது. விரயச் சனியின் ஆதிக்கம் என்பதால், விரயங்களை சுப விரயங்களாக மாற்றிக்கொள்வது நல்லது. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைய வாய்ப்புகள் உருவாகும். இந்த காலத்தில் சனிபகவான் வழிபாடு சஞ்சலங்களை தீர்க்கும்.

செல்வம் தரும் சிறப்பு வழிபாடு!

இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேர, சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனிபகவானை வழிபடுவது நல்லது. நாமக்கல் ஆஞ்சநேயரையும், நாமகிரித் தாயருடன் இணைந்த நரசிம்மப் பெருமானையும் வழிபடுங்கள்.

அக்கறை  செலுத்த  வேண்டிய  வக்ர  காலம்!

சுக்ரன் வக்ர காலத்தில் (9.4.2017 முதல் 18.4.2017 வரை) பிள்ளைகளால் பிரச்சினை உருவாகலாம். தொழில் போட்டி அதிகரிக்கும். பாகப்பிரிவினைக்குப் பிறகும், சொத்து கைக்கு கிடைக்காமல் போகலாம்.

புதன் வக்ர காலத்தில் (9.4.2017 முதல் 22.4.2017 வரை) உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு கிடைக்கும். சம்பள பற்றாக்குறை அகலும்.

குரு வக்ர காலத்தில் (9.4.2017 முதல் 31.5.2017 வரை) உடன் பிறப்புகளால் நன்மை கிடைக்கும். எதிர்பார்த்த  வங்கிக் கடன்கள் கிடைக்கலாம். வெளிநாட்டுப் பயணங்கள் வெற்றிகரமாக அமையும்.

சனியின் வக்ர காலத்தில் (9.4.2017 முதல் 6.8.2017 வரை) சஞ்சலங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். உறவினர் பகை உருவாகலாம்.

மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு!

இந்தப் புத்தாண்டில் பாசம் மிக்கவர்களின் எண்ணிக்கை உயரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாகா மாற்றங்கள் கிடைக்கலாம். இடமாற்றங்கள் இனிமை தரும். கடன் சுமை குறையும். செப்டம்பர் மாதத்திற்கு மேல் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமாக அமைகிறது. கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை குறையாமலிருக்க விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். மூத்த குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையைக் கேட்பது, நற்பலனைத் தரும். குழந்தைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். சரபேஸ்வரர் வழிபாடு சகல யோகங்களையும் வழங்கும். இல்லத்து பூஜையறையில் பிரம்பபுரீஸ்வரர் படம் வைத்து வழிபடுவதன் மூலம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்
Up
துன்முகி வருட ராசிபலன்கள் 14-4-2016 முதல் 13-4-2017 வரை

உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)

கன்னி ராசியில் குரு வந்தபின் எண்ணியதெல்லாம்  நிறைவேறும்!

நிதானத்தோடு செயல்பட்டு  வெற்றிகளை குவிக்கும்  மகர ராசி நேயர்களே!

ன்மத வருடம் முடிந்து துன்முகி வருடம் தொடங்கப் போகின்றது. வரும் புத்தாண்டில் அஷ்டமத்தில் ராகுவும், குருவும் சஞ்சரிப்பதால் அதிர்ஷ்டம் ஏற்படுமா? இல்லை அல்லல்கள் ஏற்படுமா? சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு சிறப்பாக இருக்குமா? செய்யும் செயல்களில் செலவு கூடுமா? வரவு வந்து சேருமா? உடல் ஆரோக்கியத் தொல்லை அகல உடனடியாக செய்ய வேண்டிய வழிபாடு என்ன என்றெல்லாம் வருடம் பிறக்கும் முன்னாலேயே சிந்தனை ஓட்டம் இருக்கும்.

உண்மையிலேயே இந்த ஆண்டின் தொடக்கத்தில் அஷ்டமத்தில் குருவும், ராகுவும் கூடியிருக்கின்றார்கள். ராசிநாதனோ வக்ரம் பெற்ற ராசியைப் பார்க்கின்றார். எனவே, பொறுமையைக் கடைப்பிடித்து பெருமையை அடைய வேண்டிய வருடமாக அமைகின்றது. கன்னி ராசியில் குரு வந்த பிறகு உங்கள் எண்ணங்கள் ஓரளவு நிறைவேறும். 

இந்த ஆண்டு சித்திரை மாதப் பிறப்பு பங்குனி 31-ந் தேதி மாலை நேரத்திலேயே நிகழ்கின்றது. புதன் உங்கள் ராசிக்கு 6, 9-க்கு அதிபதியாவார். அவருக்குரிய புதன் கிழமையில் 6-ல் சந்திரன் சஞ்சரிக்கும் பொழுது திருவாதிரை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கின்றது. திருவாதிரை என்பது ராகுவிற்குரியது. ராகு உங்கள் ராசிக்கு 8-ல் அல்லவா இருக்கின்றார்.

மறைந்த ராகு நிறைந்த தனலாபத்தை தரும் என்றாலும் சூரியன் வீட்டில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் இந்த ஆண்டு வரப்போகின்றது. காரியங்களில் தாமதங்களும் அதிகரிக்கலாம்.

இரண்டாமிடத்தில் கேதுவும், எட்டாமிடத்தில் ராகுவும் இருப்பது சர்ப்ப தோஷத்தின் அறிகுறியாகும். எண்ணற்ற வாய்ப்புகள் வந்தும் கைநழுவி செல்லலாம். இருக்கும் தொகை செலவழிந்த பிறகே அடுத்த தொகை கை களில் வந்து சேரும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆண்டு பிறப்பதால் தொழிலில் கவனம் செலுத்த இயலாது. தொல்லை தந்த எதிரிகளின் பலம் கூடும். முன்கோபத்தின் காரணமாக முன்னேற்றத் தடைகளும் வந்து சேரலாம். 

குரு உங்கள் ராசியைப் பொறுத்தவரை 3, 12-க்கு அதிபதியாவார். அவர் 8-ல் சஞ்சரிக்கும் பொழுது விபரீத ராஜயோகம் செயல்படும். எனவே திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். திறமைமிக்கவர்களின் ஒத்துழைப்பு திடீரென கிடைக்கும்.

கடமையில் தொய்வு இருந்தாலும் கடைசி நேரத்தில் முடிவடைந்து விடும். ஆயினும் ஆரோக்கியத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்தும் சூழ்நிலை உருவாகும். மருத்துவச் செலவு கூடும். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட வகையில் பாதிப்பு ஏற்பட்டு அகலும். இல்லம் கட்டிக் குடியேறுவதற்காக ஒரு தொகையைச் செலவிட உகந்த நேரமிது.

ஆண்டின் தொடக்கம் முதல் ஆடி 17 வரை!


இக்காலத்தில் உள்ள கிரக நிலைகளின் அமைப்பின் படி சுக்ரன் உச்சம் பெற்றிருப்பது ஒரு வழிக்கு நன்மைதான். 5, 10-க்கு அதிபதி உச்சம் பெற்றிருப்பதால் ஆண்டின் தொடக்கத்தில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று சொல்லலாம். வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும். புதிய ஒப்பந்தங்கள் ஒன்றிரண்டு திருப்திகரமாக இருக்கும். பழைய பங்குதாரர் களால் பிரச்சினைகள் ஏற்படுகிறதே என்று கவலைப்படுவீர்கள். அவர்களை விலக்கிவிட்டுப் புதியவர்களை சேர்த்துக்கொள்ள முன்வரும் நேரமிது.

அஷ்டமாதிபதி சூரியன் 6-க்கு அதிபதி புதனோடு இணைந்து சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். 6, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதி இணையும் பொழுது விபரீத ராஜயோகம் செயல்படும் அல்லவா? எனவே, திடீர் மாற்றங்கள் நல்ல மாற்றங்களாக வந்து சேரலாம். அரசுவழிச் சலுகைகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் அனுகூலமாக நடந்து கொள்வர்.

பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். தந்தை வழிச் சொத்துக்களில் வைத்த பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டுப் புதிய சொத்துக்கள் வாங்கிக் குடியேற வேண்டுமென்ற ஆவல் ஒரு சிலருக்கு மேலோங்கும்.

அது நிறைவேறும் விதத்தில் செவ்வாய், சனியின் சேர்க்கை அமைந்துள்ளது. வருடத் தொடக்கத்தில் 4, 11-க்கு அதிபதியான செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருக்கின்றார். அவரோடு ராசிநாதனாகவும், இரண்டிற்கு அதிபதியான சனி வக்ரம் பெற்று இணைந்திருக்கின்றார்.

இந்த முரண்பாடான கிரகங்களின் சேர்க்கை ஒரு வழிக்கு நன்மைதான். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும்.

உடன்பிறப்புகளும் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பத்திரப் பதிவில் இருந்த தடைகள் அகலும். பாதியில் நின்ற கட்டிடப்பணி மீதியும் தொடரும். உடன்பிறந்தவர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். விலகிச் சென்ற சகோதரர்கள் விரும்பி வந்து சேருவர். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பால் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள். கால்நடைகளால் உங்களுக்கு லாபம் கிடைக்கும்.

ஆடி 18-ல் தேடிவரும் யோகம்!

துன்முகி வருடம் ஆடி மாதம் 18-ந் தேதி (2.8.2016) அன்று கன்னி ராசியில் குரு சஞ்சரிக்கப் போகின்றார். இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக நல்ல மாற்றங்கள் உங்களுக்கு வந்து சேரப்போகின்றது. பெயர்ச்சியாகும் குரு உங்கள் ராசியைப் பார்க்கப் போகின்றார். 1, 3, 5 ஆகிய இடங்களை குரு பார்க்கப் போகின்றார். ராசியைக் குரு பார்க்கும் பொழுது நல்ல நிகழ்வுகள் இல்லத்தில் நடைபெறும். ஓசை படாமலேயே உதவிக்கரம் நீட்டு பவர்கள் உங்கள் இல்லம் தேடி வந்து உதவிசெய்வர். நேச மனப்பான்மை கொண்டவர்களின் நட்பு கூடும்.

நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பொன்னான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள நல்ல வாய்ப்புகள் கைகூடி வரும். இல்லத்தில் மண விழா, மணி விழா மற்றும் பெண்களின் சுபச்சடங்குகள் போன்றவை நடைபெறும் சூழ்நிலை அமையும்.

எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் வெளி ஆட்களின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் உண்டாகும். எதிர் பாராத இலாகா மாற்றங்கள் கூட ஒருசிலருக்கு கிடைக்கலாம். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறும் நேரமிது. மங்கல நிகழச்சிகள் தங்குதடையின்றி நடக்க நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

9-ல் குரு வரும்பொழுது ஒப்பற்ற வாழ்க்கை அமையும். பொன், பொருட்கள் அதிகரிக்கும். வாங்கிய பூமியாலும் லாபம் கிடைக்கும். வைத்திருக்கும் பூமியாலும் லாபம் உண்டாகும். இன்பத்தின் எல்லைக்கு செல்ல குரு பகவான் அருள் வழிகாட்டும்.

குருவின் பார்வை 1, 3, 5 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. எனவே, இனி உடல் நலம் சீராகும். ஆரோக்கியத்திற்காக செலவிட்ட தொகை குறையும். சீரும், சிறப்பும் பெற குருவருள் உங்களுக்கு வழிகாட்டும். புதிய பாதை உங்களுக்கு புலப்படப் போகிறது.

'ஜென்மத்தைக் குருதான் பார்த்தால் செல்வாக்கு அதிகரிக்கும்' என்பார். எனவே செல்வ விருத்தியோடு செல்வாக்கு விருத்தியும் ஏற்படும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து கூட்டு முயற்சிகளில் வெற்றி பெற வைப்பர். தீட்டும் திட்டங்கள் வெற்றி பெறும்.

'மூன்றினை குரு தான் பார்த்தால் முன்னேற்றம் அதிகரிக்கும்' என்பர். சகோதர ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால் உடன்பிறப்புகள் உற்சாகத்தோடு வந்திணைந்து பணிபுரிவர். வழக்குகளில் வெற்றி கிட்டும். சகோதர ஸ்தானத்தில் குரு பார்வை பதியும் பொழுது, முன்னோர்களின் சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும்.

'ஐந்தினை குரு தான் பார்த்தால் அனைத்திலும் வெற்றி கிட்டும்' என்பர். அந்த அடிப்படையில் புத்திர ஸ்தானத்தை குரு பார்க்கும் பொழுது பிள்ளைகள் வழியில் பெருமைக்குரிய செய்திகள் வந்து சேரும். அவர்களால் உதிரி வருமானங்களும் கிடைக்கும். பழைய சொத்துக்களை விற்றுவிட்டுப் புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். தொழிலில் இடையூறு செய்த கூட்டாளிகளை விலக்கிவிட்டு வேறு புதிய கூட்டாளிகளைச் சேர்த்துக்கொள்ளும் எண்ணம் மேலோங்கும்.

குரு  மற்றும்  சனியின்  வக்ர  காலங்கள்!

குருவின் வக்ர காலத்தில் அற்புத பலன்கள் உங்களுக்கு வந்து சேரப்போகின்றது. சுபச்செலவுகள் அதிகரிக்கும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர். போட்டிகளில் வெற்றி காண்பீர்கள். பிரிந்த தம்பதியர் பகை மறந்து இணையும் வாய்ப்பு உண்டு. பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

சகோதர வர்க்கத்தினரின் சச்சரவு அகலும். திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும். தெய்வத்திருப்பணிகளை முன்னின்று நடத்துவீர்கள்.
சனியின் வக்ர காலத்தில் சஞ்சலங்கள் அதிகரிக்கும். தடுமாற்றங்கள் உருவாகும். குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றி மறையும். கூடுதல் பொறுப்பு களில் இருப்பவர்களுக்கு விழிப்புணர்ச்சி அதிகம் தேவை. விரயங்கள் அதிகரிக்கும். விவகாரங்கள் வளரும். அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலமே ஆதாயத்தை அதிகம் பெற முடியும்.

மங்கையருக்கான மகத்தான பலன்கள்!

கர ராசியில் பிறந்த பெண்களுக்கு சிம்மத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, குடும்பச் சுமை கூடும். விரயங்கள் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைப்பது அரிது. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்வது நல்லது. குருப்பெயர்ச்சிக்குப் பிறகு அதன் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் மருத்துவச் செலவு குறையும்.

நீண்ட காலமாக நடைபெறாத மங்கல நிகழச்சிகள் நடைபெற வழிபிறக்கும். உத்தியோகத்தில் இதுவரை தடையாக இருந்த முன்னேற்றம் இப்போது கைகூடும். கணவன்-மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். இடம், வாங்குவது பற்றிப் பரிசீலிப்பீர்கள். குழந்தைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் அனைத்திலும் அனுகூலம் உண்டாகும். பொதுநலத்தில் உள்ளவர்களுக்கும் புதிய பதவிகள் வருடத்தின் மையப்பகுதியில் கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். உறவினர்கள் பகை அகலும்.

வளர்ச்சிக்கு  வித்திடும் வழிபாடு!

ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதமிருந்து விநாயகர், சனி பகவான், அனுமன் ஆகியோரை வழிபட்டு வருவது நல்லது. அனுமன் கவசம் பாடினால் அனுகூலங்கள் கிடைக் கும்.
சனிபெயர்ச்சி பலன்கள்
Up
16-12-2014 முதல் 15-12-2017 வரை சனிப்பெயர்ச்சி பலன்கள்:

உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் வரை (75/100)

(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)


பதினோராமிடத்தில் சனி.. பணவரவு தான் இனி!

எதிர்காலத் திட்டங்களையே எப்பொழுதும்  நினைத்துக் கொண்டிருக்கும் மகர ராசி அன்பர்களே!


முடியாத காரியத்தைக் கூட முடித்துக் கொடுக்கும் வல்லமை பெற்ற உங்களுக்கு, இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சி தான். சோதனைகளை வென்று சுகங்களைக் கைப்பற்றப் போகிறீர்கள். இதுவரை 10-ல் சனி சஞ்சரித்து வந்த பொழுது முத்தான வாழ்க்கையில் முட்டுக்கட்டை வந்துவிட்டதே என்று நினைப்பீர்கள். கர்ம ஸ்தானத்தில் சனி வீற்றிருக்கும் பொழுது, பெற்றோர்களின் உடல் நிலையில் பாதிப்புகளைக் கொடுத்திருக்கலாம். பிரச்சினையில் சிக்கித் தவித்திருக்கலாம்.

இனி அந்த நிலை மாறி விவேகத்தோடு செயல்பட்டு வெற்றி காணப்போகிறீர்கள். விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவின் மூன்றாம் பார்வையில் இருக்கிறார். சில நாட்கள் கழித்து உச்சம் பெற்ற குரு, பெயர்ச்சியான சனியை பார்க்கப் போகின்றார். உங்கள் ராசியையும் பார்க்கப் போகின்றார். Ôகுரு பார்க்கக் கோடிநன்மைÕ என்பதால் மளமளவென்று காரியங்கள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு
மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குரு புத்திரகாரகன் என்று அழைக்கப்படுவதால், குழந்தைகளின் முன்னேற்றம் கூடுதலாகவே இருக்கும்.

ஏழாவது மாதம் வரைதான், இந்த மகிழ்ச்சி நிலையாக இருக்கும். அதன் பிறகு அஷ்டமத்து குரு அடியெடுத்து வைக்கப் போகின்றார். எனவே குருவின் பார்வை மாறிவிடுகிறது. மேலும் சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் ஆரோக்கியப் பாதிப்புகளும், அதிகச் செலவுகளும் தவிர்க்க முடியாததாக அமையும். உறவினர்களின் குறுக்கீடுகளால் குடும்பத்தில் பிரச்சினைகள் தலைதூக்கும். எனவே மிக, மிகப் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது.
 
சனிப்பெயர்ச்சி சமயத்தில் கூட குரு அதிசாரமாக வந்து எட்டில் உலாவருகிறது. மாங்கல்ய ஸ்தானம், ஆயுள் ஸ்தானம் எனப்படும் இடத்தில் குரு, செவ்வாய், சனி, ராகு-கேது போன்ற கிரகங்கள் உலாவரும் பொழுது, பிறருக்கு நீங்கள் நன்மை செய்தாலும் அது தீமையாகவே தெரியும். செய்யும் தொழிலில் எதிர்பார்த்த லாபத்தைக் காட்டிலும், பல மடங்கு குறைவாகவே கிடைக்கும். லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் வருமானப் பற்றாக்குறை எதுவும் வைக்க மாட்டார். ஆனால் மனநிம்மதி மிக, மிகக் குறைவாகவே கிடைக்கும்.

பிரச்சினைகள் அகல குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. மேலும் உங்கள் சுய ஜாதகத்தில் சனி இருக்கும் இடமறிந்து, அது நவாம்சத்தில் இருக்கும் இடம் பார்த்து, அதோடு இணைந்திருக்கும் கிரகம், பார்க்கும் கிரகம் ஆகியவற்றைக் கண்டறிந்து தேர்ந்தெடுக்கும் தெய்வ வழிபாடுகளை, தாரா பலம் பெற்ற நாளில் செய்தால் ஏராளமான நற்பலன்கள் கிடைக்கும்.

பதினோராமிடத்தில் சனி!
பணவரவுதான் இனி!


சனிபகவான், இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் சஞ்சரித்து வந்தார். செயல் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வந்திருப்பீர்கள். திடீர் இடமாற்றங்கள் திருப்பங்களைக் கொடுத்திருக்கும். கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக உங்களுக்கு மனகிலேசத்தை உருவாக்கி இருக்கலாம். அவற்றிற்கெல்லாம் வடிகாலாக இப்பொழுது பெயர்ச்சியாகும் சனி உங்களுக்கு விடிவு காலத்தை கொடுக்கப் போகிறது.

இருந்தாலும் சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால், விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும். விரயத்திற்கேற்ற தனவரவு வந்து கொண்டேயிருக்கும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள ஆயத்தம் செய்வீர்கள். இதுபோன்ற காலங்களில் திட்டமிட்டு வாழ்க்கை நடத்துவதுதான் கெட்டிக்காரத் தனமாகும். புதிய முயற்சிகளில் ஈடுபட நினைப்பவர்கள் சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. உங்களுடைய சுயஜாதகத்தில் தெசாபுத்தி பலம்பெற்று இருக்குமேயானால் ஓரளவு நற்பலன்களை நீங்கள் காண இயலும்.

சனி சகல யோகத்தையும் வழங்க, உங்கள் ராசிநாதனுக்குரிய கிழமையில் தாராபலம் பெற்ற நட்சத்திரம் இணையும் நாளில் தகுந்த வழிபாடு   களைச் செய்தால் காரிய வெற்றி ஏற்படும், கவலை தீரும்.

மந்தனின் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்!


உங்கள் ராசிநாதனாகவும், தனாதிபதியாகவும் விளங்கும் சனிபகவான் பதினோராமிடத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்கிறார். அதுமட்டுமல்லாமல் 5, 8 ஆகிய இடங்களையும் பார்க்கிறார். சனியின் பார்வை பதியும் இடங்களில் எல்லாம் மாற்றங்களும், ஏற்றங்களும் வந்துகொண்டேயிருக் கும். ஜூலை 2015 வரை உங்கள் ராசியைப் பார்க்கும் பொழுது குருவும் உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். எனவே நீங்கள் தப்பித்துக் கொண்டீர்கள்.

தொழிலில் கூட்டாளிகளை அடிக்கடி கவனித்துக் கொள்வது நல்லது. வரவு செலவுகளை அப்போதைக்கப்போது கவனிக்காமல் இருந்தால் மகிழ்ச்சியோடு மாற்றங்கள் வரும் என்று நினைத்து இருந்த நேரத்தில் ஏமாற்றங்களே வந்து சேரும். உறவினர்கள் உதட்டில் ஒன்றும், உள்ளத்தில் ஒன்றும் வைத்துக் கொண்டு பேசுவார்கள். தொகை கையில் இருந்தால் செலவாகிவிடும். எனவே அதை அசையாத சொத்துக்களாகவோ, ஆடை, ஆபரணங்களாகவோ மாற்றி வைத்துக் கொள்வது நல்லது.

சனியின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால் பிள்ளைகளின் கல்வி மற்றும் கடல் தாண்டும் முயற்சிகளுக்காக எதிர்பார்ப்போடு இருந்தவர்களுக்கு அது நல்லவிதமாக நடைபெறும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

குதூகலம் தரும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

விருச்சிக ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெறப் போகிறது. 5.7.2015-ல் சிம்ம ராசியிலும், 2.8.2016-ல் கன்னியிலும், 2.9.2017-ல் துலாம் ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகிறார்.

குரு உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். சகாய ஸ்தானம், வெற்றிகள் ஸ்தானம் என்பதைக் குறிக்கும் இடம் மூன்றாமிடம். அதே நேரத்தில் பயணங்களையும், விரயங்களையும் எடுத்துரைக்கின்ற இடம் 12-ம் இடம் ஆகும். அந்த இரண்டு இடங்களுக்கும் ஆதிபத்யம் பெற்ற குருபகவான் இப்பொழுது சிம்ம ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். பன்னிரண்டாம் இடத்திற்கு அதிபதி 8-ல் சஞ்சரிக்கும் பொழுது, பல நல்ல பலன்களும் வந்து சேரும்.

கன்னி ராசியில் சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசியைப் பார்க்கப் போகின்றார். குரு சேர்ந்தாலும், பார்த்தாலும் கோடி நன்மை என்பது சான்றோர் வாக்கு. அப்படிப்பட்ட நன்மைகளை உங்களுக்கு அள்ளி வழங்க ஒப்பற்ற குருபகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கப்போகின்றார். விரய ஸ்தானாதிபதி குருவின் பார்வை பஞ்சம ஸ்தானத்தில் பதிவதால் பெண் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி ஒரு பெரும் தொகையைச் செலவிடப் போகிறீர்கள். கல்யாண முயற்சிகள் கைகூடும்.

துலாம் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது, மாற்றங்களும், ஏற்றங்களும் எதிர்பாராத விதத்தில் வந்து சேரப் போகின்றது. 10-ல் குரு வந்தால்பதவியில் மாற்றம் வரும் என்பார். அந்த அடிப்படையில் திடீரென ஊர்மாற்றங்கள், வீடுமாற்றங்கள்,  தொழில் புரிபவர்களுக்கு தொழில் நிலையத்தை மாற்றி வேறிடத்திற்கு மாற்றும் சூழ்நிலை உருவாகும். தகுந்த பரிகாரங்களைச் செய்வதன் மூலம் திசைமாறிய தென்முகக் கடவுளை சிறப்பு வழிபாடாக அனுகூல நாளில் வழிபட்டு வருவதன் மூலமும் இந்த குருப்பெயர்ச்சிக் காலம் குதூகலம் தரும் காலமாக மாறும்.

ராகு-கேது பெயர்ச்சிக்காலம்!

8.1.2016-ல் சிம்மத்தில் ராகுவும், கும்பத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 8-ல் ராகுவும், 2-ல் கேதுவும் உலா வருகிறார்கள். எனவே, ஏற்றமும், இறக்கமும் மாறி, மாறி வந்து கொண்டேயிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக கேது 2-ல் சஞ்சரிப்பதால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. அடுத்தடுத்து மனக்கசப்பு தரும் சம்பவங்கள் ஏற்படலாம். அஷ்டமத்து ராகு அலைச்சலைக் கொடுக்கும். ஆதாயத்தைக் குறைக்கும். நவக்கிரகத்திலுள்ள ராகு-கேதுக்களை வழிபட்டு வருவது நல்லது.
27.7.2017-ல் கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் காலம் சர்ப்ப தோஷத்தின் பின்னணியில் இருக்கும் காலமாகும். எனவே கனவிலும், நனவிலும் நாகங்கள் வந்துகொண்டேயிருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக, மாற்று மருத்துவத்தை மேற்கொள்வதுதான் நல்லது. புதிய கடன்சுமைகள் உருவாகலாம்.

இக்காலத்தில் முறையாக சர்ப்ப சாந்திப் பரிகாரத்தை, அனுகூல ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து வரம் தரும் நாளில் வழிபாட்டை மேற்கொண்டால் நிரந்தர புகழும் கிடைக்கும். நிம்மதியும் கூடும்.

சனியின்  வக்ர  காலம்  பொற்காலமாக  மாற..

ங்கள் ராசிநாதன் சனி வக்ரம் பெறும்பொழுது, எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பதே நல்லது. குடும்பத்திலும் சரி, மற்ற இடங்களிலும் சரி, பிறர் கருத்தைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் தான் பிரச்சினைகளில் இருந்து விடுபட இயலும். கோபம், படபடப்பு போன்றவைகள் அடிக்கடி தலைதூக்கும். முன்கோபத்தின் காரணமாக முன்னேற்றப் பாதையில் தடைகள் உருவாகலாம். பொறுமையோடு செயல்படுவது மட்டுமல்ல, உரிமையோடு உங்கள் ராசிநாதன் சனியை வழிபாடும் செய்ய வேண்டும். குடும்ப பெரியவர்களை கலந்து ஆலோசித்து எதைச் செய்தாலும் நன்மையாகவே இருக்கும்.

தொட்ட காரியங்களில் வெற்றி பெற வழிபாடு!

னிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று சனிபகவான் சன்னிதியில் எள்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வதோடு காகத்திற்கும் சோறு வைப்பது நல்லது. சிறப்பு வழிபாடாக புதுக்கோட்டை அருகிலுள்ள திருவேங்கை வாசலுக்குச் சென்று, பசுவிற்கு வேங்கை வடிவில் காட்சி தந்த வியாக்ரபுரீஸ்வரரையும், அறம் வளர்த்த நாயகியையும் வழிபட்டு வெற்றியை வரவழைத்துக் கொள்ளுங்கள்.
குருபெயர்ச்சி பலன்கள்
Up
2-8-2016 முதல் 1-9-2017 வரை

உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)

ஒன்பதாமிடத்தில் குருபகவான்! ஒளிமயமான வாழ்வமையும்!

சிக்கனத்தால் சிறப்பான வாழ்வை அமைத்துக் கொள்ளும் மகர ராசி அன்பர்களே!

தளராத மனதிற்கு சொந்தக்காரர்கள் நீங்கள். தட்டிக் கேட்பதற்குத் தயங்க மாட்டீர்கள்! கொட்டிக் கொடுப்பதற்கும் தயங்க மாட்டீர்கள்! வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு முயற்சிப்பீர்கள்! உடன்பிறப்புகளுக்கு உங்கள் மேல் பாசம் அதிகமாகவே இருக்கும். ஆனால் உங்களுக்கு உடன்பிறப்புகளின் மீது பாசம் இருக்குமா? என்பது சந்தேகம் தான்.

நினைத்ததை அடைய நிதானம் தேவை என்று சொல்வீர்கள். இரக்க குணமும் உங்களுக்கு உண்டு; அரக்க குணமும் உங்களுக்கு உண்டு. உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று சொல்வீர்கள். வாழ்வின் மையப் பகுதியில் 24 மணி நேரமும் உங்கள் முன்னேற்றத்திலேயே குறிக்கோளாக இருப்பீர்கள். சிரித்த முகத்திற்கு சொந்தக் காரர்களான நீங்கள், சலிப்படைந்த மக்களுக்கு ஆறுதல் சொல்வீர்கள். சங்கடங்கள் தீர வழிகாட்டுவீர்கள். குறித்த செயலை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களை வருத்தப்பட வைக்கக்கூடாது என்று நினைப்பீர்கள்.

பணத்திற்கு மயங்காத நீங்கள், புகழுக்கு மயங்குவீர்கள். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டீர்கள். உத்தியோகத்தை   காட்டிலும்,   சுயதொழில் செய்யும் எண்ணமே உங்கள் மனதில் இடம் பிடிக்கும். காரசாரமான வாழ்க்கையும், காலாட்டிக் கொண்டு சாப்பிடும் அமைப்பும் உங்களுக்குப் பிடிக்காது. உழைத்துப் பிழைக்க வேண்டும், உற்றார், உறவினர்களுக்கு உதவ வேண்டும், பெற்றோர்களைப் பேண வேண்டும், பிள்ளைகளை நன்றாக வளர்க்க வேண்டுமென்று திட்டமிட்டுச் செயல்படுவீர்கள்.

இப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த உங்கள் ராசிக்கு அதிபதி சனியாவார். தன ஸ்தானத்திற்கு அதிபதி சனி. எனவே சனியின் பலம் நன்றாக இருந்தால் தான் பண வரவு திருப்திகரமாக இருக்கும். களத்திர ஸ்தானாதிபதியாக சந்திரன் விளங்குவதால், சந்திரனின் சார பலத்தைப் பொறுத்தே வாழ்க்கைத் துணை உங்களுக்கு அமையும். தொழில் ஸ்தானாதிபதியாக சுக்ரன் விளங்குவதால் சுக்ர பலத்தைப் பொறுத்தே தொழில் வளர்ச்சி அமையும். உங்கள் சுய ஜாதகத்தைப் புரட்டிப் பார்த்து இந்த 3 கிரகங்களின் நிலையை அறிந்து முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொள்ளுங்கள். பலமிழந்த கிரகங்களாக விளங்கினால் பரிகாரங்களைச் செய்து பலன் பெற்றுக் கொள்ளுங்கள்.

வந்து விட்டது குருப்பெயர்ச்சி!

நவக்கிரகங்களில் சுபகிரகம் என்று வர்ணிக்கப்படும் குருபகவான் உங்கள் ராசிக்கு 9–ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். “ஐந்தும், ஒன்பதும் மிஞ்சும் பலன் தரும்” என்பது முன்னோர் வாக்கு. எனவே இந்தக் குருப்பெயர்ச்சி இனிய குருப்பெயர்ச்சியாகவே உங்களுக்கு அமையப்  போகின்றது. வந்த இடம் நல்ல இடம்! வளர்ச்சி கூடும் இடம்! சிந்தனைகள் அனைத்தையும் ஜெயிக்க வைக்கும் ஒன்பதாமிடம்.

தொட்டது துலங்கும்! வெற்றிக் கொடி நாட்டும் வாய்ப்பும் விரைவில் வந்து சேரும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். உற்றார், உறவினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். உடல் நலம் சீராகும். தட்டுத் தடுமாறிய வாழ்க்கை இனி தழைத்தோங்கப் போகிறது. பூர்வீக சொத்துத் தகராறு அகலும். புதிய பாதை புலப்படும். ஆர்வத்தோடு செயல்பட்டு அருகில் இருப்பவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். அஷ்டமத்தில் குரு இருக்கும் பொழுது அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறையும். ஆனால் இப்பொழுது 9–ம் இடம் என்னும் ஒப்பற்ற இடத்தில் குரு சஞ்சரிப்பதால் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத் தரவாதம் கிடைக்கப் போகிறது. கூட்டாளிகளை மாற்றம் செய்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். ஆற்றல்மிக்கவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும் நேரமிது. நாடு மாற்றங்கள் உங்களுக்கு நன்மை அளிக்காது. பணிபுரியும் இடத்தில் இருந்த பகை நீங்கும். பூர்வீக சொத்துக்களில் வீடு கட்டலாமா இல்லை, புதிய இடம் வாங்கி வீடு கட்டலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

3,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக குரு விளங்குவதால், முன்னேற்றத்திற்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். சகோதரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். வருங்கால முன்னேற்றத்திற்கு வித்திடும் விதத்திலேயே குரு சஞ்சரிக்கிறார்.

குரு பார்வை கொடுக்கும் பலன்கள்!

எத்தனை கிரகங்கள் பார்த்தாலும், குருபார்க்கும் பார்வைக்கு ஈடு இணை இல்லை. உங்கள் ராசிக்கு 9–ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு, தனது பார்வையை 1,3,5 ஆகிய இடங்களில் பதிக்கின்றார். எனவே அந்த இடங்களெல்லாம் புனிதமடைகின்றன. அதற்குரிய ஆதிபத்யங்கள் எல்லாம் சிறப்பாக நடைபெறப் போகிறது. இது வரை 8–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு அஷ்ட குருவாக காட்சி அளித்தார். அல்லல்கள் பலவற்றையும் கொடுத்திருப்பார்.

இனி தொட்டதெல்லாம் வெற்றிதான்! பண வரவிற்கு பஞ்சமிருக்காது. ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். ஆதாயம் தரும் காரியங்களில் அக்கறை செலுத்துவீர்கள். பார்க்கும் குருவால் உங்களுக்கு ஏராள மான பலன் கிடைக்கப் போகிறது. குரு தரும் பலனோடு, நம்பிக்கையோடு நீங்கள் செய்யும் வழிபாடும் இணைந்து நல்ல வாழ்க்கையை அமைத்து தரும்.

குருபகவான் மூன்றாமிடத்தைப் பார்ப்பதால் முன்னேற்றத் தடைகள் அகலும். உடன்பிறப்புகள் உங்களோடு இணைந்து பணிபுரிவர். தனவரவு திருப்தி தரும். சந்தோஷ சாம்ராஜ்யத்தில் இடம் பிடிப்பீர்கள்.

ஜென்ம ராசியைக் குரு பார்ப்பதால் மன நிம்மதி அதிகரிக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். இல்லத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு கிடைக் கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் கிடைக்கும். ஒரு சிலருக்கு ஊதிய உயர்வு ஏற்படும்.

5–ம் இடத்தைக் குரு பார்ப்பதால் புத்திர ஸ்தானம் பலப்படுகிறது. பிள்ளைகளின் கல்வி முயற்சியும், கல்யாண முயற்சியும் கைகூடும். எதிர்கால நலன்கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். படிக்கும் குழந்தைகள் அதிக மதிப்பெண்கள்  வாங்கி பள்ளிக்கு பெருமை சேர்ப்பர். சொத்துக்களால் லாபம் உண்டு.

குரு, சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (2.8.2016 முதல் 19.9.2016 வரை):– இழப்புகளும், விரயங்களும் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் தடைகள் உருவாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. ஏமாற்றங்களைச் சந்திக்காமல் இருக்க, கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் உங்களுக்கு கை கொடுக்கும்.     

குருபகவான், சந்திர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (20.9.2016 முதல் 24.11.2016 வரை):– கல்யாணக் கனவுகள் நனவாகும். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று மகிழும் வாய்ப்பு கிட்டும். தாய்வழி ஆதரவு உண்டு.  பெற்றோர் வழி ஒத்துழைப்பு கூடுதலாகவே கிடைக்கும்.

குருபகவான், செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (25.11.2016 முதல் 21.2.2017 வரை மற்றும் 2.6.2017 முதல் 1.9.2017 வரை):– சொத்துக்கள் சேரும்; சொந்தங்கள் போற்றும். மற்றவர்களைப் போல வாழ்க்கை நடத்தாமல் புதுமையாக வாழ வேண்டுமென்று நினைப்பீர்கள். தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தோள் கொடுத்துதவ நண்பர்கள்  மட்டுமின்றி உறவினர்களும், உடன்பிறப்புகளும் முன்வருவர்.

மங்கையருக்கான  மகத்தான  பலன்கள்!

மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு மகத்தான நேரம் இது. தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். அன்னியோன்யம் அதிகரிக்கும். புகுந்த வீட்டில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நாகசாந்தி பரிகாரங்கள் செய்வதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். பணிநிரந்தரம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோக உயர்வு மட்டுமல்லாமல் ஊதிய உயர்வும் கிடைக் கும். தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்குவதோடு வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய பதவிகள் கிடைத்து ஒரு        சிலர் பெருமை காண்பர். ஆதியந்தப் பிரபு வழிபாடு நன்மையை வழங்கும்.

அக்கறை  செலுத்த  வேண்டிய  வக்ர  காலம்!

இம்முறை குரு வக்ரம் பெறுவதோடு அதிசாரமாக துலாம் ராசிக்கும் செல்கிறார். அவ்வாறு செல்லும் பொழுது 2,4,6 ஆகிய இடங்களைப் பார்க்  கிறார். எனவே பொருளாதார நிலை உயரும். குடும்பச்சுமை கூடுதலாக இருக்கும். ஆனால் அதைச் சமாளித்து விடுவீர்கள். பத்திரப் பதிவில் இருந்த தடைகள் அகலும். வழக்குகள் ஜெயிக்கும். குருவின் வக்ர காலத்தில் ஓரளவுதான் நன்மை கிடைக்கும். பயணத்தால் பலன் கிடைக்கும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். வீடு கட்டும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். குறுகிய காலத்தில் முன்னேற்றங்கள் வந்து சேரும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு வியப்பர். வாங்கல், கொடுக்கல்களில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். குருவை இக்காலத்தில் வழிபாடு செய்வதன் மூலமும், யோகபலம் பெற்ற நாளில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலமும், சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்து கொள்வதன் மூலமும் சந்தோஷத்தை தக்கவைத்துக் கொள்ள இயலும்.

செல்வம் தரும் சிறப்பு வழிபாடு!

ராசிநாதன் சனி என்பதால் சனிக் கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் நல்ல வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ள இயலும். கும்பகோணம் அருகிலுள்ள உப்பிலியப்பன் கோவில் வழிபாடு ஒப்பற்ற வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
Up
08-01-2016 முதல் 27-07-2017 வரை

மகரம்

உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)

எட்டில் ராகு வருகிறது!
வழிபாடு வெற்றியைத் தந்திடும்!


கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று கூறும் மகர ராசி நேயர்களே!

உங்கள் ராசிநாதன் சனி ‘ஆயுள் காரகன்’ என்று வர்ணிக்கப்படுபவர். எந்த வேலையையும் யோசித்தே ஏற்றுக்கொள்வீர்கள். வேகத்தைக் காட்டிலும், விவேகம் தான் உங்களுக்கு அதிகம். பொல்லாதவர்களைக் கூட நல்லவர்களாக மாற்றும் ஆற்றல் உங்கள்  பேச்சிற்கு உண்டு.

பாதி வயதிற்கு மேல் தான் பலவித சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். பொதுநலனில் அதிக அக்கறை காட்டும் நீங்கள் மதிப்பையும், மரியாதையையும் இரு கண்களாக நினைப்பீர்கள். யார் எதைச் சொன்னாலும் ஏன், எப்படி என்ற கேள்வி உங்களிடம் இருந்து வந்து கொண்டே இருக்கும்.

வந்த விருந்தினர்களை வரவேற்பால் திணறடிப்பீர்கள். சொந்தம், சுற்றங்களின் பகைக்கும் ஆளாவீர்கள். என்ன நடந்தாலும் சரி  அதை ஏற்றுக் கொள்வோம் என்று முடிவெடுத்து விடுவீர்கள். கற்றவர்களுக்கு மத்தியில் உங்கள் பேச்சு எடுபடும். ஆனால்  பெற்றவர்களுக்கு மத்தியில் பேசும் பொழுது, போராடித்தான் சொல்லைச் செயலாக்க இயலும்.

இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த ராகு–கேது பெயர்ச்சியால் எப்படிப்பட்ட மாற்றங் கள் ஏற்படும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

விரயங்களை அதிகரிக்க வைக்கும் எட்டாமிட ராகு!
வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இரண்டாமிடத்து கேது!


இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், மீன ராசியில் சஞ்சரித்து வந்த கேதுவும் தனது வான்வெளிப் பயணத்தில்  8.1.2016 அன்று பின்னோக்கி வந்து பலவித மாற்றங்களை உங்களுக்கு வழங்கப் போகிறார்கள். ராகுவால் எண்ணற்ற விரயங்கள் ஏற்படலாம். எனவே கூடுதல் கவனம் செலுத்தி வாழ்க்கை நடத்துவது நல்லது.

வாக்கு ஸ்தான கேதுவால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலுமா? என்பது சந்தேகம் தான். பின் விளைவைச் சிந்திக்காமல் முதலில் பேசி விட்டு, ‘ஏன் இப்படிப் பேசினோம்?’ என்று பின்னர் வருத்தப்படுவீர்கள். உத்தியோகம், தொழிலில் அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்களால் பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். இதுபோன்ற காலங் களில் ராகு–கேதுவிற்கு, முறையாக யோகபலம் பெற்ற நாளில், உங்கள் ராசிக்கு அனுகூலம் தரும் திருக்கோவில்களில், முறைப்படி சர்ப்பசாந்திப் பரிகாரங்களைச் செய்துகொள்வது நல்லது.

இந்த ராகுப் பெயர்ச்சியின் விளைவாக ஒருசில காரியங்களை ஒரு முறைக்கு இருமுறை செய்யும் சூழ்நிலை உருவாகலாம். நினைத்த  நேரத்தில் நினைத்தபடி செயல்பட முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். உடன்பிறப்புகளின் வழியிலும், உற்றார்,  உறவினர்களின் வழியிலும் ஒரு சாரார் பாசமாக இருப்பர்.

எதைச் செய்தாலும் இறைவழிபாட்டை மேற்கொண்டு அதன்பிறகு காரியத்தைத் தொடங்கினால் தான் வெற்றி வாய்ப்புகளை  வரவழைத்துக் கொள்ள இயலும். சம்பளம் போதுமானதாக இல்லையே என்று ஒருசிலர் கவலைப்படுவர். மனைவி ஒத்துவரவில்லையே என்ற  சிலர் கவலைப்படுவர். குழந்தைகளின் குணம் சரியில்லாமல் போகிறதே என்று ஒருசிலர் கவலைப்படுவர். ஆரோக்கியப் பாதிப்பாலும் கவலைப்பட நேரிடலாம். கொடுக்கல்–வாங்கல்களில் சிக்கல் கள் வந்துவிட்டதே என்று ஒரு சிலர் கவலைப்படுவர். கூட்டாளிகள் விலகி விட்டார்களே என்று ஒரு சிலர் வருத்தப்படலாம். இப்படி ஏதேனும் ஒரு வருத்தத்தை அஷ்டமத்து ராகு வரவழைத்துக் கொடுக்கலாம். இருந்தாலும், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. விபரீத ராஜயோகத்தை ஏற்படுத்தும் சனியோடு அது இணைந்திருப்பதால் திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

திடீர், திடீரென தனலாபம் வந்து சேரும். தெய்வப்பற்று மிக்கவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் தீங்குகள் விலகிச் செல்லும். தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தக்க துணையாக வைத்துக் கொள்ளுங்கள். சாதுரியமான பேச்சால் சண்டை சச்சரவைத் தீர்த்துக் கொள்ளுங்கள். அன்பை விதையுங்கள். ஆனந்தப் பயிரை அறுவடை செய்யுங்கள்.

என்ன செய்யும் இந்த இரண்டாமிடத்து கேது?

இதுவரை மூன்றாமிடத்தில் சஞ்சரித்து வந்த கேது பகவான் இப்போது இரண்டாமிடத்திற்கு வருகிறார். 2–ம் இடம் என்பது வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் இடமாகும். எனவே கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலுமா? என்பது சந்தேகம் தான். யாருக்கேனும் வாக்குறுதியளித்திருந்தால் அதை அரும்பாடுபட்டுத் தான் நிறைவேற்ற இயலும். கோபம் அதிகரிக்கும் காலம் இது. எனவே எந்த அளவுக்கு கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்படுகிறீர்களோ அவ்வளவு நல்லது. நிறையப் பகை உருவாகலாம். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. விரயங்கள் கூடுதலாக இருக்கிறதே என்று கவலைப்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குரலுக்குச் செவிசாய்க்க மறுப்பர். சிலரின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் சிலர் பெரிய சிக்கலுக்கு ஆளாக நேரிடும். எனவே, ‘தான் உண்டு தன் வேலை உண்டு’ என்று இருப்பதே  நல்லது.

வீடு கட்டும் முயற்சி பாதியில் நின்றாலும் ஒரு வழியாக முடிவடைந்து விடும். அலைச்சல் கூடும். உறவினர் களுக்காக இவ்வளவு பாடுபட்டும் நம்மை உதாசீனப்படுத்தி விட்டார் களே என்று கூட நினைக்க நேரிடும்.

வாங்கல், கொடுக்கல்களிலும் சில சமயங்களில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினைகள் உருவாகலாம். பெருந்தொகை வாங்கும் போதும், கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே திரும்பி வரலாம். எனவே மனக்குழப்பம் கூடும்.

வரவைவிட செலவு இருமடங்காகும். இந்நேரத்தில் வீட்டுத் தேவை களைப் பூர்த்தி செய்து கொள்வதே நல்லது. வீடு கட்டும்  பணியைத் தொடங்கலாம். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் அமைப்பு சிலருக்கு கிடைக்கும். வாகனப் பழுதுச் செலவுகள்  அதிகரிக்கும். எனவே பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க, அனுசரிக்கும் குணம் தான் தேவை. வேலைப்பளு கூடும். சொந்த வேலை  எதையும் பார்க்க முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள்.

பாதசார அடிப்படையில் ராகு தரும் பலன்கள்!

ராகு பகவான் சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 10.3.2016 வரை): மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்ள இயலுமா? என்பது சந்தேகம் தான். விரயங்கள் கூடுதலாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள்  கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பொருளாதாரப் பற்றாக்குறையின் காரணமாகவும் ஒரு சிலர் கடன் தொல்லைக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் குழப்பங்களும், மனஅமைதிக் குறைவும் ஏற்படலாம். அருகில் உள்ளவர்களை அனுசரித்துக் கொள்ள இயலும். பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கலாம். துர்க்கை வழிபாடு துயரம் போக்கும்.

ராகு சுக்ரன் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (11.3.2016 முதல் 16.11.2016 வரை): ஓரளவு நல்ல பலன்கள் வந்து சேரும். பிள்ளைகள் முன்னேற்றம் கருதி எடுத்த  முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிரச்சினைகளில் இருந்து விடுபடும் சூழ்நிலை உண்டு. தொழிலில் இருந்த தொய்வு நிலை மாறும்.  துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.

ராகு பகவான் கேது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (17.11.2016 முதல் 26.7.2017 வரை): எதிர்ப்புகள் அதிகரிக்கும். நீங்கள் பிறருக்கு நன்மையே செய்தாலும் அது  தீமையாகவே தெரியும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்கள், மின் சாதனங்களை வாங்க உகந்த நேரமிது. அடகு வைத்து மீட்ட நகைகளை மீண்டும் அடகு வைக்கும் சூழ்நிலை ஒரு சிலருக்கு உருவாகும்.

பாதசாரப்படி கேது தரும் பலன்கள்!

கேது பகவான் குரு சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 13.7.2016 வரை): சகோதர ஒற்றுமை பலப்படும். விலகிச் சென்ற உடன் பிறப்புகள் விரும்பி  வந்து சேருவர். அவர்களது இல்லத்தில் நடைபெறும் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். வரவு திருப்திகரமாக இருக்கும். திருமண முயற்சி வெற்றி பெறும். சீமந்தம், மணி விழா நடைபெற வாய்ப்பு கை கூடிவரும். ஆன்    மிகப் பயணங்கள் அதிகரிக்கும். நல்லவர்களின் நட்பு கிட்டும்.

கேது பகவான் ராகு சாரத்தில் சஞ்சரிக்கும் போது (14.7.2016 முதல் 22.3.2017 வரை): அதிக விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கலாம். மருத்துவச் செலவுகள் கூடலாம். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்படுகிறதே  என்று அங்கலாய்ப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் தேவை. வீடு மாற்றங்கள் ஏற்படலாம். சுயஜாதக அடிப்படையில் திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடு, பரிகாரங்கள், குலதெய்வ வழிபாடுகளைச் செய்வதன் மூலம் நன்மைகளை வரவழைத்துக் கொள்ள இயலும்.

கேது பகவான் செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (23.3.2017 முதல் 26.7.2017 வரை): ஓரளவு நற் பலன்கள் நடைபெறும். இடம், பூமியால் லாபம் உண்டு. வீடு கட்டும் முயற்சி  அல்லது வீடு வாங்கும் முயற்சி கைகூடும். பயணங்களால் பலன் உண்டு. சகோதர உறவில் இருந்த விரிசல் மறையும். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு.

வாழ்க்கை வசந்தமாக வழிபாடு!

எட்டாமிடத்து ராகுவால் இனிய பலன்கள் கிடைக்கவும், இரண்டாமிடத்து கேதுவால் இனிய சம்பவங்கள் இல்லத்தில்  நடைபெறவும், சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனி பகவானை வழிபட்டு வருவதோடு, சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்து ஆனைமுகப்பெருமானை வழிபட்டு வருவது நல்லது.  வளர்ச்சியும் கூடும்.
உங்கள் ராசி பலன்கள்
 • மேஷம்
 • ரிஷபம்
 • மிதுனம்
 • கடகம்
 • சிம்மம்
 • கன்னி
 • துலாம்
 • விருச்சகம்
 • தனுசு
 • மகரம்
 • கும்பம்
 • மீனம்