Daily Thanthi World news | Tamil News | Tamil Newspaper | Online Tamil News Jhodhidam Details
home
Rasi Image
இன்றைய ராசி பலன்கள்
Up

பொறுமையோடு செயல்பட வேண்டிய நாள். பிள்ளைகளின் நலனில் பெரிதும் அக்கறை காட்டுவீர்கள். வாழ்க்கைத் தரம் உயர வழி செய்து கொள்வீர்கள். தொழிலில் மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும்.

வார பலன்கள்
Up

13.1.2017 முதல் 19.1.2017 வரை

பிறருக்கு உதவும் குணம் கொண்ட ரி‌ஷப ராசி அன்பர்களே!

கால நேரம் பார்க்காமல் பணியாற்றுவீர்கள். எடுத்த
வேலையில் அலைச்சல் இருந்தாலும், ஆதாயம் கிடைக்கும்.

உத்தியோகம்: அலுவலகத்தில் பணப்பொறுப்புகளில் உள்ளவர்கள், கணக்குகளில் கவனமாக இல்லாவிட்டால் பிரச்சினைகள் உருவாகலாம். அதிகாரிகளிடம் அவசியமில்லாமல் பேசி தொல்லைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம்.

தொழில்: சொந்தத்தொழில் செய்வோர் சுமாரான லாபமே பெற முடியும். ஒரு சிலருக்கு பொருட்களின் விலை உயர்வால் லாபம் அதிகரிக்கக்கூடும். கூட்டுத்தொழில் சுமாராக நடந்தாலும் வழக்கமான லாபத்துக்கு குறையிருக்காது. அதிகமாகச் சேமித்து வைத்த மூலப் பொருட்களால் விரயத்தைச் சந்திப்பீர்கள். பங்குச் சந்தை வியாபாரம் நன்கு நடைபெறும். கணிசமான லாபம் பெறுவீர்கள்.

கலை: கலைத்துறையினர், புதிய வாய்ப்புகள் பெற்று மகிழ்ச்சி அடைவர். புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். சகக்கலைஞர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

குடும்பம்: குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். சிறுசிறு பிரச்சினைகளை திறமையாக சமாளித்து விடுவீர்கள். இல்லத்தில் மங்கள நிகழ்ச்சி நடைபெறலாம்.

வார வழிபாடு:– புதன்கிழமை பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபாடு செய்தால் விரோதங்கள் விலகும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 2,5,7
அதிர்ஷ்ட நிறம்:– பச்சை
அதிர்ஷ்டக்கிழமை:– புதன்

தமிழ் மாத ஜோதிடம்
Up
தை மாத ராசி பலன்கள்

14.1.2017 முதல் 12.2.2017 வரை


கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரி‌ஷம்?1,?2 பாதங்கள்? வரை

பணியில் பாராட்டு கிடைக்கும் நேரம்!

மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்றிருக்கும் ரி‌ஷப ராசி அன்பர்களே!

உங்களின் தை மாதக் கிரக நிலைகளைஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே விரயாதிபதி லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். எனவே விரயத்திற்கேற்ற தன லாபம் வந்து கொண்டே இருக்கும். பணத்தை வைத்துக் கொண்டு எந்தக் காரியமும் செய்ய இயலாது. காரியத்தைத் தொடங்கிவிட்டால் பணம் தானாக வந்துசேரும். ஒரு சிலருக்கு வாங்கிய இடத்தை விற்கும் சூழ்             நிலையும், அதன் மூலம் வருகின்ற பணத்தைத் தொழிலுக்கு மூலதனமாக்கிக் கொள்ளும் தன்மையும் உருவாகும்.

ராகு–கேதுக்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. எனவே ஏற்றமும், இறக்கமும் வாழ்வில் வந்து கொண்டே இருக்கும். சென்ற மாதத்தில் பாதியில் நின்ற பணியைத் தொடருவீர்கள். வரவேண்டிய தொகை வந்துசேரும். தடைகள் அகலவும், தனவரவு பெருகவும், வரவு திருப்தி தரவும் பாம்புக் கிரகங்களான ராகுவையும், கேதுவையும் வழிபட்டு வருவது நல்லது.

சப்தமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் பயணங்களால் தொல்லை ஏற்படலாம். வாகனப் பழுதுகளால் செலவு அதிகரிக்கும். உதவி செய்வதாகச் சொன்ன நண்பர்கள், இப்பொழுது எந்தத் தகவலும் சொல்லவில்லையே என்று கவலைப்படுவீர்கள். வார வழிபாடாக சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள். அமாவாசையன்று முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

மீன செவ்வாயின் சஞ்சாரம்!

ஜனவரி 16–ந் தேதி செவ்வாய், மீன ராசிக்கு செல்கிறார். சப்தம விரயாதிபதியான செவ்வாய் லாப ஸ்தானத்திற்கு செல்வதால், குடும்பச் சுமை கூடும். கடுமையாக முயற்சித்தும் காரியங்கள் கைகூடவில்லையே என்று கவலைப்படுவீர்கள். சொத்து விற்பனையில் தாமதம் ஏற்படலாம். உடன்பிறப்புகளால் விரயம் ஏற்பட வாய்ப்புண்டு.

குருவின் வக்ர சஞ்சாரம்!

குரு, ஜனவரி 16–ந் தேதி துலாம் ராசிக்கு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அப்பொழுது அதன் பார்வை உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே குடும்பப் பிரச்சினைகள் அகலும். குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இதுவரை பக்க பலமாக இருந்த மேலதிகாரிகள் மேலும் நெருக்கமாவார்கள். வராத பாக்கிகள் வசூலாகும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்கலாமா? என்று சிந்திப்பீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். உடன்பிறப்புகளின் இல்லத்தில் நடைபெறும் சுப    காரியங்களை முன்நின்று நடத்துவீர்கள்.

மீன சுக்ரனின் சஞ்சாரம்!

உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெறும் இந்த நேரம், ஒரு உன்னதமான நேரமாகும். அந்த நிகழ்வு ஜனவரி 27–ந் தேதி நிகழவிருக்கிறது. இந்த காலகட்டத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பக்க பலமாக இருக்கும் நண்பர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு மேலும் உறுதுணையாக இருப்பர். தடையாக இருந்த காரியங்கள் தானாக நடைபெறும். தங்கம், வெள்ளி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மங்கள நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வாய்ப்பு உண்டு.

மகர புதனின் சஞ்சாரம்!


ஜனவரி 30–ந் தேதி, மகர ராசிக்கு புதன் செல்கிறார். 2, 5–க்கு அதிபதியான புதன் 9–ல் சஞ்சரிக்கும் பொழுது புத–ஆதித்ய யோகம் உருவாகின்றது. எனவே பொருளாதார நிலை உயரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். உறவினர் பகை அகலும்.

இம்மாதம் பெருமாள் வழிபாடு பெருமை சேர்க்கும். பிரதோ‌ஷ வழிபாடும் நன்மையை வழங்கும்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

தை மாதக் கிரக நிலைகள் உங்களுக்குச் சாதகமாகவே இருக்  கிறது. தாய் வழி ஆதரவு கூடும். சகோதர ஒற்றுமை பலப்படும். கணவன்–மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். உத்தியோகம் சம்பந்தமாக மாறுதல் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, அது கைகூடும். குரு வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கும் பொழுது, உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிநிரந்தரம் ஏற்படும். உடன்பணிபுரிபவர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் மாறும். பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடலாம். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முன்னோர் சொத்துக்களில் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். நந்தி வழிபாடு நலம் சேர்க்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:–

ஜனவரி: 15,16,28,29 பிப்ரவரி: 1,2,7,8

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கருநீலம்
ஆண்டு பலன்
Up
01-01-2017 முதல் 31-12-2017  வரை

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம்1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்)

முத்தான பலன் தரும் பத்தாமிடத்து கேது!

அருகில் இருப்பவர்களும் ஆனந்தமாக வாழ விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே!

உங்களிடம் ஒரு செயலை ஒப்படைத்துவிட்டால், எப்பாடுபட்டாவது அதைச் செய்து முடித்து விடுவீர்கள். எப்படி முடித்தோம் என்ற ரகசியத்தை யாரிடமும் சொல்ல மாட்டீர்கள். நீங்கள் மற்றவர்களை உற்சாக மூட்டிக் கடமைகளைச் செய்ய வைப்பீர்கள். அனைத்துச் சுகங்களையும் அனுபவிக்க வேண்டுமென்று சொல்வீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்ரன் என்பதால், அனைத்துக் கலைகளையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் கொள்வீர்கள். கட்டிடங்களையும்,         சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ள விரும்புவீர்கள். உங்கள் பேச்சில் நகைச்சுவையும் கலந்திருக்கும், பகைச்சுவையும் கலந்திருக்கும்.

உள்ளதை உள்ளபடி சொல்வதால் தான் நீங்கள் எல்லோர் உள்ளத்திலும் இடம்பெறுகிறீர்கள். உங்கள் பேச்சு ஆளை மட்டுமல்ல, அகிலத்தையே மயக்கும் ஆற்றல் பெற்றது. உரக்கப் பேசினாலும், இரக்க குணத்தையும் பெற்றிருப்பீர்கள். பரக்கப் பரக்கக் காரியங்களைச் செய்யாமல் பக்குவமாகக் காரியங்களைச் செய்வதில் கைதேர்ந்தவர் நீங்கள். வருமானம் வருவது பற்றியும், வருங்கால முன்னேற்றம் பற்றியும் சதா சர்வ காலமும் சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள்.

இறைவனைச் சுமக்கும் நந்தி, உங்கள் ராசியின் சின்னம். எனவே மற்றவர்களது மன பாரங்களைச் சுமப்பவர்களாக விளங்குவீர்கள். பிறர் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்ய வழிவகுப்பீர்கள். சந்திரன் உச்சம் பெறும் ராசி உங்கள் ராசி. எனவே        

மதி வளம் மிக்கவர்களாக இருப்பீர்கள்.

இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு, திருவோணத்தில் பிறக்கும் புத்தாண்டு எப்படிப்பட்ட திருப்பங்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம். உங்கள் சுய ஜாதகத்தை புரட்டிப் பாருங்கள். அதை, புத்தாண்டு ஜாதகக் கட்டத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். வலிமை மிகுந்த கிரகத்திற்குரிய தெய்வத்தை வழிபட்டால் வளர்ச்சி காணலாம்.

புத்தாண்டின் தொடக்கம்

பிறக்கும் புத்தாண்டு உங்களுக்குப் பெருமைகளைச் சேர்க்கும் ஆண்டு என்றே சொல்லலாம். உரிமையுடன் பழகும் நண்பர்களின் ஒத்துழைப்போடு, ஒப்பற்ற பல நல்ல காரியங்களை இந்த ஆண்டில் செய்து முடிக்கப் போகிறீர்கள். குரு பார்வையோடு பிறக்கும் இந்தப் புத்தாண்டு, குழப்பங்களை அகற்றி குதூகலத்தை     வழங்கும். இழப்புகளை ஈடு செய்ய வழிபிறக்கும். ஏற்றத் தாழ்வு நிலை மாறும்.

வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 4–ம் இடத்தில் ராகு இருக் கிறார். 5–ம் இடத்தில் குரு இருக்கிறார். 7–ம் இடத்தில் சனியும், 10–ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். உங்கள் ராசிநாதன் சுக்ரன், சப்தம விரயாதிபதியான செவ்வாயோடு இணைந்திருக்கிறார். சூரியன் 8–ம் இடத்தில் வீற்றிருக்கிறார்.

இத்தகைய கிரகங்களின் அமைப்பில் திருவோண நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கிறது. இனி திருமண முயற்சி முதல் தெய்வீக காரியங்கள் வரை ஒவ்வொன்றாக நடைபெற்று உள்ளத்தை மகிழ்விக்கும். ஆண்டின் தொடக்கத்தில் குரு உங்கள் ராசியையும் 9,11 ஆகிய இடங்களையும் பார்ப்பதால், இதுவரை உடலில் தொற்றிக் கொண்டிருந்த நோய்கள் ஓடி ஒளியப் போகின்றன. கடன்சுமை வெகுவாகக் குறையும். கல்வித் தடை அகலும். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். கூட்டு முயற்சிகளில் லாபம் கிடைக் கும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள்.

இந்த ஆண்டு பலம் வாய்ந்த கிரகங்களான ராகு–கேதுக்கள், குரு மற்றும் சனிப்பெயர்ச்சி வர உள்ளது. அதன் மூலம் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரப் போகின்றன.

வெற்றிதரும் ராகு–கேது பெயர்ச்சி

27–7–2017 அன்று பின்னோக்கி நகரும் கிரகங்களான,  ராகு–கேதுக்கள் பெயர்ச்சியாகின்றன. அதனால் பல மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரப் போகின்றன.  4–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு, இனி 3–ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இதுவரை 10–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த கேது, 9–ம் இடத்தில் சஞ்சரித்து உன்னத வாழ்வை அமைத்துக் கொடுக்கப் போகிறார்.

3–ம் இடத்து ராகு எத்தனை தடைகள் இருந்தாலும், அவற்றை எடுத்தெறிந்து எளிதாக்கி விடும். அதே நேரத்தில் ஜாதகத்தில் நாகதோஷம் இருப்பவர்கள், சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்துகொண்டால் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிக் கொள்ள இயலும். ராகுவால் உடன்பிறப்புகளின் எண்ணங்கள் மாறும். வழக்குகள் சாதகமாக முடியும். பொதுநலத்திலும் சரி, அரசியலிலும் சரி முழுமையாக ஈடுபட்டிருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சி உண்டு.

ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்கும் கேது, ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அமைத்துக் கொடுக்கும். உத்தியோக முன்னேற்றம் கூடுதலாக இருக்கும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பரிசீலனை செய்யப்படும். இதுவரை உங்கள் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்காத மேலதிகாரிகள், இப்பொழுது உங்களை மதிப்பார்கள். புதிய பொறுப்புகள் வந்து சேரும். பூமியோகம் உண்டு. பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகள் முன்னேற்றத்திற்கு வித்திடும். உடன் பணிபுரிபவர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் மறையும்.

ஆறாமிடத்திற்கு வரும் குரு பகவான்

2–9–2017–ல் குருபகவான் துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகப் போகிறார். இதுவரை 5–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு, ஆறாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். 6–ல் குரு, ஊரில் பகை என்பார்கள். ஆனால் உங்கள் ராசியைப் பொறுத்தவரை அஷ்டமாதிபதியாகவும், லாபாதிபதியாகவும் விளங்கும் குரு 6–ல் சஞ்சரிக்கும் பொழுது விபரீத ராஜ யோக அடிப்படையில், செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

குருவின் பார்வை 2,10,12 ஆகிய இடங்களில் பதிவதால், குருப்பெயர்ச்சிக்குப் பிறகு கூடுதல் வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வருங்காலத்தை வளமாக்கிக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும். துணிச்சல் அதிகரிக்கும். தொடர் வெற்றி ஏற்படும். பயணங்களால் பலன் உண்டு. பணப்பற்றாக்குறை
நீங்கும். வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல் வந்துசேரும். கண்ணியம் மிக்கவர்கள் உங்கள் கடமைக்கு உறுதுணையாக இருப்பர். புண்ணிய தலங்களுக்குச் சென்றுவரும் வாய்ப்பு கிடைக்கும். புதியதொழில் தொடங்கும் சூழ்நிலையும் அமையும்.

சனிப் பெயர்ச்சிக் காலம்

இதுவரை உங்கள் ராசிக்கு 7–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி 16–12–2017–ல் அஷ்டம ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கிறார். அஷ்டமத்துச்சனி அலைச்சலையும், அதிக விரயத்தையும் ஏற்படுத்தும். வீண் செலவுகளைக் கொடுத்து திண்டாடவைக்கும். ஆனால் உங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசிநாதன் சுக்ரனுக்கு, சனி நட்பு கிரகம் என்பதால், பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது. அலைச்சலை ஏற்படுத்தினாலும் ஆதாயத்தைக் கொடுக்கும். எதைச் செய்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வதும், வருவாய் அறிந்து செலவழிப்பதும் நல்லது. ஒரு சிலருக்கு வீடு மாற்றம், இடமாற்றம், நாடு மாற்றம் ஏற்படலாம். சுப விரயங்களை மேற்கொள்ளுங்கள்.

செல்வம் தரும் சிறப்பு வழிபாடு!

தஞ்சாவூர் மாவட்டம் திருக்கடையூர் சென்று, அற்புதப் பலன் தரும் அபிராமி அம்மனையும், ஆற்றலை வழங்கும் அமிர்தகடேஸ்வரரையும் அனுகூலம் தரும் நாளில் வழிபட்டு வாருங்கள். வெள்ளிக்கிழமை விரதமிருந்து அம்பிகையை வழிபட்டால், துயரங்கள் துள்ளி ஓடும்.

அக்கறை  செலுத்த  வேண்டிய  வக்ர  காலம்!

சுக்ரன் வக்ர காலத்தில் (9.4.2017 முதல் 18.4.2017 வரை), ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படலாம். இனம் புரியாத கவலை ஆட்கொள்ளும்.

புதன் வக்ர காலத்தில் (9.4.2017 முதல் 22.4.2017 வரை), உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகலாம்.

குரு வக்ர காலம் (9.4.2017 முதல் 31.5.2017 வரை) உங்களுக்கு நன்மையை வழங்கும். அஷ்டம லாபாதிபதியான குரு, இழப்புகளை ஏற்படுத்தினாலும், அதை ஈடுசெய்ய வழிவகுத்துக் கொடுப்பார். பிள்ளைகளை கண்காணிப்பில் வையுங்கள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.

சனி வக்ர காலத்தில் (9.4.2017 முதல் 6.8.2017 வரை) தொழில் மாற்றச் சிந்தனை ஏற்படும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரக் கூட்டாளிகளை விலகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. மற்றவர்களை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினை உருவாகலாம். உங்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்களிடம் மட்டும் உங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு!

புத்தாண்டு தொடக்கம் முதல் ஆகஸ்டு மாதம் வரை, வளர்ச்சியின் உச்சத்திற்குச் செல்லநேரிடும். வாரிசுகளும், வாழ்க்கைத் துணையும் உங்கள் ஆலோசனைகளை கேட்டு நடக்க முன்வருவர். பிறருக்கு வாங்கிக் கொடுத்தத் தொகை வந்துசேரும். வருமானம் உயரும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். தாய்வழி ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். செப்டம்பர் மாதத்திற்கு மேல் உங்கள் செலவுகள் கூடலாம். ஒரு சிலருக்கு ஊர் மாற்றமும், வீடு மாற்றமும் வந்து சேரலாம். பிள்ளைகளால் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தனித்து இயங்கும் முயற்சியை கைவிடுவது நல்லது. பவுர்ணமியில் மலை வலம் வருவது மகத்துவம் தரும். குலதெய்வ வழிபாடு குடும்ப முன்னேற்றத்தைக் கூட்டும்.
தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்
Up
துன்முகி வருட ராசிபலன்கள் 14-4-2016 முதல் 13-4-2017 வரை

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம்1, 2 பாதங்கள் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்)


கன்னி ராசியில் குரு வந்ததும், எண்ணியதெல்லாம் நிறைவேறும்!

நன்றி மறக்காத நல்ல குணம் படைத்த ரிஷப ராசி நேயர்களே!
துன்முகி வருடம் தொடங்கப் போகின்றது. இந்தப் புத்தாண்டு புதிய வாய்ப்புகளை வழங்குமா?, பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் கொடுத்திடுமா? சப்தமச் சனியில் ஏற்பட்ட சஞ்சலங்கள் அகலுமா? வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நண்பர்கள் உதவி செய்வார்களா? போன்ற சிந்தனைகள் ஆண்டு தொடங்குவதற்கு முன்னதாகவே உங்கள் அடி மனதில் தொடங்கி விடும்.

வருடம் பிறக்கும் பொழுது உலா வரும் கிரக நிலைகள் உங்களுக்குச் சாதகமாக இருந்தால் சந்தோஷங்களை நாளும் சந்திக்க இயலும். அதுபோல உங்கள் சுய ஜாதகத்தில் திசாபுத்தி பலம் பெற்றிருந்தாலும் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.  பலமிழந்து திசாபுத்திகள் நடைபெறும் பட்சத்தில் பரிகாரங்களைச் செய்து நற்பலன்களைப் பெற இயலும்.

இந்த ஆண்டு சித்திரை மாதப் பிறப்பு பங்குனி 31-ந் தேதி மாலை நேரத்திலேயே நிகழ்கின்றது. புதன் உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். தனபஞ்சமாதிபதியாக விளங்கும் புதனுக்குரிய கிழமையில், சந்திரன் உச்சம்பெற்ற ராசியாக விளங்கும் உங்கள் ராசிக்கு உகந்த மாலை நேரத்தில், சுக்ரனுக்குச் சொந்த வீடாக விளங்கும் துலாம் லக்னத்தில், இந்த ஆண்டு பிறப்பதால் வேண்டிய நற்பலன்களை அள்ளிக் கொடுக்கப்போகின்றது.

அடியெடுத்து வைக்கும் ஆண்டின் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்த்தால் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்றிருக்கின்றார். அவருக்குப் பகைவரான குரு வக்ரம் பெற்றிருக்கின்றார். சகாய ஸ்தானாதிபதியான சந்திரனோ தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். யோகம் செய்யும் சனி சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே பணப்புழக்கம் நன்றாக இருக்கும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருப்பர்.

இப்படியெல்லாம் நல்ல பலன்கள் நடைபெற்றாலும் இந்த ஆண்டு முழுவதும் சனியின் பார்வை உங்கள் ராசியில் அல்லவா பதிகிறது?.   எனவே, ஆரோக்கியத் தொல்லையும், அதிக மனக்குழப்பமும் ஏற்படும். செவ்வாய், சனி விருச்சிகத்தில் இணைந்திருக்கும் நேரத்தில் சிறப்பு வழிபாடுகளையும், குலதெய்வ வழிபாடுகளையும், பிரதோஷத்தில் கவனம் செலுத்தி நந்தி வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள்.

சகல தோஷங்களில் இருந்தும் விடுபட வைப்பது பிரதோஷ வழிபாடு. உங்கள் ராசிக்குரிய நாயகனே காளை வாகனம் தான். எனவே சிந்தித்த காரியங்கள் செயல்பட, ஆலயத்திற்கு சென்று  நந்தியை வழிபடலாம். இல்லத்து பூஜையறையிலும் சிவனையும், நந்தியையும் வைத்து சிவ பூஜையில் கவனம் செலுத்தலாம்.

வருடத் தொடக்கத்தில் அர்த்தாஷ்டம குருவாக இருக்கிறதே என்று கவலைப்பட வேண்டாம். அஷ்டம லாபாதிபதியான குரு, வக்ர இயக்கத்தில் அல்லவா சஞ்சரிக்கின்றார். இந்த வக்ர இயக்கம் உங்கள் வளர்ச்சிக்கு வித்திடும். அக்கறை காட்டாத செயலில் கூட ஆதாயம் கிடைக்கும். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் பணத்தேவையைப் பூர்த்தி செய்வர்.

சென்ற ஆண்டில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்து சேரும். அந்நிய தேசத்திலிருந்து சம்பாதிக்காமல் தாய்நாடு திரும்பி விட்டோமே என்று கவலைப்பட்டவர் களுக்கு புதிய இடத்திலிருந்து அழைப்புகள் வந்து சேரும். தொழில்  புரிபவர் களுக்கு தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும். பழைய தொழிலில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தி மீண்டும் அதை நடத்த முன்வருவீர்கள்.

உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகை கிரகமாக இருந்தாலும் நவக் கிரகங்களில் சுபகிரகம் என்று பெயர் பெற்றவர் அல்லவா? அதிலும் தன் வீட்டை, தானே பார்க்கின்றார். எனவே கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக நல்ல முடிவிற்கு வரும். உங்கள் லட்சியங்கள் நிறைவேற நல்லவர்கள் துணை நிற்பர்.

மங்கையர்கள் வழி ஒத்துழைப்பும் பங்காளிப் பகையில் மாற்றமும் ஏற்படும். பொருளாதாரம் அதிகரிக்க புது முயற்சிகளில் ஈடுபடும் பொழுது, அதில் வெற்றி வாய்ப்புகளைக் கொடுப்பது குரு பார்வை மட்டும் தான். அந்த குருவையும் வழிபாடு செய்யுங்கள்.  அவரோடு இணைந்திருக்கும் ராகுவிற்கும், 10-ல் சஞ்சரிக்கும் கேதுவிற்கும் உரிய சர்ப்பக் கிரக வழிபாட்டை  மேற்கொள்ளுங்கள்.

ஆண்டின் தொடக்கம் முதல்ஆடி 17 வரை
க்காலத்தில் உள்ள கிரக நிலைகளின் அமைப்பின்படி விரயங்களை அதிகம் சந்திக்கும் சூழ்நிலை உருவாகலாம். விரயங்கள் இரண்டு வகைப்படும் ஒன்று சுபவிரயம். மற்றொன்று வீண் விரயம். சுபவிரயம் என்பது இல்லத்திற்குத் தேவையான பொருட் களை வாங்குவது, அசையும் சொத்துக்கள், அசையாச் சொத்துக்கள் போன்றவற்றை சேர்க்க முன்வருவது.

இவற்றில் சுக ஸ்தானத்தில் குரு இருப்பதால் ஆண்டின் தொடக்கத்தில் சுபவிரயங்கள் அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வழக்குகள் சாதகமாகும். வாங்கிப் போட்ட இடத்தில் வீடு கட்ட முடியவில்லையே என்ற கவலை அகலும்.
உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு உன்னத நிலை காண்பர். சக பணியாளர்களாலும், உங்களைச் சார்ந்து இருப்பவர்களாலும் நன்மை கிடைக்கும்.
செவ்வாய் சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வது அரிது. அவர்களது கடன் பிரச்சினைகளைக் கூட நீங்கள் தீர்க்கும் சூழ்நிலை உருவாகலாம்.

ஆடி 18-ல் தேடி வரும் யோகம்
துன்முகி வருடம் ஆடி மாதம் 18-ந் தேதி (2.8.2016) அன்று கன்னி ராசியில் குரு சஞ்சரிக்கப் போகின்றார். இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக நல்ல மாற்றங்கள் உங்களை நாடி வரப் போகின்றது. பொருளாதாரத்தில் முதன்மை வகிப்பீர்கள். புகழ் கூடும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். தகராறு செய்தவர்கள் தானாக விலகுவர். 

5-ம் இடம் எனப்படும் புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம்பெறும் விதத்தில் குரு சஞ்சரிக்கப் போகின்றார். இதன் விளைவாக பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். அவர்கள் கல்யாண வாய்ப்பு கைகூடும். செய்தொழிலில் வளர்ச்சி ஏற்படும். எடுத்த காரியங்களில் அனுகூலம் உண்டு.

5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு அற்புதப்பலன்களை அள்ளி வழங்கப் போகின்றது. அயல்நாட்டிலிருந்தும், அனுகூலத்தகவல் வரும். உள்நாட்டிலிருந்தும் உள்ளம் மகிழும் செய்தி வரும். வளர்ச்சியில் இருந்த தளர்ச்சி அகலும். வருங்கால நலன் கருதி சில முக்கிய முடிவெடுப்பீர்கள்.

உங்கள் ராசிக்கு அஷ்டம லாபாதிபதியாக விளங்கும் குரு பகவான் சஞ்சரிக்கும் இடம் ஒளிமயமான எதிர்    காலத்திற்கு உத்திரவாதம் தரும் இடமாகும். அதன் பார்வை 1, 9, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே, உடல் நலம் சீராகும். உள்ளத்தில்  நினைத்ததை உடனே செய்து முடிப்பீர்கள். தெள்ளத்தெளிவாக எடுத்த முடிவுகளால் சிறப்பான முன்னேற்றம் வரப்போகின்றது. தாய் தந்தையரின் ஒத்துழைப்பும், பூர்வீக சொத்துக்களின் விற்பனையால் தன லாபமும் வந்து சேரும்.

'ராசியைக் குரு தான் பார்த்தால் இனியதோர் வாழ்க்கை அமையும்' என்பர். எனவே இதுவரை வாழ்க்கையில் இருந்த இடர்பாடுகள் அகலும். போட்டிக் கடை வைத்தோர் விலகுவர். பொருளாதார வளர்ச்சி அதிகரித்து புதிய பாதை புலப்படப் போகின்றது. 
அருளாளர்களின் தொடர்பும், அமைதியான வாழ்க்கையும் கைகூடும். சரிந்த தொழில் நிமிர்ந்து நன்னடை போடவும் வாய்ப்புகள் கைகூடிவரப் போகின்றது.

'ஒன்பதைக் குருதான் பார்த்தால் உன்னத நிலைதான் வாய்க்கும்' என்பர். பொதுவாக ஒன்பதாமிடம் என்பது பிதுர்ரார்ஜித ஸ்தானம் ஆகும். எனவே தந்தை வழி உறவினர்களில் இருந்த விரிசல் அகலும். தடையாக இருந்த பாகப்பிரிவினைகள் நல்ல முடிவிற்கு வரும். அண்ணன், தம்பிகள் அரவணைத்துக் கொள்வர். பெண் வழிப் பிரச்சினைகள் அகலும்.

'பதினொன்றை குருதான் பார்த்தால் பணத்தேவை பூர்த்தியாகும்' என்பர். எனவே இனி பரிசு மழையிலும், பண மழையிலும் நனையப் போகிறீர்கள். உரிய நேரத்தில் தொகை வந்து உள்ளத்தை மகிழ்விக்கும். திசாபுத்தி பலம் பெற்றவர்கள் உத்தியோகத்தில் இருந்து விடுபட்டு விருப்ப ஓய்வில் வெளியில் வந்து சுயதொழில் செய்ய முன்வருவர். செய்யும் தொழிலால் வருமானம் இருமடங்காகும்.

மங்கையருக்கான மகத்தான பலன்கள்!
துன்முகி வருடத்தில் ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு வருடத் தொடக்கத்தில் தாய்வழி ஆதரவு கூடும். சகோதர சச்சரவுகளை சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்து சேரும். வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகின்றதே என்று கவலைப்படு வீர்கள்.

இருப்பினும் பற்றாக்குறை ஏற்படாது. ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். நகை வாங்குவதில் நாட்டம் செல்லும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள அருகில்  உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு கூடும். ஜுன் மாதத்திற்கு மேல் உத்தியோக உயர்வும், ஊதிய உயர்வும் கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும். உங்கள் பெயரிலேயே சொத்துக்களை வாங்க குடும்பப் பெரியவர்கள் ஆலோசனை சொல்வர். பவுர்ணமி அன்று மலை வலம் வருவதன் மூலம் மகத்தான பலனை வரவழைத்துக் கொள்ளலாம். ராகு-கேது ப்ரீதி நன்மையைத் தரும்.

குரு  மற்றும்  சனியின்  வக்ர  காலங்கள்!
குருவின் வக்ர காலத்தில் கொடுத்த கடன்கள் வசூலாகும். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அடுத்தடுத்து நல்ல சம்பவங்கள் நடந்து கொண்டேயிருக்கும். அதிகரிக்கும் உடல்நிலைத் தொல்லை அகல, மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. பங்காளிப் பகை நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் வந்து சேரலாம்.

சனியின் வக்ர காலத்தில் சஞ்சலங்கள் அதிகரிக்கும். தொழில் மற்றும் பிதுர்ரார்ஜித ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சனி பகவான். எனவே தொழிலில் குறுக்கீடு  வந்து சேரும். துணிவும், தன்னம்பிக்கையும் குறையும். பணியில் இருக்கும் தொய்வு அகல விழிப்புணர்ச்சி தேவை. நண்பர்களால் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். புதிய பங்குதாரர்கள் திருப்தியாக நடந்துகொள்ள மாட்டார்கள். பெற்றோர்களின் உடல்நலனில் கவனம் தேவை.

வளர்ச்சிக்கு  வித்திடும் வழிபாடு!
வெள்ளிக்கிழமை தோறும் விரதமிருந்து மகாலட்சுமியை வழிபட்டு வாருங்கள். அஷ்டலட்சுமி கவசத்தை பாராயணம் செய்வதன் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும்.
சனிபெயர்ச்சி பலன்கள்
Up
16-12-2014 முதல் 15-12-2017 வரை சனிப்பெயர்ச்சி பலன்கள்:

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம்1, 2 பாதங்கள் வரை (60/100)

(பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்)

இடமாற்றங்களால்   இனிய  மாற்றம்   வந்து  சேரும்!

களைப்பின்றி உழைத்து காசினியில் புகழ் பெற்ற ரிஷப ராசி அன்பர்களே!


ன்றி மறக்காத குணத்தால் நல்லவர்கள் என்று பெயர் பெற்று விளங்கும் உங்களுக்கு, இதுவரை 6-ல் சஞ்சரித்து வந்த சனி பகவான் இப்பொழுது சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து கண்டகச் சனி என்ற ஆதிக் கத்தில் உலாவரப் போகிறார்.

கண்டகச் சனி என்றால் எல்லோரும் கவலைப்படுவார்கள். ஆனால் நீங்கள் மட்டும் கவலைப்பட வேண்டிய தில்லை. காரணம் உங்கள் ராசிக்கு அதிபதியாகிய சுக்ரன், சனிக்கு நட்பு கிரகமாக விளங்குகிறார். நண்பர்கள் எப்பொழுதுமே கெடுதல் செய்வதில்லை. பகைவர்களாக இருந்தால் தான் பயப்பட வேண்டும்.

சனியோ கண்டகச் சனியாக இருக் கிறது. ஆனால் அவரது நட்பு கிரகமான சுக்ரனது வீடு உங்களது ராசியாக அமைந்ததால், திண்டாட்டங் களை வழங்காமல் கொண்டாட்டங்    களையும், குதூகலங்களையும் வழங்கப்போகிறது.

உங்கள் ராசியைப் பொறுத்தவரை பிதுர்ரார்ஜித ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியாக விளங்கும் சனி, சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்த்து புனிதப்படுத்துகிறார். எனவே இதுவரை நீங்கள் பல வருடங்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த நற்பலன் இப்பொழுது நடைபெறப் போகின்றது. விருச்சிகத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது விருத்தியம்சத்தைக் கொடுக்கப் போகிறார்.

மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்தும், ஒரு சல்லிக்காசு கூட சேர்க்க முடியவில்லையே என்று சஞ்சலப்பட்டவர்கள் இப்பொழுது வங்கிச் சேமிப்பு வரலாறு காணாத அளவு உயர வழிவந்து விட்டதே என்று ஆச்சரியப்படுவார்கள். தடைகள் அகலும். தைரியத்தை மட்டும் உடன் வைத்துக் கொண்டால், வாழ்க்கையில் பகை என்பது இருக்காது.

மூன்று ஆண்டு காலங்கள் சப்தம ஸ்தானத்தில் முற்றுகையிடும் சனியால், போதிய நிதி வசதியும் பொன்னான வாழ்க்கையும், வந்து சேரப்போகிறது. அதற்கு நீங்கள், சனியை பக்தியோடு வழிபட வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் கேட்கும் வரங்களை மட்டுமல்லாமல், கேட்க நினைக்கும் வரங்களையும் கூட சனிபகவான் வாரி வழங்குவார்.

உங்கள் சுய ஜாதகத்தில் சனி இருக்கும் நிலை அறிந்து, நவாம்சத்தில் அது இருக்கும் இடம், அதோடு இணைந்து இருக்கும் கிரகம், அதனைப் பார்க்கும் கிரகம் என அனைத்தையும் ஆராய்ந்து, நீங்கள் தேர்ந்தெடுக்கும் தெய்வ வழிபாடுதான் தித்திக்கும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கப் போகிறது. சப்தம ஸ்தானத்தில் சனி வந்தால், அனுமனை வழிபட வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. எனவே மந்தனின் பார்வையால் மகத்துவம் காண அனுமனையும் வழிபாடு செய்வது நல்லது.

இனிய பலன் தருமா ஏழாமிடத்துச் சனி?

மாபெரும் கிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் சனிபகவான். இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் உலா வந்து கொண்டிருந்தார். ஆகையால் உத்தியோக பிரச்சினை, ஊதிய பிரச்சினை, உடனிருப்பவர்களால் பிரச்சினை என்று நிம்மதியில்லாத வாழ்க்கை அமைந்திருந்தது.

இப்பொழுது மார்கழி ஒன்றாம் தேதி முதல் சப்தம சனியாக வந்து உங்கள் சஞ்சலங்களைத் தீர்க்கப் போகின்றது. எப்படி கண்டகச் சனி இன்னல் களை தீர்க்கும் என்று நினைக்கலாம். கவலையை ஒரு நொடியில் போக்கு   பவனும் சனிபகவான் தான்.

சிந்திப்பதைவிட நேரடியாக செயல்பட வேண்டுமென்று நினைக்கும் உங்களுக்கு, சந்திக்கும் சனியின் பார்வையால் சங்கடங்கள் ஏற்படாது. காரணம் அதன் ஆதிபத்யமும், நட்பு கிரகத்தின் அடிப்படையிலும் தான். தந்தை வழி உறவிலிருந்த விரிசல்கள் அகலும். தடைப்பட்டு நின்ற காரியங்கள் துரிதமாக நடைபெறும்.

என்னயிருந்தாலும் சனிதானே ஆயுள்காரகன்!. எனவே உடல் ஆரோக்கியத்திற்கு வித்திடும் ஒரு கிரகம் மந்த கதியில் இயங்கி உங்களைப் பார்ப்பதால், உற்சாகக் குறைவும், சலிப்பும் ஏற்படும். உங்களை நீங்களே நொந்து கொள்ளும் நிலையும் உருவாகும்.    
    
களத்திர ஸ்தானமாக ஏழாமிடம் கருதப்படுவதால், அங்கிருக்கும் சனியால் வாழ்க்கைத் துணை வழியே பிரச்சினைகள் உருவாகாமல் இருக்க, விட்டுக் கொடுத்தல் அவசியம். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடந்தால் குழப்பம் ஏற்படாது.

பார்க்கும் சனி, யோகத்தை சேர்க்க வேண்டுமானாலும், பணவரவு திருப்திகரமாக அமைய வேண்டுமானாலும் சனிக்கிழமை தோறும் சனிபகவான் சன்னிதியில் எள்தீபம் ஏற்றுங்கள்.

மந்தனின் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்!


உங்கள் ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான சனிபகவான், ஏழாமிடத்தில் சஞ்சரிக்கின்றார். அதன் பார்வை 1, 4, 9 ஆகிய இடங்களில் பதிவாகிறது. உடல் ஆரோக்கியம், அறிவாற்றல், முன்னேற்றம், உற்சாகம், சுகம், வாகனம், தாய், தந்தை, பூர்வீகம் அனைத்து ஆதிபத்யங்களிலும் நல்ல மாற்றங்களை கொண்டு வந்து சேர்க்கப்போகிறார்.

சனி உங்கள் ராசியைப் பார்ப்பதால், ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும். ஆயினும் சனி உங்கள் ராசிக்கு யோகம் தரும் கிரகம் என்பதால், பெரிய அளவில் பாதிப்புகளை கொடுக்காது. உங்கள் சுய ஜாதகம் யோகம் தரும் விதத்தில் இருந்தால் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உடல்நிலைத் தொல்லைகள் ஏற்பட்டு மருத்துவச் செலவு உருவாகலாம். 
   
புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் என்றாலும், வாகனம் வாங்குதல், வீடு கட்டுதல் போன்ற பெரிய முயற்சிக்கு கடன் வாங்கித்தான் ஆக வேண்டும். சனி பகவானின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும், திகைக் கவும் வைக்கும்.

யோக பலம் பெற்ற நட்சத்திரம், உங்கள் ராசிநாதனுக்குரிய கிழமையோடு இணையும் நாளில், பாக்கியாதிபதியாக விளங்கும் கிரகம் பலம் பெற்றிருக்கும் பொழுது சிறப்பு வழிபாடுகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் ஒன்பதாமிடத்தைப் பார்க்கும் சனியால் பொன் பொருட்கள் குவியும் வாய்ப்பும், புகழும் வந்து சேரும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு மகிழும் வாய்ப்பு கிடைக்கும்.

குதூகலம் தருமா குருப்பெயர்ச்சி?

விருச்சிக ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மூன்று முறை குருப்பெயர்ச்சி நிகழவுள்ளது. 5.7.2015-ல் சிம்ம ராசியிலும், 2.8.2016-ல் கன்னி ராசியிலும், 2.9.2017-ல் துலாம் ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகிறார்.

சிம்மத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது  அதன்  பார்வை பலத்தால், 8,  10, 12 ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன. எனவே இழப்புகளை ஈடுசெய்யும் வாய்ப்பு கிடைக்கும். இருந்த இடம் தெரியாமல் நோய் மறைந்து போகும். தொழில் ரீதியான முயற்சிகளுக்கு தொல்லை தந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் இருப்பவர்கள் விருப்ப ஓய்வு பெற்று, புதிய தொழில் தொடங்க முயற்சிப்பார்கள். நீண்ட தூரப் பயணங்கள் கைகூடும்.

கன்னி ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை உங்கள் ராசி மற்றும் 9, 11 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே குரு பார்வை கோடி நன்மைகளைத் தரும். வாடிய நிலைமாறி வளர்ச்சி கூடும். இல்லத்தில் திருமண வாய்ப்பு உருவாகும். பிள்ளைச் செல்வம் இல்லாதவர்களுக்கு குருவருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொய்வு இழந்த தொழிலைத் தூக்கி நிறுத்துவீர்கள்.

துலாம் ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். அல்லல் கொடுத்து வந்த உறவினர்கள் விலகுவார்கள்.  உத்தியோகத்தில் ஊதிய உயர்வும், உழைப்பிற்கேற்ற பலனும் கிடைக்கும். நாடு மாற்றங்களாலும், வீடு மாற்றங்களாலும் நன்மை உண்டாகும்.

ராகு- கேது பெயர்ச்சிக் காலம்!


8.1.2016-ல் சிம்மத்தில் ராகுவும், கும்பத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது, சகோதரர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும். உடன் பிறப்புகளை நம்பிச்செய்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பண நெருக்கடி அதிகரிக்கும். பதவி உயர்விலும், உத்தியோக உயர்விலும் குறிக்கீடு சக்திகள் வந்து சேராமல் இருக்க, முறையாக சர்ப்ப சாந்திகளை முன்னதாகவே செய்வது நல்லது.

27.7.2017-ல் கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்கின்றனர். இந்த காலகட்டத்தில் உடன்பிறப்புகளிடையே ஏற்பட்ட சச்சரவுகள் அகலும். கடன் சுமை குறையும். கடல் தாண்டும் முயற்சி கைகூடும். கடக ராகு இடர்பாடு நீக்கி, இனிய வாழ்வை தருவார். அதே நேரத்தில் மகர கேது மன நிம்மதி குறைவை உண்டாக்குவார்.

தூர தேசத்தில் இருப்பவர்கள் தாய்நாடு திரும்பும் வாய்ப்பும், தாய்நாட்டில் இருப்பவர்கள் தூர தேசம் செல்லும் வாய்ப்பும் உருவாகும். தந்தை வழி உறவுகளால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். பூர்வீக சொத்து இடர்பாடு விலகும். ராகு-கேது வழிபாடு நன்மை அளிக்கும்.

சனியின்  வக்ர  காலம்  பொற்காலமாக  மாற..

உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் வந்து சேரும். தொட்டது துலங்கும். துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். கெட்டவர்கள் சகவாசம் தானாகவே விலகும். கிளர்ச்சியூட்டி வந்த எதிரிகள் மனம் மாறுவார்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். வாசல் தேடி வந்து திரும்பிச் சென்ற வரன்களே, மீண்டும் வந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தும். மித மிஞ்சிய பொருளாதாரம் வந்து சேரும். வேலைப்பளு கூடினாலும் விரும்பும் விதத்தில் வருமானம் கிடைக்கும். இதுபோன்ற காலங்களில் விஸ்வரூப ஆஞ்சநேயர் வழிபாட்டை நீங்கள் மேற்கொண்டால் வெற்றி வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ள இயலும்.

தொட்ட காரியங்களில் வெற்றி பெற வழிபாடு!

அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று சனிக்கிழமை தோறும், சனி பகவான் சன்னிதியில் ஜோடி தீபம் ஏற்றுங்கள். சனிகவசம் பாடுங்கள். வாழ்க்கை வளமாகும். சிறப்பு வழிபாடாக யோகபலம் பெற்ற நாளில் சிவகங்கை மாவட்டம் கண்டவராயன் பட்டி அருகில் நல்லிப்பட்டியில் உள்ள நல்லாண்டவர் திருக்கோவிலில் வீற்றிருக்கும் ஒற்றைச் சனீஸ்வரரை வழிபட்டு வாருங்கள்.
குருபெயர்ச்சி பலன்கள்
Up
2-8-2016 முதல் 1-9-2017 வரை

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம்1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்)

குருவின் பார்வை பதிகிறது! குடும்பத்தில் மகிழ்ச்சி வருகிறது!

களைப்பை மறந்து செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!


இறைவனைச் சுமக்கும் வாகனமான நந்தி உங்கள் ராசியின் சின்னமாக விளங்குவதால், மற்றவர்களின் மனப்பாரங்களை எல்லாம் சுமக்கும் மாமனிதர்களாக விளங்குவீர்கள். கவர்ச்சியாகப் பேசிக் காரியங்களை சாதிப்பதில் வல்லவர்கள் நீங்கள். கலை, இலக்கியம் போன்றவற்றை ரசிப்பதில் ஆர்வம் கொண்ட உங்களுக்கு, உல்லாசப் பயணங்களிலும் ஆர்வம் இருக்கும். வாகனங்களை வைத்துக்கொண்டு வசதியாக வாழ வேண்டும், செல்வாக்கோடு தேசத்தின் முக்கியப் புள்ளியாக முன்னேற வேண்டும், வாழ்க்கையை அனுபவித்து ரசிக்க வேண்டுமென்று நினைப்பீர்கள்.

கவுரவம், அந்தஸ்து உயர்ந்து காணப்படுவீர்கள். விவசாயத்திலும், விலங்குகளை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். தவறு செய்பவர்களை தட்டிக் கேட்கச் சொன்னால், அவர்கள் பிறர் மனம் புண்படுமே என்று புலம்புவீர்கள். பிறர் கண்படும் விதத்தில் உங்கள் வாழ்க்கை அமையும்.

அள்ளிக் கொடுக்கும் சுக்ரன் உங்களுக்கு ராசிநாதன். அவன் ‘இல்லை’ என்ற வார்த்தையைச் சொல்ல ஒருபோதும் உங்களை அனுமதிக்க மாட்டான். பிறக்கும்பொழுதே உங்களுக்கென்று நல்ல பொருளாதாரம் சேர்ந்திருக்கும். எனவே கவலை என்ற சொல்லே உங்கள் அகராதியில் இருக்காது. என்றாலும் சனி, செவ்வாய், புதன் ஆகிய கிரகங்களும் ஜாதகத்தில் பலம்பெற்றிருக்க வேண்டியது அவசியம். இல்லையேல் துன்பம் துளிர்விடும். எனவே செவ்வாய் பல    மறிந்து வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சேமிப்பு உயர புதன் பலம் பெற்றிருக்க வேண்டும். உங்கள் ஜாதகத்தில் புதன், செவ்வாய், சனி, சுக்ரன் பாதசாரத்தைப் பாருங்கள். ஆதரவு தரும் ஆலயத்திற்கு யோக பலம் பெற்ற நாளில் சென்று வழிபடுங்கள். வேதனைகள் தீரும். வெற்றிச் செய்திகள் தேடி வரும்.

மகத்துவம் வாய்ந்த உங்கள் ராசிக்கு, வரப்போகும் குருப்பெயர்ச்சி எப்படிப்பட்ட பலனைத் தரப்போகிறது என்பதைப் பார்க்கலாம்.

வந்தது குருப்பெயர்ச்சி!

ஆடி 18 உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமையப் போகிறது. அன்றைய தினம் இடம் பெயரும் குரு பகவான், கோடி கோடியாக கொட்டிக் கொடுக்கப் போகிறார். 5–ல் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, ஜென்ம ராசியிலும், 9 மற்றும் 11 ஆகிய இடங்களிலும் பதியப்போகிறது.

பொதுவாக ஐந்தாமிடம் என்பது புத்திர ஸ்தானம் என்றாலும் கூட, பூர்வ புண்ணியம், தாய்வழி சகோதரம், புத்தி சாதுரியம், புகழ்பெறும் நிலை, வாழ்வில் ஏற்படும் வளர்ச்சி போன்றவற்றையெல்லாம் அறிந்து கொள்ளும் இடமாக அமைகிறது. உங்கள் ராசிக்கு 8,11–க்கு அதிபதியானவர் குருபகவான். உங்களுக்கு இழப்பைக் கொடுக்கும் எட்டாமிடத்திற்கு குரு அதிபதி. அந்த இழப்பை ஈடுகட்டும் இடமான பதினோராம் இடத்திற்கும் அவர்தான் அதிபதி.

உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு சம வலிமையான எதிரி குருவாக இருந்தாலும், அவரது பார்வை கெடுதலைத் தராது. சுபகிரகம் என்பதால் சுகங்         களையும், சந்தோஷங்களையும் வழங்குவார். குறிப்பாக உன்னதமான குருவின் ஆதிக்கம் உங்கள் எண்ணங்களை நிறைவேற்றப் போகிறது. வண்ணமயமான வாழ்க்கை இனி அமையப் போகிறது. நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். கிராமத்தில் இருப்பவர்கள் நகரத்திற்கு சென்று, தொழில் தொடங்க முற்படுவர். சென்ற குருப்பெயர்ச்சியில் நடைபெறாத சில காரியங்கள் இந்த குருப்பெயர்ச்சியில் இனிதே நடைபெறும். இரு சக்கர வாகனம் வைத்திருப்போர், நான்கு சக்கர வாகனத்தை நாடிச் செல்வர். செல்வாக்கு மேலோங்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். புகழேணியின் உச்சிக்குச் செல்வீர்கள்.               

குரு பார்வை கொடுக்கும் பலன்கள்!


நவக்கிரகங்களில் நன்மை கொடுக் கும் கிரகம் என்று வர்ணிக்கப்படும் குரு இப்பொழுது 4–ம் இடத்திலிருந்து ஐந்தாமிடத்திற்கு வந்துவிட்டார். அங்கிருந்து கொண்டு தனது பார்வையை 1,9,11 ஆகிய இடங்களில் பதிக்கின்றார். பார்க்கும் குருவால் இனி பணியில் இருக்கும் தொய்வுகள் அகலும். யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு வந்து சேரும். சேர்க்கும் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். செல்வச் செழிப்பில் மிதக்கப் போகிறீர்கள்.

ஜென்ம ராசியை குரு பார்க்கப் போவதால் நீடித்த நோயிலிருந்து நிம்மதி பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் மாறும். உடல் நலத்திற்காக செலவிட்ட தொகை குறையும். உற்சாகத்தோடு பணிபுரியத் தொடங்குவீர்கள். கருத்து வேறுபாடுகள் அகலும். கனிவோடு பேசி காரியங்களைச் சாதித்துக்கொள்ள வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும். ரண சிகிச்சை செய்ய நினைத்தவர்கள் கூட, சாதாரண சிகிச்சையிலேயே குணம் பெற்று மகிழ்ச்சியடைவர்.

இதுவரை செய்த முயற்சிகளில் இருந்த தடைகள் அகல புதிய வழி தோன்றும்.  சிலமாதங்களாக ஏற்பட்ட பிரச்சினைகள் ஒவ்வொன்றும் நல்ல முடிவிற்கு வரும். மனக்கவலை நீங்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். இனத்தார் பகை அகலும். எல்லா வழிகளிலும் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். எப்போது நடக்குமோ என்று ஏங்கிய காரியம் இப்பொழுது நடைபெறும். வெற்றி வாகை சூடும் வகையில் வாழ்க்கை அமையும். பண மழையிலும், பாச மழையிலும் நனைவீர்கள். நினைத்ததைச் சாதித்துக் காட்டும் நேரம் கைகூடி வந்துவிட்டது. மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். மக்கள் செல்வங்களால் யோகம் வரும். ஆபரணங்களை வாங்கிச் சேர்க்க முற்படுவீர்கள்.

லாப ஸ்தானத்தை பார்க்கும் குரு மூடிக்கிடந்த தொழிலை மீண்டும் திறக்க வைப்பார். முன்னேற்றம் அதிகரிக்க முறையான மாற்றம் வரும். அரசுப்பணி, நிரந்தரப் பணி, வெளிநாட்டு அழைப்பு, விருப்ப ஓய்வில் வெளிவருதல், பதவி உயர்வு, இலாகா மாற்றம் போன்ற பலவகை சந்தர்ப்பங்கள் அவரவர் ஜாதகத்திற்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப வந்துசேரும். வரும் வாய்ப்பு நல்ல வாய்ப்புகளாகவே அமையும். எனவே நலங்களும், வளங்களும் வீடு வந்து சேர, கலங்காமல் கடவுள் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

குரு, சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (2.8.2016 முதல் 19.9.2016 வரை):– பூமி யோகம் கிட்டும். புதிய பூமி வாங்க நினைப்பவர்கள் அதற்குரிய நேரம் கைகூடி வந்திருப்பது கண்டு மகிழ்ச்சி அடைவர். தாய்வழி ஆதரவு பெருகும். பழைய வீடுகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட ஒரு சிலர் முன்வருவர். வாகன யோகம் உண்டு. பயணங்களால் பலன் கிடைக்கும்.

குருபகவான், சந்திர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (20.6.2016 முதல் 24.11.2016 வரை):– சகோதர ஒற்றுமை பலப்படும். வழக்குகள் சாதகமாகும். முன்னேற்றப் பாதையை நோக்கி அடிஎடுத்து வைப்பீர்கள். ஆதாயம் தரும் தகவலில் அக்கறை காட்டுவீர்கள். அசையாத சொத்துக்கள் வாங்குவதில் ஆசை கூடும். புதிய நண்பர்கள் உங்கள் பொருளாதார விருத்திக்கு அடித்தளம் இடுவர். ஆரோக்கியத் தொல்லை அகல மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

குரு, செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (25.11.2016 முதல் 21.2.2017 வரை மற்றும் 2.6.2017 முதல் 1.9.2017 வரை):–  விரயங்கள் அதிகரிக்கும். வீடுமாற்றச் சிந்தனைகள் மேலாங்கும். நீண்ட தூரப் பயணங்களால் நிம்மதி குறையலாம். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சகோதர வழியில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பு ஏற்படும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரலாம்.        

மங்கையருக்கான  மகத்தான  பலன்கள்!

ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு இது யோகமான நேரமாகும். நினைத்த காரியங்களை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பாலமாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்து வைப்பீர்கள். மக்கள் செல்வம் இல்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு, புத்திர பாக்கியம் உண்டாகும் வாய்ப்பு உருவாகும். சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். கூடப்பிறந்தவர்கள் உங்கள் கூட்டாளியைப் போல இருந்து உதவி செய்வர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணி நிரந்தரம் பற்றிய தகவல் கேட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு அரசு வேலை கிடைக்கக்கூடும். இல்லத்தில் மங்கள ஓசை கேட்பதற்கான வாய்ப்பு உண்டு. பிரதோஷ வழிபாடு பெருமை சேர்க்கும்.

அக்கறை  செலுத்த  வேண்டிய  வக்ர  காலம்!

இம்முறை குரு வக்ரம் பெறுவதோடு அதிசாரமாக துலாம் ராசிக்கு இடையில் செல்கிறார். இந்த அதிசார குரு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாது. எதிர்ப்புகளை அதிகரிக்கச் செய்யும். வீடு மாற்ற யோசனை உண்டாகும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். அடுக்கடுக்காக நல்ல பலன்கள் வந்து கொண்டே இருக்கும். குழந்தைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். படிப்பு, உத்தியோகம் போன்றவற்றில் மேன்மை பெற வழிவகுத்துக் கொடுப்பீர்கள். பற்றாக்குறை அகன்று பணத்தேவைகள் பூர்த்தியாகும். அஷ்டமாதிபதி வக்ரம் பெறுவதால், இந்த காலத்தில் இனிய மாற்றங்கள் நடைபெறும். பொதுநலத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். குரு வழிபாட்டோடு, நந்தியையும் வழிபடுவது நலம் சேர்க்கும்.

செல்வம் தரும் சிறப்பு வழிபாடு!

ராசிநாதன் சுக்ரன் என்பதால் தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டு வாருங்கள். வெள்ளிக்கிழமை விரதமிருப்பது வியக்கும் வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். யோக பலம் பெற்ற நாளில் தஞ்சை பெரிய கோவில் சென்று விநாயகர், முருகன், சுவாமி, அம்மன், நந்தி, தட்சிணாமூர்த்தி, வராஹி ஆகியோரை வழிபட்டு வாருங்கள். வளமும், நலமும் வந்து சேரும்.
ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
Up
08-01-2016 முதல் 27-07-2017 வரை

ரிஷபம்

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம்?1,? 2 பாதங்கள்? வரை


(பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்)

ராகு வருமிடம் நான்காகும்! நலமும், வளமும் இனி சேரும்!

சவால் விடுவதையும், அதைச் சமாளிப்பதையும் கைவந்த கலை£கக் கொண்டிருக்கும் ரிஷப ராசி நேயர்களே!


உங்கள் ராசிநாதன் சுக்ரன் ‘களத்திரகாரகன்’ என்று வர்ணிக்கப்படு        பவர். அள்ளிக்கொடுப்பதில் வல்லமை பெற்றவராக விளங்கும் சுக்ரனின் ஆதிக்கத்தைப் பெற்றிருப்பதால் பாடுபடாமலேயே உங்களுக்கு பணம் வந்து சேரும் வாய்ப்பு கிட்டும். வாழ்க்கையில் எல்லாவிதமான சுகங்களையும், சந்தோஷங்களையும் அனுபவிப்பவர் களாகவே விளங்குவீர்கள்.

ஏராளமான பிரச்சினைகளை எதிர்நீச்சல் போட்டு, திறமையாக சமாளிப்பீர்கள். யாராலும் செய்ய முடியாத காரியத்தை நான் செய்து காட்டுகிறேன் என்று சவால் விடுவீர்கள்.  எண்ணற்ற ரகசியங்களை இதயத்தில் பதித்து வைத்திருப்பீர்கள். கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் சம அளவு பெற்றவர்களாக விளங்குவீர்கள்.

இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த ராகு–கேது பெயர்ச்சி எப்படி எல்லாம் யோகங்களை கொடுக்கப் போகிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

நான்காமிடத்து ராகு நற்பலன்களைக் கொடுத்திடுமா?
பத்தாமிடத்து கேது பதவியினைத் தந்திடுமா?


இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், மீன ராசியில் சஞ்சரித்து வந்த கேதுவும் தனது வான்வெளிப்பயணத்தில் 8.1.2016 அன்று பின்னோக்கி வந்து உங்கள் பிரச்சினைகள் தீர வழிசெய்யப் போகிறார் கள்.

நான்காமிடத்து ராகு நன்மைகளைக் கொடுக்குமா? வீண் விரயங் களை வழங்குமா? வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்குமா? கோடி கோடியாய் சம்பாதிக்க முடியுமா? என்றெல்லாம் நினைத்திருந்த உங்களுக்கு, நாடிவந்த ராகு நற்பலன் களைக் கொடுக்க வேண்டுமானால் நாள் பார்த்துச்சென்று கோள்களை வணங்க வேண்டும்.

பொதுவாக ராகு–கேது பெயர்ச்சியை ஒட்டிய தினங்களிலோ அல்லது 60 நாட்களுக்குள்ளோ உங்களுக்கு அனுகூலம் தரும் நட்சத்திரம், நாள், பார்த்து சர்ப்ப சாந்தி வழிபாடுகளை செய்ய வேண்டும். சுய ஜாதக அடிப் படையில் ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

4–ல் ராகு சஞ்சரிக்கும் போது  ஆரோக்கியப் பாதிப்புகளை உருவாக்கலாம். கோடி கோடியாய் சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் விரயமாகலாம். மாடி கட்டுவதும், மனை கட்டுவதும், பூமி வாங்குவதும், பிள்ளைக்கு நகை வாங்குவதும் என்று விரயங்கள் வந்து கொண்டே இருக்கும். வந்த விரயங்களை வகைப்படுத்தி, சொந்த வீடு கட்டுவது முதல், சுயதொழில் செய்வது வரை யோசித்துச் செய்வது நல்லது. ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் சிறு தடை ஏற்படலாம். உத்தியோகத்தில் சிலருக்கு மாற்றங்கள் வந்து சேரலாம்.

வியாபாரம் செய்பவர்கள், அனைவரையும் அனுசரித்துச் செல்வது  நல்லது. முன்கோபத்தைக் குறைத்து எதிரிகளை வசமாக்கிக் கொண்டால் வந்த வாய்ப்புகளை உபயோகப் படுத்திக் கொள்ளலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பெற்றோர் வழியில் அனுசரித்துச் செல்வதே ஆதாயம் தரும். உற்றார்–உறவினர் உங்கள் நெருக்கத்தைப் புரிந்து கொண்டு பகையை மறப்பர். நீங்கள் அனுசரித்துச் செல்வதன் மூலமே ஆதாயத்தை அடைய முடியும். சொத்துக்களைக் கண்காணித்துக் கொள்வது நல்லது. பத்திரப் பதிவுகளைச் செய்ய நினைப்பவர்கள் வில்லங்கம் பார்த்துச் செய்து கொள்வது அவசியம். அர்த்தாஷ்டம ராகு என்பதால் எந்த ஒரு காரியத்தையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து செய்வதுநல்லது.

பத்தாமிடத்து கேது பதவியைத் தேடித்தருமா?

பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் கேது முத்தான வாழ்வு அமையவும், முன்னேற்றம் கூடவும் வழியமைத்துத் தரும். பத்தோடு பதினோறாவது ஆளாக இருந்த நீங்கள் தனி முத்திரையைப் பதிப்பவராகவும், முதல் ஆளாகவும் வர எடுத்த முயற்சி வெற்றி தரும். இதுவரை பணிகளில் ஏற்பட்ட தொய்வு நிலை அகலும். பொருளாதார வசதி பெருகும். இந்த நேரத்தில் புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தாயின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு அகலும். விலங்கு வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். கூட்டுத் தொழிலைத் தனித்தொழிலாக மாற்ற நினைப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தோடு பொன்னான பாதையை அமைத்துக் கொள்வீர்கள்.

அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். அடுத்தவரை நம்பிச் செய்த சில காரியங்களில் வெற்றி கிடைக்கும். சாமி துணையோடு சகல காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். இதுபோன்ற காலங்களில் விநாயகர் கவசம் பாடி, விநாயகரை வழிபடுவது நல்லது. நாக கவசம் பாடி ராகு–கேதுக்களை வழிபட்டால் யோக வாய்ப்புகள் வந்து சேரும். மாற்றுக்கருத்துடையோர் எண்ணங்களை மாற்ற முயற்சிக்க வேண்டிய நேரமிது.

பெற்றோர்களின் உடல் நலத்தில் திடீர் பாதிப்புகள் ஏற்பட்டு அகலும். பிரச்சினை தரும் வாகனத்தை மாற்றிவிட்டுப் புதிய வாகனங்களை வாங்குவதன் மூலம் பொருளாதார நிலை உயரும். ஞானகாரகன் கேதுவைப் பலப்படுத்த ஆனைமுகப் பெருமான் படத்தை வைத்து வணங்குங்கள். ஞாலம் போற்றும் வாழ்க்கை உங்களுக்கு அமையும்.

பாதசாரப்படி ராகு தரும் பலன்கள்!

ராகு, சிம்ம ராசிக்குள் அடியெடுத்து வைக்கும் பொழுது சூரியன், சுக்ரன், கேது ஆகிய மூன்றின் சாரத்திலும் சஞ்சரிக்கிறார். அதன் மூலமாக ஏற்படும் பலன்களை அறிந்து செயல்படுவது நன்மையை வழங்கும்.

சூரியன் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 10.3.2016 வரை): குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கலாம். உறவினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்ள மாட்டார்கள். உடன் இருப்பவர்களால் பிரச்சினைகள் வருகிறதே என்று கவலைப்படுவீர்கள். தாய்வழி ஆதரவு ஓர்அளவே கிடைக்கும். என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம் இதுவரை நல்ல விலைக்கு கேட்டும் கொடுக்க மறுத்தவர்கள் இப்பொழுது குறைந்த விலைக்கு விற்க முன்வருவர். அலைச்சல் அதிகரிக்கும். சுய ஜாதகம் வலிமையாக இருந்தால் உங்கள் குடும்ப உறுப்பினர்களால் மருத்துவச் செலவு ஏற்படலாம். துர்க்கை வழிபாடு துயரங்களைத் துள்ளி ஓடச்செய்யும்.

ராகு பகவான் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (11.3.2016 முதல் 16.11.2016 வரை):  தனவரவு தாராளமாக வந்து கொண்டே இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும் இந்த நேரத்தில் இதைச்செய்வோமா, அதைச்செய்வோமா என்று சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். பழைய தொழிலை முடக்கிவிட்டுப் புதிய தொழில் தொடங்கும் ஆர்வம் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவோடு இடமாற்றம், இலாகா மாற்றங்களைப் பெற்றுக் கொள்வர். சம்பள உயர்வு பற்றிய சந்தோஷச் செய்திகள் வந்து சேரும்.

ராகு பகவான் கேது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (17.11.2016 முதல் 26.7.2017 வரை): பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. விரயங்கள் கூடும். குடும்பச்சுமை அதிகரிக்கும். பிரபலஸ்தர்களின் ஒத்துழைப்போடு  காரியங்கள் பலவும் நடைபெறும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். முயற்சிகளில் வெற்றியும், முக்கியப் புள்ளிகளால் நன்மையும் கிடைக்கும் நேரமிது. வடக்கு நோக் கிய விநாயகப் பெருமானை வழிபட்டால் வளர்ச்சி கூடும்.   

பாதசார அடிப்படையில் கேது தரும் பலன்கள்!

கேது, கும்ப ராசிக்குள் அடியெடுத்து வைக்கும் பொழுது குரு, ராகு, செவ்வாய் ஆகிய மூன்று சாரங்களிலும் சஞ்சரிக்கின்றார். அப்பொழுது எப்படிப்பட்ட பலன்களை நமக்கு வழங்குவார் என்பதைப் பார்ப்போம்.

குரு சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 13.7.2016 வரை): 
கொடுக்கல்–வாங்கல்களில் இருந்த மந்த நிலை மாறும். பிறருக்கு  பொறுப்புச் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையும் வந்து சேரும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். கடல் தாண்டும் முயற்சியும் ஒருசிலருக்கு கைகூடுவது போல் தோன்றும். அரசியல், பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

ராகு சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது (14.7.2016 முதல் 22.3.2017 வரை): வாய்ப்புகள் வாயில் தேடிவரும். கேட்காமலேயே சிலருக்கு உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சொந்தங்களால் வந்த பிரச்சினைகள் அகலும். பிள்ளைகள் வழியில் நல்ல காரியம் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். அசையும் சொத்துக்களையும், அசையா சொத்துக்களையும் வாங்க உகந்த நேரமிது. வாங்கல், கொடுக்கல்களில் சரளமான நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வி.ஆர்.எஸ் பெற்றுக்கொண்டு விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் செய்ய முன்வருவர். ஜாதக அடிப்படையில் என்ன தொழில் செய்தால் லாபம் கிடைக்கும் என்பதை அறிந்து செயல்படுவது நல்லது.

கேது பகவான் செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (23.3.2017 முதல் 26.7.2017 வரை): விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துக்கொள்வது நல்லது. உடன்பிறப்புகளுக்கான திருமண முயற்சி கைகூடும். வீட்டில் மங்கல ஓசை கேட்பதற்கான வழி பிறக்கும். பத்திரப்பதிவில் இருந்த தடைகள் அகலும்.  சில மாதங்களுக்கு முன்பு செய்த ஏற்பாடுகள் பாதியிலேயே நின்று போயிருக்கலாம். அது இப்போது துரிதமாக நடைபெறும். பொதுவாக ராகு–கேதுக் களின் பாதசார பலமறிந்து வழிபாடுகளை மேற்கொண்டால் சோகங்களிலிருந்து விடுபட முடியும். அந்த அடிப்படையில் இக்காலத்தில் முருகப்பெருமான்  வழிபாடு முன்னேற்றத்திற்கு வித்திடும்.

வாழ்க்கை வசந்தமாக வழிபாடு!

நான்காமிடத்து ராகுவால் நலங்களும், வளங்களும் வந்து சேரவும், பத்தாமிடத்து கேதுவால் பாக்கியங்கள் அனைத்தும் கிடைக்கவும், அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று, திங்கள் தோறும் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பிரதோஷம் அன்று  விரதமிருந்து நந்தியெம் பெருமானை வழிபட்டு வந்தால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும்.
உங்கள் ராசி பலன்கள்
 • மேஷம்
 • ரிஷபம்
 • மிதுனம்
 • கடகம்
 • சிம்மம்
 • கன்னி
 • துலாம்
 • விருச்சகம்
 • தனுசு
 • மகரம்
 • கும்பம்
 • மீனம்