Daily Thanthi World news | Tamil News | Tamil Newspaper | Online Tamil News Jhodhidam Details
home
Rasi Image
இன்றைய ராசி பலன்கள்
Up

கொடுக்கல்– வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்ல விதமாக நடைபெறும். உடல் நலனில் கவனம் தேவை. தொழில் இரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.

வார பலன்கள்
Up

13.1.2017 முதல் 19.1.2017 வரை

நீதி, நேர்மையை கடைப்பிடிக்கும் கன்னி ராசி அன்பர்களே!

முக்கிய நபரின் அறிமுகம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும். கடன் பாக்கிகள் கிடைத்து மகிழ்ச்சியை உண்டாக்கும்.

உத்தியோகம்: உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். பொறுப்பான வேலைகளை அவசர மாகச் செய்து முடிக்கும் நிலை ஏற்படலாம்.

தொழில்: சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நிலுவைகள் சுலபமாக வசூலாகும். புதிய வாடிக்கையாளர்கள் வருகை பொருளாதாரத்தை உயர்த்தும். வியாபாரத்தில் புதுமையை புகுத்த முயற்சிப்பீர்கள். கூட்டுத்தொழிலில் வியாபாரம் நன்கு நடைபெற்று லாபம் அதிகரிக்கும். பங்குச்சந்தை வியாபாரிகள் கணிசமான லாபம் பெறுவார்கள். புதிய நிறுவனங்களின் அன்றாட நிலவரத்தை கவனித்து முதலீடு செய்தால் லாபம் அதிகரிக்கும்.

கலை: கலைஞர்கள் அசையாத் சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர். பழைய பொருட்களை மாற்றிவிட்டு நவீனமான பொருட்களை வாங்குவீர்கள்.

குடும்பம்: குடும்பத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, நிலம் வாங்கும் யோசனை வெற்றி  பெறும். சுப காரியங்கள் செய்ய முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

வார வழிபாடு:– வெள்ளிக்கிழமை குத்துவிளக்கு பூஜை செய்து, மகாலட்சுமியை வணங்கினால் அதிர்ஷ்டம் தரும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 2,6,9
அதிர்ஷ்ட நிறம்:– சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை:– வெள்ளி

தமிழ் மாத ஜோதிடம்
Up
தை மாத ராசி பலன்கள்

14.1.2017 முதல் 12.2.2017 வரை


மகம், பூரம், உத்ரம் 1–ம் பாதம் வரை

சர்ப்ப சாந்தி பரிகாரம் சந்தோ‌ஷம் தரும்!

எந்தவொரு கருத்தையும் நேருக்கு நேராக பேசும் சிம்ம ராசி அன்பர்களே!


உங்களின் தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பா£க்கும் பொழுது, ஜென்மத்தில் ராகுவும், 7–ல் கேதுவும் அமர்ந்து சர்ப்ப தோ‌ஷத்தை உருவாக்கு கிறார்கள். எனவே ஆரோக்கியத் தொல்லை, அதிக விரயங்கள், காரியங்களில் தடை, மன அமைதி குறைவு என்ற நிலை உருவாகி இருக்கலாம். அந்த நிலை மாற வேண்டுமானால் நாகசாந்திப் பரிகாரங்களை நம்பிக்கையோடு, உங்களுக்கு அனுகூலம் தரும் ஸ்தலங்களுக்குச் சென்று செய்து வருவது நல்லது.

விரயாதிபதி விரய ஸ்தானத்திலும், ராசிநாதன் 6–ம் இடத்திலும் இருப்பதால், வரவைக் காட்டிலும் செலவு கூடும். வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். பணிகளில் தொய்வு ஏற்பட்டாலும் பட்டபாட்டிற்கு பலன் கிடைக்கும். வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் உங்களுக்கு, செவ்வாய் பெயர்ச்சிக்குப் பிறகு திடீர் மாற்றங்கள் உருவாகும்.

தொழில் பங்குதாரர்களை விலக்கிவிட்டு, புதிய பங்குதாரர்களை இணைத்துக் கொள்ள முன்வருவீர்கள். அரசியலில் செல்வாக்கு மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து சில காரியங்களை முடித்துக்கொடுப்பர். சுபவிரயங்கள் அதிகரிக்கும். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால், எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்துச் செய்யுங்கள்.

சுயதொழில் புரிவோர் நம்பிக்கைக்குரியவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது நல்லது. ஆரோக்கியத் தொல்லை உருவாகும் அமைப்பு இருப்பதால், நோய்க்கான அறிகுறி தென்படும் பொழுதே மருத்துவ ஆலோசனை பெறுங்கள். இம்மாதம் சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனி பகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும். மேலும் மாட்டுப் பொங்கல் அன்று அதிகாலையில் நந்தி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.  கூட்டாளிகளால் பாதிப்புகள் ஏற்படாமலிருக்க, குலதெய்வப் பிரார்த்தனை சிறப்பானது.

மீன செவ்வாயின் சஞ்சாரம்!

ஜனவரி 16–ந் தேதி செவ்வாய், மீன ராசிக்கு செல் கிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை செவ்வாய் யோகம் செய்யும் கிரகமாவார். அவர் மாதத் தொடக்தக்தில் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே  முன்கோபத்தால் பல நல்ல காரியங்கள் கைநழுவிச் செல்லும் வாய்ப்பு உருவாகும். இதுபோன்ற நேரங்களில் அங்காரகப் பிரீதி செய்வது நல்லது. ஜனவரி 16–ந் தேதி செவ்வாய் அஷ்டமத்தில் அடியெடுத்து வைக்கப் போபவதால், வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. விலையுயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது விழிப்புணர்ச்சியுடன் செயல்படுங்கள். பத்திரப் பதிவில் தாமதங்கள் ஏற்படலாம்.

குருவின் வக்ர இயக்கம்!

ஜனவரி 16–ந் தேதி குரு வக்ர இயக்கத்தில் துலாம் ராசிக்கு வருகிறார். அதன் பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நாற் காலிக்கு பலர் போட்டியிட்டாலும், உங்களுக்கே அது கிடைக்கும் வாய்ப்பு உண்டு. தொழிலில் இதுவரை இருந்த மந்த நிலை மாறும். தொழில் திருப்திகரமாக இருக்கும்.

மீன சுக்ரனின் சஞ்சாரம்!

ஜனவரி 27–ந் தேதி மீனராசிக்கு சுக்ரன் செல்கிறார். இதனால் சகோதர ஒற்றுமை அதிகரிக்கும். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். வருமானப் பற்றாக் குறை அகல, புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வங்கிகளின் ஒத்துழைப்போடு வியாபார வளர்ச்சி உண்டு. பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி, வங்கிகளில் வைப்புநிதி வைப்பீர்கள்.

மகர புதனின் சஞ்சாரம்!

ஜனவரி 30–ந் தேதி புதன், மரக ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு. இழந்த சொத்துகளை மீட்கும் வாய்ப்பு உருவாகும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். வீண்  பழிகள் அகலும்.

இம்மாதம் பிரதோ‌ஷ வழிபாடு பெருமை சேர்க்கும்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

இம்மாதம் வரவைக் காட்டிலும் செலவு கூடுதலாக இருக்கும். வாய்ப்புகள் வந்தாலும் அதை உபயோகப் படுத்திக் கொள்ள இயலுமா? என்பது சந்தேகம் தான். தூரத்து உறவினர்களால் தொல்லை உண்டு. கணவன்– மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். பெண் குழந்தைகளின் திருமண முயற்சி வெற்றி தரும். தாய்வழி உறவு பலப்படும். உடன் பிறப்புகளில் ஒருசிலர் பகையாகலாம். உங்கள் பெயரில் உள்ள சொத்துகளை விற்றுவிட்டு, சுபகாரியம் செய்யலாமா? என்று நினைப்பீர்கள். சனிக்கிழமை அன்று அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பிரதோ‌ஷ நாளில் நந்தியை வழிபட்டால் இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும்.

பணத்தேவையைப்  பூர்த்தி செய்யும் நாட்கள்:


ஜனவரி: 17,18,23,24, பிப்ரப்பரி: 3,4,8,9

மகிழ்ச்சி தரும் வண்ணம்:– ரோஸ்.
ஆண்டு பலன்
Up
01-01-2017 முதல் 31-12-2017  வரை

உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)

இரண்டாமிடத்து குரு திரண்ட செல்வம் தரும்!

இனிமையாகப் பேசி எல்லோர் மனதிலும் இடம்பிடிக்கும் கன்னி ராசி அன்பர்களே!

எதையும் எடைபோட்டுப் பார்க்கும் சுபாவம் கொண்டவர் நீங்கள். எதிர்காலம் சிறப்பாக அமைய, இளமையிலேயே பல வழிகளை கையாளும் திறம் பெற்றவர்கள். உங்களிடம் சிந்தனை ஆற்றல், சொல்வளம், புத்திக்கூர்மை ஆகிய மூன்றும் இணைந்திருப்பதால், வெற்றி உங்கள் வீடு தேடி வருகிறது. கலகலப்பை உங்களுடனேயே வைத்துக் கொள்ளப் பிரியப்படுவீர்கள். ‘சிக்கனம் வீட்டைக் காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும்’ என்ற கருத்தை அறிந்து வாழ்க்கை நடத்துவீர்கள். உடன் இருப்பவர்கள் எவ்வளவு கோபமாக இருந்தாலும், அவர்களைச் சாந்தப்படுத்தும் வழி அறிந்தவர் நீங்கள். பழைய சடங்கு, சம்பிரதாயங்களில் அதிக நம்பிக்கை வைத்திருப்பீர்கள்.

எதையும் துருவித் துருவி ஆராய்ந்து பார்க்கும் எண்ணம் உங்களுக்கு உண்டு. மாற்றுக் கருத்துக்களை யாரேனும் சொன்னால், அவர்களை விட்டு விலகி விடுவீர்கள். யாரும் ஓர் நல்ல காரியம் செய்தால் மனமாரப் பாராட்டுவீர்கள். எப்படியும் வாழலாம் என்பவர்களுக்கு மத்தியில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்வீர்கள். திருமணம் பொருத்தம் பார்த்துச் செய்தால்தான் வருத்தம் இல்லாத வாழ்க்கை அமையும்.

இத்தனை ஆற்றல்களையும் தன்னகத்தே பெற்ற உங்களுக்கு, பிறக்கும் புத்தாண்டு எப்படிப்பட்ட மாற்றங்களை வழங்கப்போகிறது என்பதைப் பார்ப்போம்.  உங்கள் சுயஜாதகத்தில் தசாபுத்தி பலமிழந்து இருந்தால், அதற்காக கவலைப்பட வேண்டாம். பலமிழந்த கிரகம், புத்தாண்டு கட்டத்தில் இருக்கும் பாதசார பலமறிந்து வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். வளர்ச்சி கூடும்.

புத்தாண்டின் தொடக்கம்

பிறக்கின்ற புத்தாண்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்க வைக்கும் ஆண்டாகவே இருக்கிறது. முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைக்க வழிகாட்டப் போகிறது. மாற்ற ங்களை விரும்பும் உங்களுக்கு ஏற்றங்களையும், எதிர்பார்க்கின்ற காரியங்களில் வெற்றியையும் கொடுக்கப்போகிறது.

புத்தாண்டு தொடக்கத்தில் உள்ள கிரக அமைப்புகளை பார்க்கும் பொழுது, குரு உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். 12–ம் இடத்தில் ராகுவும், 6–ம் இடத்தில் கேதுவும் உலா வந்து கொண்டிருக்கின்றனர். 3–ம் இடத்தில் சனிபகவான் முழுமையாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். கேதுவோடு செவ்வாயும், சுக்ரனும் இணைந்திருக்கிறார்கள். உங்கள் ராசிநாதனாகவும், 10–ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் புதன், சனியோடு இணைந்து சஞ்சரிக்கிறார். விரயாதிபதி சூரியன் 4–ல் வீற்றிருக்கிறார்.

லாபாதிபதி சந்திரன் பஞ்சம ஸ்தானத்தில் வீற்றிருந்து, குருவால் பார்க்கப்படும் அமைப்போடு புத்தாண்டு தொடங்குகிறது. தொடங்கும் புத்தாண்டு தொழில் வளர்ச்சியைக் கூட்டும். பொருளாதாரத்தில் சென்ற ஆண்டைக் காட்டிலும் சிறந்த மேம்பாட்டை அடைவீர்கள்.

இந்த ஆண்டு குருப் பெயர்ச்சியாகி தன ஸ்தானத்திற்கு வரப் போகிறார். எனவே பணபலம் அதிகரிக்கப் போகிறது. ராகு லாப ஸ்தானத்திற்கு செல்லப் போகிறார். கேது பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போவதால், பிள்ளைகளுக்கான கடன், கடமைகளை முடித்து வைக்க வழிகாட்டுவார். வருடக் கடைசியில் சனிப் பெயர்ச்சியாகி, அர்த்தாஷ்டமச் சனியாக வருகிறது. எனவே, ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

பணிகளில் இருக்கும் தொய்வு அகலவும், பரபரப்பான செயல்பாடுகளில் குறைபாடுகள் இல்லாமல் இருக்கவும், உடல் ஆரோக்கியம் சீராக இருக்கவும் சனிபகவான் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

ராகு–கேது பெயர்ச்சிக் காலம்

27–7–2017 அன்று பின்னோக்கி நகரும் கிரகங்களான ராகுவும், கேதுவும் பெயர்ச்சியாகப் போகின்றன. லாப ஸ்தானத்தில் ராகு அடியெடுத்து வைப்பதால், தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்க முன் வருபவர்களுக்கு, பங்குதாரர்கள் தானாக வந்து இணைவர். பொருளாதார நெருக்கடி அகலும்.  பணப்பற்றாக்குறையில் இருந்து விடுபடுவீர்கள். அசையா சொத்துக்களை விற்று அதன்மூலம் வரும் லாபத்தை தொழிலுக்கு முதலீடாக வழங்குவீர்கள். எதிர்பார்க்கும் இடங்களில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். உறவினர்களின் பகை மாறி உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

பஞ்சம ஸ்தானத்தில் கேது சஞ்ச  ரிப்பதால் பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். குடும்பத்தில் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மாறும். சுபகாரியப் பேச்சுகளில் இருந்த தடைகள் அகலும். விரயங்கள் அதிகரித்தாலும், சுப விரயமாகவே இருக்கும். மங்கள ஓசை மனையில் கேட்கும் நேரமிது. பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்சினைகள், காரியத் தடைகள் விலக, கிரகங்களின் பலமறிந்து, வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் சந்திரபலமிக்க நாளில், ராகு–கேதுக்களை முறையாக வழிபட்டால், சிந்தனைகள் வெற்றி பெறும். சேமிப்பு உயரும். இல்லத்தில் அமைதி கூடும்.

தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான்!

2.9.2017–ல் குருப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது. இதுவரை ஜென்ம ராசியில் சஞ்சரித்து வந்த குரு, இனி தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். 4,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு, 2–ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகுவர். குடும்பப் பொறுப்புகள் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு.

குருவின் பார்வை 6,8,10 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே குடும்பச் சுமை குறையும். எதிரிகள் விலகுவர். ஆரோக்கியத் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். சென்ற வருடத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யும் வகையில், புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.  தொழில் ஸ்தானத்தை குரு பார்ப்பதால், தொழிலில் இயல்பான நிலைக்கு திரும்புவீர்கள். உற்சாகத்தோடு பணிபுரிவோம் என்று நினைத்தவர்களுக்கு, இது ஒரு பொற்காலமாக மாறப்போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா
மாற்றம், ஊர் மாற்றம் போன்றவை எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

சனிப்பெயர்ச்சிக் காலம்

வருடக் கடைசியில் 16.12.2017 அன்று சனிப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது. அது உங்களைப் பொறுத்தவரை அர்த்தாஷ்டமச் சனியாக விளங்குகிறது. எனவே ஆரோக்கியத்   தொல்லை அதிகரிக்கலாம். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங் களும், நாடு மாற்றங்களும் நிகழும். அதிகாரப்பதவியில்உள்ளவர்களுக்கு, அதிக பொறுப்புகள் வந்து மன உளைச்சலை ஏற்படுத்தும்.

முன்னேற்றப் பாதையில் பலவிதமான தடைகளை உருவாகும் நேரமிது. உடன் இருப்பவர்களால் குழப்பங்கள் ஏற்படும். தேடிய பொருட்கள் கிடைக்காமல் போகலாம். சொத்துக்கள் வாங்குவதில் கவனம் தேவை. இதுபோன்ற காலங்களில் சனிபகவானை வழிபடுவது நல்லது. குறிப்பாக திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபடலாம். வன்னி மரத்தடிச் சனியை வழிபட்டால் எண்ணியது நிறைவேறும்.

அக்கறை  செலுத்த  வேண்டிய  வக்ர  காலம்!

சுக்ரன் வக்ர காலத்தில் (9.4.2017 முதல் 18.4.2017 வரை), குடும்ப ஒற்றுமை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கடுமையாக முயற்சித்தால்தான் காரியங்கள் கைகூடும்.

புதன் வக்ர காலத்தில் (9.4.2017 முதல் 22.4.2017 வரை) முயற்சி கொஞ்சம் குறைந்தாலும், காரியங்கள் தளர்ச்சியுறும். பெற்றோர் வழியில் பிரியம் குறையலாம். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை.

குருவின் வக்ர இயக்கத்தில் (9.4.2017 முதல் 31.5.2017 வரை) குழப்பங்கள் அகலும். உடன் இருப்பவர்களால் நன்மை கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். கடுமையாக முயற்சித்தும் முடியாத காரியங்கள், இப்பொழுது படிப்படியாக நடைபெறத் தொடங்கும். 

சனியின் வக்ர காலத்தில் (9.4.2017 முதல் 6.8.2017 வரை), பணி
நிரந்தரம் பற்றிய நல்ல தகவல் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வியாபார விரோதங்கள் விலகும். வழக்குகளில் அனுகூலம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் அகலும். பூர்வீகச் சொத்து தொடர்பாக மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். புதிய சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

செல்வம் தரும் சிறப்பு வழிபாடு!

புதன்கிழமை தோறும் பெருமாள் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். வயதுக்கேற்ற எண்ணிக்கையில் ‘ராமஜெயம்’ எழுதி வருவதும்  நல்லது. கும்பகோணம் அருகிலுள்ள உப்பி  லியப்பன் கோவில் சென்று வழிபடுவதன் மூலம், ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளலாம்.

கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு

இந்த ஆண்டு உங்களுக்கு ஓர் இனிய ஆண்டாகவே அமையப் போகிறது. பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய இடம் வாங்கி வீடு கட்டும் யோகம் உண்டு. புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து புதிய ஒப்பந்தங்கள் வருவதற்கு வழிகாட்டுவர். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு பிள்ளைகளின் திருமண முயற்சி வெற்றிதரும். உடன் பிறந்தவர்கள் ஒருசில சமயங்களில் உதவவில்லை என்றாலும், சமயத்தில் கைகொடுத்து உதவுவர். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். வெளிநாடு சென்று படிக்க விரும்புபவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊர்மாற்றங்கள் ஏற்பட்டு  மகிழ்ச்சி காண்பர். கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. குலதெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்துங்கள். தசாவதாரப் படங்களையும், உலகளந்த பெருமாள் படத்தையும் இல்லத்து பூஜையறையில் வைத்து வழிபடுவது நல்லது. பஞ்சமுக ஆஞ்சநேயர் வழிபாடு நலம் தரும்.

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்
Up
துன்முகி வருட ராசிபலன்கள் 14-4-2016 முதல் 13-4-2017 வரை

உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம்,  சித்திரை 1, 2 பாதங்கள் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)

முத்தான  வாழ்வு தரும்  புத்தாண்டு  துன்முகி!

பொறுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி, பெருமைக்குரிய வாழ்க்கை நடத்தும் கன்னி ராசி நேயர்களே!

ன்மத வருடம் முடிந்து துன்முகி வருடம் தொடங்குகின்றது. வருகிற புத்தாண்டு வாய்ப்புகளை வரவழைத்துக் கொடுத்திடுமா? வருங் காலத்தை நலமாக்கிக் கொள்ள வழிவகை செய்து தருமா? பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகுமா? பின்னணியாக இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்குமா? நினைத்தது நிறைவேறி நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகுமா? என்றெல்லாம் நீங்கள் சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள்.

உங்கள் சிந்தனைகளுக்கு செவிசாய்க்கும் விதத்தில் நவக்கிரகங்கள் உலாவரும் நிலை இருப்பதால் புத்தாண்டு பொன்கொழிக்கும் ஆண்டாக அமையப் போகின்றது. 

இந்த ஆண்டு சித்திரை மாதப் பிறப்பு பங்குனி 31-ந் தேதி மாலை நேரத்தில், உங்கள் ராசிநாதன் புதனுக்குரிய கிழமையில் நிகழ்வதால் யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறப்பதும் யோகம்தான். திருவாதிரை என்பது ராகுவிற்கு உரிய நட்சத்திரமாகும்.

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் ராகு சஞ்சரிக்கின்றார். மறைந்த ராகு நிறைந்த தனலாபத்தைக் கொடுப்பார். எனவே புத்தாண்டில் பணவசதி சிறப்பாக இருக்கும். தொழில் வெற்றிநடை போடும். மனதில் நினைத்தவற்றை மறுகணமே செய்து முடிக்க வாய்ப்புகள் கைகூடிவரும்.

3-ம் இடத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை பெற்று இருக்கிறார்கள். முன்னேற்றத்தைக் குறிக்கும் இடத்தில் முரண்பாடான கிரகங்களின் சேர்க்கை இருப்பது அவ்வளவு நல்லதல்ல. என்றாலும் 3-ம் இடம், 8-ம் இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். 5-ம் இடம், 6-ம் இடம் ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி.

6, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதி இரண்டும் சேர்ந்து சஞ்சரிக்கும் பொழுது விபரீத ராஜயோக அடிப்படையில் விரும்பும் விதத்தில் சில நல்ல பலன்கள் நடைபெறப்போகிறது. திட்டமிடாது செய்த காரியங்களிலும், திட்டமிட்டுச் செய்யும் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். இத்தனை நற்பலன்கள் உங்களுக்கு வந்து சேர்ந்தாலும் 6-ம் இடத்தில் கேது இருக்கின்றார். எனவே உத்தியோகம் மற்றும் தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் இடையூறுகள் வரும்.

எதிரிகளின் பலம் ஒருசில சமயங்   களில் மேலோங்கி இருக்கலாம்.  திடீர் இடமாற்றம், வீடு மாற்றம் உங்களுக்கு வந்து சேரலாம். எனவே ஞானகாரகன் கேதுவை திருப்திப்படுத்த வாரம் தோறும் விநாயகப் பெருமானை வழிபட்டு வருவது நல்லது. வடக்கு நோக்கி வீற்றிருக்கும் விநாயகர் வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.
7, 10-க்கு அதிபதியான குரு பகவான் 12-ல் மறைவது நன்மை தான். மேலும் வியாழன் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கின்றார்.

கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் பலமிழந்து சஞ்சரிக்கும் பொழுது, மிகுந்த நற்பலன் களை கொடுக்கும் என்பார்கள். தாய்வழி ஆதரவு பெருகும். இடம், பூமி வாங்குவதில் இருந்த வில்லங்கங்கள் அகலும். வாகனப் பழுதுகளை முன்னிட்டு பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பயணங்கள் அதிகரிக்கும். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். முன்னோர் கட்டிய கோவிலை மீண்டும் புதுப்பித்து குடமுழுக்கு விழாக் காணும் அமைப்பை உருவாக்க முயற்சிப்பீர்கள்.
விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் விரும்பி வந்து சேருவர். சென்ற வருடத்தில் நடைபெறாத சில காரியங்கள் படிப்படியாக நடைபெற்று பரவசப்படுத்தும். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினைகள் மாறும்.

ஆண்டின் தொடக்கம் முதல் ஆடி 17 வரை!

இக்காலத்தில் உள்ள கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது திருப்திகரமாகவே இருக்கின்றது. உங்கள் ராசிநாதன் புதன் 8-ம் இடத்தில் மறைந்திருப்பதால் பயப்பட வேண்டியதில்லை. மறைந்த புதன் நிறைந்த தனலாபத்தைத் தருவார்.

புதனோடு சூரியன் இணைந்து புத ஆதித்ய யோகத்தை உருவாக்குகின்றார். எனவே கல்வி, கலை போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு இந்த ஆண்டு வளர்ச்சி ஏற்படும்.         விருதுகளும், பாராட்டுக்களும் கிடைக் கும்.

2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் உச்சம் பெற்றிருக்கின்றார். எனவே அழகிய வீடு கட்டிக் குடியேற வேண்டுமென்ற ஆசை நிறைவேறும். அது மட்டுமல்லாமல் ஏழரைச் சனி நடைபெறும்பொழுது அடகு வைத்த நகைகளை மீட்கும் சூழ்நிலை உருவாகும். குழந்தைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்க அதிக முயற்சி எடுப்பீர்கள்.  அதற்கேற்ற விதத்தில் விரய ஸ்தானத்தில் வியாழன் இருப்பதால் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். 

குருவின் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிகின்றது. அந்த சுக ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சுகங்  களும், சந்தோஷங்களும் வந்து சேரும். எதிரிகள் தொல்லை குறையும். இடம் சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர்பதவி கிடைக்கச் செய்த ஏற்பாடுகள் பலன் தரும். ஒவ்வாமை நோய் அகலும்.

அஷ்டம ஸ்தானத்தை குரு பார்த்து புனிதமடைவதால் நீண்ட நாட்களாக நடைபெறாத காரியங்கள் இப்பொழுது நடைபெறத் தொடங்கும்.  ஆக்கப்பூர்வ மாக சிந்தித்து அனுகூலத்தைக் காண்பீர்கள். தூரத்து உறவினர் களால் ஏற்பட்ட தொல்லை அகலும். பணிஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் பணி கிடைத்து வருமானம் வரும் வாய்ப்பு கிட்டும்.

ஆடி 18-ல் தேடி வரும் குரு!

துன்முகி வருடம் ஆடி மாதம் 18-ந் தேதி (2.8.2016) அன்று கன்னி ராசியில் குரு சஞ்சரிக்கப் போகின்றார். இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக உங்களுக்கு அற்புதமான மாற்றங்கள் வந்து சேரப்போகின்றது. ஜென்ம குருவால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் கூடுதலாகவே கிடைக்கும். குரு ஜென்மத்தில் இருந்தபடியே சப்தம பார்வையாக தன் வீடான மீனத்தைப் பார்க்கப் போகின்றார். எனவே களத்திர ஸ்தானம் புனிதமடைகின்றது.

மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் தங்கு தடையின்றி கேட்கும். மக்கள் செல்வங்களின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்து உதவுவர். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். தூர தேசத்திலிருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள். அஞ்சல்வழி அனுகூலங்கள் உண்டு. 

குறிப்பாக குரு பகவான் கூடவே இருக்கும்பொழுது அதன் அருளால் அனைத்து செயல்பாடுகளிலும் வெற்றி கிடைக்கும். ஆற்றல் பளிச்சிடும் நேரமிது. வீடு மாற்றம் முதல் விரும்பும் மாற்றம் வரை வந்து சேரப்போகின்றது. ஜென்மத்தில் சஞ்சரிக்கும் குரு 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்க்கிறது. அந்த மூன்று இடங்களும் நன்றாக இருந்தால் தான் வாழ்க்கை முழுமை பெறும். எனவே அந்த இடங்களை குரு பார்ப்பதால் அடுக்கடுக்காக யோகங்கள் வந்து சேரும் அல்லவா?

குரு பார்வை பதியும் பஞ்சம ஸ்தானம் புனிதமடைவதால் பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்துப் பலன்களும் கிடைக்கும். செல்வாக்கு உயரும். தேசப்பற்றும், தெய்வப்பற்றும் மிக்க ஒருவரின் ஒத்துழைப்பால் வாசமலர் போன்ற வாழ்க்கையை அமைத்துக்கொள்வீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும்.  கடைதிறப்பு விழாக் கள் முதல் கட்டிடத் திறப்பு விழாக்கள் வரை நடத்திப் பார்க்கும் நேரமிது. நீங்கள் உதவி செய்ததன் விளைவாக சிலருக்கு பதவிகள் வந்து சேரும். சொத்துக் களாலும், சொந்தங்களாலும் நற் பலன்கள் உண்டு. அத்தை, மாமன் உறவில் இருந்த விரிசல் மறையும்.

சப்தம ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் தந்தைவழி ஆதரவு தக்க விதத்தில் கிடைக்கும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். புதிய ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். பொன் நகை வாங்கி புன்னகை புரிவீர்கள். பூர்வீக இடத்தில் வீடு கட்டலாமா? என்ற சிந்தனை மேலோங்கும். வரவு திருப்தி தரும்.

மங்கையருக்கான மகத்தான பலன்கள்!

துன்முகி வருடத்தில் கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு பணக்கவலை மாறும். மனநிம்மதிக்கு வழிபிறக்கும். தாய்வழி ஆதரவோடு தக்க விதத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

சொத்துக்களின் சேர்க்கை உண்டு. சொந்தங்களின் பாராட்டுக்களும் கிடைக்கும். குருவின் பார்வை பலத்தால் கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். கணவன்-மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். ஆரோக்கியத் தொல்லை அகலும். உடன்பிறப்புகள் மட்டும் பகை பாராட்டுவர். அவர்களை அனுசரித்துச் செல்வது தான் நல்லது. ஜென்ம குரு மாறியதும் உடல் நலத்தில் சிறு சிறு தொல்லைகள் தோன்றலாம். மாற்று மருத்துவத்தை மேற்கொள்வதன் மூலம் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஜுன் மாதத்திலேயே பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் வந்து சேரும்.

குழந்தைகளை அதன் போக்கில் விட்டு விடாமல் உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பிள்ளைகளின் வெளிநாட்டுப் படிப்பை முன்னிட்டு செய்த முயற்சிகள் வெற்றி தரும். அட்சய திருதியையில் மட்டுமல்லாமல் நினைக்கும் பொழுதெல்லாம் ஆபரணங்களை வாங்கும் யோகம் உருவாகும். ராகு-கேது மற்றும் குரு வழிபாடு நன்மையை வழங்கும்.

குரு  மற்றும்  சனியின்  வக்ர  காலங்கள்!
குருவின் வக்ர காலத்தில் கூடுதல் நன்மை கிடைக்கும். குறிப்பாக நான்காமிடம் மற்றும் ஏழாமிடத்திற்கு குரு அதிபதியாக விளங்குவதால் இடம், பூமியால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். இல்லத்தில் உள்ளவர் களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். நூதனப் பொருட்சேர்க்கை உண்டு. நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறும். வாட்டியெடுத்த வறுமை விலகும். தோட்டம், வயல் போன்றவை வாங்கத் தொகையைச் செலவிடுவீர்கள். தீட்டும் திட்டங்கள் ஒவ்வொன்றும் நிறைவேறும். மருத்துவச்செலவு குறையும். மனைகட்டிக் குடியேறும் எண்ணம் நிறைவேறும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர்.

சனியின் வக்ர காலத்தில் சிந்தனைகள் சிதறும். செல்லம் கொடுத்து வளர்த்த பிள்ளைகளால் உள்ளத்தில் சுமை கூடும். பணப்பொறுப்பு சொன்னதன் விளைவாக நட்பு ஒன்று பகையாகலாம். நல்ல மனிதர்கள் என்று நம்பி செயல்பட்ட சில காரியங்கள் பாதியிலேயே நிற்கலாம். உறவினர்களுக்கு இடையே உரசல்களும், மன உளைச்சல்களும் அதிகரிக்கலாம். இதுபோன்ற காலங்களில் குருவையும், சனியையும் வழிபடுவது நல்லது.

வளர்ச்சிக்கு  வித்திடும் வழிபாடு!
புதன்கிழமை தோறும் அனுமனை வழிபட்டு வாருங்கள். தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுவதன் மூலம் செல்வ நிலை உயர வழிபிறக்கும்.
சனிபெயர்ச்சி பலன்கள்
Up
16-12-2014 முதல் 15-12-2017 வரை சனிப்பெயர்ச்சி பலன்கள்:

உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை (65/100)

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)


பொன்னான வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் உருவாகும்!

பார்த்த மாத்திரத்தில் எடை போடுவதில் பலே கெட்டிக்காரர்களான கன்னி ராசி அன்பர்களே!

புதனின் ஆதிக்கத்தால் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளும் உங்களுக்கு ஏழரைச் சனி இப்போது முடிவடைகிறது. இனி உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். சோதனைகளுக்கு மத்தியில் துவண்டு போய் இருந்த உங்களுக்கு, வேதனை அகன்று வியக்கும் வாழ்க்கை அமையப் போகிறது.

அதே நேரத்தில் விலகும் சனியை விரும்பி வணங்கினால், உலகில் பலரும் பாராட்டும் விதத்தில் வாழ்க்கை அமையும். அதற்கேற்ற ஸ்தலம் திருநள்ளாறு. அங்குள்ள காக வாகனத்தானை கைகூப்பித் தொழுது வாருங் கள். அன்னதானம், சொர்ணதானம், வஸ்திர தானங்களில், இயன்றவரை ஏதேனும் ஒன்றை செய்து வருவது நல்லது. சனியின் சன்னிதியில் சனி கவசம் பாடுங்கள். எதிர்மறை சொற்கள் இல்லாத பாடல்களை பாடுவதே இனிய வாழ்விற்கு வித்திடும்.

அனைவருக்கும் நிறைவைத் தருவது அன்னதானம். எனவே சனியின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள், அன்னதானம் வழங்குவது நல்லது.

முயற்சிக்கு வித்திடும் மூன்றாம் இடத்தில் சனி சஞ்சரிக்கப் போவதால், எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும். இயல்பான வாழ்க்கையில் இதுவரை ஏற்பட்ட தடைகள் அகலும். ஸ்தம்பித்து நின்ற தொழில் விறுவிறுப்பாக நடைபெறும். தன்னைவிட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்திணைவர். பொன்னும், பொருளும் போற்றுகிற செல்வாக்கும் இன்னும் உயரும். எதிர்கால வாழ்க்கைக்காக தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும்.

ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். கொடிகட்டிப் பறந்த குடும்ப பிரச்சினைகள் படிப்படியாக மாறும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள சனி ஆயத்தம் செய்யப்போகின்றது.

மூன்றாண்டு காலங்கள் சனி முற்கையிடப் போகும். இந்த மூன்றாம் இடத்து ஆதிக்கத்தால் உங்கள் முன்னேற்றம் கண்ணேறுபடும் விதத்தில் அமையப்போகிறது. வேறூன்றி இருந்த விரக்தி மனப்பான்மை அகலும். சாட்சி கையெழுத்தால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.

உங்கள் சுயஜாதகத்தில் சனி இருக்கும் நிலை அறிந்து, நவாம்சத்தில் அது இருக்கும் இடம், அதோடு இணைந்து இருக்கும் கிரகம், அதனைப் பார்க்கும் கிரகம் அனைத்தையும் ஆராய்ந்து, நீங்கள் தேர்தெடுத்துச் செய்யும் தெய்வ வழிபாடுதான் தித்திக்கும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கப்போகிறது. எனவே உரிய பரிகாரங்களைத் தேர்ந்தெடுத்து செய்து உள்ளம் மகிழும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

ஏழரைச் சனி விலகியது!
இனிமேல் வெற்றி தொடங்கியது!

மாபெரும் கிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் சனிபகவான். அவர் இதுவரை இரண்டாமிடத்தில் சஞ்சரித்து வந்தார். இப்பொழுது மூன்றாமிடத்திற்கு செல்கின்றார். இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் பொழுது வாக்கு, தனம், குடும்பம் ஆகிய ஆதிபத்யங்கள் எல்லாம் வலுப்பெறுகின்றது. எனவே கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போயிருக்கலாம். குடும்ப ஒற்றுமை பாதிக்கப்பட்டிருக்கலாம். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு உருவாகியிருக்கலாம்.

குடும்பச்சுமை கூடி குதூகலத்தை மறக்கடிக்க வைத்த சனி, இப்பொழுது மூன்றில் அடியெடுத்து வைத்து வாழ்வில் ஏற்பட்ட விரிசல்கள் எல்லாம் ஓட வைக்கப் போகிறது.

மார்கழி 1-ந் தேதி முதல் உடன்பிறப்புகள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, கூடப்பிறந்தவர்களின் பாசமழையில் உங்களை நனைய வைக்கப் போகிறது. கருத்து வேறுபாடுகளை மறந்து சகோதரர்கள் உங்களோடு வந்திணைவார்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பழக்க வழக்கங்களில் பலவித மாறுதல்கள் ஏற்படும். வழக்கமாகச் செய்யும் தொழிலில் ஏற்பட்ட தொய்வு அகலும். வசதி வாய்ப்புகள் பெருகும். வீண் விரோதங்களை விலக்கிக் கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் உன்னத நிலை அடைவார்கள். ஊர் மாற்றங்   களும், இடமாற்றங்களும், வீடு மாற்றங்களும் ஒவ்வொன்றாக வந்து அமையும். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பதவி உயர்வு போன்றவைகளை பெற்றுக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். பணப்பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையும் வந்து சேரும். கடன் வாங்கிக் காலம் கழித்தவர்கள் கூட இப்பொழுது  பணப்புழக்கம் அதிகரிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

இதுவரை இருந்த தடைகள் அகன்று, படிப்படியாக முன்னேற்றங்கள் ஏற்படும். எதிலும் வெற்றியைப் பெற விஷ்ணுவையும், லட்சுமியையும், அனுமனையும் வழிபட்டு வருவது நல்லது. கும்பகோணம் அருகில் உள்ள உப்பிலியப்பன் கோவில் மற்றும் காரைக்குடி அருகில் உள்ள தென் திருப்பதி  என்றழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் - அலர்மேலுமங்கையை வழிபட்டு வருவது நல்லது.

மந்தனின் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்!

உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனிபகவான், மூன்றாம் இடத்தில் சஞ்சரித்து அதன் பார்வையை 5, 9, 12 ஆகிய இடங்களில் செலுத்துகிறார். எனவே அந்த இடங்களெல்லாம் புனிதம் அடைகின்றது. ஐந்தும், ஒன்பதும் மிஞ்சும் பலன்தரும் என்பார்கள். அதிலும் தன்வீட்டைத் தானே பார்க்கும் சனியால், பிள்ளைகள் ஸ்தானம் வலுவடைகிறது. எனவே குழந்தைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதன் கல்வி வளர்ச்சிக்காகவும், கடல்தாண்டும் முயற்சிக்காகவும் நீங்கள் செய்த ஏற்பாடுகள் வெற்றி தரும்.

சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் தந்தை வழியில் நெருக்கம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். ஒரு சிலர் பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சனியின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் அடிக்கடி பயணங்கள் உருவாகும். காலையில் காஷ்மீர், மதியத்தில் மலேசியா, இரவு இந்தியா என்று பார்த்துக் கொண்டிருக்கும் வாழ்க்கையும் அமையும். பக்கத்து ஊருக்கு சென்று பலரின் வேலையை ஒப்புக் கொண்டு செய்யும் வாய்ப்பும் கிட்டும். மொத்தத்தில் பார்க்கும் சனி யோகத்தை வாரி வழங்க உங்கள் ராசிநாதனுக்குரிய கிழமையோடு யோக நட்சத்திரம் சேரும் நாளில் சிறப்பு வழிபாடுகளை தேர்ந்தெடுத்து செய்தால் வரமும் கிடைக்கும். வளமும் கிடைக்கும்.

குதூகலம் தரும் குருப்பெயர்ச்சிக் காலம்!


விருச்சிக ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெறப் போகிறது. 5.7.2015-ல் சிம்மத்திலும், 2.8.2016-ல் கன்னி ராசியிலும், 2.9.2017-ல் துலாம் ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகிறார்.

சிம்மத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கொடுக்கல்- வாங்கல்கள் ஒழுங்காகும். தடம் மாறிச் சென்ற உறவினர்கள் தானாக வந்திணைவர். குடும்பச் சுமை குறையும். கல்விக்காக எடுத்த முயற்சி கை கூடும். இல்லத்தில் சுபகாரியங்கள் இனிதே நடைபெற வழிபிறக்கும்.

கன்னி ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும்.

முயற்சிக்கும் காரியங்களுக்கும் மூலதனத்தை மூத்த சகோதரர் வந்து கொடுக்கலாம். தளர்ச்சி அகலும். தம்பதியர்களுக்கு குழந்தைப்பேறு இல்லையே என்ற கவலை அகலும். தகுந்த பரிகாரங்களை இக்காலத்தில் செய்தால் பிள்ளைச் செல்வம் துள்ளி விளையாடும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரும்.

துலாம் ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிவதால் வாகனம் வாங்க வேண்டுமென்ற ஆசை பூர்த்தியாகும்.  நோய், நொடிகள் குணமாகும். புதிய உத்தியோகத்திற்காக விண் ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். பழைய வீட்டைப் புதுப்பித்து கட்டும் எண்ணம் மேலோங்கும்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

8.1.2016-ல் சிம்மத்தில் ராகுவும், கும்பத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது, விரயங்கள் கூடுதலாக இருக்கும். சிலரின் குறுக்கீட்டால் தொல்லைகள் உருவாகலாம். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் உபத்திரவங்கள் ஏற்படும். நீண்ட தூரப் பயணங்கள் ஒரு சிலருக்கு வந்து சேரும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாக சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்து கொள்வது நல்லது.

27.7.2017-ல் கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் காலம் ஒரு பொன்னான காலமாகும். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். கருத்து வேறுபாடுகள் அகலும். கடல்தாண்டி சென்று வியாபாரம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.

சனியின்  வக்ர  காலம்  பொற்காலமாக  மாற..

ங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் மூன்று முறை வக்ரம் பெறுகிறார். 2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் வக்ரம் பெறும்பொழுது நன்மைகளையே உங்களுக்கு வழங்குவார். காரணம் 6-க்கு அதிபதியான சனிபகவான் வக்ரம் பெறும்பொழுது, ’கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கிணங்க எதிர்ப்புகள் அகலும். இல்லம் தேடி நல்ல செய்தி வந்து சேரும். மதிப்பும், மரியாதையும் உயரும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும்.

தொட்ட காரியங்களில் வெற்றி பெற வழிபாடு!
னிக்கிழமை தோறும் விஷ்ணு ஆலயத்திற்கு சென்று பெருமாளையும், லட்சுமியையும், அனுமனையும் வழிபட்டு வாருங்கள். விஷ்ணுவின் சன்னிதியில் துதி பாடல்களை பாடுங்கள், பணத்தேவைகள் பூர்த்தியாகும். சிறப்பு வழிபாடாக சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டியில் வீற்றிருந்து அருள் வழங்கும் மார்த்தாண்ட வைரவர் வளரொளி நாதர், வடிவுடையம்மனை வழிபட்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.
குருபெயர்ச்சி பலன்கள்
Up
2-8-2016 முதல் 1-9-2017 வரை

உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)

ராசிக்கு வந்தது குரு! யோசித்து செய்தால் பலன்!

திட்டங்களை  செயலாக்குவதில் வல்லவரான  கன்னி ராசி அன்பர்களே!

வரவறிந்து செலவு செய்பவர்கள் நீங்கள். உங்களது யோசனைகள் மற்றவர்களுக்கு பலன் தரும் விதத்தில் அமையும். உங்கள் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களை கடைசி வரை மறக்கமாட்டீர்கள். உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உண்மையாக வாழவேண்டும், உண்மையே பேசவேண்டும் என்ற எண்ணம் கொண்ட நீங்கள், பகைவர்களிடமும் பண்பு பாராட்டுவீர்கள். புத்திக் கூர்மையும், ஆழமான சிந்தனையும் உங்களிடம் இருப்பதால்தான், பலரும் உங்களுடன் பழக்கம் வைத்துக்கொண்டு தாங்கள் பட்ட துன்பத்திற்கு வடிகால் தேடுகிறார்கள். சாதனையாளர்கள் பலரையும் உருவாக்கும் தன்மை உங்களுக்கு உண்டு. உறவினர்களுக்கு எவ்வளவுதான் உதவிகள் செய்தாலும் அவர்கள் நன்றி காட்ட மாட்டார்கள். இருந்தாலும் நீங்கள் பிரதிபலன் எதிர்பார்க் காமல் உதவிக் கொண்டே இருப்பீர்கள்.

வாழ்க்கைத் துணையோடு அன்னியோன்யமாக இருக்க, சப்தமாதிபதி குரு உங்களுக்கு ஒத்துழைப்புத் தரவேண்டும். சுக்ரபலம் நன்றாக இருந்தால் தான் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். குடும்ப பிரச்சினையும் ஏற்படாது. சனியின் சஞ்சாரத்தைப் பொறுத்தே உங்கள் உத்தியோகத்தில் மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரும்.

எனவே உங்கள் சுய ஜாதகத்தைப் புரட்டிப் பார்த்து குரு, சுக்ரன், சனி ஆகிய 3 கிரகங்களின் நிலையும் எப்படி இருக்கின்றது என்று பாருங்கள். பலன் தரும் விதத்தில் பாதசாரம் இருந்தால் நலங்களும், வளங்களும் வந்து கொண்டே இருக்கும். இல்லையேல் நாடிச் சென்ற வாய்ப்புகள் கைகூடாது. தேடிச் சென்ற மனிதர்கள் ஒத்துழைப்புச் செய்ய மறுப்பர். வளர்ச்சி காண முறையாக குருவை வழிபடுங் கள். முல்லைப்பூ மாலை சூட்டி, மஞ்சள் வண்ண வஸ்திரம் அணிவித்து குருவை வழிபாடு செய்யுங்கள்.

உங்கள் ராசிக்கு குரு வரப்போகிறார். வரும் குரு வளர்ச்சியைத் தருமா?, தளர்ச்சியைத் தருமா?, அலைச்சலைத் தருமா?, ஆதாயத்தைக் கொடுக்குமா?, பணத்    தேவையைப் பூர்த்தி செய்யுமா?, பற்றாக்குறையை அதிகரிக்குமா?, கல்யாணக் கனவுகளை நனவாக்குமா?, உத்தியோக மாற்றங்களை உருவாக்குமா? என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள்.

உங்களது சிந்தனைகளுக்கு விடை கூறப்போகும் தேதி ஆடி 18. அன்றுதான் உங்கள் ராசியைத் தேடி வருகிறார் குரு பகவான்.

வந்து விட்டது குருப்பெயர்ச்சி!


ஆடி 18–ந் தேதி (2.8.2016) அன்று உங்கள் ராசியில் குரு சஞ்சரிக்கப் போகிறார். இந்த ஜென்ம குரு நிம்மதியைக் கொடுக்காது. நிம்மதியை குறைக்கும். நன்மைகள் நடைபெற்றாலும் கூட நாளும் மனநிம்மதி குறையும். கூடுதல் செலவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும். ஊர்மாற்றங்கள் எதிர்பாராமல் வந்து சேரும் என்றெல்லாம் எடுத்துரைப்பார்கள். இது பொது நியதி.

இருந்தாலும் ஒரு சிலருக்கு ஜென்ம குரு எல்லையில்லாத நன்மைகளைக் கொடுக்கும். இல்லத்தில் மங்கள ஓசை கேட்க வைக்கும். உள்ளத்தில் மகிழ்ச்சியும், உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கச் செய்யும். அப்படிப்பட்ட சூழ்நிலை அமைய அவரவருக்கு நடக்கும் திசாபுத்திய பலம் பெற்றிருக்க வேண்டும்.

ஜென்மத்தில் குரு வருகையால் சிக்கல்கள் ஏற்படும் பொழுது, பக்கபலமாக இருப்பவர்கள் உதவி செய்வர். பணத்தேவைகள் அதிகரிக்கும். அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என்ற உறவில் விரிசல் ஏற்படலாம். சிக்கனத்தைக் கடைப்பிடித்து செலவுகளை சமாளிக்க நேரிடும்.

உங்கள் ராசிக்கு 4,7–க்கு அதிபதியானவர் குரு. அவர் இப்பொழுது உங்கள் இல்லம் தேடி வந்து  பலன்  தரப் போகிறார். அவரை வீட்டிற்கு வரும் விருந்தினர் போல, வரவேற்க வேண்டியது அவசியமாகும். வண்ண மலர் மாலை சூட்டினால் எண்ணமெல்லாம் நிறைவேறும். குரு கவசம் பாடினால் குழப்பங்கள் தீரும். மங்கள நிகழ்ச்சிகளுக்கு அஸ்திவாரம் அமைத்துக் கொடுப்பவர் குருதான். எனவே தங்கு தடைகள் அகலவும், தனவரவு தழைக்கவும் குருவை வழிபடுங்கள்.

சுகாதிபதியாக குரு விளங்குவதால் மாற்று மருத்துவத்தை மேற்கொண்டு, உடல் நலத்தை சீராக்கிக் கொள்வீர்கள். கூட்டாளிகளால் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். தாய்வழியில் ஏற்பட்ட விரோதங்கள் விலகும். சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். புத்திர பாக்கியம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி கூடும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக மறுக்கப்பட்டு வந்த பதவி உயர்வு வந்து சேரலாம். ஒரு சிலர் விருப்ப ஓய்வில் வெளிவந்து, புதிய தொழில் தொடங்க முயற்சிப்பர். வாகன மாற்றம் செய்ய வேண்டிய நேரமிது. புதிய வாகனங்களை வாங்கவும், புதிய தொழிலை விரிவு செய்ய வும் எதிர்பார்க்கும் இடத்திலிருந்து சலுகைகள் கிடைக்கும்.

குரு பார்வை கொடுக்கும் பலன்கள்!

நவக்கிரகங்களில் சுப கிரகமாக விளங்கும் குரு ஜென்மத்தில் அடியெடுத்து வைக்கும் பொழுது, அதன் பார்வை 5,7,9 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே அந்த இடங்களெல்லாம் புனிதமடைகிறது. அந்த இடத்திற்குரிய ஆதிபத்யங்கள் எல்லாம் இனி துரிதமாக நடைபெறப் போகின்றன.

புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானம், பிதுர்ரார்ஜித ஸ்தானம், பயண ஸ்தானங்கள் புனிதமடைவதால் அந்த இடங்களுக் குரிய ஆதிபத்யங்களில் இருந்த தடைகள் எல்லாம் விலகி ஓடும். தக்கபலன் உங்களுக்கு கிடைக்கும். ஆரோக்கியப் பாதிப்புகள் அகலும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த  முயற்சிகளிலும் ஆதாயம் கிடைக்கும். இல்லறம் இனிதாக அமையும். பிரிந்த தம்பதியர்கள் இணையக்கூடிய சூழ்நிலை உண்டு. எதிர்பாராத தனலாபம் வந்து இதயத்தை மகிழ்விக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். குழந்தைகளின் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

குரு, பகவான் சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (2.8.2016 முதல் 19.9.2016 வரை):– விரயங்கள் அதிகரிக்கும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். பணிகள் பாதியிலேயே நிற்கலாம். மனப்போராட்டம் அதிகரிக்கும். மறைமுகப் பகையும் உண்டாகும் என்பதால், கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை.

குரு, சந்திர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (20.9.2016 முதல் 24.11.2016 வரை):– எடுத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும். வெளிநாட்டு பயணம் அனுகூலம் தருவதாக அமையும். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு புதிய பாதை கிடைக்க வழிவகுத்துக் கொடுப்பர். தாய்வழி ஆதரவு உண்டு. ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். வீடு வாங்க, விற்க எடுத்த முயற்சிகளிலும் வெற்றி கிட்டும்.

குரு, செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (25.11.2016 முதல் 21.2.2017 வரை மற்றும் 2.6.2017 முதல் 1.9.2017 வரை):– கூட்டாளிகள் பகையாகலாம். குடும்ப உறவில் விரிசல் ஏற்படலாம். பதவி மாற்றங்களும், இடமாற்றங்களும் பரிசீலிக்கப்படாமலேயே வந்து சேரும். உதவி செய்வ  தாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கை விரிப்பர். ஆரோக்கிய குறைபாடு அதிகரிக்கும். வழக்குகள் திசைமாறிச் செல்லும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் கன்னி ராசிக்காரர்களாக இருந்தால், இந்த காலத்தில் அவரவர்களுக்கு உரிய வழிபாடுகளை மேற்கொள்வது வளர்ச்சியைப் பாதிக்காது.

மங்கையருக்கான  மகத்தான  பலன்கள்!

கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி, நல்ல பலன்களை வழங்கப் போகிறது. குடும்பத் தகராறுகள் அகலும். உறவினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பிள்ளைகளின் கல்விக்கு சிறந்த வழியை ஏற்படுத்திக் கொடுப்பீர்கள். நீண்ட நாள் பேசியும் முடிவடையாத சில சுபகாரியப் பேச்சுக்கள் திடீரென முடிவிற்கு வரும். கணவன்–மனைவி ஒற்றுமை பலப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வரும் மாற்றங்கள், நல்ல மாற்றங்களாகவே அமையும். பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு தலைமைப் பதவியை தக்கவைத்துக் கொள்ள பெரும் முயற்சி எடுக்கும் சூழ்நிலை உருவாகலாம். அனுமன் வழிபாடு உங்கள் பயத்தைப் போக்கும். சனிக்கிழமை விரதமிருந்தால் சஞ்சலம் தீரும். சந்தோஷம் சேரும்.

அக்கறை  செலுத்த  வேண்டிய  வக்ர  காலம்!

குருவின் வக்ர காலத்தில் நல்ல பலன்கள் நடைபெறும். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் அடையும்பொழுது, அதிகக் கவனம் செலுத்தாத காரியங்களில் கூட ஆதாயம் கிடைக்கும். புதிய திருப்பங்கள் தோன்றும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். நல்லவர்கள் உங்களை நாடி வந்து சேருவர். வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். வருமானம் திருப்தி தரும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். நாட்டுப் பற்று மிக்கவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவோடு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றை அடைவீர்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குரு அதிசாரமாக துலாம் ராசியில்  சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 6,8,10 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார். அந்த காலத்தில் நீண்ட தூரப் பயணங்களால் நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய கூட்டாளிகள் வந்திணைந்து பொருளாதாரத்தை பெருக்கிக் கொடுப்பர்.

செல்வம் தரும் சிறப்பு வழிபாடு!

வாரம் தோறும் புதன்கிழமை வராஹி அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். புதுக்கோட்டை மாவட்டம் பில்லமங்கலத்தில் உள்ள மகிஷாசுரவர்த்தினியின் அவதாரமாக விளங்கும் பொன்னழகி அம்மனை வழிபட்டால், பொன்னும், பொருளும், புகழும் பெருகும்.
ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
Up
08-01-2016 முதல் 27-07-2017 வரை

கன்னி

உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)

விரய ஸ்தானத்தில் ராகு,
வீட்டில் விரயம் கூடும்!


அனுபவ அறிவால் பிறரை கவரும் கன்னி ராசி நேயர்களே!

நவக்கிரகங்களில் ‘கல்விக்கிரகம்’ என்று போற்றப்படும் புதன் உங்கள் ராசிநாதனாக விளங்குகிறார். எனவே கல்வியில் தேர்ச்சி பெற்றவர் களாக விளங்குவீர்கள். புதன் வலிமை இழந்திருப்பவர்கள் கல்வியறிவைக் காட்டிலும் அனுபவ அறிவு மிக்கவர்களாக விளங்குவர்.

‘சிக்கனம் வீட்டைக் காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும்’ என்ற வைர வரிகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர் நீங்கள். எந்தக் காரியத்தையும் கடைசிவரை இருந்து முடித்துக் கொடுக்கும் கடமை உணர்வைப் பெற்றிருப்பீர்கள். எப்படியும் வாழலாம் என்று வாழ்பவர்களுக்கு மத்தியில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள்.

பழைய சடங்கு, சம்பிரதாயங்களில் அதிக நம்பிக்கை கொண்ட உங்களுக்கு இந்த ராகு–கேது பெயர்ச்சி எப்படிப்பட்ட மாற்றங்களைக் கொடுக்கப் போகிறது என்பதைப்  பற்றிப் பார்ப்போம்.

கொடுக்கல்–வாங்கல்களை ஒழுங்கு செய்யும் கோதண்ட ராகு!
ஆற்றலைப் பளிச்சிட வைக்கும் ஆறாமிட கேது!


இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், மீன ராசியில் சஞ்சரித்து வந்த கேதுவும், தனது வான்வெளிப் பயணத்தில் 8.1.2016 அன்று பின்னோக்கி வந்து உங்கள் பிரச்சினைகள் தீர வழிசெய்யப் போகிறார்கள்.

பன்னிரெண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு, பயணங்களால் பலன் கிடைக்கச் செய்யும். தூர தேசத்தில் இருந்து ஒரு சிலருக்கு அழைப்புகள் வந்து சேரலாம். சுய ஜாதகத்தை ஆராய்ந்து அந்த வாய்ப்புகளை ஏற்றுக்கொள்வது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும் இந்த நேரத்தில் வரும் விரயங்களை சுபவிரயங்களாக  மாற்றிக்கொள்ளுங்கள்.

காது குத்து முதல் கல்யாண வாய்ப்பு வரை சுபகாரியங்கள் வந்து அலைமோதும். தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ உகந்த நேரமிது. நீங்கள் எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அதில் உங்கள் திறமையைக்  காட்டிப் பெருமை பெறப்போகிறீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அருகில் இருப்பவர்களால் ஏற்பட்ட ஆபத்துக்கள் அகலும். அதிகாரிகளிடம் கவனமுடன் செயல்படுவது நல்லது. வீடு கட்டும் முயற்சியில் அல்லது வாங்கும் முயற்சியிலும், பிள்ளைகளின் கல்வி நலன் கருதியும் விரயங்களைச் செய்யலாம். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

வெற்றி உங்கள் வீடு தேடிவரும். தேக நிலை சீராகும். தெய்வ அருள் கிடைக்கும். மக்கள் செல்வாக்கு மேலோங்கி மகத்தான வாழ்வை அமைத்துக் கொள்வீர்கள். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். வி.ஐ.பி.க்கள் தினமும் வீடு தேடி வருவர்.

வாகன யோகம் முதல் வளர்ச்சி தரும் அத்தனை யோகங்களும் கிடைப்பதற்கான வாய்ப்பை இந்த ராகு வழங்குவார். குழந்தைகளின் நலன் கருதி எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். நாடாளும் நபர்களின் நட்பால் நன்மைகள் வந்து சேரும். ‘ராகுவைப்போல கொடுப்பானுமில்லை’ என்பது பழமொழி. பொதுவாழ்வில் புகழ் சேரவும், தலைமைப் பதவிகள் தானாக வந்து சேரவும் வழிவகுக்கும் கேதுவையும், கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கும் ராகுவையும் வழிபாடு செய்து வந்தால் வளர்ச்சி மீது வளர்ச்சி ஏற்படும். நாகநாதர் தான் உங்களுக்கு யோக நாதர், சர்ப்ப கிரகங்கள் தான் சந்தோஷம் தரும் கிரகம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஆதாயம் தரும் ஆறாமிடத்து கேது!

சப்தம ஸ்தானத்தில் இதுவரை சஞ்சரித்து வந்த கேது இப்பொழுது ஆறாமிடத்தில் அடியெடுத்து வைக்கப் போகின்றது. எனவே எதிரிகள் உதிரியாவர். இதுவரை இருந்த குடும்பப் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக முடியும். சகோதர ஒற்றுமை பலப்படும். தக்க விதத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

ஆரோக்கியம் சம்பந்தமாக இருந்த குறைபாடுகள் அகல மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. உடனடி நிவாரணம் உங்களுக்கு கிடைக்கும். பூமி சேர்க்கைக்கு அஸ்திவாரமிடுவீர்கள். புதிய மனைகட்டிக் குடியேறும் ஆசை  மனதில் நீண்டநாட்களாக இருக்கலாம். அவை செயல்படும் நேரம் இப்பொழுதுதான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு எப்பொழுதும் முன்னேற்றம் காண வழிபிறக்கும். இதைக்காட்டிலும் நல்ல வேலை கிடைக்குமா? என்று காத்திருந்தவர்  களுக்கு தற்போது பணிபுரியும் இடத்திலேயே உத்தியோக உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழப்போகிறீர்கள். உயர் அதிகாரிகளும், மேலிடமும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நீங்கள் தான் எங்கள் கம்பெனி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். எதை கேட்டாலும் தருகிறோம் என்று சொல்லி கம்பெனி முதலாளிகள் கைகோர்த்துக் கொள்வர். கேது பலத்தால் வி.ஐ.பி.க்களாகவும், வி.வி.ஐ.பி.க்களாகவும் மாறப்போகிறீர்கள். ‘மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்’ என்ற கண்ணதாசனின் வைர வரிகள் இப்பொழுது உங்கள் வாழ்க்கையில் நடக்கப் போகின்றது.

அஞ்சல் வழியில் நெஞ்சம் மகிழும் தகவல்கள் வரும்

கொஞ்சிப்பேசும் குழந்தைச் செல்வங்களைப் பெற்றெடுக்க வழி பிறக்கும். மணமாலை சூடும் வாய்ப்பும், மங்கல நிகழ்ச்சிகள் நடத்தும் வாய்ப்பும் கேது பலத்தால் உருவாகப் போகின்றது.

கேதுவின் பலத்தால் கடன் சுமை கூடலாம். இருப்பினும், புதிய கடன் களும் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும் என்றாலும், ஒருவருக்கேனும் கடன் பாக்கி வைத்திருப்பீர்கள். எதிரிகளின் பலம் கூடும் என்பதால் இந்த நேரத்தில் நண்பர்கள் உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பார்களா? என்பது சந்தேகம் தான். பகை நட்பாக விநாயகப் பெருமான் வழிபாடு அவசியம் தேவை.

பாதசாரப்படி ராகு தரும் பலன்கள்!

ராகு பகவான் சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 10.3.2016 வரை): 
அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறைவாகக் கிடைக்கும். திடீர் இடமாற்றங்கள் திக்குமுக்காடச் செய்யும். ஆரோக்கியத் தொல்லைக்காகவும் ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு. புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று புனிதப்படுத்திக் கொள்வதன் மூலமே எண்ணிய காரியங்கள் எளிதில் நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விருப்பம் இல்லாத இடத்திற்கு மாறுதல் கிடைத்து மகிழ்ச்சிக் குறைவை உருவாக்கும். இதுபோன்ற காலங்களில் வீண் செலவுகள் ஏற்படாமலிருக்க வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது நல்லது.

ராகு பகவான் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (11.3.2016 முதல் 16.11.2016 வரை): பற்றாக்குறை அகலும். தங்கம், வெள்ளி மற்றும் ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். உடன்பிறப்புகளின் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவீர்கள். இதுவரை பாசம் காட்டாத பெற்றோர்கள் இனி பாசமும், நேசமும் காட்டுவர். தக்க சமயத்தில் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

ராகு பகவான் கேது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (17.11.2016 முதல் 26.7.2017 வரை): வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. தொழிலில்  இழப்புகளைச் சந்திக்க நேரிடும். நட்பு பகையாக மாறவும் வாய்ப்பு உண்டு. புது முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எனவே, உங்களுக்கு கிடைக்க வேண்டிய உத்தியோக உயர்வு உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களுக்கு கிடைத்து விடலாம். இட மாற்றம் செய்யலாமா? என்ற சிந்தனை மேலோங்கும். இனம்புரியாத கவலை மேலோங்கும் இந்த நேரத்தில் வடக்கு நோக்கிய விநாயகரையும், மேற்கு நோக்கிய துர்க்கையையும் வழிபட்டு வருவது நல்லது.

பாதசார அடிப்படையில் கேது தரும் பலன்கள்!

கேது பகவான் குரு சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 13.7.2016 வரை):
குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலம் உண்டு. நீண்ட நாளைய பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உதவிகளும் கிடைக்கும். லாபமும் வந்து சேரும். வாழ்க்கைத் துணையின் வேலைவாய்ப்பிற்காக ஏற்பாடு செய்திருந்தால் அது கிடைக்கும். அதன் மூலம் உதிரி வருமானங்கள் வந்து சேரும்.

கேது பகவான் ராகு சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (14.7.2016 முதல் 22.3.2017 வரை):
உடல் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவு குடும்பத்தில் வந்துகொண்டிருக்கிறதே என்று கவலைப்படுவீர்கள். இடையூறுகள் ஏற்பட்டு பல பணிகள் பாதியிலேயே நிற்கும். செலவு கூடும். குடும்பச்சுமையும் அதிகரிக்கும். வீடு, வாகனப் பராமரிப்பில் கவனம் செலுத்துவீர்கள். வெளிநாட்டு முயற்சிகளிலும் தடை ஏற்படலாம். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது.

கேது பகவான் செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (23.3.2017 முதல் 26.7.2017 வரை): வீண் பிரச்சினைகள் அலைமோதும். உடன்பிறப்புகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம். அரசு வழித்தொல்லைக்கு ஒருசிலர் ஆட்பட நேரிடலாம். உறவினர்கள் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கூட்டுத் தொழிலில் பிரச்சினைகள் உருவாகி பிரிவு ஏற்படலாம். விற்ற சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதே என்று சொல்லி மீண்டும் பிரச்சினைகள் தலைதூக்கலாம். எதையும் யோசித்துச்செய்ய வேண்டிய நேரமிது. அங்காரக வழிபாட்டைச் செய்தால் அல்லல்கள் தீர்ந்து ஆனந்தம் பெருகும்.

வாழ்க்கை வசந்தமாக வழிபாடு!

பனிரெண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் பணிகளில் தொய்வு ஏற்படாதிருக்கவும், ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் அல்லல்கள் அகலவும், வாரம் தோறும் சனிக்கிழமை அன்று சனீஸ்வர வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. மேலும் புதன்கிழமை விரதமிருந்து அனுமன் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள்.
உங்கள் ராசி பலன்கள்
 • மேஷம்
 • ரிஷபம்
 • மிதுனம்
 • கடகம்
 • சிம்மம்
 • கன்னி
 • துலாம்
 • விருச்சகம்
 • தனுசு
 • மகரம்
 • கும்பம்
 • மீனம்