நட்சத்திர பலன்


19.8.2017 முதல் 25.8.2017 வரை

1. அஸ்வினி: கலைஞர்களின் பெயர், புகழ் உயரும். பணவரவு கூடும் இனிய வாரமாகும். பெண்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். அரசாங்க ஊழியர்களுக்கு உத்தியோகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். இதுவரை குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் அகலும்.
19.8.2017 முதல் 25.8.2017 வரை

2. பரணி:  
காளியம்மன், மாரியம்மன் போன்ற தெய்வ வழிபாடு நலம் தரும். பக்தியில் மூழ்குவீர்கள். பண மழையில் நனைவீர்கள். செய்தொழில், வியாபாரம் சிறக்கும். புதிய தொழில் முயற்சி வெற்றி தரும். பெண்களுக்கு பொன், பொருள் சேரும். குடும்பச் சுமை குறையும். சந்தோ‌ஷம் அதிகரிக்கும் வாரமாகும்.
19.8.2017 முதல் 25.8.2017 வரை

3. கார்த்திகை:  இல்லறம் இனிக் கும். மனமகிழ்ச்சி கிட்டும். பணப் புழக்கம் சரளமாகும். திருப்பணிகளில் ஈடுபட்டு, இறையருளுக்கு பாத்திரமாவீர்கள். இளமை கூடும். இனிமை பிறக்கும் இனிய வாரம்தான். பிறர், உங்கள் புகழ்வதைக் கண்டு ஏமாறாதீர்கள்.

19.8.2017 முதல் 25.8.2017 வரை

4. ரோகிணி:  தேகநலம் சிறக்கும். முகப்பொலிவு கூடும். உங்கள் நட்சத்திர நாயகனின் சஞ்சாரம் நன்றாக  இருப்பதால், திட்டமிட்ட காரியங்களில் வெற்றிகளை குவிப்பீர்கள். கணவன்– மனைவி உறவில் மகிழ்ச்சி கூடும் இனிய வாரமாகும்.
19.8.2017 முதல் 25.8.2017 வரை

5. மிருகசீரி‌ஷம்:  அரசியல்வாதிகள் எங்கும் எதிலும் வெற்றிக் கொடியை நாட்டுவார்கள். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். கணவன்– மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். செய்தொழில், வியாபாரம் சிறக்கும்.
19.8.2017 முதல் 25.8.2017 வரை

6. திருவாதிரை:  திட்டங்கள் பல தீட்டுவீர்கள். ஆனால் ஒன்றிரண்டு மட்டுமே வெற்றியைப் பெறும். பணம் பல வழிகளிலும் வந்து, பையை நிரப்பும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றியாகும். கணவன்– மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும்.
19.8.2017 முதல் 25.8.2017 வரை

7. புனர்பூசம்:   இனிக்கும் செய்திகள் காதில் விழும். கடிதச் செய்தி மகிழ்ச்சி தரும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிட்டும். மண், மனை, கட்டிடங்களில் முதலீடு அதிகரிக்கும். செய்தொழில், வியாபாரம் சிறப்பாகும். உடல் நலம் சீராகும்.
19.8.2017 முதல் 25.8.2017 வரை

8. பூசம்:  இல்லத்தில் தடைபட்டு வரும் சுப காரியங்கள் இனி மள மளவென நடந்தேறும். இனி எதிலும் ஏறுமுகம் வந்து சேர, ஆறுமுகனை வழிபடுங்கள். நல்லவர்களின் நட்பு கிடைத்து மகிழ்வீர்கள். செய்தொழிலில் வருமானம் பெருகும்.
19.8.2017 முதல் 25.8.2017 வரை

9. ஆயில்யம்:  எதிர்மறை சக்திகள் விலகி நிற்கும். விருப்பங்கள் நிறைவேறும். வேலைதேடி அலையும் இளைஞர்களுக்கு, உத்தியோகம் கிடைக்கும். ஊதியம் மனநிறைவை அளிக்கும். வெகு நாட்களாக நடைபெறாமல் தள்ளிப்போன ஒரு காரியம், இனிதே நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
19.8.2017 முதல் 25.8.2017 வரை

10. மகம்: கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். பழைய பாக்கிகள் வசூலாகும். வெளிநாட்டுப் பயண முயற்சிகள் வெற்றிதரும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். நெடுநாளாக குழந்தையை எதிர்நோக்கும் தம்பதியர்களுக்கு, புத்திரபாக்கியம் கிட்டி மகிழ்வார்கள்.
19.8.2017 முதல் 25.8.2017 வரை

11. பூரம்:   தீட்டும் திட்டங்கள் வெற்றியாகும். தேக பலம் கூடும். தன்னம்பிக்கை தலைதூக்கும். தைரியம், வீரியம் பிறக்கும் இனிய வாரமாகும். பணப்புழக்கம் சரளமாகும். வாகனங்களை கையாளும் போது எச்சரிக்கை தேவை. இல்லத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட் களை வாங்கிச் சேர்ப்பீர்கள்.
19.8.2017 முதல் 25.8.2017 வரை

12. உத்திரம்:  குழந்தைகளால் மகிழ்ச்சி கிட்டும். செய்தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் பணம் வந்து கை கொடுக் கும். கடன் சர்ச்சைகள் தீரும். பகையும் நட்பாய் மலரும். கணவன்–மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். வளர்ச்சி கூடும் இனிய வாரம் இது.
19.8.2017 முதல் 25.8.2017 வரை

13. ஹஸ்தம்:  அரசு வகை காரியங்கள் அனுகூலமாகும். உத்தியோகப் பெண்கள், ஆண்களுக்கு பதவி உயர்வு கிட்டும். விரும்பிய இடமாற்றமும் வந்து சேரும். செய்தொழில், வியாபாரத்தில் வெற்றி நடைபோடுவீர்கள். அண்டை, அயலாளருக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள்.
19.8.2017 முதல் 25.8.2017 வரை

14. சித்திரை: கலைத்துறையில் ஆர்வமும், அக்கறையும் அதிகரிக்கும். விளம்பரத்தையும், புகழையும் நாடுவீர்கள், சுகபோக இன்பங்களை அனுபவிப்பீர்கள். மனதில் சுயக் கட்டுப்பாடு தேவை. மாணவர்களுக்கு நுண்ணிய அறிவுத்திறன் பெருகும்.
19.8.2017 முதல் 25.8.2017 வரை

15. சுவாதி:
சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்து வரும். யாருக்கும் வாக்குறுதிகளை அள்ளி வீசாதீர்கள். கடன் சுமை குறைய வழிபிறக்கும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் தீரும்.
19.8.2017 முதல் 25.8.2017 வரை

16. விசாகம்: மன உளைச்சல் குறையும். மகிழ்ச்சி பெருகும். படித்த படிப்பிற்கு ஏற்ப இளைஞர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். கணவன்– மனைவி உறவில் குதூகலம் பிறக்கும். தங்கம், வெள்ளி, வைரம் என இவ்வாரம் திட்டமிட்ட படி வாங்கிக் குவித்து மகிழ்வீர்கள். பணப்புழக்கம் அதிகமாகும்.
19.8.2017 முதல் 25.8.2017 வரை

17. அனு‌ஷம்: குடும்பத்தில் பற்றுதலும், பாசமும் அதிகரிக்கும். பொருள் ஈட்டுவதில் கண்ணும் கருத்துமாய் இருந்து வருவீர்கள். கல்வி ஞானம் கூடும். தாயாரின் உறவினர் வகையில் சஞ்சலங்கள் தோன்றி மறையும். கனிவாகப் பேசி காரியங்களை இனிதே சாதிப்பீர்கள்.
19.8.2017 முதல் 25.8.2017 வரை

18. கேட்டை:   சகோதரன், சகோதரிகள் ஒற்றுமை வளரும். பணப்புழக்கம் சரளமாகும். தாம்பத்ய வாழ்வில் மகிழ்ச்சி கூடும். இவ்வாரம் ஏற்றமிகு வாழ்விற்கு அடித்தளமாக அமையும். நட்சத்திர நாதனின் சஞ்சாரம் நன்றாக இருப்பதால் நலம் யாவும் வரும். நன்மைகள் வந்து சேரும்.

19.8.2017 முதல் 25.8.2017 வரை

19. மூலம்:   கடல் வாணிபம் சிறப்பாக அமையும். உல்லாசப் பயணம் சென்று வருவீர்கள். இல்லத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். செல்வ வளம் கூடும். ஒரு சிலருக்கு மனைவி மூலம் சொத்து சுகங்கள் கிடைக்கக்கூடும். செய்தொழில் வியாபாரம் செழிக்கும். பொருளாதார நிலை உயரப்பெறுவீர்கள்.
19.8.2017 முதல் 25.8.2017 வரை

20. பூராடம்: நற்காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்களால் சில சங்கடங்கள் தோன்றி மறையும். பிள்ளைகள் வழியில் பூரிப்பு உண்டாகும். செல்வாக்கும், புகழும் வந்து சேரும். மன மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். வீடு, வாகனத்தால் ஆதாயம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும்.
19.8.2017 முதல் 25.8.2017 வரை

21. உத்திராடம்:   தேவையில்லாத வி‌ஷயங்களை பெரிதுபடுத்தி குழப்பத்திற்கு ஆளாக நேரிடும். அரசாங்கத்தால் ஆதாயம் காண்பீர்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். குடியிருக்கும் இல்லத்தை மாற்ற தேவையில்லை. பணப்புழக்கம் அதிகரிக்கும் இனிய வாரம் தான்.
19.8.2017 முதல் 25.8.2017 வரை

22. திருவோணம்: உடல் ஆரோக்கியம் கூடும். தேக நலம் சிறக்கும். கணவன் – மனைவி உறவு தித்திக்கும். பெண்கள் குடும்ப பொறுப்புடன் அன்பும், பாசமும் கொண்டவராகத் திகழ்வீர்கள். கடவுள் பக்தி மிகுந்து காணப்படுவீர்கள். புதிய தொழில் முயற்சி வெற்றி தரும்.
19.8.2017 முதல் 25.8.2017 வரை

23. அவிட்டம்: வெளித் தோற்றத்திற்கு அஞ்சாநெஞ்சம் கொண்டவராய் காட்சி அளிப்பீர்கள். ஆனால் வீட்டிற்குள் அடங்கி ஒடுங்கியவராய் இருப்பீர்கள். உத்தியோகப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அமையும். மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் குடிகொள்ளும்.
19.8.2017 முதல் 25.8.2017 வரை

24. சதயம்: குடும்ப நிர்வாகம் சீராகும். அடிப்படை வசதிகள் குறைவின்றி இருந்து வரும். வியாபாரம் செழிக்கும். காரசாரமான வார்த்தைகள் வெளிப்பட்டாலும் அடுத்த நிமிடமே அது  மாறிடும் குடும்பத்தில் சந்தோ‌ஷம் அதிகரிக்கும் அற்புதமான வாரமாகும். தொழில் துறையில் சில மாறுதல்கள் உண்டாகும்.
19.8.2017 முதல் 25.8.2017 வரை

25. பூரட்டாதி:   உடல்நலம் வெகு சிறப்பாக காணப்படும். கணவன்– மனைவி உறவு இனிமையாக அமையும். விருந்தினர் வருகையால் விருந்து உபசாரங்கள் தடபுடலாக நடக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். ஓய்வின்றி உழைப்பீர்கள். புது சேமிப்பு கணக்கை பிள்ளைகளுக்கு தொடங்கி மகிழ்வீர்கள்.
19.8.2017 முதல் 25.8.2017 வரை

26. உத்திரட்டாதி:  இந்த வாரம் உங்களுக்கு சாதனை வாரமாகும். கணவன்– மனைவி உறவு இனிக்கும். சேமிப்பு வளரும். செய்தொழில் சீராக அமையும். கற்பனை வளம் அதிகரிக்கும். முயற்சிகள் வெற்றியாகும். குற்றால அருவிபோல பணமழை பொழியும். குடும்பத்தில் எல்லையில்லாத மகிழ்ச்சி நிலவும்.
19.8.2017 முதல் 25.8.2017 வரை

27. ரேவதி:  பொருளாதாரம் ஏற்றம் பெறும். திருமண வயதை எட்டிய ஆண்களுக்கு புத்திசாலி மனைவி கிட்டி மகிழ்வீர்கள். கனவு ஒன்று பலிக்கும். பண மழையில் நனைவீர்கள். உத்தியோகப் பெண்களுக்கு பதவி உயர்வு கிட்டும். சுற்று வட்டாரத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் பெறுவீர்கள்.

Astrology

8/22/2017 11:55:22 PM

http://www.dailythanthi.com/Astrology/StarBenefits