.
சற்று முன் :
தேசிய நதிகள் இணைக்கப்பட்டு தமிழக பாசன நீர் பிரச்சனை தீர்க்கப்படும் நரேந்திர மோடி
தோல்வி பயணத்தினால் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தேர்தலில் போட்டியிடவில்லை: மோடி
ராமேசுவரம் சிறந்த சுற்றுலா தலமாக மாற்றப்படும் நரேந்திர மோடி
இந்திய மீனவர்களை காக்க மத்திய காங்கிரஸ் அரசு தவறிவிட்டது நரேந்திர மோடி
யாரும் பசியுடன் தூங்க செல்ல வேண்டாம் என்பதையே நாங்கள் விரும்புகிறோம் ராகுல் காந்தி
மோடிதான் நாட்டின் அடுத்த பிரதமர் தனது வாக்கை பதிவு செய்த எடியூரப்பா தகவல்
பாராளுமன்றத் தேர்தல் 2014; ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தனது வாக்கை பதிவு செய்தார்
பிலிபெட் தொகுதியில் 5 கிராம மக்கள் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணித்தனர்

Advertisement

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அம்பேத்கார் கல்லூரியில் மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

ராயபுரம், 

வியாசர்பாடி அம்பேத்கார் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளிருப்பு போராட்டம்

சென்னை வியாசர்பாடி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள அம்பேத்கார் கலை கல்லூரியில் 2800–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த கல்லூரி வளாகத்தில் கல்லூரி நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்த வெளி ஆட்கள் அனுமதி இன்றி உள்ளே நுழைகின்றனர். மேலும் கல்லூரி வளாகத்தில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என கூறப்படுகிறது.

மேலும் கல்லூரி விளையாட்டு மைதானத்தை பராமரித்து தரக்கோரி பலமுறை கல்லூரி நிர்வாகத்திடமும், மாநகராட்சியிடமும் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இவற்றை கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் அம்பேத்கார் கல்லூரி மாணவ, மாணவிகள் 2500–க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் நேற்று காலை திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமரசம் செய்தனர்

அப்போது சில மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்காமல் வகுப்பு அறைகளில் இருந்ததாக தெரிகிறது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு சென்ற கல்லூரி முதல்வர் சந்திரா, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமரசம் செய்து வைத்தனர்.

மீண்டும் ஆர்ப்பாட்டம்

இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்ற மாணவ, மாணவிகள் கல்லூரி நுழைவு வாயில் அருகே மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் எம்.கே.பி. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் சென்று மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இன்னும் ஒரு மாதத்திற்குள் மாணவ, மாணவிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என கல்லூரி முதல்வர் வாக்குறுதி அளித்தார். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்ட மாணவ, மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம் காரணமாக நேற்று கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read