.
சற்று முன் :
ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம்: இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு இன்று கூடுகிறது
மராட்டியத்தில் சோனியா காந்தி இன்று சூறாவளி பிரசாரம்
ஏசுவின் போதனைகளை பின்பற்றி பிறரது துயரங்களை களைந்திடுங்கள் ஜெயலலிதா ஈஸ்டர் வாழ்த்து
ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவ மக்களுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

Advertisement

போதுமான ஆதாரங்கள் இல்லை என கூறி முலாயம்சிங் மீதான சொத்து குவிப்பு வழக்கை கைவிட்டது சி.பி.ஐ.

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/yadav20.jpgபுதுடெல்லி,

போதுமான ஆதாரங்கள் இல்லை என கூறி முலாயம்சிங் யாதவ், அவரது குடும்பத்தினருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ. கை விட்டது. இது தொடர்பாக அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. முறைப்படி அறிக்கை தாக்கல் செய்கிறது.

சொத்து குவிப்பு வழக்கு மூடல்

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து, கடந்த 2007–ம் ஆண்டு முலாயம்சிங் யாதவ், அவரது மகன்கள் அகிலேஷ் யாதவ், பிரதீக் மற்றும் மருமகள் டிம்பிள் யாதவ் ஆகியோர் ரூ. 2.63 கோடிக்கு சொத்து குவித்ததாக முதல் நிலை விசாரணை அறிக்கையை (ஆரம்ப நிலை வழக்கு) பதிவு செய்தது.

8 ஆண்டு கால விசாரணைக்கு பின்னர் இப்போது முலாயம் சிங் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான சொத்து குவிப்பு புகாரில், போதுமான ஆதாரங்கள் இல்லை என கண்டு, தனது முதல் நிலை விசாரணை அறிக்கையை சி.பி.ஐ. இப்போது முடித்துக்கொண்டுள்ளது.

சி.பி.ஐ. அறிக்கை

இதுதொடர்பாக சி.பி.ஐ. ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், முலாயம்சிங் குடும்பத்தினர் மீதான வழக்கை கைவிடுவதற்கான காரணங்களை விரிவாக விளக்கி உள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:–

*புகாரில் இடம் பெற்றிருந்த முலாயம்சிங்கின் மருமகள் டிம்பிள் யாதவ், அரசுப் பதவி ஏதும் வகிக்காத நிலையில் இருந்ததால் அவரது வருமானம், சொத்து, செலவினம் போன்றவை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நீக்கப்பட்டது.

*பல்வேறு வழக்குகள், மறுஆய்வு மனுக்களால்தான் 2007–ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஆரம்ப நிலை வழக்கு விசாரணையை முன்கூட்டியே முடிக்க முடியாமல் போய் விட்டது.

*2007–ம் ஆண்டு முலாயம்சிங் விசாரணைக்கு வராத நிலையில், அவரது வருமானம், அவரது மகன்கள் அகிலேஷ், பிரதீக், மருமகள் டிம்பிள் ஆகியோரின் வருமானம் ரூ.2.63 கோடி என கணக்கிடப்பட்டது. டிம்பிள் தொடர்பான வருமானம், சொத்து, செலவினத்தை கைவிடும்படி சுப்ரீம் கோர்ட்டு 2012 டிசம்பரில் உத்தரவிட்டதை தொடர்ந்து, குடும்ப வருமானத்தை மறுவரையறை செய்ய வேண்டியதாகி விட்டது.

*இந்த வழக்கில் ஏராளமான ஆவணங்கள் ஆராயப்பட்டன. சாட்சிகளின் வாக்குமூலங்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் முலாயம்சிங் மற்றும் குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு புகாருக்கு அவற்றில் போதுமான ஆதாரங்கள் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் அறிக்கை

இது தொடர்பாக சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா கூறுகையில், ‘‘இந்த வழக்கு உள்பட எல்லா வழக்குகளிலும் நாங்கள் ஒளிவுமறைவற்று நடந்திருக்கிறோம். இது தொடர்பான சட்ட ஆய்வு எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

முலாயம்சிங் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து குவிப்பு வழக்கை கைவிட்டது தொடர்பாக முறையான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. அடுத்த வாரம் சமர்ப்பிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

முலாயமுக்கு நிம்மதி

பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், சொத்து குவிப்பு வழக்கு கைவிடப்பட்டிருப்பது முலாயம்சிங் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நிம்மதியை அளித்துள்ளது.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி 22 எம்.பி.க்களுடன் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருவதாலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் சமாஜ்வாடி கட்சி கூட்டணி சேர உள்ளதாலும், சொத்து குவிப்பு வழக்கு கைவிடப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

image: 

category:

News Group Category:

தொடர்புடைய செய்திகள்

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read