.
சற்று முன் :
சாந்தன், முருகன், பேரறிவாளன் வழக்கில் 25-ந் தேதிக்குள் தீர்ப்பு தலைமை நீதிபதி பி.சதாசிவம்
இந்த தேர்தலில் தி.மு.க. 3–வது இடத்துக்கு தான் வரும் மு.க.அழகிரி
சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில்கள் சேவை 20-ந்தேதி குறைப்பு
தமிழகம் முழுவதும் நாளை 1 மணி நேரம் ரெயில்வே டிக்கெட் வினியோகம் ரத்து
நான் பிரதமர் ஆனால் மம்தா அரசின் ஒத்துழைப்பு கிடைக்கும் -மோடி
முலாயம்சிங்குக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு
புது டைரக்டர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது கருணாநிதி
ஆட்சியை பிடிப்பதற்காக பாரதீய ஜனதா வதந்திகளை பரப்பி வருகிறது சோனியா குற்றச்சாட்டு
இந்தியா இதுபோன்ற ஊழல் மற்றும் திமிரான அரசை பார்த்தது இல்லை காங்கிரஸ் மீது மோடி தாக்கு

Advertisement

ரகசிய உளவுப்படை நிதியில் ரூ.8 கோடி மோசடி புகார்; ஓய்வு பெற்ற ராணுவ தளபதி வி.கே.சிங் மீது சி.பி.ஐ. விசாரணை மத்திய அரசு நடவடிக்கை

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/vksingh.jpgபுதுடெல்லி,

ஓய்வு பெற்ற ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் அமைத்த ரகசிய உளவுப்படை நிதியில் நடைபெற்ற ரூ.8 கோடி மோசடி புகார் தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

உமர்அப்துல்லாவை கவிழ்க்க முயற்சி

தலைமை ராணுவ தளபதியாக பதவி வகித்து ஓய்வு பெற்றவர், வி.கே.சிங். ஏற்கனவே வயது பிரச்சினையில் சர்ச்சையில் சிக்கிய அவர், ஓய்வு பெற்றபின்னரும் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் நரேந்திரமோடியுடன் ஒரே மேடையில் வி.கே.சிங் தோன்றியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், வி.கே.சிங் தலைமை ராணுவ தளபதியாக பதவி வகித்தபோது உருவாக்கப்பட்ட ரகசிய உளவுப்படை நிதியில் ரூ.8 கோடி மோசடி செய்யப்பட்டதாகவும், காஷ்மீர் மாநிலத்தில் உமர் அப்துல்லா ஆட்சியை கவிழ்ப்பதற்கு அந்த உளவுப்படை மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

சி.பி.ஐ. விசாரணை

இந்த பிரச்சினையில், தலைமை தளபதி வி.கே.சிங் தனது பதவியை தவறாக பயன்படுத்தியது குறித்து ரகசிய விசாரணை நடத்திய குழு தனது பரிந்துரை அறிக்கையை ராணுவ அமைச்சகத்துக்கு வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி மணிஷ் திவாரி, ‘‘விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மிகவும் உணர்வுபூர்வமானவை. அது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும், அவர்கள் பதவியில் இருந்தாலும் அல்லது ஓய்வு பெற்று இருந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அறிவித்தார்.

ராணுவ அமைச்சகம் அறிவிப்பு

இதற்கிடையில் இந்த பிரச்சினை குறித்து ராணுவ அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில், ராணுவ விசாரணை அறிக்கை குறித்து கவனமாக பரிசீலித்து, இதுபோன்ற தவறுகள் வருங்காலங்களில் நடைபெறாத வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த மோசடி புகார் குறித்து சி.பி.ஐ. போன்ற புலனாய்வு அமைப்புகளால் உயர் மட்ட அளவிலான விசாரணை நடத்த வேண்டும் என்று, விசாரணை அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய தலைமை ராணுவ தளபதி விக்ரம் சிங் அமைத்த விசாரணை குழுவில் இடம்பெற்ற ராணுவ செயலாக்கப்பிரிவு டைரக்டர் ஜெனரல் விக்ரம் பாட்டியா, அறிக்கை தயாரிக்கப்பட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காஷ்மீர் மந்திரிக்கு ரூ.1.19 கோடி

இந்த பிரச்சினையில் தொடர்புடைய ராணுவ தொழில் நுட்ப பிரிவு, ராணுவ அமைச்சக மூத்த அதிகாரிகளின் டெலிபோன்களை ஒட்டுக்கேட்டதாகவும், ரகசிய உளவுப்படையின் செயல்பாடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், அந்த விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

காஷ்மீர் முதல்–மந்திரி உமர்அப்துல்லாவின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக தளபதி வி.கே.சிங் ரகசிய உளவுப்படை நிதியை தவறாக பயன்படுத்தியதாகவும், தற்போது காஷ்மீரில் விவசாயத்துறை மந்திரியாக இருக்கும் குலாம் ஹசன் மீர் என்பவருக்கு அந்த நிதியில் இருந்து ரூ.1.19 கோடி வழங்கப்பட்டதாகவும், பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் ஆட்சி கவிழ்ப்பு பணிக்காக தொண்டு நிறுவனம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக ஹகிகத் சிங் என்பவரும் ராணுவ தலைமையக உத்தரவின்படி ரூ.2.38 கோடி வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வி.கே.சிங் மறுப்பு

தனக்கு எதிரான புகார்களை முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் மறுத்து இருக்கிறார். ‘‘நரேந்திரமோடியுடன் ஒரே மேடையில் நான் கலந்து கொண்டதை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர், பழிவாங்கும் நோக்கத்துடன் இதுபோன்ற புகார்களை கூறி வருவதாக’’ நேற்று  அவர் டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இதே கருத்தை பா.ஜனதாவும் எதிரொலித்து உள்ளது. ‘‘ரிவேரியில் நடைபெற்ற பா.ஜனதா பேரணியில் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியுடன் வி.கே.சிங் பங்கேற்றதால் அவர் பழிவாங்கப்படுவதாக’’ அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்தார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை மணீஷ் திவாரி மறுத்தார். ‘‘இது போன்று எந்த புகார்கள் வந்தாலும், தனிப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக பா.ஜனதா வரிந்து கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்குவது வியப்பை அளிப்பதாக’’ அவர் கூறி இருக்கிறார்.

image: 

category:

News Group Category:

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read