கோச்சடையான் படத்திற்கான கடன் ரூ 8.5 கோடியை எப்போது செலுத்துவீர்கள் - லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி


கோச்சடையான் படத்திற்கான கடன் ரூ 8.5 கோடியை எப்போது செலுத்துவீர்கள் - லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
x
தினத்தந்தி 20 Feb 2018 7:11 AM GMT (Updated: 20 Feb 2018 7:11 AM GMT)

கோச்சடையான் படத்துக்கான கடனை எப்போது செலுத்துவீர்கள் என நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. #LathaRajinikanth #Kochchadaiyaan #SupremeCourt

புதுடெல்லி

கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் கோச்சடையான். ஏ.ஆர்.ரகுமான் இசையில், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் வெளியான படம் என்ற பெருமையைப் பெற்றது. இந்த நிலையில் கோச்சடையான் படத்தைத் தயாரிப்பதற்காக ஆட்பீரோ நிறுவனத்திடம் ரூ.10 கோடியை ரஜினிகாந்த் மனைவி லதா வாங்கியிருந்ததாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதில் 1.5 கோடி ரூபாய் மட்டும் திருப்பி செலுத்தியதாகவும், மீதம் 8.5 கோடியைத் தரவில்லை என்றும் ஆட்பீரோ நிறுவனம் சுப்ரீம்கோர்ட்டில்  வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு  இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது  கடன் ரூ 8.5 கோடியை எப்போது செலுத்துவீர்கள் என லதாவுக்கு சுப்ரீம் கோர்ட்  கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் எதற்காகக் கடனைத் திருப்பி செலுத்தாமல் இருக்கிறீர்கள் என்றும் இது குறித்து பகல் 12.30 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் கெடு விதித்துள்ளது.

Next Story