சினிமா செய்திகள்
கலாசாரத்தின் மீது கை வைத்து அடிக்கிறீர்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியுமா? நடிகர் சிம்பு ஆவேசம்

கலாசாரத்தின் மீது கை வைத்து அடிக்கிறீர்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியுமா? நடிகர்  சிம்பு ஆவேசம்
எனது கலாசாரத்தின் மீது கை வைத்து அடிக்கிறீர்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியுமா' என நடிகர் சிம்பு ஆவேசமாக் கேட்டார்.
சென்னை

தமிழர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. இலங்கை தொடங்கி இந்தியா வரை பல பிரச்சினைகள் உள்ளதாக நடிகர் சிம்பு வேதனை தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் சிம்பு இன்று தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது:-

அதில், 'தமிழை தாய்மொழியாக கொண்டதில் பெருமை அடைகிறேன். தமிழில் ஐந்தாம் வகுப்பு வரை 99 மதிப்பெண்கள் எடுத்தேன். நான் முதலில் தமிழன், பிறகுதான் நான் இந்தியன். தமிழர்களுக்கு ஏகப்பட்ட பிரச்னை இருக்கிறது.

தமிழர்களுக்கு உணர்வு இல்லை.ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசும் அறுகதை எனக்கு உள்ளது.இன்று கூட நான் பேசாவிட்டால் என்றுதான் பேசுவது

இதுவரை வெளியில் அடித்தீர்கள். இப்போது என் வீட்டுக்குள்ளேயே வந்து எனது கலாசாரத்தின் மீது கை வைத்து அடிக்கிறீர்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியுமா'

நான் போராட்டம் நடத்தினால் அரசியலுக்கு வருவதாக கூறிவிடுவார்கள்.நான் அரசியல்வாதி கிடையாது.நான் ஒரு நடிகர்தான். இவ்வாறு அவர் கூறினார்