சினிமா கேள்வி-பதில் : குருவியார்


சினிமா கேள்வி-பதில் : குருவியார்
x
தினத்தந்தி 19 Feb 2017 5:23 AM GMT (Updated: 19 Feb 2017 5:23 AM GMT)

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை–600007

குருவியாரே, சத்யராஜை விட, தெலுங்கு நடிகர் ராணா உயரமாக தெரிகிறாரே...சத்யராஜின் உயரம் எவ்வளவு, ராணாவின் உயரம் எவ்வளவு? (ஜி.ஜான் கென்னடி, அரக்கோணம்)

சத்யராஜின் உயரம், 6.2 அடி. ராணாவின் உயரம், 6.4 அடி!

***

குருவியாரே, நயன்தாரா அரசியலுக்கு வருவாரா? (கே.முருகன், திருவண்ணாமலை)

அவர் சினிமாவில் இன்னும் கொஞ்சம் சம்பாதிக்க வேண்டுமாம்!

***

குருவியாரே, ‘‘இனிமேல் அதிக கவர்ச்சி காட்டி நடிக்க தயார்’’ என்று ஸ்ரீதிவ்யா கூறுவது எதை காட்டுகிறது? (எஸ்.தமிழ்மணி, கோவில்பட்டி)


அவர் கைவசம் படங்கள் இல்லை என்பதை காட்டுகிறது. ‘மார்க்கெட்’ இழந்த நடிகைகள்தான் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று இறங்கி வருவார்கள்!

***

விக்ரம் பிரபு தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படம் எது? அந்த படத்தை இயக்குபவர் யார்? (சி.பத்மநாபன், வேலூர்)


விக்ரம் பிரபு, ‘நெருப்புடா’ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்கியிருப்பவர், அசோக்குமார். இதையடுத்து விக்ரம் பிரபு, ‘பக்கா’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தை இயக்குபவர், எஸ்.எஸ்.சூர்யா!

***

குருவியாரே, ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ படம் எந்த அளவில் உள்ளது? (விஜய் பாலாஜி, சென்னை–24)

‘2.0’ படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெறுகிறது!

***

ரேவதி டைரக்டு செய்யும் ‘ராணி’ படம் எப்போது திரைக்கு வரும்? (எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு)

‘ராணி’ படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்கவில்லை. கதாநாயகி யார்? என்பது முடிவானதும் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழுவினர் கூறு
கிறார்கள்!

***

குருவியாரே, விஜய் சேதுபதியின் சொந்த ஊர் எது? அவர் கதாநாயகனாக அறிமுகமான படம் எது? (சி.முருகன், சிவந்தாகுளம்)

விஜய் சேதுபதியின் சொந்த ஊர், ராஜபாளையம். அவர் கதாநாயகனாக அறிமுகமான படம், ‘தென் மேற்கு பருவ காற்று!

***

சுசீந்திரன் யாரிடம் உதவி இயக்குனராக இருந்தார்? அவருடைய சொந்த ஊர் எது? (வேல்முருகன், கடலூர்)

சுசீந்திரன், டைரக்டர் எழிலிடம் உதவி டைரக்டராக இருந்தார். அவருடைய சொந்த ஊர் பழனி அருகில் உள்ள ஒட்டன் சத்திரம்!

***

விஜயகாந்த் நடித்து முதன் முதலாக அதிக நாட்கள் ஓடிய படம் எது? (கே.ஜீவா, பனைமரத்துப்பட்டி)

‘சட்டம் ஒரு இருட்டறை!’

***

குருவியாரே, ‘பாகுபலி’ படத்தை விட அதன் இரண்டாம் பாகத்தில் தமன்னாவின் பங்கு எப்படியிருக்கும்? (சே.சுந்தரபாண்டியன், மதுரை)


முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகத்தில் தமன்னாவின் கவர்ச்சி கூடுதலாக இருக்கும் என்கிறார்கள்!

***

சமந்தா திருமணத்துக்குப்பின் சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவாரா அல்லது தொடர்ந்து நடிப்பாரா? (பி.கார்த்திக், உடுமலைப்பேட்டை)


சமந்தாவுக்கு சினிமாவை விட்டு விலக விருப்பம் இல்லை. தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார். திருமணத்துக்குப்பின், மிக சிறந்த கதை மற்றும் கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே அவர் நடிப்பாராம்!

***

தமிழ் பட உலகில், ‘புன்னகை அரசி’ என்று அழைக்கப்பட்ட கே.ஆர்.விஜயா இப்போது வசிப்பது சென்னையிலா, வெளியூரிலா? (எம்.அரவிந்த், பெங்களூரு)


கே.ஆர்.விஜயா இப்போது கேரளாவில் வசித்து வருகிறார். படப்பிடிப்புக்காக மட்டும் சென்னை வந்து போகிறார்!

***

அனுஷ்கா குண்டாகி விட்டாலும், தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறாரே? (ஏ.ஜமாலுதீன், உளுந்தூர்பேட்டை)

அவருடைய முக வசீகரமும், நடிப்பு திறனும் அப்படியே இருப்பதால், அனுஷ்காவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன!

***

குருவியாரே, ‘கத்தி சண்டை’ படத்தின் மூலம் மீண்டும் நகைச்சுவை நடிப்புக்கு வந்த வடிவேல், நகைச்சுவை நடிப்பை தொடர்கிறாரா, இல்லையா? (ஆர்.ஜெயச்சந்திரன், இடைப்பாடி)


வடிவேல் தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். இந்த வருடம் அவர் நிறைய படங்களில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்!

***

போனால் போகட்டும் போடா...’’ என்ற பாடல் இடம் பெற்ற படம் எது, அந்த பாடலை எழுதியவர் யார்? (ஜி.செல்வராஜ், பொள்ளாச்சி)


அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘பாலும் பழமும்.’ பாடலை எழுதியவர்: கவிஞர் கண்ணதாசன்!

***

குருவியாரே, ஹரி டைரக்டு செய்ய உள்ள ‘சாமி–2’ படத்தில் கதாநாயகி யார்? (எஸ்.கோவிந்தராஜ், கூடுவாஞ்சேரி)

‘சாமி–2’ படத்தின் கதாநாயகி யார்? என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை!

***

‘பலே வெள்ளையத்தேவா’ படத்தின் கதாநாயகி தான்யாவுக்கு புது பட வாய்ப்புகள் எதுவும் வந்திருக்கிறதா? (வி.சங்கீதா, ராசிபுரம்)


‘பலே வெள்ளையத்தேவா’ படத்தை அடுத்து தான்யா நடித்த படம், ‘பிருந்தாவனம்.’ அருள்நிதி ஜோடியாக நடித்துள்ள இந்த படம் முடிவடைந்து விட்டது. இதையடுத்து தான்யா, விஜய் சேதுபதி ஜோடியாக ‘கருப்பன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்!

***

குருவியாரே, ‘அச்சமின்றி’ படத்தின் நாயகி சிருஷ்டி டாங்கே நடித்து அடுத்து திரைக்கு வரும் படம் எது? (எல்.வாசுதேவன், பட்டுக்கோட்டை)


‘முப்பரிமாணம்!’

***

ஜெயம் ரவி – ஆர்யா இணைந்து நடிக்கும் ‘சங்கமித்ரா’ எந்த மாதிரியான கதையம்சம் கொண்ட படம்? (இரா.ஆனந்த், கோபிச்செட்டிப்பாளையம்)

‘சங்கமித்ரா’, வரலாற்று பின்னணியில் உருவாகும் படம்!

***


Next Story