குதிரையில் பறக்கும் தியா


குதிரையில் பறக்கும் தியா
x
தினத்தந்தி 19 Feb 2017 9:20 AM GMT (Updated: 19 Feb 2017 9:19 AM GMT)

இந்திய தாய்க்கும்– ஜெர்மனிய தந்தைக்கும் பிறந்தவர் தியா மிர்சா. ‘மிஸ் ஆசியா பசிபிக்’ அழகிப் போட்டியில் வென்று, அழகியாக வலம் வந்தவர்.

ந்திய தாய்க்கும்– ஜெர்மனிய தந்தைக்கும் பிறந்தவர் தியா மிர்சா. ‘மிஸ் ஆசியா பசிபிக்’ அழகிப் போட்டியில் வென்று, அழகியாக வலம் வந்தவர். இந்தி சினிமாக்களிலும் நடித்து புகழ்பெற்றார். இப்போது அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

தியா மிர்சாவுடன் உரையாடல்:

நீங்கள்நடிப்பதைவிட்டுவிட்டு சினிமா தயாரிப்பு துறைக்கு வர என்ன காரணம்?

எனக்கு கதை சொல்லப் பிடிக்கும். அதனால் நல்ல கதைகளை தேர்வு செய்து வைத்திருந்தேன். சிறந்த கதைகளை அடுத்தவர்களிடம் சொல்வதற்கு பதில் நாமே தயாரித்துவிடலாமே என்ற எண்ணம் ஏற்பட்டதால், தயாரிப்பாளராகிவிட்டேன். நடிகைகள், நடிகைகளாகவே இருக்கவேண்டும் என்ப தில்லை. ஆனால் நல்லவேடங்கள் கிடைத்தால் நடிக்கவும் செய்வேன்.

நீங்கள் அதிகம் விரும்புவது நடிப்பையா? தயாரிப்பாளர் பணியையா?


நான் எதை அதிகம் விரும்புகிறேன் என்பதைவிட, நான் எதனால் அதிகம் சிரமப்படுகிறேன் என்பதையே சொல்லவிரும்புகிறேன். தயாரிப்பாளர் பணிதான் அதிக சிரமமானது. அது, தலையில் பெரிய பாரத்தை சுமந்திருப்பதுபோல் தெரிகிறது. பலருக்கு பதில் சொல்ல வேண்டும். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் ஈடுகொடுக்க வேண்டும். வெற்றி என்பது கடின உழைப்பிற்கு பின் கிடைப்பது. நடிப்பு என்பது தயாரிப்பு பணியோடு ஒப்பிடும்போது கொஞ்சம் எளிமையானது. படத்தின் லாப நஷ்டம் அந்த படத்தில் நடிப்பவர்களை பாதிக்காது. ஆனால் அது தயாரிப்பாளரை பாதிக்கும்.

திருமணமாகிவிட்ட நடிகைகளை அம்மா வேடத்தில் நடிக்கவே அழைக்கிறார்கள். ஆனால் நடிகர்கள் திருமணமாகிவிட்டாலும் கதாநாயகர்களாக தொடர்கிறார்களே?


முன்பு அப்படி ஒரு நிலை இருந்தது உண்மைதான். இப்போது அப்படி இல்லை. திருமணத்திற்கு பிறகு அம்மா வேடத்தில் மட்டுமே நடிக்க அழைத்தால், அப்படி நடிக்க விருப்பம் இல்லாவிட்டால் நடிகைகள் நடிக்க மறுத்துவிடலாம். ஒரு நடிகையை திருமணத்திற்கு முன்பு ரசிகர்கள் பார்க்கும் கண்ணோட்டத்திற்கும், திருமணத்திற்கு பின்பு பார்க்கும் கண்ணோட்டத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த மாற்றம் திரைப்படத்தை பாதிக்கும் என்ற எண்ணம் தயாரிப்பாளர்களுக்கு வந்துவிடும். அதனால் திருமணமான நடிகைகள் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்படுகிறார்கள். ஆனாலும் இப்போது அந்த நிலை மாறிவருகிறது. திரையுலகில் நடக்கும் எல்லா மாற்றங்களும் ரசிகர்களின் மனநிலையைப் பொறுத்ததுதான்.

திரைப்பட தணிக்கை குழுவோடு தயாரிப்பாளர்கள் மோதிக்கொண்டே இருப்பார்களே, நீங்கள் எப்படி?

தணிக்கை குழுவோடு மோத வேண்டிய அவசியம் இல்லை. அரசாங்கம் சில விதிமுறைகளை உருவாக்கிவைத்திருக்கிறது. அதற்குட்பட்டு படத்தை தயாரிக்கவேண்டியதுதான். ஒவ்வொரு காட்சி எடுக்கும்போதும் அது சென்சார் கத்தியிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வோடுதான் எடுப்பார்கள். அதையும் மீறி காட்சிகள் வெட்டப்பட்டால் பதற்றப்படாமல் வேறு காட்சிகளை எடுத்து இணைத்துக் கொள்ளலாம். திரைப்பட தணிக்கைக்குழு முன்புபோல் இப்போது இல்லை. நிறைய மாறிவிட்டது. இனிவரும் காலங்களில் மேலும் மாற்றங்கள் நிகழும். தணிக்கைக்குழு நல்லதையே செய்கிறது என்று நாம் நம்பவேண்டும்.

நீங்களும், ஜாரத்கானும் இணைந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கினீர்கள். இப்போது ஏன் பிரிந்துவிட்டீர்கள்?

இருவரின் சிந்தனையும் வெவ்வேறாக இருந்தது. விருப்பமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருந்தது. அதனால் அவரவர் விருப்பத்தை நிறைவேற்ற தனித்தனியாக படம் தயாரிப்பதுதான் சரியான வழி என்று நினைத்து ஒதுங்கிவிட்டோம்.

கடந்த 5 வருடங்களாக நான் சினிமா தயாரிப்பு துறையில் இருக்கிறேன். சிறிய அளவிலே படங்களை தயாரித்துக்கொண்டிருந்தாலும் அதுவே அதிக மகிழ்ச்சியை தருகிறது. நான் சரியான வழியில்தான் சென்று கொண்டிருக்கிறேன்.

ஆலிவுட் திரை உலகத்தை போன்று பாலிவுட் இன்னும் வளராததற்கு என்ன காரணம்?


ஆங்கிலம் உலகம் முழுவதும் பேசப்படும் மொழி. அதனால் ஆலிவுட் படங்கள் உலகம் முழுக்க வரவேற்பு பெறுகிறது. ஆலிவுட் பட காட்சிகள் அதிக பொருட்செலவில் பிரமாண்ட மாக எடுக்கப்படுகிறது. இந்தியாவில் இந்திப் படங்கள் அதிக வரவேற்பை பெறுகின்றன. அதற்கு காரணம் இந்தி, பல்வேறு மாநிலங்  களில் பரவலாக பேசப்படுவதுதான். இப்போதைக்கு அதை நினைத்து சந்தோ‌ஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

உங்கள் பொழுதுபோக்கு?

ஓவியம் வரைதல், மண்பாண்டம் செய்தல், குதிரை சவாரி செல்லுதல். அடிக்கடி குதிரையில் பறப்பேன்.


Next Story