ஜெயலலிதா எனக்கு கடவுள் போன்றவர் : நடிகை ஸ்ரீதேவி பேட்டி


ஜெயலலிதா எனக்கு கடவுள் போன்றவர் : நடிகை ஸ்ரீதேவி பேட்டி
x
தினத்தந்தி 23 Jun 2017 12:29 PM GMT (Updated: 23 Jun 2017 12:29 PM GMT)

ஸ்ரீதேவி நடித்த 'மாம்' படம் திரைக்கும் வரும் நிலையில் தன்னுடைய சினிமா அனுபவங்களை பற்றி ஆங்கில நாளிதழில் பேட்டியளித்துள்ளார்.

 சென்னை,

ஸ்ரீதேவி நடித்த 'மாம்' படம் திரைக்கும் வரும் நிலையில் தன்னுடைய சினிமா அனுபவங்களை பற்றி ஆங்கில நாளிதழில் பேட்டியளித்துள்ளார்.

அதில் கூறியதாவது, மாம் படம் அம்மாவுக்கும் மகளுக்குமான கதை . நான்  நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் போன்று இதுவும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை. நான் சிறு வயது முதல் அம்மாவின் பாசத்தோடு வளர்ந்தவள். மேலும் இரண்டு பெண்குழந்தைகளுக்கு தாய். அதனால் அம்மா-மகள் உறவு பற்றி எனக்கு நன்றாக தெரியும்.

இக்கதையில் வரும் கதாபாத்திரம் என் மகள் மற்றும் என்னுடைய கதையோடு ஒத்தது. பதின்ம பருவத்தில் குழந்தைகள் எவ்வாறு இருப்பார்கள் என்பதை பற்றிய கதை. அது பற்றி நான் நிறைய அனுபவம் பெற்றுள்ளேன். அதனால் மாம் படத்தின் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது.

இன்றைய காலக்கட்டத்தில் இது போன்ற படங்கள் எடுப்பது மிகவும் நல்லது. இது மாணவர்களிடயே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களும் வெளிவருகின்றன. ககானி,குயின் மற்றும் பிகு போன்ற படங்கள் ஹிந்தியில் வெளியாயின. மேலும் தமிழிலும் இது போன்ற படங்கள் வெளிவருகின்றன.

நானும்   பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து உள்ளேன். காயத்ரி என்ற படம் முக்கியமானதாகும்.
மேலும் இயக்குனர் பாலச்சந்தர் படமான மூன்று முடிச்சு,மூன்றாம் பிறை ஆகிய படங்கள் நான் நடித்ததில் மிகவும் பிடித்ததாகும்.

மாம் என்பதற்கு தமிழில் அம்மா என்ற பொருளாகும். அம்மா என்றால் எனக்கு முதலில் நினைவு வருவது என்னுடைய அம்மா தான். நான் சூட்டிங் செல்லும் போது அம்மா என்னுடன் வருவார். அவருடைய ஒத்துழைப்பில் தான் நான் இவ்வளவு பெரிய நடிகையானேன்.

அடுத்தது நினைவுக்கு வருவது அம்மா ஜெயலலிதா தான். அவர் சினிமா துறையில் அதிக அனுபவம் உள்ளவர். நான் சிறு வயது முதல் அவர் நடிப்பை பார்த்து வியந்துள்ளேன். நடிப்பில் அவர் எனக்கு கடவுள் போன்றவர். அவருடன் நடத்திய உரையாடல் இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. எனக்கு ஜெயலலிதா போன்ற முக்கிய நபர்களின் கதாபாத்திரத்தில்  நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதில் நடிப்பது மிகவும் பெருமையான விஷயமாகும். இவ்வாறு பேட்டியளித்துள்ளார்.





Next Story