“கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்


“கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
x
தினத்தந்தி 23 Jun 2017 11:45 PM GMT (Updated: 23 Jun 2017 11:14 PM GMT)

“கண்ணியமாக நடப்பவர்களை மதிப்பேன். கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” என்று நடிகை திரிஷா கூறினார்.

ஐதராபாத்,

நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-

15 ஆண்டுகள்

கேள்வி:- 15 ஆண்டுகளாக நடித்துக்கொண்டு இருக்கிறீர்களே? எப்படி?

பதில்:- நல்ல கதைகள் அமைந்தன. திறமையான டைரக்டர்களும் கிடைத்தார்கள். இதனால் எனது படங்கள் அனைத்தும் நன்றாக ஓடி தொடர்ந்து சினிமாவில் நிலையான இடத்தை தக்க வைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதற்கு மேல் ரசிகர்களும் காரணம்.

கேள்வி:- கதை, கதாபாத்திரம், சம்பளம் இவற்றில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?

பதில்:- கதைக்குத்தான் முதல் இடம் கொடுப்பேன். அதன் பிறகு கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறதா? என்று பார்ப்பேன். சம்பளம் பற்றி யோசிப்பது கடைசியில்தான்.

அதிக உழைப்பு

கேள்வி:- தோல்வி ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?

பதில்:- தோல்விக்கான காரணம் என்ன என்பதை ஆராய்வேன். இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு எடுப்பேன்.

கேள்வி:- வாழ்க்கையில் பெருமைப்படும் விஷயம்?

பதில்:- சிறந்த நடிப்புக்காக விருதுகள் வாங்கும்போது பெருமையாக இருக்கும். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்ததற்காக நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறேன். அவை என்னை பெருமைபடுத்திய விஷயங்கள்.

வேடதாரிகள்

கேள்வி:- நீங்கள் எந்த மாதிரி ஆட்களை விரும்புகிறீர்கள்?

பதில்:- கவுரவமானவர்களையும், கண்ணியமானவர்களையும் பிடிக்கும். அவர்களை மதிப்பேன். கபட வேடம் போடுகிறவர்களையும், தேவையானபோது கருவேப்பிலை மாதிரி பயன்படுத்திக்கொண்டு பிறகு தூக்கி வீசுபவர்களையும் பிடிக்காது.

கேள்வி:- ஒருதலை காதல் பற்றி?

பதில்:- ஒரு தலைக்காதல் பற்றி சொல்ல தெரியவில்லை. காரணம் நான் எப்போதும் ஒருதலையாக காதலித்தது இல்லை.

கேள்வி:- வயதில் மூத்த பெண்கள் குறைவான வயது ஆண்களை திருமணம் செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- இரண்டு மனங்கள் இணைந்து எல்லாம் சரியாக அமைந்தால் ஓ.கே.தான். நல்லாவே இருக்கும்.

கேள்வி:- சென்னையில் பிடித்த இடம்?

பதில்:- எனது வீட்டில் இருக்கும் ‘ஹோம் தியேட்டர்’.

கேள்வி:- பிடித்த உடற்பயிற்சிகள்?

பதில்:- ‘பாக்சிங்’, யோகா.

கேள்வி:- எதிர்கொள்ள முடியாத பிரச்சினை வந்தால் என்ன செய்வீர்கள்?

பதில்:- எனது அம்மாவின் உதவியை நாடுவேன்.

இவ்வாறு திரிஷா கூறினார். 

Next Story