அஜித்தின் விவேகம் டீசர் சாதனை


அஜித்தின் விவேகம் டீசர் சாதனை
x
தினத்தந்தி 25 July 2017 9:51 AM GMT (Updated: 25 July 2017 9:51 AM GMT)

5,00,000 லைக்குகளை பெற்ற முதல் தென்னிந்திய டீசர் என்ற சாதனையையும் விவேகம் டீசர் நிகழ்த்தியுள்ளது.

அஜித் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விவேகம் படத்தின் டீசர் தான் இந்தியாவிலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசர் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

முன்பு சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘டியூப்லைட்’ திரைப்படம்தான் 5 லட்சம் லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது விவேகம் படத்தின் டீசர் வெளியான சில நாட்களிலேயே அந்த சாதனை முறியடித்துள்ளது. தற்போது வரை 5,05,326 லைக்குகளைப் பெற்று இந்தியாவிலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசர் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

விவேகம் பட டீசர் உலக அளவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைக்க இன்னும் ஒரு சில லைக்குகளே உள்ளது. ஆம்! விவேகம் பட டீசர்தான் உலக அளவில் அதிக லைக்குகள் பெற்று ரெண்டாவது  இடத்தில் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில்  ஸ்டார்வார்ஸ் திரைப்படமும் 2-வது இடத்தில் அவென்ஜர்ஸ் திரைப்படமும் இருக்கிறது.

மேலும் 5,00,000 லைக்குகளை பெற்ற முதல் தென்னிந்திய டீசர் என்ற சாதனையையும் விவேகம் டீசர் நிகழ்த்தியுள்ளது. இதை சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Next Story