படப்பிடிப்பின் போது டாம் க்ரூஸ் காயம்: மிசன் இம்பாஸிபிள் படப்படிப்பு நிறுத்தம்


படப்பிடிப்பின் போது டாம் க்ரூஸ் காயம்: மிசன் இம்பாஸிபிள் படப்படிப்பு நிறுத்தம்
x
தினத்தந்தி 17 Aug 2017 9:45 AM GMT (Updated: 17 Aug 2017 9:45 AM GMT)

படப்பிடிப்பின் போது பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் காயம் அடைந்தார். இதன் காரணமாக மிசன் இம்பாஸிபிள் படப்படிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

லண்டன், 

உலக முழுவதும் நன்றாக ஓடி வசூலை வாரிகுவித்த ஹாலிவுட் படங்களில் மிகவும் முக்கிய இடத்தில் இருக்கும் படம் மிஷன் இம்பாஷிபிள். இந்த படத்தின் ஆறாவது பாகம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பின் போது  ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் காயம் அடைந்தார். சண்டைக்காட்சி ஒன்றின் போது டாம் க்ரூஸ் காயம் அடைந்ததாகவும் அதில் கணுக்காலில் டாம் க்ரூஸிற்கு முறிவு ஏற்பட்டதாகவும் செய்திகள்  வெளியாகியுள்ளன. இதையடுத்து, படப்பிடிப்பு   நிறுத்தப்பட்டுள்ளது. டாம் க்ரூஸ் விரைவாக குணம் அடைந்து வருவதாக படப்பிடிப்புக் குழு தெரிவித்துள்ளது. 

தனக்கு ஆதரவு அளித்த மற்றும் உடல்நிலை குறித்து கவலை அடைந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், அடுத்த சம்மரில் படத்தை ரிலீஸ் செய்வதில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக டாம் க்ரூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மிஷன் இம்பாஸிபிள் படம் அடுத்த ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி லண்டன் திரையரங்களில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story