இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்


இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
x
தினத்தந்தி 21 Sep 2017 10:00 PM GMT (Updated: 21 Sep 2017 8:02 PM GMT)

இந்தியன், சாமி, சண்டக்கோழி படங்களின் இரண்டாம் பாகங்களில் கமல்ஹாசன், விக்ரம், விஷால் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

சென்னை,

தமிழ் பட உலகில் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்த படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்கும் வழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சூர்யா நடித்த சிங்கம் படம் மூன்று பாகங்களாக வெளிவந்தது. ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் தயாராகி வருகிறது.

கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகமும் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது. அடுத்து அவரது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. இதுபோல் விக்ரம் நடித்த சாமி, விஷால் நடித்த சண்டக்கோழி படங்களின் இரண்டாம் பாகங்களும் தயாராகின்றன.

இந்தியன் தாத்தா

இந்தியன் படம் 1996-ல் திரைக்கு வந்து வசூலில் சக்கை போடு போட்டது. இதில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். ஊழல்வாதிகளை வர்மக்கலை மூலம் கொன்று அழிக்கும் வயதான இந்தியன் தாத்தா கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்த படத்தில் நடித்ததற்காக கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

தற்போது அரசியலில் ஈடுபட முடிவு எடுத்துள்ள சூழ் நிலையில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் இதன்மூலம் மக்களை வெகுவாக கவர முடியும் என்றும் கமல்ஹாசன் கருதுகிறார். எனவே தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை உள்ளடக்கி இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை உருவாக்கும்படி இயக்குனர் ஷங்கரிடம் அவர் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகி றது. விரைவில், இதன் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

சாமி-2

சாமி படம் விக்ரம், திரிஷா ஜோடியாக நடித்து 2003-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது. ஹரி இயக்கும் இந்த படத்தில் விக்ரம் நாயகனாகவும் திரிஷா, நித்யா மேனன் ஆகியோர் நாயகிகளாகவும் நடிக் கின்றனர்.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த சண்டக்கோழி படம் 2005-ஆம் ஆண்டு திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் படப் பிடிப்பு தற்போது தொடங்கி உள்ளது. இதில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இதுபோல் சரத்குமார் நடித்துள்ள சென்னையில் ஒருநாள் சுசிகணேசன் இயக்கத்தில் திருட்டுப்பயலே ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களும் தயாராகி விரைவில் திரைக்கு வர உள்ளன.

Next Story