நடிகர் ஆர்.கே.சுரேஷ் திருமணம் டி.வி. நடிகையை மணக்கிறார்


நடிகர் ஆர்.கே.சுரேஷ் திருமணம் டி.வி. நடிகையை மணக்கிறார்
x
தினத்தந்தி 23 Sep 2017 9:30 PM GMT (Updated: 23 Sep 2017 7:33 PM GMT)

‘தர்மதுரை’, ‘சலீம்’ உள்பட பல படங்களை தயாரித்தவர் ஆர்.கே.சுரேஷ். இவர் ஏராளமான படங்களை வினியோகமும் செய்து இருக்கிறார்.

சென்னை,

‘தர்மதுரை’, ‘சலீம்’ உள்பட பல படங்களை தயாரித்தவர் ஆர்.கே.சுரேஷ். இவர் ஏராளமான படங்களை வினியோகமும் செய்து இருக்கிறார். ஆர்.கே.சுரேசை, ‘தாரை தப்பட்டை’ படத்தில் வில்லனாக டைரக்டர் பாலா அறிமுகம் செய்தார். அதனைத்தொடர்ந்து ‘வேட்டை நாய்’, ‘தனிமுகன்’, ‘பில்லா பாண்டி’ உள்பட 7 படங்களில் இவர் கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கிறார்.

இவருக்கும், ‘சுமங்கலி’ என்ற தொடரில் நடித்து வரும் டி.வி. நடிகை திவ்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இவர்களது திருமணம் ராமநாதபுரத்தில் நடைபெற இருக்கிறது.

“இது காதல் திருமணம் அல்ல. திவ்யா என் உறவு பெண். இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகும்”, என்று ஆர்.கே.சுரேஷ் தெரிவித்தார்.

Next Story