எம்.ஜி ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் 2ம் பாகம் அனிமேஷனில் தயாராகிறது
எம்.ஜி ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் 2ம் பாகம் அனிமேஷனில் தயாராகிறது.#tamilcinemanews #MGR
எம்.ஜி.ஆர் தயாரித்து, நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன். எம்.ஜி.ஆருடன் லதா, சந்திரலேகா, மஞ்சுளா, நாகேஷ், நம்பியார், அசோகன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். 1973-ம் ஆண்டு வெளியாகி வசூலில் சக்கபோடு போட்ட படம்.
இந்தப் படத்தின் இறுதியில் விரைவில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்று எம்.ஜி.ஆர் டைட்டில் கார்டு போட்டார். அதாவது உலகம் சுற்றும் வாலிபனின் இரண்டாம் பாகத்தை கிழக்கு ஆப்பிரிக்காவில் படமாக்க நினைத்திருந்தார் எம்.ஜி.ஆர். படத்திற்கு பிறகு எம்.ஜி.ஆர் அரசியலில் பிசியாகி விட்டதால் அது நடக்கவில்லை.இப்போது கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற தலைப்பில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இரண்டாம் பாகத்தை எம்.ஜி.ஆர் உருவத்தைக் கொண்டு அனிமேஷன் படமாக தயாரிக்கிறார்கள்.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஜசரி கணேசன் தயாரிக்கிறார். இதற்கான தொடக்க விழா நாளை மறுநாள் (17ந்தேதி) அடையாறு சத்யா ஸ்டூடியேரிவல் நடக்கிறது. இதில் எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகர், நடிகைகள் கலந்து கொள்கிறார்கள்.
Related Tags :
Next Story