உலகின் அழகான மனிதர் பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய நடிகர்


உலகின் அழகான மனிதர் பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய நடிகர்
x
தினத்தந்தி 15 Jan 2018 12:04 PM GMT (Updated: 15 Jan 2018 12:04 PM GMT)

உலகின் அழகான மனிதராக பாலிவுட் நட்சத்திரம் ஹிர்திக் ரோஷன் தேர்வாகியுள்ளார்.#HrithikRoshan

ஒவ்வொரு ஆண்டும் உலகின் அழகான மனிதருக்கான டாப்10 பட்டியலை Worldstopmost.com என்ற இணையதளம் வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான உலகின் அழகான மனிதர்கள் பட்டியலை தற்போது அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.

Troy, Mr and Mrs Smith, World War Z உள்ளிட்ட படங்களில் நடித்த பிராட் பிட், Harry Potter படங்களில் நடித்துள்ள ராபர்ட் பேடிண்சன், டாம் க்ரூஸ் ஆகிய  உள்ளிட்ட ஹாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்கள், இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் Godfrey Gao, Omar Borkan Al Gala போன்ற இதர மொழி முன்னணி கதாநாயகர்களையும், சக இந்தி நடிகரான சல்மான் கான் உள்ளிட்டவர்களையும் பின்னுக்குத்தள்ளி பாலிவுட் நடிகர் ஹிர்திக் ரோஷன் இப்பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார்.

இதே இணையதளம் 2016ல் வெளியிட்ட உலகின் அழகான மனிதர்கள் பட்டியலில் 3ஆம் இடம் பிடித்திருந்த ஹிர்திக் ரோஷன் இந்த ஆண்டு முதல் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2017-ன் உலகின் அழகான மனிதர்கள் பட்டியல்:

1. ஹிர்திக் ரோஷன் 
2. பிராட் பிட் 
3. காட்ஃபிரே காவ் 
4. ராபர்ட் பேடிண்சன்
5. டென்சல் வாஷிங்டன் 
6. ஓமர் போர்கான் அல் காலா 
7. சல்மான் கான்
8. நோஹ் மில்ஸ்
9. டாம் க்ரூஸ்
10. இளவரசர் வில்லியம் 

Next Story