சினிமா கேள்வி-பதில்! : குருவியார்


சினிமா கேள்வி-பதில்! : குருவியார்
x
தினத்தந்தி 21 Jan 2018 10:22 AM GMT (Updated: 21 Jan 2018 10:22 AM GMT)

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

குருவியாரே, கதாநாயகனாக நடித்து வந்த பார்த்திபன், இப்போது வில்லனாகி விட்டார். அடுத்து...? (வெ.நிர்மலா, மதுரை)

மீண்டும் கதாநாயகன் ஆகப்போகிறாராம்!

***

குருவியாரே, ஓவியாவுக்கு நாளுக்கு நாள் காதலர்கள் பெருகி வருகிறார்களே... அவர் யாரையாவது காதலராக தேர்வு செய்து இருக்கிறாரா? (வி.ஸ்ரீகாந்த், காஞ்சீபுரம்)

அடுத்த மாதம் (பிப்ரவரி) 14–ந் தேதி, ஓவியா தனது காதலரை தேர்வு செய்து அறிவிக்கப் போகிறாராம். தயாராக இருங்கள்!

***

கதாபாத்திரங்களுக்கு பொருந்துகிற மாதிரி தங்கள் உருவத்தை சில கதாநாயகர்கள் மாற்றிக் கொள்வது போல், கதாபாத்திரங்களுக்கு தகுந்தாற்போல் உருவத்தை மாற்றிக் கொள்கிற கதாநாயகி யார்? (பி.குமர குருபரன், சோழவந்தான்)

அனுஷ்கா! இவர், ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக குண்டு பெண்ணாக மாறினார். அதையடுத்து, ‘பாகுமதி’ (தெலுங்கு) படத்துக்காக உடல் எடையை குறைத்து, ஒல்லி பெண்ணாக மாறியிருக்கிறார்!

***

ராஜ்கிரணை திரையில் பார்த்து நாளாகி விட்டதே... அவர் என்ன செய்கிறார்? (டி.மைக்கேல், புதுச்சேரி)

ராஜ்கிரண் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதை மற்றும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறார். அப்படி அவர் இதற்கு முன்பு நடித்த படம், தனுஷ் இயக்கிய ‘ப.பாண்டி. இப்போது அவர், ‘சண்டைக்கோழி–2’ படத்தில் நடித்து வருகிறார்.

***

குருவியாரே, விஜய்யும், அஜித்தும் இணைந்து நடிப்பார்களா? (சி.மனோஜ், சிப்பிப்பாறை)

இணைந்து நடிக்க வேண்டிய சூழ்நிலை உருவானால், அதுபற்றி இருவரும் யோசிப்பார்களாம்!

***

குருவியாரே, கே.பாக்யராஜ் இனிமேல் ‘அப்பா’ வேடத்தில் நடிப்பாரா? (கே.ராஜாசிங், திருச்சி)

‘உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்’ உள்பட சில படங்களில், பாக்யராஜ் ஏற்கனவே அப்பா வேடங்களில் நடித்து விட்டார்!

***

“திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே...” என்ற பாடல் இடம் பெற்ற படம் எது, அந்த பாடலை பாடியவர் யார்? (த.ஜெயராஜ், மதுரை-1)

அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘திரிசூலம்.’ பாடியவர், ஜேசுதாஸ்!

***

குருவியாரே, நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான விஷால் எப்போதுதான் திருமணம் செய்து கொள்வார்? (ஆர்.வி.ராம்குமார், பெரியகுளம்)

அதற்கான நேரமும், காலமும் கனிந்து வருகிறது. நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதும் டும்..டும்..டும்...தான்!

***

திருமணம் ஆனதும் கணவருடன் குடும்பம் நடத்த போய்விடும் நடிகைகள் மத்தியில், சமந்தா விதி விலக்காக தெரிகிறாரே...? (சிபி சக்ரவர்த்தி, கோவை)

சமந்தா எப்போதுமே விதி விலக்கானவர்தான். “ஓடு மீன் ஓட உரு மீன் வரும் வரை காத்திருக்கும் கொக்கு” மாதிரி, சமந்தா பல கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தாலும் காத்திருந்து, நாக சைதன்யாவை கணவராக தேர்வு செய்ததே இதற்கு உதாரணம்!

***

இசையமைப்பாளர்கள் கதாநாயகனாகி வருகிறார்களே... இசைக்கும், கதாநாயகர்களுக்கும் என்ன தொடர்பு? (பி.சி.ராஜ்குமார், ஈரோடு)

காதுகளை குளிர வைக்கும் மென்மையான இசைதான், இதயங்களையும் ஈரப்படுத்துகிறது. இசையமைப்பாளர்கள், மென்மையான இதயம் கொண்டவர்கள். எளிதில் காதல் வசப்பட்டு விடுவார்களாம்!

***

குருவியாரே, மூத்த கதா நாயகி ரேவதிக்கும், இளம் தலைமுறை நாயகி ஸ்ரீதிவ்யாவுக்கும் ஒரு ஒற்றுமை இருகிறதாமே...அது என்ன? (கா.ஜெயசீலன், சேலம்)

இருவருமே உயரம் குறைந்தவர்கள். அவர் களின் உருவம் குள்ளமா க இருந்தாலும், முகங்கள் வசீகரமானவை!

***
குருவியாரே, நகைச்சுவை நடிகர் சூரியின் வளர்ச்சிக்கு என்ன காரணம்? (எஸ்.தர்ஷன், காட்பாடி)

தலை கனம் இல்லாமல் பழகும் விதம். யாரையும் குறைத்து மதிப்பிடாத சுபாவம். இயல்பான நகைச்சுவை ஆகிய மூன்றும் சூரியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள்!

***

குருவியாரே, கீர்த்தி சுரேஷ் படங்களில் பேசுவது சொந்த குரலிலா? இரவல் குரலிலா? (எம்.ரகு, சீர்காழி)

சொந்த குரலில்தான்...!

***

பிரபுதேவா மும்பையில் முகாமிட்டு இந்தி படங்களை இயக்கி வந்தாரே... அது என்ன ஆச்சு? (இரா.அருண் பிரசாத், மதுராந்தகம்)

பிரபுதேவா இந்தி பட இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருக்கிறார். தமிழில் பட வாய்ப்புகள் வருவதால், இங்கே அதிக கவனம் செலுத்துகிறார்!

***

குருவியாரே, நடிகர் விஜய் சேதுபதிக்கு எத்தனை வயது ஆகிறது? அவருடைய சொந்த ஊர் எது? (கே.சுரேஷ்குமார், சிவகாசி)

விஜய் சேதுபதிக்கு 40 வயது ஆகிறது. அவருடைய சொந்த ஊர், ராஜபாளையம்!

***

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களில் கதாநாயகி யார்? என்பதை அவர்தான் தீர்மானிக்கிறாரா? (எஸ்.வேல்முருகன், குன்றத்தூர்)

அவரும் தீர்மானிக்கிறார். டைரக்டர் இரண்டு அல்லது மூன்று கதாநாயகிகளின் பெயரை சொல்கிறார். அதில் ஒருவரை சிவகார்த்திகேயன்தான் தேர்வு செய்கிறாராம்!

***

குருவியாரே, எத்தனை கதாநாயகிகள் வந்தாலும், அவர்களை சமாளித்து, 10 வருடங்களுக்கும் மேலாக நயன்தாராவும், திரிஷாவும் முன்னணி கதாநாயகிகளாக நீடித்து நிலைத்து நிற்பதன் ரகசியம் என்ன? (ஆர்.புவன், அரக்கோணம்)

இரண்டு பேருக்கும் அவர்களின் முகம்தான் அந்த ரகசியம். நயன் தாராவுக்கு அவருடைய முகத்தில் இன்னமும் கேரள வசீகரம் மிச்சம் இருக்கிறது. திரிஷா முகத்தில், இன்னமும் இருபது வயது இளமை அப்படியே இருக்கிறது!

***

அனுஷ்கா நடித்து அடுத்து வெளிவர இருக்கும் படம் எது? (பி.சுரேந்தர், சேலம்)

‘பாகுமதி.’

***

Next Story