முக்கிய வேடத்தில் நந்திதா!


முக்கிய வேடத்தில் நந்திதா!
x
தினத்தந்தி 13 Feb 2017 8:56 AM GMT (Updated: 13 Feb 2017 8:56 AM GMT)

‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்த அரவிந்தசாமி அடுத்து ‘போகன்’ படத்தில், ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைந்து நடித்தார்.

இதையடுத்து அவர், ‘சதுரங்க வேட்டை-2’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படம் முடிவடைந்ததும் அவர், செல்வா டைரக்‌ஷனில், ‘வணங்காமுடி’ என்ற படத்துக்கு ‘கால்ஷீட்’ கொடுத்து இருக்கிறார். இதில், அரவிந்தசாமியின் ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில், நந்திதா நடிக்கிறார். நந்திதாவுக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்தசாமிக்கு தந்தையாக நடித்த தம்பிராமய்யா, இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காதலர் தினமான பிப்ரவரி 14-ந் தேதி படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது!


Next Story