அருண் விஜய்க்கு பெரிய திருப்பம்!


அருண் விஜய்க்கு பெரிய திருப்பம்!
x
தினத்தந்தி 23 March 2017 10:30 PM GMT (Updated: 22 March 2017 9:42 AM GMT)

‘குற்றம் 23’ படத்தை தயாரித்த இந்திரகுமார், அருண் விஜய்யை வைத்து மீண்டும் ஒரு புதிய படம் தயாரிப்பதற்கான வேலைகளை தொடங்கி இருக்கிறார்!

அருண் விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் முதன் முதலாக திருப்பத்தை ஏற்படுத்திய படம், ‘மலை மலை.’ இதையடுத்து அவருக்கு ‘தடையற தாக்க,’ ‘என்னை அறிந்தால்’ ஆகிய படங்கள் திருப்பங்களாக அமைந்தன. அவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘குற்றம் 23’ படம், மிகப்பெரிய திருப்பமாக அமைந்து இருக்கிறது.

ரூ.5 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம், தமிழ்நாடு முழுவதும் 2 வாரங்களில் ரூ.10 கோடி வசூல் செய்து இருக்கிறது. இதைத்தொடர்ந்து, ‘குற்றம் 23’ படத்தை தயாரித்த இந்திரகுமார், அருண் விஜய்யை வைத்து மீண்டும் ஒரு புதிய படம் தயாரிப்பதற்கான வேலைகளை தொடங்கி இருக்கிறார்!

Next Story