தோற்றாலும் முதல் இடம்


தோற்றாலும் முதல் இடம்
x
தினத்தந்தி 24 Jun 2017 9:21 AM GMT (Updated: 24 Jun 2017 9:20 AM GMT)

வெளியாகும் படங்கள் அனைத்தும் தோல்வி மேல் தோல்வியைத் தழுவினாலும், ஹாலிவுட்டில் இப்போதும் அதிக சம்பளம் பெறும் ஹீரோவாக அவர்தான் இருக்கிறார்.

வெளியாகும் படங்கள் அனைத்தும் தோல்வி மேல் தோல்வியைத் தழுவினாலும், ஹாலிவுட்டில் இப்போதும் அதிக சம்பளம் பெறும் ஹீரோவாக அவர்தான் இருக்கிறார். அது வேறு யாரும் இல்லை.. நம்ம கரிபியன் நாயகன் ஜானி டெப் தான் அந்த ஹீரோ.

ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் கலைஞர்களின் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதில் கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் ‘பைரட்ஸ் ஆப் தி கரிபியன்’ திரைப்படத்தின் கதாநாயகன் ஜானி டெப் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

டெப்பின் நடிப்பில் திரைப்படங்கள் தோல்வியைத் தழுவி வந்த போதிலும், அவருக்கு கூடுதல் சம்பளம் அளிக்கப்படுகிறது. இதனால் அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் ராஜாவாக முதலிடத்தில் அமர்ந்திருக்கிறார். இவரை தொடர்ந்து... போர்ப்ஸ் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் நடிகர் வில் ஸ்மித். அவரும் தொடர்ந்து பிளாப் கொடுத்து வரும் நிலையில் அவரது சம்பளம் மட்டும் அதிகமாக உள்ளது. வில் ஸ்மித்தை அடுத்து சானிங் டாட்டம் அதிக சம்பளம் பெறுகிறார். அவர் கடந்த ஆண்டு ஹிட் படங்கள் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக சம்பளம் வாங்கும் கலைஞர்கள் பட்டியலில் ஒரேயொரு நடிகை மட்டுமே இடம்பிடித்துள்ளார். அவர் தான் ஜுலியா ராபர்ட்ஸ். ஹீரோக்களுடன் ஒப்பிடுகையில் ஜுலியாவின் சம்பளம் குறைவு தான். 

Next Story