‘பதி’ நடிகரின் சம்பளம் ரூ.9 கோடியாக உயர்ந்தது!


‘பதி’ நடிகரின் சம்பளம் ரூ.9 கோடியாக உயர்ந்தது!
x
தினத்தந்தி 19 Sep 2017 10:30 AM GMT (Updated: 19 Sep 2017 10:30 AM GMT)

வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து வரும் ‘பதி’ நடிகர் ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வந்தார்.

வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து வரும் ‘பதி’ நடிகர் ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வந்தார். அவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படமும் வெற்றி பெற்று வசூல் குவித்ததால், ஒரேயடியாக அவர் சம்பளத்தை உயர்த்தி விட்டார்.

இப்போது அவருடைய சம்பளம், ரூ.9 கோடி! இந்த சம்பளத்தையும் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். ‘பதி’யின் கால்ஷீட் கிடைத்தால் போதும்...பத்து ரூபாய் (10 கோடி) கூட கொடுக்கலாம் என்கிறார்கள், புதுசாக படம் எடுக்க வந்த தயாரிப்பாளர்கள்!

Next Story