‘டைட்டானிக்’ ரோஸின் புதிய அவதாரம்


‘டைட்டானிக்’ ரோஸின் புதிய அவதாரம்
x
தினத்தந்தி 21 Oct 2017 5:03 AM GMT (Updated: 21 Oct 2017 5:03 AM GMT)

ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான ‘அவதார்’ திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் கேத் வின்ஸ்லெட் நடிக்க இருக்கிறார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர், கேத் வின்ஸ்லெட். அந்த படம் இருவருக்கும் மைல் கல்லாக அமைந்தது. ‘ரோஸ்’ என்ற கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்திருந்த கேத் வின்ஸ்லெட்டிற்கு உலகளவில் ரசிகர்கள் கிடைத்தனர். இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.

ஆம்..! ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான ‘அவதார்’ திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் கேத் வின்ஸ்லெட் நடிக்க இருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கையை கேத் வின்ஸ்லெட் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

“என்னை பிரபலப்படுத்திய இயக்குனருடன் இணைந்து மீண்டும் பிரபலமாக இருக்கிறேன்” என்ற டிவிட்டுடன், “அவதாரின் அடுத்தடுத்த பாகங்களில் என்னுடைய புது அவதாரத்தை பார்க்கலாம்” என்று டிவிட் கொடுத்திருக்கிறார். ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வரும் அவதார் வரிசை திரைப்படங்களுக்கு கேத் வின்ஸ்லெட்டின் வருகை கூடுதல் பலமாக மாறியுள்ளது. 

Next Story