62-வது படத்தில் மாற்று திறனாளியாக விஜய்?


62-வது படத்தில் மாற்று திறனாளியாக விஜய்?
x
தினத்தந்தி 14 Dec 2017 11:15 PM GMT (Updated: 14 Dec 2017 8:03 AM GMT)

விஜய் நடிக்க இருக்கும் 62-வது படத்தில், 2 வேடங்களில் நடிக்கிறார். அதில், ஒரு வேடம் மாற்று திறனாளி என்று கூறப்படுகிறது.

‘மெர்சல்’ படத்தில், விஜய் 3 வேடங்களில் நடித்து இருந்தார். இதையடுத்து அவர் நடிக்க இருக்கும் 62-வது படத்தில், 2 வேடங்களில் நடிக்கிறார். அதில், ஒரு வேடம் மாற்று திறனாளி என்று கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்கிறார்.

விஜய் ஜோடியாக 2 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இரண்டு பேரில் ஒருவர் முதன்மை கதாநாயகியாக நடிப்பார்கள் என்றும், இன்னொரு நாயகியாக இந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பார் என்றும் தகவல் பரவியிருக்கிறது. படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஜனவரி) தொடங்குகிறது! 

Next Story