புரியாத புதிர்


புரியாத புதிர்
x
தினத்தந்தி 4 Jan 2017 10:32 AM GMT (Updated: 5 Jan 2017 9:19 AM GMT)

அதிரடி, காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை, திரில்லர் என பல வகை திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டாலும், புதிரான கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்களுக்கு அவர்களிடம் என்றுமே நல்ல வரவேற்பு இருக்கும். அப்படி ஒரு புதுமையான புதிர் கதைக்களத்தில் உருவாகி இருப்பது தான் விஜய் சேதுபதி - காயத்திரி முன்னணி க

அதிரடி, காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை,  திரில்லர் என பல
வகை திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டாலும், புதிரான கதைக்களத்தில் உருவாகும்  திரைப்படங்களுக்கு அவர்களிடம் என்றுமே நல்ல வரவேற்பு இருக்கும். அப்படி ஒரு புதுமையான புதிர் கதைக்களத்தில் உருவாகி இருப்பது தான் விஜய் சேதுபதி - காயத்திரி முன்னணி கதாபாத்திரங்களில்  நடித்திருக்கும் 'மெல்லிசை' திரைப்படம்.

வலுவான கதையம்சத்தில்  உருவாகி இருக்கும் திரைப்படத்திற்கு மெல்லிசை போன்ற 'மெல்லிசை'  தலைப்பு பொருந்தாத காரணத்தினால், தற்போது இந்த  படத்திற்கு  'புரியாத புதிர்' என்ற புதிய தலைப்பை வைத்துள்ளனர் படக்குழுவினர். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி, 'ரெபெல் ஸ்டுடியோ' தயாரித்து இருக்கும் 'புரியாத புதிர்'.

இசை ஷாம்.சி.எஸ், ஒளிப்பதிவு தினேஷ்கிருஷ்ணன், திரைப்படத்தின் விநியோக உரிமையை 'ஜேஎஸ்கே பிலிம் கார்பொரேஷன்' சார்பில் வாங்கி இருக்கிறார் ஜே.சதீஷ்குமார். இதே தலைப்பில் கடந்த 1990 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமாரின்  இயக்கத்தில் உருவான 'புரியாத புதிர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்  அமோக பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி நடித்த ‘புரியாத புதிர்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

விஜய் சேதுபதிக்கு 2016 ராசியான ஆண்டாக அமைந்தது. அவர் நடித்து ‘இறைவி,’ ‘காதலும் கடந்து போகும்,’ ‘சேதுபதி,’ ‘தர்மதுரை,’ ‘ஆண்டவன் கட்டளை,’ ‘றெக்க’ ஆகிய 6 படங்கள் திரைக்கு வந்தன. 6 படங்களுமே தயாரிப்பாளர் களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் லாபம் சம்பாதித்து கொடுத்தன.

அடுத்து அவர் நடித்த ‘புரியாத புதிர்’ படம், பொங்கல் வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது. விஜய் சேதுபதி நடித்து, 2017-ல் திரைக்கு வரும் முதல் படம் இது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடித்து இருக்கிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், சோனியா தீப்தி ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.

சி.எஸ்.சாம் இசையமைத்து இருக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரஞ்சித் ஜெயக்கொடி டைரக்டு செய்து இருக்கிறார். படம் முடிவடைந்து தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.
இது, மனோரீதியான திகில் படம்.


Next Story