மொட்ட சிவா கெட்ட சிவா


மொட்ட சிவா கெட்ட சிவா
x
தினத்தந்தி 2 Feb 2017 9:14 AM GMT (Updated: 2 Feb 2017 9:14 AM GMT)

பல வெற்றி படங்களை தயாரித்த ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் அடுத்து தயாரிக்கும் படம், 'மொட்ட சிவா கெட்ட சிவா.'

 'மொட்ட சிவா கெட்ட சிவா' முன்னோட்டம் சூப்பர் குட்  பிலிம்சின்  87-வது  படத்தில் ராகவா லாரன்ஸ்  கதாநாயகன்!

 இது, சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 87-வது படம். இதில், ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். மற்றும் நிக்கி கல்ராணி, சதீஷ், தம்பிராமய்யா, மனோபாலா, ஸ்ரீமன், கோவை சரளா, தேவதர்ஷினி ஆகியோரும் நடிக்கிறார்கள். சர்வேஸ் முராரி ஒளிப்பதிவு செய்கிறார். நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரிஷ் இசையமைக்கிறார். திரைக்கதை அமைத்து டைரக்டு செய்கிறார், சாய்ரமணி. இவர், ஜீவா இரட்டை வேடங்களில் நடித்த 'சிங்கம் புலி' படத்தை டைரக்டு செய்தவர்.

ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் இந்த படத்தை உலகம் முழுவதும் வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வெளியிடுகிறார்.

படப்பிடிப்பு இம்மாதம் 18-ந் தேதி சென்னையில் தொடங்கி 30 நாட்கள் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து ஐதராபாத், ஹாங்காங், சுவிட்சர்லாந்து ஆகிய இடங்களில் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டு  இருக்கிறார்கள்.


Next Story