விவேகம்


விவேகம்
x
தினத்தந்தி 2 Feb 2017 10:24 AM GMT (Updated: 2 Feb 2017 10:24 AM GMT)

நடிகர் அஜித் குமாரின் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இதை பார்த்து சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நள்ளிரவு 12.01 மணிக்க வெளியிடப்பட்டது.இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே ‘விவேகம்’ என்ற பெயர் சமூக வலைத்தளங்களை அலற வைத்தது.

விவேகம் பர்ஸ்ட் லுக் வெளியான முதல் ஒரு மணி நேரத்தில் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது.இதுதவிர மற்றொரு விஷயத்தலும் விஜயின் ’பைரவா’ பர்ஸ்ட் லுக்கை,விவேகம் முந்தியுள்ளது. பைரவா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் டுட்டரில் வெளியிடப்பட்ட ஒரு நாளில் 12,000 ரீ டிவீட்கள் மற்றும் 31 ஆயிரம் லைக்குகளை பெற்றிருந்தது.ஆனால் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக்கானது,வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் 12 ஆயிரம் ரீ டிவீட்கள் மற்றும் 20 ஆயிரம் லைக்குகளை பெற்று சாதனை படைத்தது. இது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.விவேகம் படத்தின் டீசர் வெளியிடப்படும் போது,இதற்கு முன்னர் அஜித் படங்கள் செய்துள்ள சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சத்யா ஜோதி ப்லிம்ஸ் வழ்ங்கும் படம் "விவேகம்" தயாரிப்பு டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன், எழுத்து இயக்கம் சிவா, ஆதி நாராயணன், நடிகைகள் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், நடிகர் விவேக் ஒப்ராய், இசை அனிருத், ஒளிப்பதிவு வெற்றி.

Next Story