எமன்


எமன்
x
தினத்தந்தி 3 Feb 2017 7:46 AM GMT (Updated: 3 Feb 2017 7:46 AM GMT)

விஜய் ஆண்டனி நடித்து அடுத்து திரைக்கு வர இருக்கும் படம், ‘எமன்.’ இதில் அவர் முறுக்கு மீசையுடன் அரசியல்வாதியாக நடித்து இருக்கிறார்.

முறுக்கு மீசையுடன் அரசியல்வாதி வேடத்தில் விஜய் ஆண்டனி

அவருக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்துள்ளார். ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா சங்கர் டைரக்டு செய்திருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவும் இவரே.

நடிகர் தியாகராஜன் முக்கிய கதாபாத்திரத்திலும், கிரண், சார்லி, மாரிமுத்து ஆகியோர் இதர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைத்து இருக்கிறார்.

படத்தை பற்றி டைரக்டர் ஜீவா சங்கர் கூறும்போது, “பொதுவாகவே இதுவரை வந்த அரசியல் படங்கள் எல்லாமே அரசியலை மக்களின் பார்வையில் இருந்து காட்டக்கூடியதாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால், ‘எமன்’ படம் அரசியலை, அரசியல்வாதிகளின் பார்வையில் இருந்தே பிரதிபலிக்கும். இந்த படத்தில், ஆண்களின் வீர அடையாளமாக கருதப்படும் முறுக்கு மீசையுடன் விஜய் ஆண்டனி நடித்து இருக்கிறார்” என்றார்.

Next Story