ரங்கூன்


ரங்கூன்
x
தினத்தந்தி 5 Jun 2017 10:27 AM GMT (Updated: 5 Jun 2017 10:26 AM GMT)

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் `ரங்கூன்'

ஏ.ஆர்முருகதாஸ்-ன் உதவி இயக்குநரான ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் அந்த படத்திற்கு `ரங்கூன்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கவுதம் கார்த்திக் - சனா மக்புல் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு விக்ரம்.ஆர்.எச். மற்றும் அஸ்வின் ரெஞ்சு இசையமைத்து வருகின்றனர்.

பாஃக்ஸ் ஸ்டார் இந்தியா மற்றும் ஏ.ஆர்முருகதாஸ் புரொடக்‌ஷன் ஹவுஸ் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தை வருகிற ஜுன் 9-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அதே மாதம் 23-ம் தேதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் மகேஸ்பாபுவின் படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story