முன்னோட்டம்
சத்யா

சத்யா
சிபிராஜ், ஆனந்தராஜ், சதீஷ், யோகி பாபு ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி சைமன் கே.கிங் அருண்மணி பழனி
“அடுத்தது என்ன காட்சி? என்று யூகிக்க முடியாத திரைக்கதை” ‘சத்யா’ படத்தை பற்றி சத்யராஜ் கருத்து
Chennai
சிபிராஜ் நடிப்பில் தயாராகியுள்ள ‘சத்யா’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், அந்த படத்தை பற்றி சத்யராஜ் தனது கருத்தை பதிவு செய்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“நாய்கள் ஜாக்கிரதை என்ற படத்துக்கு பிறகு நாங்கள், ‘சத்யா’ படத்தை தயாரித்து இருக்கிறோம். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் வெற்றி பெற்றதில், மகிழ்ச்சி. டிரைலரை வெளியிட்ட தம்பி சிவகார்த்திகேயனுக்கு நன்றி.

‘சத்யா’ என்ற டைட்டிலை நாங்கள் கேட்டதும் தந்து உதவிய கமல்ஹாசனுக்கு நன்றி. அவர் நடித்த ‘சத்யா’ அந்த காலத்தில் எவ்வளவு வித்தியாசமான படமாக அமைந்ததோ, அந்த அளவுக்கு இந்த ‘சத்யா’ படமும் வித்தியாசமானதாக இருக்கும். இந்த படத்தில், அடுத்தது என்ன காட்சி? என்று யூகிக்க முடியாத அளவுக்கு திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

சிபிக்கு வித்தியாசமான கதாபாத்திரம். சிபியுடன் ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், ஆனந்தராஜ், சதீஷ், யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். பிரதீப் டைரக்டு செய்திருக்கிறார். ‘சத்யா’ வெற்றி படமாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

விமர்சனம்

துப்பறிவாளன்

கதையின் கரு: மர்ம கொலைகளில் துப்பறிந்து கொலைகாரனையும், கொலைக்கான காரணங்களையும் கண்டுபிடிக்கும் ஒரு துப்பறிவாளனின் கதை.

மகளிர் மட்டும்

பள்ளி படிப்பு காலத்தில் பிரியும் மூன்று தோழிகளை வயதான பிறகு சேர்த்து வைத்து சந்தோஷப்படுத்தும் இளம்பெண்.

யார் இவன்

கதையின் கரு: ஒரு காதல் மனைவியை கணவனே கொலை செய்யும் கதை. கபடி விளையாட்டில் சாம்பியன், சச்சின்.

மேலும் விமர்சனம்