முன்னோட்டம்
குரங்கு பொம்மை

குரங்கு பொம்மை
பாரதிராஜா, விதார்த் டெல்னா டேவிஸ் நித்திலன் அஜ்னீஸ் லோக்நாத் என்.எஸ்.உதயகுமார்
பாரதிராஜா, விதார்த் நடிப்பில் தந்தை-மகன் பாசப்போராட்டத்துடன் ‘குரங்கு பொம்மை’
Chennai
பாரதிராஜா, விதார்த் இணைந்து நடித்துள்ள படம், ‘குரங்கு பொம்மை.’ இதில், கதாநாயகியாக டெல்னா டேவிஸ் மற்றும் பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு ஆகியோரும் நடித்துள்ளனர். நித்திலன் டைரக்டு செய்துள்ளார். ஸ்ரேயா மூவிஸ் எல்.எல்.பி நிறுவனம் தயாரித்து உள்ளது.

படத்தை பற்றி பாரதிராஜா கூறும்போது, “இயக்குனர் நித்திலன் திறமையானவர். அவருடைய குறும் படங்களை பார்த்து பொறாமைப்பட்டேன். நான் பாரதிராஜா என்பதை ஓரமாக தூக்கிப்போட்டு விட்டு, நடிகனாக எனது வேலையை செய்து இருக்கிறேன். வங்காள-மலையாள படங்களை பார்க்கும்போது, அந்த நடிகர்களின் யதார்த்தமான நடிப்பை பார்த்து பிரமிப்பேன். விதார்த்தும் அப்படி ஒரு நடிகர்” என்றார்.

விதார்த் கூறும்போது, “குரங்கு பொம்மை எனக்கு சிறப்பான படமாக அமைந்துள்ளது” என்றார்.

டைரக்டர் நித்திலன் கூறுகையில், “மனிதனுடைய மனது குரங்கு போன்று தாவிக்கொண்டே இருக்கும், அதை குறியீடாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. இதில் விதார்த்துக்கு தந்தையாக பாரதிராஜா நடிக்கிறார். படத்தில் அப்பாவுக்கும், மகனுக்குமான பாசப் போராட்டத்தை அழுத்தமாக சொல்லி இருக்கிறோம். நல்லவனுக்கும், கெட்டவனுக்கும் இருக்கும் நட்பு கதை கருவாக இருக்கும். பாரதிராஜா படத்தின் கதையை கேட்டதும் நடிக்க சம்மதித்தது மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.

விமர்சனம்

தானா சேர்ந்த கூட்டம்

சி.பி.ஐ. போர்வையில் கருப்பு பணத்தை கொள்ளையடிக்கும் கூட்டம். "தானா சேர்ந்த கூட்டம்" படத்தின் சினிமா விமர்சனம்.

ஸ்கெட்ச்

கதாநாயகனுக்கும், வட சென்னை தாதாக்களுக்கும் இடையே ஏற்படும் மோதல். படத்தின்

குலேபகாவலி

புதையலை தேடிச் செல்லும் திருட்டுக் கும்பல். ‘குலேபகாவலி’ படத்தின் சினிமா விமர்சனம்.

மேலும் விமர்சனம்