கவர்ச்சி.. காதல்.. டேட்டிங்.. கடற்கரை.. இளம் இந்தி நடிகை ஜரீன் கானுடன் ஒரு ‘ஜிலீர்’ பேட்டி...


கவர்ச்சி.. காதல்.. டேட்டிங்.. கடற்கரை.. இளம் இந்தி நடிகை ஜரீன் கானுடன் ஒரு ‘ஜிலீர்’ பேட்டி...
x
தினத்தந்தி 19 Feb 2017 11:51 AM GMT (Updated: 19 Feb 2017 11:51 AM GMT)

நடிக்க வந்துவிட்டதை நினைத்து எப்போதாவது வருத்தப்பட்டிருக்கிறீர்களா?

நடிக்க வந்துவிட்டதை நினைத்து எப்போதாவது வருத்தப்பட்டிருக்கிறீர்களா?

வருத்தம் ஏதும் இல்லை. வாழ்க்கையில் எல்லாமே, கற்றுக்கொள்ளும் அனுபவம்தான். எல்லா துறைகளில் இருந்தும் நம்மால் கற்றுக் கொள்ள முடியும்.

உங்களை கிண்டலடிப்பவர்களைப் பற்றி...?


அது ஒரு சந்தோ‌ஷமான வி‌ஷயம். எனக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதே! இன்றைய பரபரப்பான உலகில் எனக்கும் நேரம் ஒதுக்கி கிண்டலடிக்கும்போது அது மகிழத்தக்க வி‌ஷயம்தானே!

பழைய சினிமா ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், எந்த சினிமாவை தேர்ந்
தெடுப்பீர்கள்?


‘முகல்–இ–அஸம்’ படத்தில் ‘அனார்கலி’ வேடத்தை ஏற்பேன். அந்த கதாபாத்திரம் என் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது.

கொழுகொழு பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக் கும் என்கிறார்களே, அப்படியா?

நான் ஆணில்லை. அதனால், பெண்கள் எப்படி இருந்தால் ஆண்களுக்குப் பிடிக்கும் என்று எனக்குத் தெரியாது. பெண்கள் ‘ஸ்லிம்’மாக இருக்கிறார் களா, ‘கொழுகொழு’ என்று இருக்கிறார்களா என்பதை வைத்து பெண்களை விரும்பும் ஆண்களை நான் மதிப்பதில்லை.

ஒருவர் மீது நீங்கள் உறவு கொண்டாட விரும்புகிறீர்கள் என்றால், அவரிடம் நீங்கள் விரும்பும் குணாதிசயம் என்ன?

ஆண்– பெண் உறவில் மிகவும் முக்கியமான வி‌ஷயம், பரஸ்பரம் ஒருவரையொருவர் மதிப்பதும், ஏற்றுக்கொள்வதும்தான். அதேநேரம், ஒருவர் மற்றொருவருக்காக தன்னை மாற்றிக்கொள்ளக்கூடாது. உறவில் இணைய விரும்பும் எல்லோருமே அவரவர் தனித்தன்மையோடு எப்போதும் திகழவேண்டும்.

சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான் ஆகிய மூன்று ‘கான்’களில், உங்களுக்குப் பிடித்த ‘கான்’ யார்?

சல்மான்கான்தான் எனக்கு பிடித்தவர். காரணம், மற்ற இரு ‘கான்’களையும் தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது.

இன்றைய நவீன கால காதலில் எது இல்லை?


ரொமான்ஸ் இல்லவே இல்லை. அதனால்தான் பலருக்கும் காதல் போரடித்து விடுகிறது.

எந்த பழைய சினிமா பாடலுக்கு நீங்கள் குத்தாட்டம் போட விரும்புகிறீர்கள்?

நான் ஹெலன் ஆன்ட்டியின் தீவிர ரசிகை. ‘ஷோலே’ படத்தில் அவர் ஆடிய ‘மெகபூபா... மெகபூபா...’ பாடலுக்கு நான் ஆட விரும்புகிறேன்.

உங்கள் வாழ்வில் கவலைக்குரிய நாளாக அமைந்தது?

என் அம்மாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாள்.

நீங்கள் சந்தித்த வித்தியாசமான ரசிகர்?

எனக்கு ஒருமுறை ஒரு ரசிகர் ரத்தத்தில் கடிதம் எழுதியிருந்தார். நான் அதை விரும்பவில்லை என்றாலும், வித்தியாசமாக இருந்தது உண்மை.

நண்பரோடு நீங்கள் ‘டேட்டிங்’ செல்ல பொருத்தமான இடமாக கருதுவது?

அழகான கடற்கரை.

ஆணிடம் நீங்கள் எதிர்பார்க்கும் மூன்று வி‌ஷயங்கள்?


நல்ல நகைச்சுவை உணர்வு, சாகச குணம், நேர்மை.

உங்கள் ஆடை அலமாரியில் முக்கியமாக இடம்பெற்றிருப்பவை?


‘நச்’சென்று பொருந்தும் ஒரு நீல ஜீன்ஸ் பேண்ட், வெள்ளைச் சட்டை, ஒரு சிறிய கறுப்பு ஆடை, ஸ்கார்ப், சற்றுப் பெரிய ஒரு குளிர்கண்ணாடி.

எந்த வயதில் உங்களின் முதல் ‘காதல்’ அரும்பியது?

எனது 14–வது வயதில். ஆனால் நான் அந்தப் பையனிடம் என் காதலை சொல்லவேயில்லை.

உங்களை கவர்ச்சியாக தோன்றச் செய்வது எது?

மனம் முழுக்க நம்பிக்கை இருந்தால் நாம் கவர்ச்சியாகத்தான் திகழ்வோம்.

மிகவும் ரொமான்டிக்கான சுற்றுலாத் தலமாக நீங்கள் கருதுவது?

இத்தாலியின் மிதக்கும் நகரமான ‘வெனிஸ்’.

பிடித்த சாலையோர உணவு?

தயிர் கச்சோரி.

உங்கள் வீட்டில் உங்களுக்குப் பிடித்த இடம்?

பால்கனி.

யாரும் கவனிக்காதபோது  நீங்கள் செய்ய விரும்புவது?

கண்ணாடி முன் பல்வேறு கோணங்களில் தோன்றி என்னை நானே ரசித்துப் பார்ப்பேன்.

பிடித்த காதல் படம்?

2004–ல் வெளியான ‘தி நோட்புக்’.

நீங்கள் ஒருநாள் காலையில் கண் விழிக்கும்போது ஆணாக மாறியிருந்தால்...?

மறுபடியும் பெண்ணாக மாற கடவுளிடம் பிரார்த்திக்கத் தொடங்கி விடுவேன்.

எந்த நடிகருடன் ‘செல்பி’ எடுக்க ஆசை?

சில்வஸ்டர் ஸ்டோலனுடன்.

Next Story