.
சற்று முன் :
பத்மநாபசுவாமி கோயில் சொத்து; சிறப்பு கணக்கு தணிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
வாரணாசி தொகுதியில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்
பாராளுமன்றத் தேர்தலில் நல்லவர் வெல்வது நிச்சயம் - விஜய்காந்த்

Advertisement

கோவை: கழிப்பறைக்குள் அழைத்து சென்று பெண் கற்பழித்து கொலை

Syndicate

Subscribe to Syndicate

Text Resize

-A +A

வடவள்ளி,

கோவை அருகே கழிப்பறைக்குள் அழைத்து சென்று பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஓட்டல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

பிணமாக கிடந்தார்

கோவையை அடுத்த ஆலாந்துறை போலீஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு புளிய மரத்தடியில் வசித்து வந்தவர் கல்பனா (வயது 46). பூக்கட்டும் வேலை செய்து வந்தார். இவரது தாய் வீரம்மாள் (60). இந்த நிலையில் இன்று காலை கல்பனா அந்த பகுதியில் உள்ள ஒரு பொதுக்கழிப்பிடத்தின் தண்ணீர் தொட்டியில் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.

கழிப்பிடத்துக்கு சென்ற சிலர், கல்பனாவின் பிணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அது குறித்து ஆலாந்துறை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கத்துரை தலைமையில் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கல்பனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஓட்டல் தொழிலாளி

போலீசார் நடத்திய விசாரணையில், கல்பனாவை யாரோ ஒருவர், கழிப்பறையில் வைத்து கற்பழித்தற்கான அடையாளங்கள் காணப்பட்டன. அவரது உடைகள் கிழிக்கப்பட்டிருந்தது. மேலும் கல்பனா தன்னை காப்பாற்றிக்கொள்ள போராடியபோது, அந்த சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க அவரை அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் அமுக்கி கொலை செய்து இருப்பதும் தெரியவந்தது.

கல்பனாவுக்கும் அந்த பகுதியில் உள்ள ஓட்டல் தொழிலாளி உதயக்குமார்( 28) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உதயக்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். உதயக்குமார் தனது வாக்கு மூலத்தில் கூறியதாவது:–

நெருங்கி பழகினோம்

நான் இலங்கை அகதி என்பதால் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோவை பூலுவப்பட்டி அகதிகள் முகாமில் உள்ள வீட்டில், மனைவி மகாலட்சுமி (24) மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தேன். சமீபத்தில் எனக்கும் எனது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நான் அங்கிருந்து வெளியேறினேன். ஆலாந்துறையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்து புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தேன். இந்த நிலையில் கல்பனா அடிக்கடி எங்கள் ஓட்டலுக்கு புரோட்டா வாங்க வருவது வழக்கம். அப்போது அவள் மீது ஆசைப்பட்டேன். இருவரும் இதனால் நெருங்கி பழகினோம். இதைத் தொடர்ந்து அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தோம்.

கற்பழிப்பு–கொலை

சம்பவத்தன்று இரவு அவள் இருக்கும் இடத்துக்கு சென்று அவளை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள பொதுக்கழிப்பிடத்துக்கு சென்றேன். பின்னர் அவளை உல்லாசத்துக்கு அழைத்தேன் ஆனால் அவள் அதற்கு சம்மதிக்க வில்லை. இதனால் நான் கல்பனாவை வலுக்கட்டாயமாக கற்பழிக்க முயன்றேன். ஆனால் அவள் எனது பிடியில் இருந்து தப்பிக்க முயன்றாள். இருந்தாலும் நான் விடாமல் அவளை தாக்கிவிட்டு, கற்பழித்தேன். அவள் திமிறினாள்.கூச்சல் போட முயன்றாள்.இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவளை அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் அமுக்கி கொலை செய்தேன். தற்போது போலீசில் சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு தனது வாக்கு மூலத்தில் உதயக்குமார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து உதயகுமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சொந்த ஊர் 

கற்பழித்து கொலை செய்யப்பட்ட கல்பனாவின் சொந்தஊர் சத்திய மங்கலம் ஆகும். இவரது கணவர் பெயர் பாலகிருஷ்ணன். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊரைவிட்டு வந்து கோவை செட்டிவீதியில் உள்ள ஒரு வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கல்பனாவுக்கும் அவரது கணவர் பாலகிருஷ்ணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் கல்பனா தனது கணவரை பிரிந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது தாய் வீரம்மாளுடன் கிளம்பி ஆலாந்துறையில் உள்ள ஒரு வீட்டில் வந்து குடியேறி உள்ளார். அப்போது அந்த வீட்டு உரிமையாளருக்கும் கல்பனாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் அங்கிருந்து வெளியேறினார். ஆனால் குடியிருக்க அவர்கள் விரும்பிய வீடு கிடைக்காமல் ஆலாந்துறை போலீஸ் நிலையம் அருகில் உள்ள புளியமரத்தடியில் பீரோ, கட்டிலுடன் வசித்து வந்தது தெரியவந்தது. இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆலாந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

category:

News Group Category:

தொடர்புடைய செய்திகள்

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read