.
சற்று முன் :
ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரும் விடுதலை ஆவார்களா? சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
தமிழகத்தில் 72.83% வாக்குகள் பதிவு பிரவீன்குமார் தகவல்
பத்மநாபசுவாமி கோயில் சொத்து; சிறப்பு கணக்கு தணிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பாராளுமன்றத் தேர்தலில் நல்லவர் வெல்வது நிச்சயம் - விஜய்காந்த்

Advertisement

டெங்கு காய்ச்சல் பரவுவதாக பொதுநல மனு தாக்கல் சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

Syndicate

Subscribe to Syndicate

Text Resize

-A +A

சென்னை,

சாலைகளில் ஓடும் கழிவுநீராலும், தேங்கி கிடைக்கும் குப்பைகளால் பொதுமக்கள் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் பாதிக்கப்படுவதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவுக்கு பதிலளிக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.

சென்னை, அடையாறு, காந்திநகரை சேர்ந்தவர் காந்திமதி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–

கொசு உற்பத்தி

சென்னை மாநகரம் முழுவதும், குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் அருகே ஏராளமான குப்பைகள் சாலையோரம் அள்ளப்படாமல் கிடக்கிறது. பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளால், கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் சாலைகளில் துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய் பரவக்கூடிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக திருவான்மியூர் பகுதிகளில் உள்ள தெருக்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால், பொதுமக்கள் குப்பை கழிவுகளை சாலையில் வீசி செல்கின்றனர். இந்த குப்பைகள் தினமும் அள்ளப்படாததால், மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதிலிருந்து உற்பத்தியாகவும் கொசுக்கள் பல்வேறு நோய்களை பரப்புகிறது.

மாணவர்களுக்கு டெங்கு

கடந்த 15 நாட்களில் மட்டும் எங்கள் பகுதியில் 15 மாணவர்கள் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12–ம் வகுப்பு படிக்கும் என் மகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவத்துக்கு பெரும் தொகை செலவு செய்து, அவள் குணமடைந்துள்ளார்.

இதுபோல் குடிசை பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டால், அவர்கள் பெரும் தொகை செலவு செய்து சிகிச்சை பெறமுடியாது. அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது என்பதும் மிகப்பெரிய சவாலாக அவர்களுக்கு இருக்கும்.

எனவே சென்னை மாநகரில் சாலைகளில் மலைபோல் கிடக்கும் குப்பைகளையும், கழிவுநீர் அடைப்புகளையும் சரிசெய்யவேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி கமிஷனர், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனருக்கு புகார் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நோட்டீசு

எனவே சாலைகளில் கிடக்கும் குப்பைகளை அகற்றவும், கழிவுநீர் அடைப்புகளை சரிசெய்யவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் வருகிறது அக்டோபர் 7–ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

image: 

category:

News Group Category:

தொடர்புடைய செய்திகள்

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read