.
சற்று முன் :
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 140 ரன்கள் குவிப்பு
இந்தியா வலிமையடைய எனது தாயார் சோனியா காந்திக்கு வாக்களியுங்கள் பிரியங்கா பேச்சு
வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்தார்

Advertisement

உணவு பாதுகாப்பு மசோதா: தி.மு.க. கொடுத்த முக்கிய திருத்தங்களை ஏற்றது திருப்தி அளிக்கிறது கருணாநிதி பேட்டி

Syndicate

Subscribe to Syndicate

Text Resize

-A +A

சென்னை

உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறியதற்கு வரவேற்பு தெரிவிப்பதாகவும், தி.மு.க. கொடுத்த முக்கிய திருத்தங்களை ஏற்றுக்கொண்டது திருப்தி அளிப்பதாகவும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:–

உணவு பாதுகாப்பு மசோதா

கேள்வி:– தி.மு.க. சார்பில் நீங்கள் கொடுத்த முக்கிய திருத்தங்களை ஏற்றுக்கொண்டு, பாராளுமன்றத்தில் உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறதே, அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?.

பதில்:– இந்தியத் திருநாடு விடுதலை பெற்று 66 ஆண்டுகளுக்குப் பிறகு, உணவு உரிமைக்கான சட்டம் பாராளுமன்றத்திலே நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஏழை–எளியோர் மகிழ்ச்சிப் பெருக்கோடு இதனை வரவேற்பார்கள் என்று நான் நம்புகிறேன். தி.மு.க. சார்பிலும், மற்ற கட்சிகளின் சார்பிலும் கொடுத்த முக்கியமான திருத்தங்களை ஏற்றுக்கொண்டிருப்பது திருப்தி அளிக்கிறது. இந்தச் சட்டத்திலே இன்னும் செய்ய வேண்டிய ஒரு சில திருத்தங்கள் இருக்கின்றன. காலப்போக்கில் அவ்வப்போது ஏற்படுகின்ற அனுபவங்களின் அடிப்படையில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

நல்லதை ஏற்கும் பக்குவம்

‘‘பிடிக்காதவர்கள் கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்’’ என்ற மனப்பான்மை உள்ளவர்கள் வேண்டுமானால், இந்த மசோதாவை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும், எதிர்க்க வேண்டும் என்ற நிலைமை இருக்கலாம். ஆனால் இதுபோன்ற பிரச்சினைகளில் வறட்டுப் பிடிவாதம் எதுவும் காட்டாமல், நல்லதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அனைவருக்கும் இருக்க வேண்டும்.

முக்கிய எதிர்க்கட்சிகள் எல்லாம்கூட தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்துவிட்டு அதேநேரத்தில் மசோதாவை வரவேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சியாகச் செயல்படலாம், ஆனால் எதிரிக்கட்சியாக இருப்பது நல்லது அல்ல. இது தான் நேற்றையதினம் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் இருந்து என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

நன்றி

முடிவாக சுமூகமான முறையில் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியிருப்பதற்காகவும், தி.மு.க. தந்த திருத்தங்களை ஏற்றுக் கொண்டிருப்பதற்காகவும், இந்தியாவில் உள்ள ஏழை–எளிய, சாதாரண சாமான்ய, அடித்தட்டு மக்கள், மற்றும் நடுத்தர குடும்பத்தினரின் சார்பாக நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் அதற்கு வாக்களித்த பெருமக்களுக்கும், இந்த மசோதாவைக்கொண்டு வருவதற்குக் காரணமாக இருந்த சோனியா காந்திக்கும் நான் என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்தலுக்காகவா?

கேள்வி:– 2014–ம் ஆண்டு வருகிற தேர்தலை மனதிலே கொண்டுதான் இந்த மசோதா கொண்டுவரப்பட்டதாக கூறுகிறார்களே?.

பதில்:– அப்படியானால் எந்த ஒரு அரசு கொண்டுவருகிற திட்டங்களும், சட்டங்களும் அடுத்து வருகிற தேர்தலை குறிவைத்துத்தான் கொண்டுவரப்படுகிறது என்று சொல்வதற்கு இடம் அளித்துவிடக் கூடும்.

விடிவு காண வேண்டும்

கேள்வி:– தமிழக மீனவர்கள் 35 பேர் மீண்டும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்களே?.

பதில்:– தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றி தொடர்ந்து நான் எழுதிக்கொண்டே வருகிறேன். மேலும் மேலும் இலங்கை சிங்களவர்களின் வெறியாட்டம் தாங்க முடியாத அளவிற்குப் போய்க் கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு விடிவு காலம் காணப்படவேண்டும். அதற்கு நம்முடைய பிரதமரும், சோனியா காந்திக்கும் மத்திய அரசும் பொறுப்பேற்று உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படுமென்று சொல்லிக் கொண்டே காலத்தைக் கடத்தினால், நம்முடைய மீனவர்களின் கதி அதோகதியாகிவிடும்.

சமையல் சிலிண்டர் விலை உயர்வு

கேள்வி:– மத்திய அரசு சமையல் சிலிண்டர் விலையை மாதந்தோறும் 10 ரூபாய் வீதம் ஏற்றப் போவதாக செய்தி வந்திருக்கிறதே?.

பதில்:– சமையல் சிலிண்டர் விலையை உயர்த்தாமல், அதிலே நல்ல முடிவு எடுப்பார்களானால், பாதிக்கப்படுபவர்களோடு சேர்ந்து நானும் மகிழ்ச்சி அடைவேன்.இவ்வாறு கருணாநிதி கூறினார்.
 

News Category:

News Group Category:

தொடர்புடைய செய்திகள்

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read