|
|
உடல்
நலம் |
| அல்ட்ரா
சவுண்ட் முறையில் புராஸ்டேட் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை |
| லண்டன்,
இங்கிலாந்து நாட்டின்
லண்டன் பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஹஷீம் அகமது மேற்கொண்ட
ஆய்வில் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு புதிய தீர்வு கிடைத்துள்ளது.
தற்போது புதிய சிகிச்சையின்படி (எச்.ஐ.எப்.யூ.) அல்ட்ரா சவுண்ட்
முறையில் புற்றுநோய் கட்டிகள் அதிக வெப்பத்திற்கு உட்படுத்தப்படுகிறது.
இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை. ஆனால் ஆச்சரியப்படும்
அளவில் 10ல் 9 ஆண்களுக்கு (95 சதவீதம்) பூரண குணம் கிடைப்பது தெரிய
வந்துள்ளது. மேலும் இந்த சிகிச்சை ஒரு நாளில் முடிந்து விடுகிறது.
சிகிச்சைக்கு பின்பு 12 மாதங்களில் நோய் முற்றிலும் குணமாகி விடுகிறது.
தற்போது உள்ள அறுவை சிகிச்சை அல்லது ரேடியோதெரப்பி முறையில் பாதி
பேருக்கு மட்டுமே நோய் குணமாவது குறிப்பிடத்தக்கது. |
| பல்
சிகிச்சைக்காக அடிக்கடி எக்ஸ்-ரே பரிசோதனை செய்வது ஆபத்து: ஆய்வில்
தகவல் |
அமெரிக்காவில்
யேல் பல்கலை கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பல் சிகிச்சை மேற்கொள்பவர்கள்
குறித்து ஆய்வு நடத்தினர். அதில், பல் சிகிச்சைக்காக அடிக்கடி எக்ஸ்-ரே
பரிசோதனை செய்து கொள்வத்து ஆபத்து என தெரிவித்துள்ளது. இதனால் மெனிங்கியோமா
எனப்படும் மூளையில் புற்று கட்டி ஏற்படும் வாய்ப்பு மற்றவர்களை விட
5 மடங்கு அதிகம் காணப்படுவதாக கூறியுள்ளது. இந்த சோதனையின் போது,
வெளிப்படும் கதிரியக்க விளைவால் நோய் பாதிப்பு அதிகரிக்கும் தன்மையேற்படுவதாக
அவர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வு முடிவுகள் அமெரிக்க புற்றுநோய்
கழகத்தின் கேன்சர் செய்தி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. |
| வேதனை
தரும் பரிசோதனைகளுக்கு குட்பை: அதி நுட்ப பரிசோதனை அறிமுகம் |
| ஸ்பேஸ்
ஏஜ் வகையை சேர்ந்த அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வியாதிகளுக்கான
காரணங்களை கண்டறியும் வசதியை பெரும் பொருள் செலவில் இங்கிலாந்து
மருத்துவமனை ஒன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த மருத்துவமனையில் செவ்வாய்
கிரகத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலத்தில் இடம் பெற்றிருந்த உடல் பரிசோதனை
கருவிகள் உட்பட பல நவீன கருவிகள் உள்ளன. இனி, நோயாளிகளுக்கு வேதனை
தரும் பரிசோதனைகளுக்கு குட்பை சொல்லப்படும் என்று இந்த மருத்துவமனை
நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஸ்டார் ட்ரெக் விண்கலத்தில் விண்வெளி
வீரர்களின் உடல் நலத்தை கண்காணிக்க பயன்படுத்தப்பட்ட ட்ரை கார்டர்
ஸ்கேனர்களுக்கு இணையான கருவிகள் இதில் இடம் பெற்றுள்ளன. நோயாளிகளின்
பார்வை, நுகர்வு மற்றும் உணர்வுகளை மட்டுமே ஆய்ந்து வியாதிகளை இந்த
கருவிகள் கண்டுபிடித்துவிடும் திறன் பெற்றவை என்று கூறப்படுகிறது.
சாதாரண அமீபியாக்கள் காரணமான வயிற்று வலி முதல் கேன்சர் போன்ற கொடிய
வியாதிகள் வரை அனைத்துக்கும் இந்த கருவிகளை பயன்படுத்தலாம் என தெரிகிறது.
|
| மருந்தாக
பயன்படும் காட் மீன்கள் பற்றி சிறப்பு தகவல்கள் |
மனிதர்களுக்கு
விட்டமின் A, D மற்றும் E குறைவு ஏற்பட்டால் காட் லிவர் ஆயில்
தான் மருந்து. இந்த மருந்தை நமக்கு தருவது காட் என்னும் ஒருவகை
கடல் வாழ் மீனினம். இந்த மீன்களுக்கு பகைவர்கள் பாக்டீரியாக்கள்
மற்றும் ஒட்டுண்ணிகள். பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிகளிடமிருந்து
இவற்றை பாதுகாக்க இயற்கை காட்மீன்களுக்கு வழங்கியுள்ள பாதுகாப்பு
- MHC என்னும் ஒரு வகை அணுக்கள், MHC Class I ஜீன்கள் மற்றும்
MHC Class II ஜீன்கள்.
இது தவிர சேதமடைந்த செல்களும் இந்த மீன்களுக்கு ஆபத்தை விளைவிப்பவை.
எனவே, சேதமுற்ற செல்களை அழித்து அவற்றிலிருந்து மீன்களை பாதுகாக்க
சேதமடைந்த செல்கள் முதலில் அடையாளம் காணப்பட்டு பின்னர் அழிக்கப்படுகின்றன.
இது போன்ற செல்களை அடையாளம் காட்டுவது, MHC அணுக்களும் MHC Class
II ஜீன்களும் தான். இந்த MHC அணுக்கள் மீது MHC Class II ஜீன்கள்
சூழ்ந்து கொள்கின்றன. பின்னர் அவை சேதமடைந்த செல்கள் மீது சென்று
ஒட்டிக்கொண்டு, சேதமடைந்த செல்களை அடையாளம் காட்டுகின்றன.
இவ்வாறு அடையாளம் காட்டப்பட்ட சேதமடைந்த
செல்கள் பின்னர் அழிக்கப்படுகின்றன. ஆகவே, சேதமுற்ற செல்களை அழித்து
மீன்களை பாதுகாப்பதில் இந்த ஜீன்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
ஆனால் இந்த MHC Class II ஜீன்கள் இல்லாத காட் மீன்கள், அட்லாண்டிக்
கடல் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படியானால்
சேதமடைந்த செல்களை அடையாளம் காட்டும் பணியை செய்வது எது? அதிஷ்டவசமாக
இந்த வேலையை MHC Class I ஜீன்கள் செய்து வருகின்றன. இருப்பினும்,
MHC Class II ஜீன்களை உருவாக்க தேவையான வழிமுறைகளை கண்டுபிடிக்கவும்;
அது வரையிலும் மனிதர்களுக்கு தேவையான விட்டமின்கள் A, D மற்றும்
E ஆகியவற்றுக்கான மாற்று வழிகளை கண்டறியவும் விஞ்ஞானிகள் முயற்சிகள்
மேற்கொண்டு வருகின்றனர்.
|
| இந்திய
நறுமண பொருள்கள் புதிய சிகிச்சை முறைகள் உருவாக வழிவகுக்கும்: ஆய்வில்
தகவல் |
இந்திய
நறுமண பொருள்கள் மருத்துவ ரீதியாக எவ்வாறு பயன்படுகிறது என ஆய்வு
மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. நறுமண பொருள்களில் மஞ்சள்
பற்றிய ஆய்வில், குர்குமின் என்ற பொருள் அதற்கு மஞ்சள் நிறத்தை கொடுக்கிறது
என்றும் மேலும் டிரைகிளிசரைடு என்ற வேதி பொருளின் தாக்கத்தை வெகுவாக
குறைக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது. உடம்பில் எலும்பு மற்றும்
தசைப்பகுதிகளை இணைக்கும் டென்டன் என்னும் திசு வளர்ப்பில் குர்குமின்
செயல்பாடு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் இணைப்புகளில்
ஏற்படும் எரிச்சல் மற்றும் வலி ஆகியவை வெகுவாக குறைகின்றது. இதனால்
ஆர்த்ரிடிஸ், முடக்குவாதம் மேலும் புற்றுநோய் ஆகியவற்றிற்கும் புதிய
சிகிச்சை முறைகள் தோன்ற வழிவகுக்கும் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
பென் மாநிலத்தில்
நடைபெற்ற மற்றொரு ஆய்வில், நறுமண பொருள்களான ரோஸ்மேரி, ஆரிகேனோ,
இலவங்கம், மஞ்சள், கருமிளகு, கிராம்பு, வெள்ளை பூண்டு பொடி மற்றும்
பப்ரிகா ஆகியவை கலந்த உணவு ஒரு பிரிவினருக்கு பரிமாறப்பட்டது. மேலும்
மற்றொரு பிரிவினருக்கு நறுமண பொருள்கள் இல்லாத உணவு தரப்பட்டது.
இதில், நறுமண பொருள்கள் இரத்தத்தில் மேற்கொள்ளும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.
அதில், டிரைகிளிசரைடு செயல்பாடு 30 சதவீதம் குறைந்ததும், 13 சதவீதம்
ஆன்ட்டியாக்சிடன்ட் செயல்பாடு அதிகரித்ததும் மேலும் தேவையற்ற நிலையில்
இன்சுலின் பயன்பாடு 20 சதவீதம் குறைக்கப்பட்டதும் தெரிய வந்தது.
இவ்விரு ஆய்வுகளும் இந்திய நறுமண பொருள்கள், மருத்துவ குணங்கள் நிறைந்தவை
என்பதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. |
| மலேரியா
வியாதியை ஒழிக்க புதிய வழிமுறை கண்டுபிடிப்பு |
| மனிதர்களுக்கு
பூச்சிகளால் பரவும் வியாதிகளில் ஒன்று மலேரியா. இது அனாபிலிஸ் கேம்பியே
என்ற பெண் கொசுவால் உண்டாகிறது. இதனால் வருடத்திற்கு 8 லட்சம் பேர்
இறக்கின்றனர். இத்தகைய கொடிய வியாதிக்கு காரணமான கொசு உற்பத்தியை
ஒழிக்க லண்டன் நகரில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் ஒரு
பகுதியாக இனப்பெருக்க வளமற்ற 100 ஆண் கொசுக்கள் ஆய்வகத்தில் உற்பத்தி
செய்யப்பட்டு பின்னர் அவை பெண் கொசுக்களுடன் இனச்சேர்க்கைக்கு உட்படுத்தப்பட்டன.
அதில், பெண் கொசுக்கள் வழக்கம் போல் ஆண் கொசுக்களுடன் ஒன்று கூடின.
இந்த சோதனையில், பெண் கொசுக்கள் கருத்தரிக்க வாய்ப்பில்லை என்ற சூழ்நிலையில்
இது பற்றி எந்த உணர்வும் பெண் கொசுக்களிடம் இல்லை என்பது ஆய்வில்
தெரிய வந்துள்ளது. எனவே, இதனடிப்படையில் கொசுக்களின் இனவிருத்தியை
குறைத்து மலேரியா வியாதியை முற்றிலும் ஒழிப்பதற்கு இந்த ஆய்வு பயன்படும்
என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
|
| நரம்பு
மண்டலத்தை தாக்கும் கொடிய வியாதிக்கான 29 புதிய மரபணுக்கள் கண்டுபிடிப்பு
|
மனிதர்களில்
நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய வியாதி மல்டிபிள் ஸ்கிளிரோசிஸ்.
இந்த வியாதி, நரம்பிழைகளை சூழ்ந்து அதற்கு பாதுகாப்பு அளிக்கும்
மைலின் ஷீத் என்ற பாதுகாப்பு வளையத்தை தாக்கி நரம்பின் பணிகளை முடக்குகிறது.
இதனால் வழக்கமாக மேற்கொள்ளும் பணிகளான பார்த்தல், நடத்தல், எண்ணுதல்
மற்றும் பல்வேறு உறுப்புகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த வியாதியால் உலகம் முழுவதும் சுமார் 2.5 லட்சம் பேருக்கும் மேல்
அவதியுறுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், நோயால் பாதிக்கப்பட்ட
9,772 நபர்களின் 6 இலட்சம் மரபணு பகுதிகள் சோதனை செய்யப்பட்டன. பின்னர்
இவை ஆரோக்கியமான 17 ஆயிரம் பேரிடம் ஒப்பீடு செய்யப்பட்டன. இதில்,
முன்பு கண்டறியப்பட்ட 23 மரபணுக்களோடு மேலும் புதிதாக 29 மரபணுக்கள்
கண்டறியப்பட்டன. இவை நோய் எதிர்ப்பு சக்தியோடு தொடர்புடையவை. மரபணுவியலின்
புதிய பரிணாமமாக கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த
ஆராய்ச்சியின் முடிவானது, வருங்காலத்தில் நோய் உருவாவதை முற்றிலுமாக
தடுக்கவும் மற்றும் புதிய சிகிச்சை முறைகளும் ஏற்பட வழிவகுக்கும்
என தெரிய வருகிறது. |
| தூக்கம்
குறைவால் தாம்பத்ய வாழ்வில் பாதிப்பு ஏற்படும்: ஆய்வில் தகவல் |
| அமெரிக்க
மருத்துவ அமைப்பின் இதழொன்றில் தூக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு
முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், வாரம் முழுவதும் ஒரு நாளைக்கு
5 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவது, நீண்ட நாட்கள் குறைவான நேரமே
தூக்கம் மேற்கொள்வது ஆகியவற்றால் டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன் அளவு
குறைகிறது. இதனால் தாம்பத்யத்தில் ஆர்வம் குறைந்து போகிறது. மேலும்,
தசைகளில் தளர்ச்சி, வலுவிழந்த எலும்புகள், ஆற்றல் குறைந்து போதல்
மற்றும் கவனமின்மை ஆகியவை ஏற்படுகின்றன. மேலும், இதனால் வளர்சிதை
மாற்றத்தில் தாக்கம் ஏற்பட்டு இருதய வியாதிகள், ஸ்ட்ரோக் மற்றும்
டையாபடீஸ் 2 ஆகியவையும் ஏற்படுகின்றன என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
|
படுத்ததும்
தூக்கம் வர
என்ன செய்யலாம்: ஒரு ஆய்வின் தகவல் |
| படுத்ததும்
தூங்கிப்போகிறவர்களுக்கு அது ஒரு வரம். ஆனால், எல்லோருக்கும் இது
சாத்தியமில்லை. சிலருக்கு படுத்ததற்கு நீண்ட நேரத்திற்குப்பின்னரே
தூக்கம் வரும். அப்படியும் தூக்கம் வராதவர்கள் கெளண்டிங் ஷீப் செய்வதுண்டு.
அதாவது, எளிதில் தூக்கம் வராதவர்கள் ஒன்றிலிருந்து 100.... 200.....
300 வரை எண்ணத்துவங்குவார்கள். அப்படி எண்ணிக்கொண்டிருக்கும் போதே
தூக்கம் வந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை. இப்படி எண்ணுவதற்கு
கெளண்டிங் ஷீப் என்று பெயர். இங்கிலாந்துகாரர்களுக்கு தூக்கம் பிடிப்பதற்கு
குறைந்தது 37 நிமிடங்கள் ஆகிறது என்கிறது, இது குறித்த ஒரு ஆய்வு.
அதற்காக அவர்கள் மெல்லிசையை விரும்பி கேட்கிறார்களாம். இந்த மெல்லிசையை
கேட்டுக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவார்களாம். சுவாரசியமாக,
இயற்கையான சப்தங்களை கேட்டுக்கொண்டே தூங்க முயற்சிப்பவர்களும் இருக்கிறார்கள்.
உதாரணமாக கிரீச்சிடும் பறவைகளின் ஒலிகள். மெல்லிய காற்றின் இரைச்சல்,
நீரோடையின் சலசலப்பு போன்றவை தூக்கத்தை எளிதில் வரவழக்க பயன்படுபவையாக
இருக்கின்றன என்கிறது இந்த ஆய்வு. இவற்றுக்கெல்லாம் மேலாக, இருக்கவே
இருக்கிறது பழமையான ஒரு முறை. அது தான் புத்தகம் படிப்பது. இதுவும்
தூக்கத்தை வரவழைக்கிற விஷயங்களில் முக்கியமானது தான். துணையுடன்
பேசிக்கொண்டே தூங்கிபோகிறவர்களும் இருக்கிறார்கள். விசித்திரமாக,
கடிகாரத்தின் டிக் டிக் ஒசை, சாலையில் செல்லும் வாகனங்களின் சப்தம்,
வேக்குவம் க்ளீனர் மற்றும் ஹேர் ட்ரையரின் சப்தமும் தூக்கத்தை வரவழைக்கும்
விஷயங்களின் பட்டியலில் இடம் பெறுகின்றன. இவையத்தனைக்கும் வில்லனாக
இருப்பது பக்கத்தில் தூங்குபவரின் குறட்டை சத்தம் என்று ஆத்திரப்படுகிறார்கள்
உண்மையில் பாதிப்புக்குள்ளானவர்கள்.
|
| இங்கிலாந்தில்
பிரபலமாகும் புதிய வகை யோகா |
| ஜிம்னாஸ்டிக்
பயிற்சியாளர் கிறிஸ்டோபர் ஹாரிஸன் (வயது 50) என்பவர் தான் கண்டுபிடித்த
புவியீர்ப்பு விசைக்கெதிராக மேற்கொள்ளும் யோகா முறையை பிரபலப்படுத்தி
வருகிறார். தரையிலிருந்து சில அடிகள் உயரத்தில் தொட்டில் போன்ற அமைப்பில்
பயிற்சியாளர்கள் தொங்கி கொண்டு கைகளை விரித்து தலையை உயரே தூக்கிய
நிலையில் பயிற்சி மேற்கொள்கின்றனர். மற்றும் கூட்டுப்புழு போன்ற
பயிற்சியினையும் செய்கின்றனர். இங்கிலாந்தில் கடந்த 10 வருடங்களாக
இப்பயிற்சியினை கற்று தேர்ந்து தற்போது பலருக்கும் கற்று தரும் கிறிஸ்டோபர்
அயர்லாந்து, இத்தாலி மற்றும் அமெரிக்காவிலும் பயிற்சியினை விரிவுபடுத்த
இருக்கிறார்.
|
| உலகளவில்
அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவது இந்தியர்களே: உலக சுகாதார அமைப்பு |
|
உலக
சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வொன்றில் அதிக மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர்களில்
இந்தியர்களே அதிகம் என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஏறத்தாழ 18
நாடுகளை சேர்ந்த 89 ஆயிரம் பேரிடம் சுமார் 20 ஆராய்ச்சியாளர்கள்
ஆய்வு மேற்கொண்டனர். உலகளவில் மன அழுத்தத்திற்கு 12.1 கோடி பேர்
பாதிப்படைகின்றனர். இதில் இந்தியர்கள் மிக அதிக அளவாக 36 சதவீதம்
வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரிய வந்துள்ளது. மிக குறைவாக
சீனர்கள் (12 சதவீதம்) பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று பாதிப்படைவோரின்
சராசரி வயது இந்தியர்களுக்கு 31.9 ஆகவும், சீனர்களுக்கு 18.8 ஆகவும்
மற்றும் அமெரிக்கர்களுக்கு 22.7 ஆகவும் உள்ளது. இந்த பாதிப்பிற்கு
காரணமாக சோகம், மகிழ்ச்சியின்மை, குற்ற உணர்ச்சி அல்லது குறைந்த
சுய மதிப்பீடு, தூக்கம் பாதிப்பு, குறைந்த ஆற்றல் மற்றும் கவனக்குறைவு
ஆகியவை கூறப்படுகின்றன. மேலும், கணவன் இறந்து போதல் அல்லது விவாகரத்து
போன்ற காரணங்களால் பெண்களிடம் பாதிப்பின் தன்மை இரு மடங்காக காணப்படுகிறது.
இதனால் 15 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களின் வாழ்நாள் குறைவதாகவும்
ஆய்வில் தெரிய வந்துள்ளது.
|
| ஆரோக்கியத்துக்கும்
நல்ல தோற்றத்துக்கும் காரட் சாப்பிடுங்கள் |
பிரிட்டனின்
பிரிஸ்டால் பல்கலை கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு ஒன்றில் மனிதர்களின்
தோல் நிறத்திற்கும் அவர்கள் தோற்றத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு
நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நல்ல மஞ்சள் நிறமாக இருப்பவர்கள்
ஆரோக்கியமாகவும் நல்ல தோற்றத்துடனும் இருப்பதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
'கேராடெனாய்டுகள்' அடங்கிய பழங்கள், காய்கறிகள் குறிப்பாக கேரட்டுகள்
ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நல்ல பலன் தர சுமார் இரண்டு மாதங்களாகலாம் என மேலும் கூறப்படுகிறது.
மேலும், இருதய நோய் வருவதையும் இது தவிர்க்குமாம். |
| நகர
வாழ்க்கை, மூளையை பாதிக்கிறது: ஆய்வில்
தகவல் |
|
கிராமப்புறத்தில்
வாழும் மனிதர்களை விட நகர்ப்புறத்தில்
வசிக்கும் மனிதர்கள் அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாவதாக ஆய்வொன்று
தெரிவிக்கிறது. நகர்புறத்தில் காணப்படும் வேறுபட்ட சமூக அமைப்பு,
அதிக சப்தம் மற்றும் மக்கள் நெருக்கடி ஆகியவை காரணமாக மூளையின் அதிக
உணர்வு மிக்கதான மற்றும் மனஅழுத்தத்துடன் தொடர்பு கொண்ட அமைக்டலா
என்ற பகுதி அதிகமாக செயல்படுவது தெரிய வந்துள்ளது. மேலும், உணர்ச்சிகளை
கட்டுப்படுத்தும் பகுதியாகவும், சுற்றுப்புறத்தோடு
தொடர்பு கொண்டதாகவும் விளங்கும் மூளையின் மற்றொரு பகுதியான சிங்குலேட்
கார்டெக்ஸ், நகர்ப்புறத்தில் பிறந்தவர்களிடம்
தேவையற்ற வகையில் அதிகமாக செயல்படுவதும் ஆய்விலிருந்து தெரிய வருகிறது.
வரும் 2050-ம் ஆண்டிற்குள் ஏறக்குறைய 70 சதம் பேர் நகர்ப்புற
வாழ்க்கைக்கு வந்து விடுவர் என கூறப்படுவதால் ஒழுங்கற்ற மனநிலை,
எதிலும் அதிக ஆர்வமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க சிறந்த
மனநலத்துடன் வாழ்வதற்கு ஏற்ப நகர்ப்புறங்களை
தற்போதிருந்தே வடிவமைத்து அதற்கேற்ற வகையில் வாழ்க்கை முறையினை அமைத்து
கொள்வது நலம் தரும் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
|
| குழந்தை
இறப்பை தவிர்க்க கர்ப்பிணி பெண்களுக்கு நிபுணர்கள் அறிவுரை |
பொதுவாக
கர்ப்பிணி தாய்மார்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் நடந்து கொள்ளும்
முறையை பொறுத்து குழந்தை பிறப்பு எளிதாக நிகழ்கிறது. எனினும், சில
சமயங்களில் கருவில் இருக்கும் குழந்தை, பிறப்பதற்கு முன்பே இறந்து
விடும் சூழல் ஏற்படுகிறது. இதனை ஸ்டில்&பெர்த் என்றழைக்கின்றனர்.
இதற்கு பெண்களின் உடல் எடை அதிகரித்தல், அதிக வயதில் தாய்மையடைதல்
மற்றும் தொப்புள் கொடியின் நிலை ஆகியவை காரணமாக கூறப்பட்டாலும் தாய்மார்கள்
படுக்கும் விதமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என நியூசிலாந்து
நாட்டின் ஆக்லாந்து பல்கலைகழக ஆய்வொன்று தெரிவிக்கிறது. கர்ப்பிணிகள்
வலது புறம் படுப்பதால் குழந்தை இறப்பு விகிதம் இரு மடங்காகிற அதே
வேளையில், இடது புறம் படுத்துறங்குவதால் 1000க்கு 4 என்ற அளவிலேயே
இறப்பு விகிதம் ஏற்படுகிறது. இடது புறம் படுப்பதால் தாயின் இரத்த
நாளங்கள் சீராக இருப்பதுடன் குழந்தைக்கும் தாய்க்குமிடையேயான இரத்த
ஓட்டம் சீராக அமைவதும் தெரிய வந்துள்ளது. உலகில் இங்கிலாந்து நாட்டில்
தான் அதிகமாக குழந்தைகள் இறப்பு விகிதம்(ஸ்டில்&பெர்த்) காணப்படுகிறது.
அங்கு வருடத்திற்கு 4,000 குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே இறந்து
விடுகின்றன. மேலும் 3ல் 1 பங்கு குழந்தைகள் இறப்பதற்கான மிக சரியான
காரணம் என்னவென்று தெரியவில்லை என்பது வருத்தத்திற்குரிய விசயம்.
இதனை தடுப்பதற்காக தூங்கும் முறையில் மேற்கொண்டு ஆராய்ச்சிகள் தொடர்ந்து
நடைபெற்று வருகின்றன.
|
| ஹிப்னாடிசம்
முறையில் எளிதாகும் அறுவை சிகிச்சை |
|
பெல்ஜியம்
நாட்டிலுள்ள கத்தோலிக் டி லூவெய்ன் என்ற பல்கலைகழகத்தின் பேராசிரியர்
பேபியன் ரோயெலன்ட்ஸ் என்பவர் மார்பக புற்றுநோய் மற்றும் தைராய்டு
சுரப்பி அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு ஹிப்னாடிசம் முறையை
பயன்படுத்துவதால் அதிக பலன் கிடைப்பதாக தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.
அவரது ஆய்வில், மேற்குறிப்பிட்ட நோயாளிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு
அவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு முன்பு ஹிப்னாடிசம் முறையோடு கூடிய
அனஸ்தீசியா கொடுக்கப்பட்டது. இதில், சிகிச்சைக்கு உள்ளானவர்கள் மற்ற
சாதாரண நோயாளிகளை காட்டிலும் அதிவிரைவில் குணமடைந்து வீட்டிற்கு
திரும்பினர். மேலும் அவர்களுக்கு வலி மிக குறைவாக இருந்ததும் மற்றும்
புற்று கட்டிகள் பிற இடங்களுக்கு பரவாமல் இருப்பதும் இச்சிகிச்சை
முறையின் பெரும்பயனாக அமைவதாக ஆய்வு முடிவில் ரோயெலன்ட்ஸ் தெரிவிக்கிறார்.
இம்முறையினால் கண், காது, மூக்கு, தொண்டை, மூட்டு, வயிறு இறக்கம்
போன்ற அறுவை சிகிச்சைகளும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் பெண்களின்
கரு முட்டையை நீக்கி மேற்கொள்ளப்படும் ஐ.வி.எப். சிகிச்சை முறை ஆகியவை
மிக எளிதாக அமையும் என அவர் தெரிவித்தார்.
|
| பெண்களின்
மார்பக புற்றுநோய்க்கு காரணமான ஜீன் கண்டுபிடிப்பு |
மார்பக
புற்றுநோய் பெரும்பாலும் பெண்களையே தாக்குகிறது. இந்தியாவில் மும்பை,
சென்னை மற்றும் டில்லி போன்ற பெருநகரங்களில் இப்புற்றுநோயின் தாக்கம்
அதிகம் காணப்படுகிறது. இந்தியா மற்றும் அமெரிக்க நாட்டு பெண்களில்
முறையே 22ல் 1 மற்றும் 8ல் 1 என்ற விகிதத்தில் மார்பக புற்றுநோய்
காணப்படுகிறது. இங்கிலாந்து நாட்டில் வருடத்திற்கு 36 ஆயிரம் பேர்
இவ்வியாதியால் பாதிப்பு அடைகின்றனர். தற்போது, லண்டனில் அமைந்துள்ள
மார்பக புற்றுநோய் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் மனித மரபணு பற்றிய
ஆய்வில் ஒரு குறிப்பிட்ட ஜீன் புற்று கட்டிகளை உருவாக்குகிறது என
கண்டறிந்தனர். அந்த ஆய்வில், அவர்கள் கண்டறிந்த சி6ஓஆர்எப்96, சி6ஓஆர்எப்97
மற்றும் சி6ஓஆர்எப்211 ஆகிய ஜீன்களில் சி6ஓஆர்எப்211 என்ற ஜீன் புற்றுகட்டிகளை
வளர செய்வதாக தெரிய வந்துள்ளது. சி6ஓஆர்எப்97 என்ற ஜீன் ஈஸ்ட்ரோஜன்
என்ற ஹார்மோன் மீது மருந்தின் செயல்பாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளது.
மற்றொரு ஜீனான சி6ஓஆர்எப்96 என்ன செய்கிறதென ஆய்வாளர்களுக்கு தெரிய
வரவில்லை. இது குறித்து ஆய்வின் தலைவர் மிட்ச் டவ்செட் என்பவர் கூறும்போது,
தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இந்த ஜீன் புற்றுநோய் கட்டிகளில்
வேறு என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. அதன் மூலம் மார்பக புற்றுநோயிலிருந்து பெண்களை காப்பாற்றும்
வழிகள் கண்டறியப்படும் என்றார். தற்போது இந்த ஜீன் கண்டுபிடிப்பு
மருத்துவ உலகில் பெண்களின் முக்கியமான பிரச்சனையான மார்பக புற்றுநோய்
சிகிச்சைக்கு ஒரு திறவுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை. |
| உடல்
எடையை குறைக்கும் கோகோ நிறைந்த சாக்லேட்டுகள் |
ஆஸ்திரேலியாவின்
விக்டோரியா பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் லில்லி ஸ்டொஜநொவ்ஸ்கா
என்பவர் சாக்லேட் பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 75
முதல் 85 சதவீதம் கோகோ கலந்த அடர்ந்த கருப்பு நிறம் கொண்ட சாக்லேட்டுகள்
அதிகமாக உட்கொள்வது உடலுக்கு நன்மையை தருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சாக்லேட்டுகளில் எபிகாடெச்சின் என்ற ஆன்ட்டியாக்சிடண்ட் ரெட்
வொய்னை விட இரு மடங்கிற்கும் மேல் அதிகமாக காணப்படுகிறது. அது உடலில்
சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பினை கரைப்பதற்கு உதவுகிறது. மற்றும்
கோகோவில் உள்ள தியோபுரோமின் என்ற பொருள் உடலுக்கு ஆற்றல் தருவதிலும்,
தசை வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், இரத்த குழாய்களை விரிவடைய செய்வதிலும்
மற்றும் இரத்த அழுத்தத்தை குறைப்பதிலும் முக்கிய பணி வகிக்கிறது.
மிக முக்கியமாக கொலஸ்டிரால் அளவை குறைத்து ஸ்டிரோக் பாதிப்பையும்
தடுக்கிறது. கோகோவில் இயற்கையாக காணப்படும் பொருள்கள் மனஅழுத்தத்தை
குறைக்கும் வகையில் மூளைக்கு தேவையான வேதிபொருள்களை உடலானது உற்பத்தி
செய்ய துணைபுரிகிறது. குறிப்பாக உடல் எடை குறைப்பிலும், ஆரோக்கியத்திற்கும்
வழிவகை செய்கிறது. எனவே, சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என்ற வயது
வித்தியாசமின்றி அனைவரும் கருப்பு நிற
சாக்லேட்டுகளை விரும்பி சாப்பிடலாம் என லில்லி கருத்து
தெரிவித்துள்ளார். |
| பால்
அதிகமாக குடிப்பது பார்வைக்கு பலம் சேர்க்கும்: ஆய்வில் தகவல் |
அமெரிக்காவின்
நியூயார்க் நகரில் அமைந்துள்ள பவலோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஏமி
மில்லன் என்பவர் தலைமையில் வயது தொடர்பான பார்வை குறைபாடு (ஏ.எம்.டி.)
பற்றி ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. பெரும்பாலும் 50 வயதினை நெருங்கும்
பெண்களை பாதிக்கும் இக்குறைபாடு, சாதாரணமாக செய்யும் வேலைகளான வாசித்தல்,
வாகனம் ஓட்டுதல் மற்றும் தெரிந்தவர்களின் முகத்தை அடையாளம் காணுதல்
போன்றவற்றை கூட செய்ய இயலாத நிலைக்கு அவர்களை தள்ளி விடுகிறது. பிரிட்டனில்
வருடத்திற்கு ஏறத்தாழ 2 லட்சம் பேர் இக்குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர்.
சுமார் 1,313 பெண்களிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் டி வைட்டமின்
அதிகம் நிறைந்த உணவை உட்கொள்வோர் மற்றும் உடலில் டி வைட்டமின் அளவு
அதிகமாக உள்ளோர் ஆகியோரிடம் இக்குறைபாடு அதிகமாக காணப்படவில்லை என்பது
தெரிய வந்தது. குறிப்பாக பால் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட வெண்ணெய்
மற்றும் தானியம் ஆகியவற்றை அதிகம் எடுத்து கொள்வது நன்மை பயக்கிறது.
சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவதும் நன்மையையே தருகிறது. ஏனெனில்
வைட்டமின் டி உற்பத்தியில் தோல் முக்கிய பணியாற்றுகிறது. எனவே, பால்
மற்றும் அதிலிருந்து பெறப்படும் வெண்ணெய் போன்ற உணவு பொருள்களை பயன்படுத்துவது
இக்குறைபாட்டை தவிர்க்க பெரிதும் உதவுகிறது என அந்த ஆய்விலிருந்து
தெரிய வந்துள்ளது. மேலும், மீனில் இருந்து பெறப்படும் ஒமேகா 3 கொழுப்பு
அமிலங்கள் நிறைந்த உணவு பயன் தரும் என்பதும் முன்பு நடத்திய ஆய்வில்
தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |
| ஆரம்ப
நிலை புற்றுநோய்
வளர்ச்சியை தடுக்கும்
கேரட் மற்றும் உருளைக்கிழங்கு |
அமெரிக்காவின்
புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி
அமைப்பு வெளியிட்ட ஆய்வொன்றில் கேரட் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை
ஆரம்ப நிலையில் காணப்படும் மார்பக புற்றுநோயை தடுக்க கூடியது என
தெரிய வந்துள்ளது. இவற்றில் உள்ள வைட்டமின் 'ஏ' வழியே பெறப்படும்
ரெட்டினாய்க் அமிலம் ஆனது செல்களின் வளர்ச்சி, புதுப்பொலிவு மற்றும்
செல் பாதுகாப்பு ஆகியவற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி தோல் வனப்புடன்
இருப்பதற்கும் உதவுகிறது. மனிதனின் உடலில் உள்ள ஒரு குறிப்பிட்ட
ஜீன் ரெட்டினாய்க் அமிலத்தின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்கும்
பணியினை செய்கிறது. இதனால் ரெட்டினாய்க் அமிலம், ஆரம்ப நிலையில்
காணப்படும் புற்றுநோய் வளர்ச்சியை முற்றிலும் தடுத்து நிறுத்துகிறது
என அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. |
| நான்
ஸ்டிக் பொருட்களினால் பெண்களுக்கு பாதிப்பு |
இயற்கையான
உணவை அதிகம் எடுத்து கொள்ளும் போது அது உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
உணவில் இயற்கைக்கு மாறாக வேதி பொருள்கள் கலப்பு அதிகரிப்பால் அவை
பல்வேறு வியாதிகளை உடலில் ஏற்படுத்தி விடுகிறது. இது பற்றி வெஸ்ட்
விர்ஜினியா பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், நம்மை சுற்றி பி.எப்.சி. (பெர்புளுரோகார்பன்) என்ற வேதி பொருள்
அதிகம் காணப்படுகிறது. இது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருள்களுடன்
ஒட்டுவதில்லை. இந்த தன்மையினால் இவ்வேதிபொருள், நான்ஸ்டிக் குக்வேர்
போன்ற தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது..
இவ்வகை தயாரிப்புகள் அதிகமாக உபயோகிக்கப்படும் பொழுது தைராய்டு புற்றுநோய்,
நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. மேலும்
ஹார்மோன் சமச்சீர் நிலையும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் பெண்களுக்கு
ஏற்படும் மெனோபாஸ் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது.
பெண்களின் உடலில் பி.எப்.சி.யின் அளவு அதிகமாவதால் ஈஸ்ட்ரோஜன் என்ற
ஹார்மோனின் அளவு குறைந்து விடுகிறது. இதுவே மெனோபாஸ் பாதிப்பின்
முக்கிய காரணமாக விளங்குகிறது என ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது. |
| வயது
தொடர்பான பார்வை குறைபாட்டை குறைக்கும் மீன் உணவு
|
வயதாகும்
பொழுது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல வியாதிகள் தாக்கும்
அபாயம் உள்ளது. அதில் பார்வை குறைபாடும் அடங்கும். வயதாகும் காலத்தில்,
பார்ப்பதற்கு உதவும் ரெடினா எனப்படும் விழித்திரையின் ஒரு பகுதியான
மெகுலாவின் பெரும்பான்மையான செல்கள் இறந்து போகும் வாய்ப்பு உள்ளது.
இதனால் ஏற்படும் பார்வை குறைபாடு மருத்துவ உலகில் ஏ.எம்.டி. அதாவது
ஏஜ் ரிலேடட் மெகுலார் டீஜெனரேசன் என அழைக்கப்படுகிறது. இக்குறைபாடு,
பெரும்பாலும் 40 வயதை கடந்தவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. பிரிட்டனில்
இந்த வியாதியால் ஏறத்தாழ 5 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக ஹார்வர்டு மெடிகல் ஸ்கூலில் மருத்துவராக உள்ள வில்லியம்
கிறிஸ்டென் என்பவர் ஆய்வு ஒன்று மேற்கொண்டார். அந்த ஆய்வில், வாரத்திற்கு
இரு முறை என்ற அளவில், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்
உணவை எடுத்து கொள்வது பலன் தரும் என தெரிய வந்துள்ளது. |
| கர்ப்ப
காலத்தில் மேற்கொள்ளும் உணவு முறை குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சியை
பாதிக்கும் |
கர்ப்பிணிகளின் உணவு பழக்கத்தின் அடிப்படையிலேயே
அவர்களது குழந்தைகளின் எதிர்காலம் அமைகிறது. இது தொடர்பாக அமெரிக்காவின்
கேம்பிரிட்ஜ் நகரில் அமைந்துள்ள வளர்சிதை மாற்ற அறிவியல் அமைப்பின்
ஆராய்ச்சியாளர்கள் சூசன் ஓசேன் என்பவர் தலைமையில் ஆய்வு ஒன்று மேற்கொண்டனர்.
அந்த ஆய்வில் புரதம், வைட்டமின் நிறைந்த ஊட்டச்சத்து உணவுகளை கர்ப்ப
காலத்தில் மிக குறைவாக எடுத்து கொள்ளும் கர்ப்பிணிகளின் உடலில் ஹெச்.என்.எப்.4.ஏ.
என்ற மரபணுவின் செயல்திறன் குறைகிறது. இந்த மரபணு, கணையத்தில் இன்சுலின்
உற்பத்திக்கு தேவையான செல்களின் வளர்ச்சி பணியினை மேற்பார்வையிடுகிறது.
மேலும், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான குளுகோஸ் அளவினை கணையம் ஆனது
சரிசெய்யும் பணியினையும் இந்த மரபணு கண்காணித்து வருகிறது. ஆகையால்,
குறைவான ஊட்டச்சத்து எடுத்து கொள்வதால் ஏற்படும் மரபணு செயல்திறன்
குறைபாடு, கர்ப்பத்தில் வளரும் சிசுவின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கிறது.
பிற்காலத்தில் குழந்தை வளரும் போது நீரிழிவு
மற்றும் இதயம் தொடர்பான வியாதிகள் ஏற்பட வழிவகுக்கிறது என அந்த ஆய்வு
தெரிவிக்கிறது. இந்த ஆய்விற்காக ஆராய்ச்சியாளர்கள் எலிகளை பயன்படுத்தியுள்ளனர்.
ஏறக்குறைய மனிதனுடன் ஒத்து போகும் மரபணு பண்புகளை கொண்டிருக்கும்
எலிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முடிவு மனிதனுக்கும் பொருந்தும்
என அவர்கள் தெரிவித்தனர். எனினும், இதனால் நீரிழிவு வியாதி வந்தே
தீரும் என்ற பொருளில்லை. ஆனால் வியாதி வருவதற்கான ஆபத்து அதிகமுள்ளது
என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. முறையான உணவு பழக்கம் மற்றும் புகை
பிடித்தலை தவிர்த்தல் ஆகியவை இந்த வியாதி ஏற்படுவதற்கான காரணிகளை
குறைக்கிறது என்று ஓசேன் கூறுகிறார். |
| புரோஸ்டேட்
புற்றுநோய் பற்றிய ஆய்வில் கண்டறியப்பட்ட மரபணு குறைபாடு |
புற்றுநோய்களில்
ஒன்று புரோஸ்டேட் புற்றுநோய். இது ஆண்களுக்கு மட்டுமே வரும் வியாதி
ஆகும். அவர்களின் இனப்பெருக்க உறுப்புகளை ஒட்டி அமைந்துள்ள புரோஸ்டேட்
சுரப்பிகளில் ஏற்படும் கட்டிகளே நாளடைவில் புற்றுநோய் ஆக மாறுகிறது.
பெரும்பாலும் ஆரம்ப நிலையில் இதன் அறிகுறி தெரிவதில்லை. இந்த வியாதி
இங்கிலாந்தினரையே அதிகம் தாக்குகிறது. அவர்களில் வருடத்திற்கு சுமார்
35,000 பேர் இந்த புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 10,000
பேர் வரை இறக்கின்றனர். தற்போது, அமெரிக்காவில் அமைந்துள்ள ஹார்வர்டு
பல்கலைகழகத்தின் மருத்துவ படிப்பு மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்கள்
புரோஸ்டேட் புற்றுநோய் பற்றி தீவிரமாக ஆராய்ச்சி செய்தனர். ஆய்வின்
முதற்கட்டமாக புற்றுநோய் பாதிக்கப்பட்ட 7 பேர்களின் புற்றுகட்டிகளின்
மரபணுவை முழுவதும் பகுப்பாய்வு செய்தனர். பின்னர் அவை ஆரோக்கியமான
ஒருவரது மரபணுவுடன் ஒப்பீடு செய்யப்பட்டது. அப்பொழுது புற்றுநோய்
பாதிப்பு கண்ட மரபணுவின் குறியீடுகளில் ஏறத்தாழ 5,900 எழுத்து பிழைகள்
காணப்பட்டன. எனினும் இந்த பிழைகள் நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோய்
ஆகியவற்றில் காணப்படுவதை காட்டிலும் மிக குறைவே ஆகும். மேலும் மரபணுவின்
பெரும்பான்மையான பகுதிகள் ஒழுங்கற்ற நிலையில் உள்ளதும் ஆய்வில் கண்டறியப்பட்டது.
இது தொடர்பான ஆய்வுகள் புற்றுநோய்க்கு மேற்கொள்ளப்படும் ரேடியோதெரபி
மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாக ஒரு எளிய தீர்வினை
தரும் என கருதப்படுகிறது.
|
| வாரத்திற்கு
5 சோப்பு கட்டிகளை உண்ணும் நர்சிங் மாணவி |
அமெரிக்காவின்,
புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் டெம்பஸ்ட் ஹென்டர்சன் (வயது 19).
கல்லூரியில் நர்சிங் படிப்பு படித்து வரும் இவரிடம் ஒரு விநோத பழக்கம்
உள்ளது. அதாவது வாரத்திற்கு 5 சோப்பு கட்டிகளையும் மற்றும் டிடர்ஜென்டுகளையும்
சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதுபற்றி மருத்துவர்கள்
கூறும்போது, ஒரு வகை ஊட்டசத்து குறைவே இதற்கு காரணம். இந்த குறைபாடு
உள்ளவர்கள் பொதுவாக உலோகம், நாணயங்கள், சுண்ணாம்பு கட்டி, பேட்டரிகள்
மற்றும் டூத் பிரஷ்களை கூட தின்பவர்களாக இருப்பார்கள். கர்ப்ப காலங்களில்
இரும்பு சத்து பற்றாக்குறையால் கர்ப்பிணிகள் நிலக்கரியினை உண்பதும்
இதனால் தான் என தெரிவித்தனர். தற்போது இந்த குறைபாட்டிற்கு மருத்துவரிடம்
சிகிச்சை பெற்று வரும் டெம்பஸ்ட் குளியல் அறையில் சோப்பு கட்டிகள்
மற்றும் டிடர்ஜென்டுகள் பயன்படுத்துவதை தவிர்க்கிறார். அவற்றுக்கு
பதிலாக திரவம் அடங்கிய பாட்டில்களை பயன்படுத்துகிறார். படிப்படியாக
இந்த பழக்கத்தில் இருந்து மீண்டு வரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார். |
| நான்
ரெடி நீங்க ரெடியா என கட்டை விரலை உயர்த்திகாட்டும் வயிற்றில் உள்ள
சிசு |
இங்கிலாந்து
நாட்டை சேர்ந்தவர் டொன்னா சேயர் (வயது 29) இவரது கணவர் சீமன் பிஸ்கோ
டொன்னா சேயர் கர்ப்பமாக இருந்ததை தொடர்ந்து மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு
சென்றார் . அங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கபட்டது ஸ்கேனில் வளரும்
சிசுவை பர்ஹ்த போது தன் தலை மிகவும் சிறியதாகவும் வளர்ச்சியுறாத
நிலையிலும் காணப்பட்டது அதற்கு டாகட்ரகள் தேவையான மருந்துகளையும்
மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினர். சின வாரங்கள் கழித்து மீண்டும்
டொன்னா பரிசோதனைக்கு சென்ற போது அதே நிலைமையே மிண்டும் நீடித்தது
இதனால் தம்பதியனர் மிகவும் வருத்தம் அடைந்தனர். இந்த நிலையில் சமிப்பஹ்தில்
டொன்னாÖய் பரிசோதனைக்கு சென்றார். ஸ்கேன் எடுத்து பார்த்த போது அவரது
வயிற்றில் வளரும் அதில் 6 மாதமான அந்த பிஞ்சுக்குழந்தையின் வளர்ச்சி
குறிப்பிடதக்க முன்னேற்ரம் அடைந்து இருந்தது மேலும் அந்த சிசுவின்
கட்டை விரல் உயர்த்திக்காட்டியப்படி வெற்றியின் அடையாள சின்னமாக
இருந்தது ஸ்கேன் படத்தில் தெரியவந்தது. இதை பார்த்த டாகடர்களும்
பெற்றோர்களும் ஆச்சரியம் அடைந்தனர். நான் ரெடி நீங்க ரெடியா என்பது
போல் அந்த குழந்தை கட்டைவிரலை உயர்த்தி இருந்தது. |
| உடற்பயிற்சி
செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும் |
| உடற்பயிற்சி
செய்வது உடலை சீராக வைத்து கொள்வதற்கு உதவும். தற்போது உடற்பயிற்சி
செய்வதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்றும், அல்சீமர்ஸ் மற்றும்
டிமென்சியா ஆகிய வியாதிகள் குறையும் வாய்ப்பு ஏற்படுகிறது என்றும்
ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக அமெரிக்காவின்
பிட்ஸ்பர்க் பல்கலை கழக பேராசிரியர் கிர்க் எரிக்சன் தலைமையிலான
ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு நடத்தினர். ஆய்வுக்கு 50 முதல் 80 வயது
வரை நிரம்பிய 120 பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்கள் தினமும் 40 நிமிடங்கள்
என வாரத்திற்கு 3 நாட்கள் நடக்க வேண்டும். அல்லது எளிய வகை உடற்பயிற்சி
மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். பயிற்சிக்கு முன்பும்,
பயிற்சியின் முடிவிலும் அவர்களின் மூளைப்பகுதி ஸ்கேன் செய்து வைத்து
கொள்ளப்பட்டன. இதில் நினைவாற்றலை அதிகரிக்கும் மூளையின் முக்கிய
பகுதியான ஹிப்போகேம்பஸின் அளவு நன்கு கவனிக்கப்பட்டன. அதில் எளிய
உடற்பயிற்சி செய்தவர்களின் மூளையில் ஹிப்போகேம்பஸ் 1.5 சதவீதம் அளவு
சுருங்கி காணப்பட்டது. அது வழக்கமான ஒன்று என அறிவிக்கப்பட்டது.
அதே வேளையில் நடை பயிற்சி மேற்கொண்டவர்களின் மூளையில் ஹிப்போகேம்பஸ்
அளவு முன்பை காட்டிலும் பெரிதாக (2 சதவீதம்) வளர்ந்திருந்தது கண்டறியப்பட்டது.
இதிலிருந்து வயது முதிர்ந்தவர்கள் ஆனாலும் முறையான உணவு மற்றும்
சரியான அளவில் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம் என தெரிய வந்துள்ளது.
பிறகென்ன செய்யுங்க செஞ்சுகிட்டே இருங்க உடற்பயிற்சியை!
|
| தூக்கம்
தேடும் விழிகள்: தூக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு |
தூக்கத்தை
தொலைத்து எதையெதையோ தேடி பெறுவதாகத்தான் அமைகிறது பலருக்கும் இந்த
வாழ்க்கை. பணம், பதவி, புகழ் என எல்லாம் இருந்தும் என்ன விலை கொடுத்தும்
வாங்க முடியாததாக தூக்கம் சிலருக்கு கண்களுக்கெட்டாத தூரத்திற்கு
போய்விடுவதும் உண்டு. எது எப்படியோ ஒரு முழு நாளைய சோர்வின் மிச்சங்களை
சலவை செய்யும் ஓர் உன்னதமான செயல் தூக்கம் என்பதை யாரும் மறுக்க
முடியாது. தூக்கம் என்பது நாள் முழுவதும் நாம் செலவிட்ட ஆற்றலை மீட்டெடுக்கும்
நிலை. தூக்கம் முறையாக இல்லை என்றால் உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம்,
இதய நோயகள், மூளை தொடர்ப்பன குறைபாடுகள் என பல்வேறு நோய்களுக்கு
நாம் ஆளாக வேண்டி இருக்கும். இது தொடர்பாக, மனநல ஆரோக்கிய அமைப்பை
சேர்ந்த மருத்துவர் ஆன்ட்ரூ மேக்கல்லோச் கூறும்போது, உடற்பயிற்சி
மற்றும் சரிவிகித உணவு ஆகியவற்றுக்கு போதுமான முக்கியத்துவம் தரும்
நம்மில் பலர் உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றில் முக்கிய பங்கு
வகிக்கும் தூக்கத்தில் அக்கறை செலுத்துவதில்லை. இதனால் நமக்கு ஏற்படும்
பெரும்பாலான பிரச்சனைகள் தூக்கம் தொடர்பானவையாகவே அமைந்துவிடுகிறது
என கூறினார். மேலும் இவ்வமைப்பினர் தூக்கம் குறித்து சுமார் 5,300
பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 39 சதவீதம் பேர் மட்டுமே நல்ல
முறையில் தூங்குவதாக தெரியவந்துள்ளது. எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்
என்பதைக் குறித்தெல்லாம் தெளிவான வரைமுறை இல்லை. ஐந்து மணி நேரம்,
எட்டு மணி நேரம் என சரியான தூக்க அளவுகளாக பல்வேறு நேரங்களைக் குறிப்பிடுகின்றனர்.
உண்மையில் மறு நாள் காலையில் எழுகையில் சுறுசுறுப்பாய் இருக்க முடிந்தால்
அதுவே சரியான அளவு தூக்கம்.
|
| ஸ்டிரோக்
பாதிப்புக்கு நவீன சிகிச்சை முறை |
நம்முடைய
உடலில் இரத்த ஓட்டம் எப்போதும் சீராக இருக்க வேண்டும். இந்த போக்குவரத்தில்
ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உடலில் பல வியாதிகள் ஏற்படும். குறிப்பாக
மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும் போது அது ஸ்டிரோக் என்ற
பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பாதிக்கப்பட்டோர் இறந்து விடவும்
வாய்ப்புண்டு. இதற்கு மருத்துவ உலகில் சிகிச்சை முறைகள் உள்ளன. எனினும்,
தற்போது ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் பல்கலை கழகத்தை சேர்ந்த
மருத்துவர்கள் ஸ்டிரோக் பாதிப்பு கண்டவர்களை பழைய நிலைக்கு திரும்ப
கொண்டு வர ஒரு சிகிச்சை முறையை கண்டறிந்துள்ளனர். அதன்படி, பாதிக்கப்பட்டவர்கள்
இயல்பான வெப்பநிலையில் இருந்து 35 டிகிரி சென்டிகிரேடு அளவிற்கு
குளிர்விக்கப்படுகிறார்கள். செயற்கையான இத்தகைய குளிர்விப்பு முறையால்
உடலின் வெப்பம் குறைகிறது. இரத்த ஓட்டத்தின் வேகமும் குறைகிறது.
அதனால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தநாள அடைப்பை சிகிச்சை செய்வது
எளிதாகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த சிகிச்சை முறைக்கு
ஹைபோதெர்மியா என பெயரிட்டுள்ளனர். இந்த ஆய்வு குழுவின் தலைவர், மருத்துவர்
மால்கோம் மேக்லியாடு கூறுகையில், வருடந்தோறும் ஐரோப்பியர்களில் 1000
பேர் வரை ஸ்டிரோக் பாதிப்பால் இறக்கிறார்கள். பிழைக்கும் 2000 பேர்
தொடர்ந்து பாதிப்பில் இருக்கிறார்கள். இந்த ஹைபோதெர்மியா சிகிச்சை
முறையால் வருடத்திற்கு 40,000 பேர் வரை சிறிது சிறிதாக முன்னேற்றம்
காண்பார்கள் என தான் நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவித்தார். 24.1.2011
|
| தாம்பத்யத்திற்கு
தடா ஏன் ? வாழ்க்கையை வளமாக்குங்கள் |
ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதத்தில் சுகம் காண்பதுண்டு. சிலருக்கு யாரிடமாவது பேசி
கொண்டிருக்க வேண்டும். சிலருக்கு எப்போதும் தொந்தரவு இல்லாத தூக்கம்
வேண்டும். சிலருக்கு தங்களது அன்பானவர்களின் நெருக்கம் தொடர்ந்து
நீடிக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் சுகம்
காண்கின்றனர். இதில் தாம்பத்ய சுகமும் ஒன்று. மேலும் |
| குழந்தைகளுக்கு
6 மாதங்கள் முழுவதும் பாலூட்டுவது தீங்கு தரும்: ஆய்வில் தகவல் |
| பிறந்த
குழந்தைகளுக்கு சிறந்த உணவு தாய் பால். உணவை, மென்று தின்பதற்கு
பற்கள் முளைக்காத காரணத்தினால் பச்சிளம் குழந்தைகள் திரவ நிலையிலேயே
எடுத்து கொள்ள இயலும். அதற்கு இயற்கையாக கிடைக்க கூடியதும், ஆரோக்கியம்
நிறைந்ததும் மற்றும் எவ்வித தீங்கு விளைவிக்காததுமான தாய் பாலே சிறந்த
உணவாக அமையும். இதனை உலக சுகாதார அமைப்பு ஆனது கடந்த 2001-ஆம் ஆண்டு
பரிந்துரைத்தது. மேலும் 2003ல் இங்கிலாந்தின் தொழிலாளர் அமைச்சர்
ஹேசல் பிளியர்ஸ் இதனை ஏற்று கொண்டார். ஆனால் தற்போது இங்கிலாந்து
மருத்துவ குழுவினை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர்கள் பலர் பிறந்த
குழந்தைகள் தொடர்ந்து 6 மாதங்கள் வரை திட பொருள்கள் இன்றி வெறும்
தாய் பால் மட்டும் உணவாக எடுத்து கொண்டால் அது ஆபத்து தரும் என கூறியுள்ளனர்.
அவர்கள் கூற்றுப்படி, தொடர்ந்து 6 மாதங்கள் வரை திட உணவு ஏதும் இன்றி
திரவ உணவான தாய் பால் மட்டும் எடுத்து கொள்வதால் உடலில் போதிய இரும்பு
சத்து கிடைக்காமல் போக வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் போதிய மூளை
வளர்ச்சி இல்லாத நிலை, மனநலம் தொடர்பான வியாதிகள் போன்றவை ஏற்பட
வாய்ப்பு ஏற்படுகிறது என அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வளரும்
போது உணவின் மீது ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படவும், எதிர்ப்பு சக்தி குறைந்து
வேறு நோய் தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
எனினும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு திட உணவு கொடுப்பதற்கு
முன்பு நல்ல மருத்துவரை கலந்தாலோசித்து பின்னர் செயல்படுத்துவது
நன்று என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 17.1.2011
|
| குழந்தைகளுக்கு
ஏற்படும் பாதிப்பை தடுக்க நீரில் புளூரைடு அளவை குறைக்க அமெரிக்கா
திட்டம் |
| மனிதனின்
செரிமானத்தில் பற்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. அவை அழகாகவும்,
ஆரோக்கியமானதாகவும் இருப்பது அவசியம். அமெரிக்க நாட்டில் குடிமக்களின்
நன்மைக்காக அங்குள்ள தண்ணீரில் புளூரைடு கலக்கப்படுகிறது. இதனால்
பற்களுக்கு கிருமி தாக்குதல், நோய் தொற்று போன்ற அபாயம் நீங்குகிறது.
இதற்காக கடந்த 1945&ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு
மற்றும் தடுப்பு மையம் நீரில் புளூரைடு அளவை கவனித்து வருகிறது.
இதனால் ஏறத்தாழ 19.5 கோடி அமெரிக்க மக்கள் பற்களில் பாதிப்பில்லாமல்
வாழ்ந்து வருகின்றனர். தற்போது ஒரு லிட்டர் தண்ணீரில் 4 மி.லி. கிராம்
அளவிற்கு புளூரைடு சேர்க்கப்படுகிறது. மேலும் பற்பசை, பற்பொடி போன்றவற்றில்
அதிகளவு புளூரைடு கலந்த தயாரிப்புகள் வெளிவருகின்றன. இது 8 வயது
நிரம்பிய குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்துகிறது. எனவே தண்ணீரில்
உள்ள புளூரைடு அளவை 0.7 மி.லி. கிராம் முதல் 1.2 மி.லி. கிராம் அளவிற்கு
குறைக்க அமெரிக்க சுற்றுசூழல் பாதுகாப்பு மையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான புளூரைடு கலப்பால் பற்களில் எனாமல் பாதித்தல் மற்றும்
பற்களில் வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட ஏதுவாகிறது. ஆகவே இது குறித்து
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் முடிவெடுக்க உள்ளது
குறிப்பிடத்தக்கது. 10.1.2011
|
| முக
எலும்புகளின் அமைப்பை வைத்து வயதை கண்டறிய முடியும்: ஆய்வில் தகவல்
|
ஒருவரை
வயதானவர் என அறிய அவரது தோல் சுருக்கமே அடையாளம் காட்டி விடும்.
எனினும் தற்போது ஒருவரின் முகத்திலுள்ள எலும்புகளின் அமைப்பை வைத்தே
அவரது வயதை கணக்கிட இயலும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது பற்றி அறிவியலாளர்கள் பல்வேறு ஆண்கள் மற்றும் பெண்களை சி.டி.
ஸ்கேன் கொண்டு சோதனை செய்துள்ளனர். அதில் ஒவ்வொரு வயதினருக்கும்
அவர்களுடைய முகத்தின் எலும்புகளின் கட்டமைப்பு மாறுபடுவதை அவர்கள்
கண்டனர். மேலும் ரோசெஸ்டர் மருத்துவ பல்கலை கழகத்தில் பிளாஸ்டிக்
மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை பிரிவின் தலைமை பிரிவு கண்காணிப்பாளரான
ஹோவர்டு லேங்ஸ்டீன் என்பவர் முகத்தில் உள்ள மென்மையான திசு படிப்படியாக
குறைந்து விடுதல் மற்றும் முகத்தின் எலும்புகள் தனது இலகு தன்மையை
இழந்து கடினமாக இருத்தல் ஆகியவை வயதை கண்டறிய மருத்துவர்களுக்கு
உதவும் விசயங்கள் என தன்னுடைய அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
6.1.2011 |
| தூக்கத்தில்
மூச்சு நின்று போவதை தடுக்கும் நவீன கருவி |
தூக்கத்தில்
சிலருக்கு மூச்சு விடுவது தற்காலிகமாக நின்று விடும் வாய்ப்பு ஏற்படுகிறது.
இது சில சமயங்களில் பல அபாய விளைவுகளை ஏற்படுத்தி விடும். இதனால்
உயர் இரத்த அழுத்தம், இருதய நோய், ஒழுங்கற்ற இதய துடிப்பு மற்றும்
நீரிழிவு போன்ற வியாதிகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஸ்லீப் அப்னீ
என்று மருத்துவர்களால் அழைக்கப்படும் இந்த வியாதி தூக்கத்தின் போது
தொண்டையின் பின்புறம் அமைந்துள்ள மென்மையான திசு பாதிக்கப்படுவதால்
மூச்சு குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. அதன் பின்னர் தூக்கத்தில்
இருப்பவரின் மூளை விழித்து கொள்கிறது. மேலும் அவர் மூச்சு விடுவதற்காக
மிகவும் சிரமப்பட்டு, மூச்சினை இழுத்து விடுகிறார். இந்த நிலை சுழற்சி
முறையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு 30 முறை கூட நிகழ்கிறது. குறிப்பாக
இந்த தூக்கத்தில் ஏற்படும் தற்காலிக மூச்சு நிறுத்தம் 1.2 கோடி அமெரிக்கர்களை
பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இது பற்றி அமெரிக்காவின் சான் டீகோ
நகரில் அமைந்துள்ள கலிபோர்னிய பல்கலைகழகத்தை சேர்ந்த டாம்போர் மற்றும்
அவரது குழுவினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதில் 40 வயதிற்கு மேற்பட்ட
59 பேர் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். அவர்கள் தூங்கும் ஒவ்வொரு மணி
நேரத்திற்கும் குறைந்தது 10 முறை இந்த தற்காலிக அல்லது நிரந்தர மூச்சு
விடுவது முற்றிலும் நின்று விடும் நிலை காணப்பட்டது. அத்தகையோர்க்கு
சுவாசத்தை சீர்படுத்தி மூச்சு விடுவதில் உள்ள சிரமத்தை தவிர்க்கும்
சி.பி.ஏ.பி. என்ற கருவி பொருத்தப்பட்டது. அவர்கள் மூன்று வாரங்களுக்கு
பிறகு நல்ல முறையில் முன்னேற்றம் கண்டனர். மேலும் அவர்களது உடல்
பலமும் அதிகரித்து காணப்பட்டது ஆய்வில் தெரிய வந்தது. தற்போது அமெரிக்காவில்
இந்த சிகிச்சை முறை நன்கு முன்னேற்றம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
5.1.2011
|
பச்சை
காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல் |
உங்களுக்கு
பெண் குழந்தை வேண்டுமா-? அப்படியென்றால் தொடர்ந்து படிக்கவும். பெண்கள்
சாப்பிடும் உணவு வகைகளை பொறுத்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள்
ஆணா அல்லது பெண்ணா என நிர்ணயிக்கப்படுகிறது என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
இது பற்றி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் 80 சதவீதம் பேர்
பெருமளவில் பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். கர்ப்பம் அடைவதற்கு
சில வாரங்களுக்கு முன்பு கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகிய சத்துகள்
நிறைந்த பச்சை காய்கறிகளை தங்களது உணவில் எடுத்து கொண்ட பெண்கள்
பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதே வேளையில்
பொட்டாசியம் மற்றும் சோடியம் சத்துகள் நிறைந்த வாழைப்பழம் மற்றும்
உருளை கிழங்கு போன்றவற்றை உணவில் சேர்த்து கொண்டவர்களுக்கு ஆண் குழந்தைகள்
பிறக்கும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது என ஆய்வில் தெரிய வருகிறது. |
| குறைந்த
தூக்கம் மாணவர்களிடம் குற்ற எண்ணங்களை வளர்க்கிறது: ஆய்வில் தகவல்
|
குறைந்த
அளவு தூக்கம் உடைய மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபாடு கொண்டவர்களாக
உள்ளனர் என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இது தொடர்பாக அமெரிக்காவின்
நெப்ரஸ்கா பல்கலைகழகத்தை சேர்ந்த சமந்தா கிளின்கின்பியர்டு மற்றும்
சக ஆய்வாளர்கள் 14,382 மேல் நிலைப்பள்ளி மாணவர்களிடம் ஆய்வு நடத்தினர்.
அவர்களில் பாதி பேர் ஆண்கள் மற்றும் மீதி பேர் பெண்கள். மேலும் அவர்களில்
63.5 சதவீதத்தினர் வெள்ளை நிறத்தவர்கள். அந்த ஆய்வில், 8 முதல் 10
மணி நேரம் வரை தூக்கம் கொண்ட மாணவர்கள் சாதாரணமாக நடந்து கொள்கின்றனர்.
ஆனால் 7 மணி நேரம் மற்றும் அதற்கு குறைவாக தூக்கம் கொண்ட மாணவர்கள்
குற்ற செயல்களில் ஈடுபாடு நிறைந்தவர்களாக காணப்படுகின்றனர் என தெரிய
வந்துள்ளது. 3.1.2011 |
| சர்க்கரை
என்கிற ஓர் இனிய எதிரி |
போதை
பொருள் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் சுத்திகரிக்கப்பட்ட
சர்க்கரை அதற்கு இணையாக மனிதர்களிடம் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
இவற்றின் ஒரே வித்தியாசம் சர்க்கரை அங்கீகரிக்கப்பட்ட பொருளாக உள்ளது.
சர்க்கரை உடலில் அதிகமாக சேர்ந்து பின்னர் இன்சுலின் சுரப்பு பாதிப்பால்
சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. இந்த சர்க்கரை வியாதி 2000 ஆம் ஆண்டில்
உலகளவில் 17 கோடி பேரை பாதித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது
2030 ஆம் ஆண்டில் 36 கோடியை தொடும் என எச்சரிக்கப்படுகிறது. இதுவே
இந்தியாவில் 2000 ஆம் ஆண்டில் 3 கோடி பேர் சர்க்கரை வியாதியால் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும் 2030 ஆம் ஆண்டில் 8 கோடியை எட்டும் என்றும் கூறப்படுகிறது.
சராசரியாக ஒரு மனிதன் வருடம்  |
| குழந்தைகள்
டீன் ஏஜ் வயதை அடையும் போது கவனிக்க வேண்டியவை பெற்றோர்களுக்கு தகவல்
|
டீன்
ஏஜ் வயதை அடையும் ஆண் மற்றும் பெண் ஆகியோரின் பழக்க வழக்கங்கள் பற்றி
ஸ்பெயினில் அமைந்துள்ள பேஸ்க் கன்ட்ரி பல்கலைகழகத்தில் ஆய்வாளர்கள்
ஆராய்ச்சி ஒன்றை நடத்தினர். அந்த ஆரராய்ச்சியில் சிறுவயதினர் 13
வயது அடைவதற்கு முன்பாக தங்களது ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றி
பெற்றோர்களிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிய வந்துள்ளது.
இது பற்றி மார்தா அர்ரூ மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் 2,018
பேரிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். ஆய்வில் 13 முதல் 17 வயதினர்
மற்றும் 18 முதல் 26 வயதினர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களின்
வயது மற்றும் பாலினம் அடிப்படையில் ஆராயப்பட்ட அந்த ஆய்வில் ஆல்கஹால்
உட்கொள்ளல், புகையிலை பயன்பாடு, தவறான பாலியல் தொடர்புகள், போதை
பொருள் உபயோகம், போதிய ஆகாரமின்மை மற்றும் தேவையான உறக்கமின்மை ஆகியவை
அவர்களின் சுகாதாரத்தை பாதித்த விசயங்களாக கண்டறியப்பட்டன. அவற்றுள்,
இளம் வயதினர் 16 வயதை அடையும்போது தங்களது செயல்களில் மாற்றம் அடைகின்றனர்.
அவர்களின் பழக்க வழக்கங்கள் மாறுபடுகின்றன. அவர்களின் மன நலம் பற்றி
அறிந்து கொண்டு செயல்படுவதோடு அவர்களுக்கு தேவையான பணம் தொடர்பான
விசயங்களையும் பூர்த்தி செய்து கொடுத்தல் அத்தியாவசியமானது என்று
அவர் குறிப்பிடுகிறார். மேலும் நல்ல பண்பட்ட வாழ்க்கை முறையினை மேற்கொள்வோர்
அதிக சுய கவுரவத்தோடும், மனநலம் சார்ந்த செயல்பாடுகள் நன்றாகவும்,
மிக மகிழ்ச்சியாகவும் மற்றும் உடல் சார்ந்த விசயங்களில் ஆரோக்கியம்
கொண்டவர்களாகவும் விளங்குகின்றனர் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
1.1.2011
|
| தலைவலிக்கு
தேன் சிறந்த மருந்து: ஆய்வில் தகவல் |
பிரிட்டன்
நாட்டில் வேதியியல் பிரிவு அறிவியலாளர்கள் ஜான் எம்ஸ்லே என்ற அறிஞர்
தலைமையில் தேன் பற்றி சில ஆய்வுகள் மேற்கொண்டனர். அதில் அருமருந்தான
தேன் பல வழிகளில் மனிதனுக்கு பயன்படுவதை அவர்கள் கண்டறிந்தனர். தேனில்
பிரக்டோஸ் என்ற வேதிபொருள் உள்ளது. இது குடிபோதையில் உள்ளோருக்கு
ஏற்படும் தலைவலி, மூச்சு திணறல் மற்றும் வாந்தி வருதல் போன்ற உபாதையிலிருந்து
விடுதலையளிக்கிறது. ஆல்கஹால் உட்கொள்வோர் உடலில் அசிட்டால்டிஹைடு
என்ற வேதிபொருள் உற்பத்தி ஆகிறது. இதுதான் தலைவலி ஏற்படுவதற்கு காரணமாகிறது.
இதனை தேனில் உள்ள பிரக்டோஸ் என்ற வேதிபொருள் அசிட்டிக் அமிலமாக மாற்றுகிறது.
பின்னர் அது கார்பன் டை ஆக்சைடாக மாறி சுவாசத்தின் போது எளிதாக வெளியேறுகிறது.
அதனால் குடிபோதையால் தலைவலி என முணுமுணுப்பவர்கள் நேரடியாக தேனை
எடுத்து கொள்ளலாம். மேலும் பிரட் உடன் தேனை டோஸ்ட் செய்தும் சாப்பிடலாம்.
அது ஆல்கஹாலின் உப பொருளின் பாதிப்பையும் வெகுவாக குறைக்கிறது. மேலும்
ஜான் கூறும்போது, ஆல்கஹால் அளவு அதிகமாக காணப்படும் ஜின் போன்றவற்றை
உட்கொண்டால் தூங்க செல்வதற்கு முன் ஒரு கப் பால் குடித்தல் நன்மை
பயக்கும். பொதுவாக ஆல்கஹால் உடலிலுள்ள நீரின் அளவை குறைத்து விடும்
இயல்புடையது. அதனால் தூங்க செல்வதற்கு முன் ஒரு கப் நீர் அருந்திவிட்டு
படுக்க செல்வதும் நலம் தரும் என கூறுகிறார்.
25.12.2010
|
| குறட்டையை
தவிர்க்க சில வழிமுறைகள் |
மனிதர்களின்
வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூங்குவதில் செலவிடுகின்றனர்,
சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கிறார் என வைத்துக்கொண்டால்
20 வருடங்கள் உறக்கத்தில் கழிகிறது. குறட்டை என்பது நாம் தூங்கும்
போது, நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்று ஓய்வுக்கு உள்ளாகும்
வகையில் தளர்ந்து விடும். மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது.
மூச்சு வெளியேறும் போது இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால்,
விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக....
மேலும் |
| கர்ப்ப
காலத்தில் மொபைலை அதிகம் உபயோகித்தால் குழந்தையின் நடத்தை மாறுபடும்:
ஆய்வில் தகவல் |
|
கர்ப்ப காலத்தில் இருக்கும் தாய்மார்கள்,
மொபைல் போனை அதிகம் உபயோகித்தால், அது எதிர்காலத்தில் குழந்தையின்
வளர்ச்சியை பாதிக்கும் என தற்போது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது
பற்றி கலிபோர்னியா ஆராய்ச்சியாளர்கள், கர்ப்பிணிகள் அதிகமாக மொபைல்
போனை பயன்படுத்துவதால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் வருங்காலத்தில்
மோசமான நடத்தைகளை பெறுகின்றனர். இது அவர்கள் 7 வயதை அடையும் பொழுது,
நடத்தையில் 30 சதவீதம் அளவிற்கு மாற்றத்தை விளைவிக்கும் என்கின்றனர்.
ஆனால், பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் 29 ஆயிரம் பேரிடம்
அவர்களின் வாழ்க்கை முறை, உணவுபழக்கம் மற்றும் கர்ப்பத்திற்கு முன்,
பின் அவர்களின் சுற்றுசூழல் ஆகியவற்றை கணக்கெடுத்தனர். அதன் அடிப்படையில்
குழந்தைகளின் நடத்தையில் 3 சதவீதம் அளவிற்கு மட்டுமே மாற்றம் ஏற்பட்டுள்ளதை
கண்டறிந்தனர். மேலும் குழந்தைகள் மொபைல் போனை அதிகம் பயன்படுத்துவதை
தவிர்க்கும்படியும் அவர்கள் கூறியுள்ளனர். இவ்விரு முடிவுகளையும்
குறித்து ஆய்வாளர் லீகா கீபெட்ஸ் கூறும்போது, செல்போன் அதிகம் பயன்படுத்துவது
குழந்தைகளின் நடத்தையில் 7 வயதில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்துகிறது
என்றார். எனினும், குழந்தைகளை கவனிப்பதை விட தாய்மார்கள் அதிக நேரம்
செல்போனை உபயோகிப்பதில் செலவிட்டு கொண்டு இருப்பதுவே குழந்தைகளின்
வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
7.12.2010
|
| ஆப்பிள்
பழ தோல் அல்சீமர்ஸ் வியாதியை கட்டுப்படுத்தும்: ஆய்வில் தகவல் |
மருத்துவ
உலகில் விடை காண முடியாத வியாதிகளில் ஒன்று அல்சீமர்ஸ். பொதுவாக
வயது முதிர்ந்தவர்களை தாக்கும் இந்த நோய் ஞாபக மறதியை உண்டுபண்ணும்.
இந்த வியாதியின் தாக்கம் கண்டவர்களின் மூளையில் ஒரு வகை அல்கீன்கள்
அதிகம் காணப்படுவதாக கூறப்படுகிறது. சுற்றுசூழலில் அதிகம் காணப்படும்
இந்த வகை அல்கீன்கள் தொழிற்சாலை கழிவுகள், சிகரெட் புகை, கார்கள்
வெளியிடும் புகை ஆகியவற்றில் காணப்படுகிறது. இதற்கு ஆப்பிள் பழ தோல்,
சிவப்பு வைன், நறுமண பொருளான மஞ்சள் ஆகியவற்றில் காணப்படும் வேதிபொருள்
தீர்வாக அமைகிறது என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்
நகரின் மருத்துவ மையத்தை சேர்ந்த ரிச்சர்டு லோபச்சின் என்பவர் கூறும்போது,
ஆப்பிள் பழ தோலில் காணப்படும் வேதிபொருள், மூளையில் காணப்படும் தேவையில்லாத
அந்த 2-ஆம் வகை அல்கீன்களின் தாக்கத்தை வெகுவாக கட்டுப்படுத்துகிறது.
எனினும் அதிகப்படியான ஆப்பிள் பழ பயன்பாடு வேறு விளைவுகளை ஏற்படுத்தும்
என்றும் கூறப்படுகிறது |
| கர்ப்பிணிகளின்
உணவு பழக்கம் குழந்தையின் வளர்ச்சிக்கு அடிப்படை: ஆய்வில் தகவல்
|
|
கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் எடுத்துக்கொள்ளும் உணவினைப்பொறுத்தே
அவர்களது குழந்தைகளின் உணவு பழக்கமும் அமைகிறது. இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள்
எலிகளிடம் ஆய்வு மேற்கொண்டனர். அதில் கர்ப்பமுற்ற எலிகள் ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்டன. அவற்றில் வாசனைப்பொருள் மற்றும் செர்ரி பழம் ஆகிய
கலந்த கலவை உணவாக கொடுத்தனர். அதற்கு பிறந்த எலிகள் வளரும் பருவத்தில்
வாசனை நிறைந்த உணவு பொருளையே அதிகம் விரும்பி உண்டன. மாறாக சாதாரண
உணவு வழங்கப்பட்ட கர்ப்பமான எலிகளுக்கு பிறந்த அதன் குட்டிகள் வளரும்
பருவத்தில் சாதாரண உணவையே உண்டன. இந்த ஆய்வின்படி, கர்ப்பமான எலிகளின்
கருப்பையில் வெளிப்படும் வாசனையானது அதன் குட்டிகளின் மூளையில் வாசனையினை
அறியும் பகுதியினை அதிகமாக வளர்ச்சியடைய செய்கிறது என தெரிய வந்தது.
எனவே இதனடிப்படையில், தாய் எடுத்து கொள்ளும் உணவினையே சேய் எடுத்து
கொள்வது நலம் தரும். இந்த ஆய்வானது, மனிதன் உட்பட அனைத்து பாலூட்டிகளும்
இந்த விதத்திலேயே தங்களது சுவையறிவை வளர்த்துக்கொள்கின்றனர் என தெரிவிக்கிறது.
இனி கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் நறுமணம் மிகுந்த உணவை எடுத்து கொள்வது
குழந்தை எதிர்காலத்தில் நன்றாக வளர உதவும். 1.12.2010
|
| பெரியவர்களை
விட குழந்தைகளுக்கு பால் எளிதில் சீரணம்: ஆய்வில் தகவல் |
|
பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு பால் குடித்தவுடன் செரிமானம்
நன்கு நடைபெறுகிறது. இதற்கு ஒரு வகை பாக்டீரியாவே காரணம் என ஆய்வில்
தெரியவந்துள்ளது. இதன் பெயர் பி. லாங்கம் இன்பேன்டிஸ் ஆகும். இது
குழந்தை பருவத்தில் செரிமான பகுதியில் காணப்படும். பாலில்,
சிக்கலான வடிவமைப்பை கொண்ட ஒலிகோசாக்கரைடுகள் என்ற திட பொருள் உள்ளது.
இது செரிமானம் அடைவதற்கு நீண்ட நேரம் எடுத்து கொள்கிறது. பி. லாங்கம்
இன்பேன்டிஸ் பாலில் உள்ள கார்பன் பொருட்களை எளிதில் எடுத்து கொள்கிறது.
பாக்டீரியாவின் இந்த செயல்பாடுகளால் உணவு செரிமான உறுப்புகள் நாளடைவில்
நன்கு வளர்ச்சியடைகின்றன என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கலிபோர்னியா,
டேவிஸ் மற்றும் உத்தா மாநில பல்கலைகழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்
ஜீன்கள் பற்றிய ஆய்வில் இதனை தெரிவித்துள்ளனர்.
25.11.2010
|
| ஸ்டெம்
செல்கள் சிகிச்சை முறையில் புதிய மைல்கல்: பார்வை இழப்பு சரிசெய்யப்படும்
|

ஸ்டெம் செல்கள் சிகிச்சையில் புரட்சி ஏற்படுத்தும் வகையில் முதல்முறையாக
மனிதனிடம் சோதனை அடிப்படையில் அந்த சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டு
அதன்படி பார்வை இழப்பு, பார்வை குறைபாடு தொடர்பான நோய்கள் சரிசெய்யப்பட
இருக்கின்றன. ஆய்வின் முதல் முயற்சியாக, பரம்பரை வழியாக பார்வை இழப்பு
ஏற்படும் இளவயது ஆண்கள் மற்றும் பெண்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
அவர்களின் கண்களில் எம்பிரியோனிக் ஸ்டெம் செல்கள் உட்செலுத்தப்படுகின்றன.
அதே போல் அடுத்த வருடம், வயதானவர்களுக்கு ஏற்படும் வயது தொடர்பான
மெகுலர் டிஜெனரேஷன் என்ற ஒரு வகை பார்வை இழப்பு தொடர்பாக வயது முதிர்ந்தவர்களிடம்
சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சோதனை முதல் கட்டமாக
அமெரிக்காவிலும், அதனை தொடர்ந்து இங்கிலாந்திலும் நடைபெறும். இது
பற்றி ஆராய்ச்சியாளர் ராபர்ட் லான்சா கூறும் போது, உலகில் முதல்முறையாக
ஸ்டெம் செல்கள் உதவியுடன் கண்களில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய
தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். இந்த செல்கள் உடலில்
உள்ள மற்ற செல்வகைக்கு உருமாறி பாதிக்கப்பட்ட பகுதிகளை சரிசெய்யும்
பணியினை செய்யும். இந்த சிகிச்சை முறை எங்களுக்கு ஒரு மைல் கல்லாக
அமையும் என்று குறிப்பிட்டார். வயதானவர்களுக்கு ஏற்படும் பார்வை
குறைபாடு 3 லட்சமாக இங்கிலாந்தில் உள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை
இன்னும் 25 வருடங்களில் 10 லட்சமாக உயரும் என கூறப்படுகிறது. 23.11.2010
|
| இந்திய
பெண்களின் தாம்பத்ய ஈடுபாடு குறித்து ஓர் ஆய்வு |
|
தற்கால இந்திய பெண்கள் செக்ஸ் ஈடுபாட்டில் எந்த அளவு ஆர்வம் உள்ளவர்கள்
என்பது பற்றி ஏ.சி. நீல்சன் மற்றும் இந்தியா டுடே இணைந்து ஓர் ஆய்வு
நடத்தியது. அதில் பழங்கால பெண்மணிகள் போல் அல்லாமல் புதுயுக பெண்கள்
முற்றிலும் மாறுபட்ட வகையில் தங்களது செக்ஸ் விசயத்தில் மிகுந்த
ஆர்வத்துடன் இருப்பது தெரிய வந்துள்ளது. வழக்கமாக பெண்கள் என்றால்
காதல் வசப்படுவதை விரும்புபவர்களாகவும், மழையில் நனைந்தபடி செல்பவர்களாகவும்,
ரோஜா மலர்கொத்துகளை கைகளில் சுமந்து செல்பவர்களாவும் மட்டுமே இருப்பார்கள்.
மாறாக ஆண்கள் படுக்கையறை விசயத்திலேயே விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள்
என்பதெல்லாம் பழங்கதை. தற்போதுள்ள பெண்களில் 70 சதவீதத்தினர் செக்ஸ்
என்பது அவசியமானது என்கிறார்கள். அவர்கள், தங்களது செக்ஸ் வாழ்க்கையினை
புது புது சூழ்நிலைகளில் அனுபவிக்க ஆர்வம் கொண்டவர்களாக 67 சதவீதமும்,
பல்வேறு நிலைகளில் என 20 சதவீதமும், புதிய வகை முன் விளையாட்டுகளில்
24 சதவீதமும் மொத்தத்தில் எந்தநேரமும், எங்கேயும் என அதில் ஆர்வமிக்கவர்களாக
உள்ளதாக தெரிய வந்துள்ளது. மகிழ்ச்சியே பிரதானமானது என்கிற ரீதியில்
தாங்களும், தங்களது துணையும் இருக்க வேண்டும் என 57 சதவீத பெண்கள்
விரும்புவதாகவும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.20..11.2010
|
| இங்கிலாந்தில்
கருகலைப்பு அதிகரிப்பு: ஆய்வில் தகவல் |
இங்கிலாந்து நாட்டில் பெண்களின் தவறான உறவு பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக 20 வயது முதல் 60 வயது வரையுள்ள 1000 பெண்கள் ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்டனர். அதில் தவறான உறவு வைத்திருப்பதில் 20-29 வயது
இளம்பெண்கள் 48 சதவீதமும், 30-39 வயது பெண்கள் 46 சதவீதமும், 40-49
வயது பெண்கள் 45 சதவீதமும், 50-59 வயது பெண்மணிகள் 36 சதவீதமும்,
60ம் அதற்கு மேற்பட்ட வயதான பெண்கள் 23 சதவீதமும் உள்ளனர். இந்த
ஆய்வில், 20-29 வயது கொண்ட பெண்களே (23 சதவீதம்) மிக அதிகமாக கருகலைப்பு
செய்கின்றனர். மேலும் இந்த வயதிற்கு உட்பட்ட இளம்பெண்களே அதிகமான
(16 சதவீதம்) அளவில் பாலியல் நோய்க்கு இலக்காகின்றனர் என்று அந்த
ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அதே சமயம், 40-49 வயதிற்குள் உள்ள பெண்களில்
64 சதவீதத்தினர் சூழ்நிலை காரணமாக தாங்கள் கருகலைப்பு செய்ததை நினைத்து
வருந்துவதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. 18..11.2010
|
| இங்கிலாந்து
மக்களின் உடல் பருமனுக்கு காரணமான ஜீன் ஆய்வில் தகவல் |

ஐரோப்பிய நாடுகளில் அதிக உடல் பருமன் கொண்டவர்கள் பற்றி மேற்கொள்ளப்பட்ட
ஆய்வில் இங்கிலாந்து மக்களில் தான் அதிகபட்சமாக 70 சதவீதம் பேர்
இந்த பாதிப்பிற்கு உள்ளானது தெரிய வந்துள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு
பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் எப்.டி.ஒ என்ற ஜீன்
உடல் பருமனுக்கு காரணமாக அமைவதை கண்டறிந்தனர். இது அதிகபடியான பசியை
தூண்டி உணவு உட்கொள்வதில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பானை
வயிறு போன்ற தோற்றத்தை இங்கிலாந்து மக்கள் பெறுகின்றனர். பின்னர்
இந்த அதிக உடல் பருமன் இருதயம் தொடர்பான வியாதிகள், புற்றுநோய் மற்றும்
நீரிழிவு ஆகியவை ஏற்பட வழிவகுக்கிறது. 18..11.2010
|