|
அறிவியல் |
|
| சர்க்கரை
நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி இன்சுலினுக்கு பதில் புதிய ஹார்மோன்
|
| வாஷிங்டன்
அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தை
சேர்ந்த விஞ்ஞானிகள் சர்க்கரை நோயாளிகளுக்காக ஒரு புதிய பயனுள்ள
சிகிச்சையை கண்டறிந்து உள்ளனர்.இந்த சிகிச்சைக்காக ஒரு புதிய ஹார்மோன்
கண்டு பிடித்து உள்ளனர். இந்த புதிய ஹார்மோன் இன்சுலினுக்கு ஒரு
பயனுள்ள மாற்றாக இருக்கிறது.இது இன்சுலிங் செய்யும் அதே வேலையை செய்கிறது. |
| மனிதன்
10 லட்சம் வருடங்களுக்கு முன்பே நெருப்பை பயன்படுத்தி உள்ளான்: ஆய்வில்
தகவல் |
டொரன்டோ,
ஜெருசலேம் நாட்டை
சேர்ந்த ஹீப்ரூ பல்கலை கழகம் மற்றும் டொரன்டோ பல்கலை கழகத்தை சேர்ந்த
குழுவினர் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் மனிதன் 10 லட்சம் ஆண்டுகளுக்கு
முன்பே நெருப்பை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்
ஆப்பிரிக்காவின் ஒண்டர் ஒர்க் குகையில் 10 லட்சம் வருடங்களுக்கு
முன்பு வாழ்ந்தவர்களின் எலும்புகள் மற்றும் கருவிகள் கிடைத்துள்ளன.
குகையினுள் எரிந்த நிலையில் தாவரங்கள் காணப்பட்டன. அந்த காலக்கட்டத்தில்
வாழ்ந்த மனிதன் சமையல் செய்ததற்கான அடையாளங்களும் கிடைத்துள்ளன.
எனவே 10 லட்சம் வருடங்களுக்கு முன்பு மனிதன் நெருப்பை பயன்படுத்தியுள்ளது
தெரிய வருகிறது. இத்தகவல் நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ்சில் வெளியிடப்பட்டுள்ளது. |
| டைனசோர்கள்
நீரில் வாழ்ந்த உயிரினம்: அறிவியலாளர் கருத்து |
லண்டன்
டைனசோர்கள் பற்றிய
ஆய்வு மேற்கொள்ளும் விஞ்ஞானி பிரையன் ஜே போர்டு. சிறந்த பேராசிரியராகவும்
விளங்கி வரும் இவர் பி.பி.சி. ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது
டைனசோர்கள் குறித்து தனது கருத்தை குறிப்பிட்டார். அவர் கூறுகையில்,
மிக பெரிய உருவம் கொண்ட, நீண்ட வாலை உடைய டைனசோர்கள் பாலைவனங்களில்
சுற்றி திரிந்து அதன் இரையை தேடுவது என்பது அதற்கு சிரமம் தருவதாகும்.
இது சாத்தியமற்றது. அதன் வால் நீரில் நீந்துவதற்கும், மிதந்தபடியே
செல்வதற்கும் ஏற்ற வகையில் உள்ளது. மேலும் நீந்துவதற்கு அது உறுதுணை
புரிகிறது என கூறினார். மேலும் நீரில் இருக்கும்பொழுது அதன் எடை
முழுவதும் நீரால் தாங்கப்படுகிறது. இரையை பிடிப்பதற்கும் எளிதாகிறது.
எனவே அது நீரில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கூறினார். எனினும்
அவரது இந்த கருத்து 100 வருடங்களுக்கு முன்பு அறிவியலாளர் ஒருவர்
கூறிய கருத்தை ஒத்துள்ளதாக நிபுணர்களால் கூறப்படுகிறது. |
| கடற்கரையை
நம்பி வாழும் பறவையினங்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டது:
ஆய்வு அறிக்கை தகவல் |
தரையில்
இனப்பெருக்கம் செய்து, கடலுக்குச் சென்று உணவுதேடும் ஆல்பட்ரோஸ்
குடும்பத்தைச் சேர்ந்த பறவையினங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட கடல்சார்
பறவைகள் பற்றி ஆய்வு நடத்தும் பேராசிரியர் ஜோன் க்ரொக்ஷால் கூறியதாவது:-
அல்பாட்ரோஸ் குடும்பத்தைச் சேர்ந்த 22 பறவையினங்களில் 17 இனங்கள்
அழிந்துவிடும் நிலையில் உள்ளது. வர்த்தக ரீதியான நவீன மீன்பிடி முறைகளாலும்,
பெருச்சாளிகள், காட்டுப் பூனைகள் போன்ற உயிரினங்களால் இப்பறவைகளின்
இனப்பெருக்கத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளுமே இந்த அழிவுக்கு காரணம்
. கடல் மற்றும் கடல்சார்ந்த பகுதிகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்யவும்,
அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளை எச்சரிப்பதற்கும் இந்த கடல்சார்
பறவைகள் மிகவும் அவசியமானவை. இவ்வாறு அவர் கூறினார் |
| உலகின்
கண்டங்கள் அனைத்து இணைந்து புதிய அமேசியா கண்டம் உருவாகும் விஞ்ஞானிகள்
தகவல் |
உலகில்
உள்ள கண்டங்கள் அனைத்து இணைந்து அமேசியா என்ற புதிய பெரிய கண்டம்
உருவாகும் என புவி யியல் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவின்
யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியல் நிபுணர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் அமெரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களின் வடக்கு அப்குதி நீர்
மற்றும் காற்றுப்போக்கி னால் இணையும். இதனுடன், ஆர்டிக் கடலும்,
கரீபியன் கடலும் ஒன்றாக சேரும். இதன் மூலம் மிகப்பெரிய புதிய கண்டம்
உருவாகும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பூமியின்
அடியில் உள்ள பிளேட்டுகள் தற்போது நகர்ந்த வண்ணம் உள்ளன. இதனால்
ஆசியா மற்றும் ஐரோப்பிய கண்டங்களின் வடக்கு முனை பூமி பிளேட்டு கள்
ஒன்றுடன் ஒன்று மோதி நொறுங்கும் அபாயம் உள் ளன. அதுபோன்ற மாற்றங்களி
னால் ஆஸ்திரேலியா கண்டம் இந்தியாவுடன் இணைய லாம். என தெரியவந்துள்ளதாக
தகவல் வெளியிட்டு உள்ளார். |
| வீனஸ்
கிரகத்தில் உயிரினங்கள்: ரஷ்ய விஞ்ஞானி கருத்து |
மாஸ்கோ,
ஜன.25- சூரிய
குடும்பத்தில் பூமியை ஒத்த மற்றொரு கிரகம் வீனஸ் என்று விஞ்ஞானிகளால்
அழைக்கப்படும் வெள்ளி ஆகும். இதன் விட்டம் 7,521 மைல்கள். பூமியின்
விட்டமோ 7,926 மைல்கள் ஆகும். எனினும் இதன் மேற்பரப்பில் 97 சதவீதம்
கார்பன்&டை&ஆக்சைடு வாயுவே நிரம்பியுள்ளது. சூரியனிலிருந்து
67.2 மில்லியன் மைல்கள் தொலைவில் அமைந்துள்ள இதன் வெப்பநிலை 480
டிகிரி செல்சியஸ் ஆகும். இத்தகைய தன்மை வாய்ந்த இந்த கிரகத்தில்
உயிரினங்களின் வாழ்வு குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 1982ம் ஆண்டு
அனுப்பப்பட் வீனஸ்&13 எடுத்த புகைப்படங்களை ரஷ்யாவை சேர்ந்த
விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் லியோனிட் சான்பாமலிட்டி
என்பவர் மறு ஆய்வு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் தேள் ஒன்றின்
உடலமைப்பை கொண்ட உருவமும், தட்டு ஒன்றும் நகர்வது போன்ற காட்சிகள்
பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருப்பது ஆராய்ச்சியாளர்களிடையே
தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. |
| பூமியை
தாக்கும் சூரிய புயல்: நிபுணர்கள் தகவல் |
வாஷிங்டன்,
ஜன.24- சூரிய
குடும்பத்தில் மையமான சூரியன் கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து சுமார்
7 ஆண்டுகளாக அதிகளவில் வெப்ப கதிர்களை வெளியிட்டு வந்துள்ளது. சூரிய
புயல் என்று நிபுணர்களால் கூறப்படும் இந்த வெப்ப கதிர் வெளிப்பாடு
மணிக்கு 93 மில்லியன் மைல்கள் வேகத்தில் பூமியை வந்தடைகிறது. இதனால்
குறிப்பாக துருவ பகுதிகளில் பயணம் செய்யக்கூடிய விமானங்களின் தொலை
தொடர்பு தகவல் பரிமாற்றங்கள் பாதிக்கப்பட கூடும். மேலும் சர்வதேச
விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் மற்றும் விண்வெளியில்
சுற்றி வரும் செயற்கை கோள்கள் ஆகியவை இதனால் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. |
| விண்வெளியில்
எக்ஸ்ரே தொலைநோக்கியை நிறுவ நாசாவுடன் இஸ்ரோ போட்டி |
| பெங்களூர்
விண்வெளியில்
உள்ள கருந்துளைகளை ஆய்வு செய்ய எக்ஸ்ரே டெலஸ்கோப்பை விண்வேளிக்கு
அனுப்ப விஞ்ஞானி ராமன் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட் முடிவு செய்து உள்ளது.
இந்த திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுடன்
சேர்ந்து நடத்த திட்டமிட்டு உள்ளது.இத்திட்டத்திற்கு பொலிக்ஸ் என
பெயரிடப்பட்டு உள்ளது இது குறித்து பொலிக்ஸ் தலைவர் பிஸ்வாஜித் பவுல்
கூறியதாவது: நாங்கள் டெலஸ்கோப்பை நிறுவுகிறோம்.விண்வெளியில் டெலஸ்கோப்பை
நிறுவ இஸ்ரோ செயற்கை கோள் மூல்ம் எடுத்து செல்கிறது.இது நிறுவபட்டால்
விண்வெளியில் நிறுவபட்ட முதல் எக்ஸ்ரே தொலைநோக்கியாக கருதப்படும்
. நாங்கள் திட்டத்தை இஸ்ரோ சமர்பித்தோம் நிதியை பெற்றோம். உபகரணங்கள்
இந்த ஆண்டு தயாராகி விடும் . இஸ்ரோ அதை செயற்கைக்கோளில் பொருத்தி
விண்வெளிக்கு அனுப்பும் .மிக அதிகமான அறிவியல் தகவல்கள் கருந்துளைக்குள்
புதைந்து கிடக்கின்றன.ஈர்ப்பு சக்தி காந்தவியல் மற்றும் ஜெம்ஸ் குறித்து
ஆராய்ச்சி செய்ய 2014 இல் எக்ஸ்ரே தொலைநோக்கியை விண்வெளிக்கு நாசா
அனுப்புகிறது.அவர்களுக்கு முன் நாம் நிறுவ கடுமையாக போடியிடுகிறோம்.
ஆனால் நம் இலக்கை அடைந்த பிறகுதான் அவர்கள் திட்டம் தொடங்க உள்ளது,
ஆனால் அவர்கள் திட்டம் அதிக பொருளாதார செலவு உடையது நமது திட்டம்
செலவு குறைவு. இவ்வாறு அவர் கூறினார். 20.1.2012 12.20 PM |
| செவ்வாய்
கிரகத்தில் இருந்து பூமியில் பாறைகள் விழுகின்றன : விஞ்ஞானிகள் உறுதி |
| வாஷிங்டன்
செவ்வாய்
கிரகத்தில் இருந்து பாறைகள் பூமியில் விழுவதாக விஞ்ஞானிகள் கூறி
உள்ளனர் சமீபத்தில் மொராக்கோவில் 15 பவுண்ட் எடை உள்ள பாறைகள் கண்டெடுக்கபட்டு
உள்ளன அவை ஜூலை மாதம் செவ்வாய் கிரத்தில் இருந்து விழுந்தவை என விஞ்ஞானிகள்
கூறுகின்றனர்.இது 5 வது முறையாக பூமியில் விழுந்து உள்ளது. இது ரசாயன்ப
ஆய்வின் மூலம் உறுதிபடுத்த்பட்டு உள்ளது.விண்கல் நிபுணர்கள் நாசா
விஞ்ஞானிகள், அடங்கிய குழு இந்த பாறைகளை சோதனை செய்து விட்டு இது
செவ்வாய்கிரகத்தில் இருந்து வந்தவைதான் என உறுதி செய்தனர் . செவ்வாயில்
மனிதன் வாழ சாத்தியம் உள்ளதா என் ஆராய்ச்சி நடந்துவரும் நேரத்தில்
செவ்வாய் பாறைகளள் பூமியில் விழுகின்றது என்பது மிக முக்கிய திருப்பமாகும்..
18.1.2012 12.30 PM |
| 6
செயற்கைகோள்களுடன் விண்ணில் பறந்த ரஷ்யாவின் சோயஸ் விண்கலம் |
ரஷ்யாவின்
சோயஸ் விண்கலம் 6 செயற்கை கோள்களை சுமந்து கொண்டு டிசம்பர் 16, இரவு
11.30 மணியளவில் விண்வெளிக்கு பறந்து சென்றது. பிரெஞ்சு கயானா என்ற
இடத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த விண்கலம், பிரான்சின் பிளியாட்ஸ்
1 என்ற செயற்கை கோளையும் கொண்டு சென்றுள்ளது. பிரான்சு நாட்டின்
ராணுவத்திற்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை
கோள் ஆனது தரையில் 50 செ.மீ. குறுக்களவு கொண்ட சிறிய பொருளையும்
படம் பிடிக்கும் திறன் வாய்ந்ததாகும். மேலும், நிலநடுக்கம் போன்ற
தருணங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்வதற்கு உதவும் வகையிலும் இது
இருக்கும். இதனையடுத்து, வரும் 2012ம் ஆண்டில் பிளியாட்ஸ் 2 செயற்கை
கோள் விண்ணிற்கு அனுப்பப்படுகிறது. |
| விண்வெளியில்
பூமியை போன்று புதிய கிரகம்: நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி கண்டுபிடிப்பு |
வாஷிங்டன்
அமெரிக்க
விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி, புவியை போன்று
வேறு கிரகங்கள் ஏதும் உள்ளனவா என்பது குறித்த மேற்கொண்ட ஆய்வில்
தற்போது புதிதாக முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பூமியிலிருந்து
600 ஒளி வருடங்கள் தொலைவு கொண்டதும் வருங்காலத்தில் உயிர்கள் வாழ்வதற்கு
ஏற்ற சூழல் கொண்டதுமான கெப்ளர் 22பி என்ற பெயரிடப்பட்ட கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக்கிரகத்தில் போதுமான நிலம் மற்றும் தண்ணீர் ஆகியவை உள்ளது. மேலும்,
வெளிப்புறம் 72 டிகிரி வெப்பநிலை நிலவுகிறது. வருடத்திற்கு 290 நாள்கள்
கொண்டதுடன் வளிமண்டல அமைப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. எனவே, வருங்காலத்தில்
பூமியை தவிர்த்து பிற கிரகங்களில் மனிதன் மற்றும் பல்வேறு உயிரினங்கள்
வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. |
| ஒலியை
காட்டிலும் 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஏவுகணை: அமெரிக்கா பரிசோதனை
|
நியூயார்க்
அமெரிக்கா தனது படை
பலத்தை பெருக்கும் விதமாக ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் பயணிக்க
கூடிய திறன் வாய்ந்த அதிநவீன ஏவுகணை ஒன்றை சோதனை செய்து பார்த்துள்ளது.
ஏ.எச்.டபிள்யூ. என பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை, ஹவாய் என்னுமிடத்தில்
வைத்து ஏவப்பட்டது. அது பசிபிக் சமுத்திரத்தின் மீது தென்மேற்கு
பகுதியை நோக்கி பறந்து சென்று பின் 2,500 மைல்கள் தொலைவிலுள்ள மார்ஷல்
தீவில் தனது இலக்கான க்வாஜலின் என்னுமிடத்தை அடைந்தது. 12 அடி நீளமும்,
900 கி.கிராம் எடையும் கொண்டதுடன் 3,500 பாரன்ஹீட் வெப்பத்தை தாங்க
கூடிய வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏவுகணை 15
டன் எடை கொண்ட எட்டு வெடிகுண்டுகளை எடுத்து சென்று தாக்க வேண்டிய
தளத்திலிருந்து 200 அடி உயரத்தில் இருந்து வெடிகுண்டுகளை வெடிக்க
செய்யும். உலகின் எந்த இலக்கையும் புறப்பட்ட 60 நிமிடங்களில் தாக்கும்
வலிமை பெற்றுள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் தனது ஏவுகணைகள்
மற்றும் படைகளை அமெரிக்கா வெளிநாடுகளில் நிலைநிறுத்த வேண்டிய அவசியம்
இல்லை. தனது ராணுவத்தில் இதனை சேர்க்க அமெரிக்கா முடிவு செய்து வருகிறது. |
| செவ்வாய்
கிரக பயணத்திற்காக 520 நாட்கள் ஜாடிக்குள் இருந்து பயிற்சி எடுத்த
விஞ்ஞானிகள் |
மாஸ்கோ
செவ்வாய் கிரக பயணத்தின்
போது, எதிர்கொள்ளக்கூடிய சோர்வு, மன அழுத்தங்கள் போன்ற அனுபவங்களை
பரிசோதித்து பார்ப்பதற்காக ரஷ்யா, ஐரோப்பா மற்றும் சீனாவை சேர்ந்த
இந்த விஞ்ஞானிகள் குழு ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஜாடி பொன்ற
ஒரு இடத்துக்குள் 520 நாட்கள் தங்கியிருந்துள்ளது. இத்தனை காலமும்
அவர்கள் வெளி உலக தொடர்புகள் இன்றி இருந்து உள்ளனர். ஒரு நீண்ட காலத்துக்கு
தொடர்ந்து விண்வெளி பயணத்தில் இருக்கின்ற போது சீதோஷ்ண மாற்றங்களின்
போதும், அழுத்தங்களின் போதும் மனித உடல் எவ்வாறு அவற்றை எதிர்கொள்ளும்
என்பதை பரிசோதிப்பதற்காக விஞ்ஞானிகள் இந்த பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
மாதிரி செவ்வாய் கிரகமொன்றை உருவாக்கி அங்கு மூன்று பேர் இறங்குவது
போலவும் அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். |
| செயற்கை
ரத்தம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை |
|
லண்டன் இங்கிலாந்தின்
எடின்பர்க் & பிரிஸ்டல் பல் கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து செயற்கை
ரத்தம் உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இவர்கள் ஸ்டெம்செல்களில்
இருந்து சிவப்பு அணுக்களை உருவாக்கி அதன் மூலம். செயற்கை ரத்தத்தை
தயாரித்தனர். இந்த ரத்ததில் 25 லட்சம் சிவப்பு அணுக்கள் இருக்கும்
இவற்றை மனித உடலில் செலுத்த முடியும். எந்தவிதமான நோய் தொற்றும்
ஏற்படாது.இன்னும் சில ஆண்டுகளில் இது பயன்பாட்டுக்கு வரும்.
|
| வீனஸ்
கிரகத்திலும் ஓசோன் படலம் உள்ளது: விஞ்ஞானிகள் தகவல் |
பூமியை
விட நூறு மடங்கு குறைவான அடர்த்தி உள்ள ஓசோன் படலம் வீனஸ் கோளில்
இருப்பதாக , ஐரோப்பிய விண்வெளி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்து
உள்ளனர். தற்போது வரை ஓசான் படலங்கள் பூமியிலும் செவ்வாய் கிரகத்தில்
மட்டுமே உள்ளன என கண்டறியப்பட்டு உள்ளன. வீனசில் உள்ள ஓசோன் அடுக்கு
பூமியில் உள்ளதைப் போன்று 3 மடங்கு உயரத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர். |
| டைனோசர்
கால பறவையின் பல் படிமம் கண்டுபிடிப்பு |
| உலகிலேயே
மிகப்பெரிய பிரமாண்டமான கூர்மையான பல் படிமம் ஒன்றை இங்கிலாந்தில்
உள்ள விஞ்ஞானிகள் கண்டெடுத்து உள்ளனர். இது 100 மில்லியன் ஆண்டுகளுக்கு
முன்பு உள்ள படிமம், இது லண்டனின் இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில்
வைக்கப்பட்டு உள்ளது இதை "ஆரம்ப டைனோசர் காலத்தில் இருந்தது
போன்ற பறக்கும் பெரியவகை பறவையினத்தை சேர்ந்த பெட்ரொசவுர்சின் பல்
படிமம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால் இது முழுமையாக ஆராயப்படாமல்
இருந்தது.
|
| அமெரிக்கா-ரஷ்யாவிற்கு
இணையாக விண்வெளியில் வளர துடிக்கும் சீனா |
| பீஜிங்
அமெரிக்கா மற்றும்
ரஷ்யாவுக்கு இணையாக ஆசியா சார்பாக விண்வெளியில் தனது அதிகாரத்தை
நிலைநாட்ட சீனா முயற்சி எடுத்து வருகிறது. இதன் முதல் கட்டமாக விண்வெளிக்கு,
டியாங்காங் 1 அல்லது ஹெவன்லி பேலஸ் என பெயரிடப்பட்ட விண்கலம் ஒன்றை
அடுத்த வாரம் சோதனை முயற்சியாக அனுப்ப சீனா முடிவு செய்து உள்ளது.
வடமேற்கு கன்சு மாகாணத்தில் அமைந்து உள்ள ஜிகுவான் ஏவுதளத்தில் இருந்து
இது ஏவப்படுகிறது. அக்டோபர் 1 சீனாவின் தேசிய தின கொண்டாட்டம்
என்பதால் அதற்கு முன்பாக அதாவது செப்டம்பர் 27 மற்றும் செப்டம்பர்
30 ஆகிய நாட்களுக்கு இடையில் இந்த ஆள் இல்லா விண்கலம் அனுப்பப்படும்.
இந்த சோதனை முயற்சியை அடிப்படையாக கொண்டு விண்வெளி நிலையம் ஒன்றை
விண்வெளியில் அமைக்கவும் சீனா முடிவு செய்துள்ளது.
|
| ஒரே
கிரகத்தின் சுற்றுவட்டபாதையில் 2 சூரியனகள்- நாசா தகவல் |
வாஷிங்டன்
நாசாவின்
கெப்ளர் தொலைநோக்கி ஒரு கிரகத்தை சுற்றி 2 சூரியன்கள் இருப்பதை
கண்டறிந்து உள்ளது அங்கு யாரும் வாழும் சாத்தியமில்லை என்று விஞ்ஞானிகள்
தெரிவித்து உள்ளனர். இந்த கிரகத்திற்கு கெப்ளர்-16b பெயரிடப்பட்டு
உள்ளது, இது சனி போன்ற ஒரு வாழ்வதற்கே உகந்ததல்லாமல் குளிர் மாபெரும்
வாயு, உள்ள கிரகமாக கருதப்படுகிறது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட
கிரகம் பூமியில் இருந்து 200 ஒளி ஆண்டுகள் இருக்கிறது. 2 நட்சத்திரங்கள்
சுற்றி வருm கிரகங்கள் உள்ளன என கடந்த காலத்தில் கூறி இருந்தாலும்,
விஞ்ஞானிகள் முதன் முதலில் இதை இறுதி படுத்தி உள்ளனர்.அங்கு இரட்டை
சூரிய அஸ்தமனம் இருப்பதை பார்க்கும் போது கெப்ளர்-16b வாழ்நாள் முடிவில்
உள்ளது தெரிகிறது. கெப்ளர்-16b உள்ள இரண்டு சூரியன்கள் நம்ம சூரியனை
விட சிறியவையாக உள்ளன. கிரகத்தின் ஒவ்வொரு 229 நாட்கள் 65மில்லியன்
மைல் தொலைவில் (104மில்லியன் கிமீ) இரண்டு சூரியனின் பாதைகள் உள்ளன
- வீனஸ் அதே சூரிய சுற்றுப்பாதையில் தான் சுற்றி வருகிறது.
கெப்ளர் தொலைநோக்கி 2009 ல் தொடங்கப்பட்டது , பூமியை போன்ற கிரகங்கள்
இந்த பால்வெளி உள்ளனவா என கண்டறிய வடிவமைக்கப்பட்டது. ஒருகிரகத்தில்
இரண்டு சூரியன்கள் சுற்றி வருகின்றன எனபது உண்மையில் கெப்ளரின் மகத்தான்
கண்டு பிடிப்புதான் இத்தகவல் ஜெர்னல் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டு
உள்ளது. |
| எரிகல்
பொழிவால் கிடைக்கும் தங்கம் மற்றும் பிளாட்டினம்: ஆய்வில் நிரூபணம் |
சுமார்
4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமி உருவாகும் பொழுது அதன்
மையத்தில் உருகிய இரும்பு கூழ்கள் அதிகளவில் இணைந்து புவி மையத்தை
தோற்றுவித்தன. இரும்புடன் தங்கம் மற்றும் பிளாட்டினம் உள்பட பல விலைமதிப்பற்ற
தனிமங்களும் மையத்தில் சேர்ந்தன. ஆனால் தற்பொழுது நமக்கு கிடைக்கும்
தங்கம் மற்றும் பிளாட்டினம் ஆகியவை எவ்வாறு கிடைக்கின்றன என்றால்
பூமி தோன்றி பல வருடங்களுக்கு பின்பு 20 பில்லியன் டன்களுக்கு மேற்பட்ட
எடை கொண்ட எரிகல் ஒன்று பூமியின் மீது மழை போன்று பொழிந்துள்ளது.
அதிலிருந்து தான் இன்றளவும் கிடைத்து கொண்டிருக்கும் தங்கம் மற்றும்
பிளாட்டினம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பல தனிமங்கள் வந்துள்ளன என்ற
புவியியலாளர்களின் கூற்றை நிரூபிக்கும் விதமாக பிரிஸ்டல் பல்கலைகழகத்தின்
ஆராய்ச்சியாளர்களான வில்போல்ட் மற்றும் எலியட் ஆகியோர் பூமியைப்பற்றி
ஆய்வொன்று மேற்கொண்டனர். இதற்கு ஆதாரமாக கிரீன்லாந்தில் கிடைத்த
4 பில்லியன் வருடத்திற்கு முந்தைய பாறை படிவங்களை ஆராய்ந்தனர். அதில்,
மிக அரிதான தனிமமான டங்ஸ்டனின் பல ஐசோடோப்புகள் கண்டறியப்பட்டன.
அவை தற்பொழுதுள்ள பாறைகளில் கிடைத்த ஐசோடோப்புகளுடன் மிக சிறிய அளவில்
அதாவது ஒரு மில்லியனுக்கு 15 பங்கு என்ற அளவில் மட்டுமே வேறுபாட்டை
கொண்டிருந்தன. எனவே இந்த ஆய்வானது, புவியியலாளர்களின் கருத்தின்படி,
பூமியின் மீது எரிகல் மழையாக பொழிந்த பின்பு தான் தங்கம் போன்ற மதிப்புமிக்க
பொருள்கள் கிடைக்கின்றன என்பதற்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது. |
| விண்வெளியில்
அதிகரிக்கும் கழிவுகளால் செயற்கைக்கோள்களுக்கு ஆபத்து |
| பூமியில்
இருந்து விண்வெளிக்கு உலக நாடுகள் செயற்கை கோள்களை அனுப்புகின்றன.
ராக்கெட் மூலம் செலுத்தப்படும் அவை விண்வெளிக்கு செல்லும் போதும்,
சென்ற பிறகும் பழுதடைகின்றன. இதனால் உடைந்து நொறுங்கும் ராக்கெட்டின்
உதிரிபாகங்களும், செயற்கை கோள்களின் பாகங்களும் காற்று இல்லாததால்
விண் வெளியில் பூமியை சுற்றி மிதந்தபடி இருக்கின்றன. மேலும் அவை
மணிக்கு 28,164 கி.மீட்டர் வேகத்தில் பூமியை நெருங்கி வருகின்றன.
இதனால் பூமியை நெருங்கி நிலை நிறுத்தப்பட்டுள்ள செயற்கை கோள்கள்
மீது மோதும் அபாயம் உள்ளது. இது பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் டொனால்டு
கெஸ்லர் என்பவர் கூறும் போது, கடந்த 2007ல் சீனா அனுப்பிய ராக்கெட்
ஒன்று வானிலை செயற்கைக்கோள் ஒன்றை மோதி அழித்தது. இதனால் 1 செ.மீ.
அளவுக்கு அதிகமான சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் துண்டுகள் உருவாகின.
அதே போல் 2009ல் இரு செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையில் சுழலும்
போது ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த இரு நிகழ்வுகளாலும் பூமியை
சுற்றி கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவிற்கு விண்வெளி கழிவுகள்
அதிகமாக தேங்கியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
|
| செவ்வாய்
கிரகத்திற்கு அனுப்பும் விண்கலத்தில் செயற்கை தோட்டம் அமைக்க நாசா
முடிவு |
| அமெரிக்காவின்
விண்வெளி கழகமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு முதன்முதலாக விண்வெளி
வீரர்களுடன் கூடிய விண்கலத்தை 2030ம் ஆண்டில் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் விண்வெளி வீரர்களுக்கு உணவு வழங்குவது சற்று கடினமான
விசயம். இது பற்றி டெக்சாஸ் மாகாணத்தில், ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள
நாசாவின ஸ்பேஸ் புட் சிஸ்டம்ஸ் லேபரட்டரியை சேர்ந்த மாயா கூப்பர்
என்பவர் கூறும் போது, செவ்வாய் கிரகத்தில் மேற்கொள்ளப்படும் 5 வருட
ஆராய்ச்சி பணியில் ஏறக்குறைய ஒரு நபருக்கு 3,175 கி.கிராம் அளவிற்கு
உணவு தேவைப்படும். அவர்களுக்கு தொடர்ந்து உணவு அனுப்புவது என்பது
திட்டப்பணிகளில் சவாலான ஒன்றாக உள்ளது. எனவே, உணவிற்கு தேவையான கேரட்,
தக்காளி உள்பட 10 வகையான செடிகள் கொண்ட தோட்டத்தை செவ்வாய் கிரக
சூழலுக்கேற்ப அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விண்கலத்தில் இதனை
வளர்க்க குறைந்த இடமே போதுமானது. மேலும், ஆரோக்கியமான உணவு கிடைப்பதுடன்
விண்கலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு நீங்கி தேவையான ஆக்சிஜனும் கிடைக்கும்
என கூறினார். |
| சந்திரனுக்கு
புதிய விண்கலம்: அடுத்த மாதம் அனுப்புகிறது
நாசா |
| சந்திரனுக்கு
அமெரிக்கா புதிய விண்கலம் ஒன்றை அனுப்ப திட்டமிட்டுள்ளது. க்ரேய்ன்
என பெயரிப்பட்ட இந்த விண்கலம் வரும் செப்டம்பர் மாதம் புளோரிடா மாகாணத்திலுள்ள
கேப் கானவெரல் விமான தளத்திலிருந்து அனுப்பப்படுகிறது. ஒன்பது மாதங்கள்
ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்த விண்கலத்தை ஏவும் பணியில் அமெரிக்காவின்
நாசா அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
|
| நட்சத்திரத்தை
விழுங்கிய அதிக சக்தி வாய்ந்த கருந்துளை: விண்வெளி வரலாற்றில் ஓர்
அரிய நிகழ்வு |
விண்வெளியில்
அதிக சக்தி வாய்ந்த கருந்துளைகள் உள்ளன. இவை தங்களுக்கருகில் இருக்கும்
அனைத்தையும் உள்ளிழுத்து கொள்ளும் ஆற்றல் பெற்றவை. தற்போது அத்தகைய
கருந்துளைகளில் ஒன்று நட்சத்திரம் ஒன்றை சிதறடித்து பின் தனக்குள்ளே
உள் வாங்கிய அரிய நிகழ்ச்சியை வானியலாளர்கள் முதன் முறையாக கண்டறிந்துள்ளனர்.
பூமியிலிருந்து 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நடந்துள்ள இது
போன்ற நிகழ்வு இதற்கு முன்பு கண்டறியப்படாதது. பொதுவாக கருந்துளைகளின்
மையம் சூரியனைப்போன்று 100 கோடி மடங்கு அதிக வலிமை கொண்டதாக இருக்கும்.
தற்போது நடைபெற்ற நிகழ்வில், கருந்துளையானது தன்னிடமிருந்து 3.9
பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த நட்சத்திரத்தை, அதிக சக்தி
வாய்ந்த காஸ்மிக் ஜெட் எனப்படும் தனிப்பட்ட சக்தியால் சிதறடித்து
பின் தன்னுள் இழுத்து கொண்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஒளி வெள்ளம் அதனை
படம் பிடித்த நாசாவின் ஸ்விப்ட் தொலைநோக்கிக்கு அடுத்த ஒரு வடருடத்திற்கு
தேவையான ஒளியை வழங்குமளவிற்கு பிரமாண்டமாய் இருந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது. மேலும் விண்வெளியில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து
எக்ஸ் கதிர்களின் அலைவீச்சு அடிக்கடி நிகழ்ந்து வந்ததையும் ஸ்விப்ட்
தொலைநோக்கி அவ்வப்போது நாசாவிற்கு தெரிவித்து வந்தது. அதனை தொடர்ந்து
ஆராய்ந்ததில் இந்த அரிய நிகழ்வு தற்போது உலகிற்கு தெரிய வந்துள்ளது.
மற்றும் நட்சத்திர மண்டலத்தில் 100 மில்லியன் வருடங்களுக்கு ஒரு
முறை இது போன்ற நிகழ்வு நடைபெறும் என பென்சில்வேனியா மாநில பல்கலைகழகம்
மற்றும் ஹார்வேர்டு ஸ்மித்சோனியன் வானியல் அமைப்பு ஆகிய குழுவை சேர்ந்தவர்கள்
தெரிவித்துள்ளனர். |
| இங்கேயும்
அதே கதைதான் ! சிம்பன்ஸிகளில்
ஆண்களைக் காட்டிலும் பெண்களே புத்திசாலிகள் |
பெல்ஜியம் நாட்டில்
இரு உயிரியல் பூங்காவில் உள்ள ஆண், பெண் மனிதக்குரங்குகளுக்கிடையே
உள்ள திறமைகளைக் கண்டுகொள்ள நடத்தப்பட்ட ஆறு போட்டிகளில் பெண் சிம்பன்ஸிகளே
தன் புத்திசாலித்தனத்தை வெளிக்காட்டி வெற்றி பெற்றது. பெண் சிம்பன்ஸிக்கள்,
போட்டிக்காக சற்று கைக்கு எட்டாமல் சற்று தொலைவில் வைக்கப்பட்டிருந்த
தின்பண்டங்கள், கொட்டைகள் ஆகியவற்றை எடுக்க சின்ன மரக்கிளைகள், குச்சிகள்
போன்றவற்றின் துணைகொண்டு அந்த பழங்களையும், கொட்டைகளை லாவகமாக எடுத்ததுடன்
அல்லாது, சிறு கற்கள் மூலம் பழக்கொட்டைகளை மிகவும் இயற்கையாக உடைத்துத்
தின்றது. ஆண் சிம்பன்ஸிக்கள் தன் மூர்க்கத்தனத்தையும், ஆண் ஆதிக்கத்தன்மையின்
மூலமாகத்தான் பெண் சிம்பன்ஸிக்களை வெற்றி கொள்ளும் என்று நினைத்திருந்தனர்
போட்டி அமைப்பாளர்கள். ஆனால், அவர்கள் நினைத்ததற்கு மாறாக, ஆண் சிம்பன்ஸிகளோ
பெண் சிம்பன்ஸிகளோடு போட்டிகளை தவிர்த்து, இனக்கவர்ச்சி மூலம் வெற்றிகொள்ளும்
உத்திகளையே கையாளத்துடித்தது. இது வழக்கமாக ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள்
என்னும் மனித இயல்புகளை நிரூபிப்பதாகவுள்ளது என்றும், ஆனால், இந்த
ஒருசில போட்டிகளின் மூலம் மனித இனங்களின் திறமைகளையும், ஜீன்களின்
பண்புகளைப் பற்றியும் இறுதியான முடிவு எட்டிவிடமுடியாது என்று இப்போட்டியை
ஏற்பாடு செய்திருந்த ஸ்டீவன் என்பவர் தெரிவித்துள்ளார். |
| பூமியின்
மிக பழமையான தொல்லுயிர் படிவம் ஆஸ்திரேலியாவில் உள்ளதாக ஆய்வில் தகவல்
|
|
ஆஸ்திரேலியா
நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டேவிட் வாசி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட
ஆய்வின்படி சுமார் 3.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த
பாக்டீரியாவின் தொல்லுயிர் படிவம் ஆஸ்திரேலியா நாட்டின் பில்பரா
பகுதியில் அமைந்த ஸ்ட்ரெல்லி நதிக்கரையில் கிடைத்துள்ளது. இதுவே
உலகின் மிக தொன்மை வாய்ந்த உயிரி படிவம் ஆகும். சாதாரண கண்களால்
பார்க்க இயலாத இந்த பாக்டீரிய படிவத்தை மைக்ரோஸ்கோப் வழியே எளிதாக
கண்டுணர முடியும். இது பற்றி டேவிட் கூறும் பொழுது, 3.4 பில்லியன்
ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கடும் வெப்பமான, உயிரினங்கள் வாழ்வதற்கு
தேவையான ஆக்சிஜன் இல்லாத சூழல் காணப்பட்டது. அத்தகைய நிலையில் ஏதேனும்
ஒரு வழியில் உயிரிகள் வாழ்ந்தாக வேண்டும். அப்பொழுது எரிமலை வெடித்து
வெளிப்பட்ட குழம்பில் அதிகம் நிறைந்த கந்தக பொருள்களை இத்தகைய பாக்டீரியாக்கள்
சுவாசித்து வாழ்ந்திருக்க வேண்டும் என கூறுகிறார்.
|
| உலகிலேயே
மிக நீளமான பெரிஸ்கோப்பு கல்பாக்கத்தில் அமைப்பு |

தமிழ் நாட்டின் கல்பாக்கத்திலுள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி
நிலையத்தில் உலகின் மிக நீளமான, அதாவது 10 மீட்டர் நீளம் கொண்ட பெரிஸ்கோப்பு
ஒன்று ரூபாய் 4 கோடி மதிப்பில் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இது
இன்று முதல் இயக்கி வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த
ஆய்வு மையத்தில் அதிக எண்ணிக்கையில் ரியாக்டர்கள் இயங்கி வருகின்றன.
இந்த ரியாக்டர்களின் பராமரிப்புப்பணிகளை பார்வையிட, ரிமோட் கண்ட்ரோல்
மூலமாக இயங்கும், இந்த பெரிஸ்கோப்புகள் பயன்படும் என தெரிய வருகிறது.
அணுவை பிளந்து, வெப்பத்தை உருவாக்கி, நீராவியை தயார் செய்யும் அனைத்து
பணிகளையும் செய்பவவைதான் இந்த ரியாக்டர்கள். இந்த ரியாகடர்களின்
பராமறிப்பு பணியை கண்களால் நேரடியாக பார்வையிட முடியாது. இதனை சாத்தியமாக்கவே
இந்த பெரிஸ்கோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
|
| கடல்
வாழ் உயிரினங்கள் எழுப்பும் ஒலி குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு
|
| கடல்
வாழ் உயிரினங்கள் கடலில் பிரயாணிக்கும் பொழுது தங்களுக்குள் தொடர்பு
ஏற்படுத்தி கொள்வதற்கு சப்தத்தை எழுப்பும். உதாரணமாக, சில திமிங்கல
வகைகள் முனங்குவது போலவும், கத்துவது போலவும் ஒலியெழுப்பி ஒன்றுடன்
ஒன்று தொடர்பு ஏற்படுத்தி கொள்வது வழக்கம். கடல் பரப்பில் மனிதனின்
தாக்கம் பல வருடங்களாக அதிகரித்துள்ள நிலையில், அதனால் கடல் வாழ்
உயிரினங்களின் தகவல் தொடர்பில் ஏற்படும் பாதிப்பு குறித்து கடல்
ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது,
இது பற்றி வரும் ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 01 ஆகிய தினங்களில்
பாரிஸ் நகரில் அமைந்த யுனெஸ்கோ அமைப்பின் கலந்தாய்வு கூட்டத்தில்
விரிவாக விவாதம் நடத்தப்படும் என ஐ.நா. கழகம் தெரிவித்துள்ளது.
21.8.2011
10.20 PM
|
| தலைமுடிக்கு
ஜெல் பயன்படுத்திய பழங்கால எகிப்தியர்கள்: ஆய்வில் தகவல் |
| இங்கிலாந்து
நாட்டிலுள்ள மான்செஸ்டர் பல்கலைகழகத்தில் தொல்லியல் துறை நிபுணரான
நடாலி மேக்கிரீஷ் என்பவர் தலைமையில் எகிப்து நாட்டின் மம்மிகள் பற்றி
ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்விற்கு எடுத்து கொள்ளப்பட்ட 18
மம்மிகளில் பெரும்பாலானவை கிரேக்க மற்றும் ரோமானிய காலத்தின்படி
2,300 வருடங்களுக்கு முற்பட்டவை. அதில் மிக பழமையான மம்மியின் வயது
3,500 ஆகும். இந்த மம்மிகளில் ஆண், பெண் என்று 4 வயது முதல் 58 வயது
வரையிலானவர்கள் அடங்குவர். மைக்ரோஸ்கோபி முறையில் ஒளி மற்றும் எலக்ட்ரான்களை
பயன்படுத்தி ஆராய்ந்ததில் 9 மம்மிகளின் தலை முடியில் கொழுப்பு போன்ற
பொருள் பூசப்பட்டு இருந்தது. ஆய்வில், அது பால்மிடிக் மற்றும் ஸ்டியரிக்
வகையை சேர்ந்த கொழுப்பு அமிலங்கள் என தெரிய வந்தது. ஜெல் வடிவில்
பயன்படுத்தப்பட்ட அவை எதிலிருந்து எடுக்கப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை.
எனினும் தற்போது, எகிப்து நாட்டவர்கள் பழங்காலத்திலேயே தங்கள் தலைமுடியினை
அழகாக பராமரித்து வந்துள்ளனர் என்பதும் மம்மிகள் உருவாக்கத்திலும்
அந்நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது என்பதும் ஆய்வின் வழியாக தெரிய
வந்துள்ளது. 21.8.2011
9.36 PM
|
| ஜிப்பான்கள்
தாவிக்குதிக்கும் ரகசியம் |
குரங்குகள்
பலவிதம். ஏப் இனத்தை சேர்ந்த ஜிப்பான் என்பது ஒரு வகை குரங்கு. இவற்றின்
கைகள் வெள்ளையாக இருப்பதனால் இது வெள்ளைக்கை ஜிப்பான் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஜிப்பான்கள் தரையிலிருந்து மேலெழும்பி சுமார் 3 மீட்டர் உயரம்
தாவிக்குதிக்கும் திறன் பெற்றது. மனிதர்களுக்கு உடம்பில் 11 சதவீதம்
கைகளின் எடை. ஆனால், ஜிப்பான்களுக்கு இது 17 சதவீதமாம். எனவே, தங்களது
பலம் வாய்ந்த கைகளை அசைத்து, வீசி ஒரு அசுர பலத்தை ஏற்படுத்தி இவை
தாவிக்குதிக்கின்றன. அப்படி செய்யும் போது அவற்றின் உடல் எடையின்
புவி மையம் கைகளுக்கு வந்து விடுகிறதாம். அதுவே இவை இவ்வளவு உயரம்
தாவிக்குதிப்பதற்கு தேவையான சக்தியை தருகிறது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
ஃப்ளீ என்பது ஒரு வகையான ஒட்டுண்ணிகள். இவை 1.5 மில்லி மீட்டரிலிருந்து
3.3 மில்லி மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை. ஆனால், ஆச்சரியமாக இவை
தங்களது உடலின் நீளத்தை விட 200 மடங்கு தூரத்தை அதாவது, 18 செ மீ
உயரத்தை அல்லது 33 செ மீ நீளத்தை, ஒரே தாவலில் தாவி விடும். மிக
அதிக உயரம் துள்ளிக்குதிக்கும் உயிரினம் இது தான். பொதுவாக நீண்ட
தூரம் தாவிக்குதிக்கும் பிற உயிரினங்கள் வெட்டுக்கிளி மற்றும் ஃப்ளீ.
ஆனால், இவை தாவிக்குதிப்பதற்கும் இந்த ஜிப்பான்கள் தாவிக்குதிப்பதற்கும்
நிறைய வித்தியாசமிருப்பதாக இவற்றை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
20.8.2011
10.15 AM
|
| வெளவால்களை
பற்றிய ஒரு ருசிகர ஆராய்ச்சி |
வெளவால்கள்
எவ்வாறு திசைகளை கண்டுபிடித்து பறக்கின்றன என்பதை கண்டறிய ஒரு ஜி.பி.எஸ்.
கருவியை ஜெருஸலம் பல்கலை கழக விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். தங்களது
இலக்குகளை திறம்பட நிர்ணயம் செய்வதில்
வீட்டுப்புறாக்களை விட பழ வெளவால்கள்
திறமையானவை என இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எகிப்திலுள்ள பழ வெளவால்கள், மலைகள் மற்றும் மக்கள் குடியிருப்புக்களில்
தெரியும் வெளிச்சம் போன்றவற்றை அடையாளமாக வைத்தே வேறிடத்துக்கு செல்லவோ
அல்லது மீண்டும் அதே இடத்துக்கு திரும்பி வரவோ செய்கின்றனவாம். வெளிச்சம்
இல்லாத காலங்களில் அவை ஏதோ ஒரு உள்ளுணர்வின் அடிப்படையில் தங்களது
இலக்குகளை மிக துல்லியமாக கணிக்கும் ஆற்றல் பெற்றவை என இந்த ஆராய்ச்சியாளர்கள்
கூறுகின்றனர்.
சில வெளவால்களின் மீது ஒரு ஜி.பி.எஸ் கருவியை இணைத்து அவற்றை ஒரு
குறிப்பிட்ட இடத்திலிருந்து பறக்க விட்டார்கள். அவை சுமார் 25 கிலோமீட்டர்
தூரத்திலுள்ள ஒரு பழ மரத்திற்கு பறந்து சென்று மீண்டும் புறப்பட்ட
இடத்திற்கே வந்து சேர்ந்தன. அதிசயமாக, அதே போன்ற பழ மரங்கள் வெளவால்கள்
பறந்து சென்ற வழியில் வெகு அருகில் இருந்தாலும் அவை தாங்கள் வழக்கமாக
செல்லும் ஒரு குறிப்பிட்ட மரத்திற்கே சென்று வந்தது தெரிய வந்தது.
இன்னும் சுவாரசியமாக, பட்டினியாய் சிலவற்றையும் இறையெடுத்த சில வெளவால்களையும்
தங்களது இருப்பிடத்தைவிட்டு வெகு தொலைவுக்கு கொண்டு சென்று பறக்க
விட்ட போது, இறையெடுத்தவை தங்களது சரியான இருப்பிடத்துக்கும், பட்டினியாய்
இருந்தவை வழக்கமாக செல்லும் பழ மரங்களுக்கு சென்று பின்னர் தங்களது
இருப்பிடத்துக்கு திரும்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது. |
| டிராகன்
விண்கலன் நவம்பர் மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடம் செல்கிறது |
| விண்வெளியில்
மிக பெரிய சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடம் அமையவுள்ளது. 1998 ல் தொடங்கப்பட்ட
இந்த ஆய்வுக்கூட அமைப்புப்பணி 2012 முடியும் என திட்டமிடப்பட்டுள்ளது.
தாவரம் மற்றும் மனிதர்கள் குறித்த ஆய்வுகளும் வானியல், புவியியல்
குறித்த ஆய்வுகளும் நடத்துவதற்காக பயன்பட இருக்கிற இந்த ஆய்வுக்கூடம்
2028 ஆம் ஆண்டு வரை செயல்படத்தக்க வகையில் அமையவுள்ளது. இதன் அமைப்புப்பணிகளுக்கு
தேவையான விண்கலங்களை இதுவரை அமெரிக்காவின் நாசா நிறுவனம் தயாரித்து
வழங்கி வந்தது. நாசா தனது விண்கல தயாரிப்புப்பணிகளை தற்போது நிறுத்திக்கொண்டதனால்,
இந்த இன்டர்நேஷனல் விண்வெளி ஆய்வுக்கூடம் அமைக்கும் பணிகளுக்கு இடையூறு
ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை சரி செய்ய ஸ்பேஸ் எக்ஸ் என்னும் தனியார்
நிறுவனம் விண்கலங்களை தயாரித்து வழங்க முன் வந்துள்ளது. இதற்கான
அனுமதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. விண்வெளி
ஆய்வுப்பணியில் இது போன்ற ஒரு தனியார் நிறுவனம் பங்கு பெறுவது இதுவே
முதல் முறை என்று கூறப்படுகிறது. ஸ்பேஸ் எக்ஸ்ஸின் முதல் தயாரிப்பான
டிராகன் விண்கலன் எதிர் வரும் நவம்பர் மாதம் விண்வெளியில் செலுத்தப்பட்டு
அங்கு ஆய்வுக்கூடத்துடன் இணைக்கப்படும் என தெரிகிறது.
|
| விண்வெளியில்
ஓட்டல் அமைக்க ரஷ்யா திட்டம் |
விண்வெளியில் செயற்கை முறையில் ஓட்டல்
ஒன்றை நிர்மாணிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. பூமியிலிருந்து 217
மைல்கள் உயரே அமையவிருக்கும் இந்த ஓட்டலில் ஒரு நேரத்தில் 7 பேர்
தங்கும் வகையில் நான்கு அறைகள் மற்றும் பூமி கீழே சுற்றுவதை எளிதாக
பார்க்கும் வகையில் அமைந்த பெரிய ஜன்னல்கள் ஆகியவை இடம் பெறும்.
ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் உதவியுடன் 2 நாட்கள் பயணம் செய்து இதனை
அடையலாம். விண்வெளி சுற்றுலா செல்ல விரும்பும் பணக்காரர்கள், விண்வெளி
ஆராய்ச்சி மேற்கொள்வோர் ஆகியோருக்கு ஏற்ற வகையில் உருவாகும் இதில்
5 நாட்கள் தங்குவதற்கு 1 லட்சம் முதல் 5 லட்சம் பவுண்டுகள் வரை செலவாகும்.
மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரியும் விண்வெளி வீரர்கள்
அவசர காலத்தில் பூமிக்கு திரும்புவதற்கு பதிலாக தங்குமிடமாகவும்
இந்த ஓட்டல் இருக்கும். இதனை ஆர்பிடல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம்
உருவாக்குகிறது. வரும் 2016-ம் ஆண்டிற்குள் இதன் பணிகள் முடிவு பெறும்
என எதிர்பார்க்கப்படுகிறது. |
| போக்குவரத்து
பிரச்சினைகளை தீர்க்க புதியவகை ரோபோக்கள் |
அமெரிக்காவின்
மிச்சிகன் பல்கலை கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கிய ரோபோ ஒன்று
மனிதர்களைப்போலவே நடக்கவும் ஓடவும் செய்கிறது. மேபெல் என்று பெயரிடப்பட்ட
இந்த ரோபோ மணிக்கு 6.8 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் திறன் பெற்றது.
ஜெஸ்ஸி க்ரிஸ்ஸில் மற்றும் ஜோனதன் ஹர்ஸ்ட் என்ற இருவர் இந்த ரோபோவை
வடிவமத்தவர்கள். அதன் பின், கவுசில் ஸ்ரீநாத் என்ற இந்திய முதுகலை
பட்டதாரியும் ஹேவொன் பார்க் என்ற மற்றொரு விஞ்ஞானியும் இணைந்து மேபெலுக்கு
ஓடக்கற்றுக்கொடுத்தார்கள். மேபெல் ஒரு பெண்ணைப்போல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு பெண்ணின் உடற்கூறு மற்றும் அமைப்பை ஒத்துள்ள மேபெல்லின் கால்கள்
ஓடுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. இந்த ரோபோவின் மீதான அடுத்தகட்ட
ஆராய்ச்சியில், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருப்பவர்களை
எழுந்து நடக்க வைக்கும் தொழில் நுட்பத்தை கண்டுபிடிப்பது தான் என
இதனை வடிவமைத்தவர்கள் கூறுகின்றனர். அதே நேரம், ஒரு சூப்பர் மேனைப்போல்
விண்ணில் தாவிப்பறக்கும் ஆற்றல்
கொண்ட ரோபோக்களை வடிவமைத்து ஆபத்துக்காலங்களில் மீட்புப்பணிகளுக்கு
பயன்படுத்தவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மேபெல்லை அடுத்து இதே வரிசையில் உருவாகவுள்ள ரோபோக்கள் விலங்குகளைப்போல்
விரைந்து ஓடும் என்று கூறப்படுகிறது. இந்த வகை ரோபோக்கள் போக்கு
வரத்து பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக அமையுமென்று கவுசில் ஸ்ரீநாத்
கூறியுள்ளார். இந்த ரோபோக்களின் மீது மனிதர்கள் குதிரை சவாரி செய்வது
போல் பயணம் செல்லலாம். அதிக பொருட்செலவில் சாலைகள் அமைக்கவோ வாகனங்களை
தயாரிக்கவோ தேவையில்லை என்பதனால் போக்கு வரத்து பிரச்சனை சுலபமாக
தீர்க்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
|
| விண்வெளியில்
உயரங்களை துல்லியமாக கணிக்க இயலாத மனித மூளை |
வரை
படங்களையும் இடங்களையும் பூமியில் சரியாக புரிந்து கொள்ளும் மனிதன்,
விண்வெளியில் ஓரிடத்தின் லட்டிட்யூட் மற்றும் லாங்கிடியூட் போன்றவற்றை
சரியாக புரிந்துகொள்வதில்லையாம். இது விண்வெளி வீரர்களுக்கு பிரச்சனை
தரும் விஷயம் என்பது அனுபவ உண்மை. லண்டன் யுனிவர்ஸிடி காலேஜை சேர்ந்த
ஆராய்ச்சியாளர்கள் இதனை ஒரு ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். மனித
மூளையில் ஹிப்போகேம்பஸ் எனப்படும் செல்கள் உள்ளன. ஒரு வரைபடத்தை
புரிந்து கொள்ளும் திறனை மனிதனுக்கு தருகிற இந்த செல்களே மேற் சொன்ன
ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உயரமான கம்பம் ஒன்றில் ஒரு எலியை
ஏற வைத்து, அது எவ்வளவு உயரத்தில் நிற்கிறது என்பதை கூறும்படி ஆராய்ச்சியில்
பங்கு பெற்றவ்ர்களிடம் கேட்கப்பட்டது. அவர்களால் அந்த உயரத்தை உத்தேசமாகக்கூட
கணிக்க முடியவில்லை என்பது தெரியவந்தது. விண்வெளியில் தட்டையான பகுதிகளை
சரியாக கணிக்க முடிகிற மனித மூளையினால் முப்பரிமாணம் கொண்ட உயரத்தை
சரிவர திட்டமிடமுடியவில்லை என்பது தான் இவர்களது முடிவு. |
| துணைக்கோள்
இல்லாவிட்டாலும் கிரகங்களுக்கு பாதிப்பில்லை |
அமெரிக்க
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், பூமி அதன் அச்சில் உள்ள நிலைப்பாடு
குறித்து இதாஹோ பல்கலைகழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், பூமிக்கு
துணைக்கோள் இல்லாத நிலையிலும் உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதில்லை
என தெரிய வந்துள்ளது. மேலும் மற்ற கோள்களுக்கும் துணைக்கோள் என்பது
அவசியமில்லை என்றும் அதனால் கோள்களின் நிலைத்தன்மையில் பாதிப்பு
ஏற்படாது என்றும் அது தெரிவிக்கின்றது. இதுவரையில், துணைக்கோள் இல்லையெனில்
பூமி தன் அச்சிலிருந்து சிறிது விலக நேரிடும் என்றும், அதனால் சூரிய
ஒளி துருவ பகுதிகளில் விழுந்து பருவகால நிலைகளில் பெரிய மாற்றம்
நிகழும் எனவும் எனவே உயிரினங்களின் வாழ்க்கை முறை பாதிக்கப்படும்
என்றும் அறிவியலாளர்கள் நம்பி வந்துள்ளனர். தற்போது, இந்த ஆராய்ச்சி
முடிவால் பூமி அதனுடைய துணைக்கோள் இன்றியும் தன் அச்சில் சீராக இயங்கும்
என தெரிய வந்துள்ளது. |
| ஒருவருக்கு
அறிவாற்றல் எங்கிருந்து வருகிறது? |
|
வளரும் விதமும் கல்வியறிவும்
தான் ஒருவரது அறிவாற்றலுக்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும், சமீபத்திய
ஆராய்ச்சி ஒன்று அறிவுத்திறனில் பாதி பாரம்பரியமாக பெற்றோரிடமிருந்தே
வருகின்றது என்று கூறுகிறது. இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தை சேர்ந்த
ஏறத்தாழ 3500 பேரை இந்த ஆய்வுக்குட்படுத்தி ஒருவரது அறிவுத்திறன்
அல்லது அறிவுத்திறனின்மை இரண்டுமே பெற்றோரிடமிருந்தே வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதே போல் கிஸ்டலைஸ்டு இண்டெலிஜென்ஸ் என்று சொல்லப்படும் ஒருவரது
தனித்திறன்களுக்கு காரணமாய் அமைவது அவரது ஜீன்களே! ஒரு சிக்கலான
சூழ்நிலையில் பகுத்தாயும் திறன் மற்றும் கற்பனைக்கப்பாற்பட்ட விஷயங்களை
புரிந்து கொள்ளும் திறன் இவையெல்லாம் ஒருவரது DNA
வின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை அறிவுக்கு ஃப்ளூய்ட் டைப் இண்டெல்லிஜென்ஸ் என்று பெயர்.
இந்த ஆய்வினை மேற்கொண்டது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து இன்ஸ்டிடியுட்
ஆஃப் மெடிக்கல் ரிஸர்ச் என்ற அமைப்பு.
|
| சிஸ்டிக்
பைப்ரோசிஸ் வியாதிக்கு விரைவில் புதிய மருந்து: எப்.டி.ஏ. பரிசீலனை
|
| சுவாசம்
மற்றும் செரிமான உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் வியாதி சிஸ்டிக்
பைப்ரோசிஸ் என அழைக்கப்படுகிறது. மரபு கோளாறினால் ஏற்படும் இந்த
வியாதிக்கு காரணமான மரபணு கடந்த 1989ம் ஆண்டு ஆராய்ச்சியாளர்களால்
கண்டறியப்பட்டது. தற்பொழுது, நோயினை தீர்க்க நம்பிக்கை ஏற்படும்
வகையில் அமைந்த இந்த ஆய்வின் அடிப்படையில், நோய்க்கான மருந்தினை
பற்றி இந்திய உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம் (எப்.டி.ஏ.)
இந்த வருடத்திற்குள் இறுதி முடிவெடுக்கும் என தெரிகிறது.
|
| எச்.ஐ.வி.
பாதிப்பை கண்டறிய புதிய கருவி |

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அமைந்துள்ள கொலம்பிய பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்கள் எச்.ஐ.வி. பாதிப்பை கண்டறிவதற்காக பிளாஸ்டிக்கால்
ஆன கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இக்கருவி 100 சதவீதம் துல்லியமாக
செயல்படுவதுடன் 15 நிமிடங்களில் முடிவை தெரிவித்து விடுகிறது. இதற்காகும்
செலவும் (ஒரு டாலர்) மிக குறைவாகும். கிரெடிட் கார்டு வடிவிலான இந்த
கருவி அதிக வரவேற்பை பெறும் என தெரிகிறது. |
| வியாழன்
கோளை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட நாசா விண்கலம் ஜுனோ |
அமெரிக்காவின்
நாசா விஞ்ஞானிகள் புளோரிடா மாகாணத்தில் கேப் கேனவெரல் என்ற இடத்திலிருந்து
ஜுனோ என்ற பெயரிடப்பட்ட விண்கலம் ஒன்றை வியாழன் கிரகத்தை பற்றி ஆய்வு
மேற்கொள்ள அனுப்பியுள்ளனர். இது மணிக்கு சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம்
மைல் வேகத்தில் பயணித்து கோள்களின் அரசன் என்றழைக்கப்படும் வியாழனின்
மையப்பகுதிக்கு சென்றடையும். பின்னர் அதன் உட்புற பகுதிகள், வியாழனின்
வளிமண்டலம் மற்றும் அதன் காந்தப்புல வலிமை ஆகியவை பற்றி ஆய்வு மேற்கொள்ளும்.
இந்த ஆய்வின் தலைவர் ஸ்காட் போல்டன் கூறும் போது, சூரிய குடும்பம்
உருவானது எவ்வாறு என்பது உள்பட பல ரகசியங்கள் வியாழன் கோளில் மறைந்துள்ளன.
எனவே இந்த ஆராய்ச்சியின் மூலம் பல அரிய தகவல்கள் கிடைக்கப்பெறும்
என தெரிவித்தார். இந்த ஆய்வுக்கு 1.1 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது.
இந்த விண்கலத்துக்கு ஜுனோ என்று பெயரிடப்பட்டது சற்று சுவாரசியமானது.
ரோம பெண் கடவுளான ஜுனோ வியாழனின் மனைவி ஆவார். இவர் வியாழனை பற்றி
உளவு பார்த்ததாக கூறப்படுவதுண்டு. அதனடிப்படையில் இந்த விண்கலத்திற்கு
ஜுனோ என பெயர் வைத்துள்ளனர்.
|
| விரல்ரேகை
மூலம் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் புதியமுறை |
குற்றப்புலனாய்வில் முக்கிய பங்கு வகிப்பது குற்றவாளியின் கைரேகை.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில் நுட்பம் ஒன்று கைரேகையை வைத்து
குற்றவாளி குற்றத்தில் ஈடுபடுவதற்கு முன் போதை மருந்து உட்கொண்டிருந்தாலும்,
வெடி பொருட்களை கையாண்டிருந்தாலும் அதனை காட்டிக்கொடுத்து விடுகிறது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷீஃபீல்டு ஹாலம் பல்கலைகழக விஞ்ஞானிகள் இதனை
கண்டுபிடித்துள்ளனர். குற்றவாளியின் பழக்க வழக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை
துல்லியமாக காட்டிக்கொடுத்துவிடுகிறது இந்த புதிய கைரேகை ஆய்வு.
இன்னும் மூன்றாண்டுகளுக்குள் அறிமுகப்படுத்தப் படவுள்ள இந்த கண்டுபிடிப்பு
குற்றப்புலனாய்வில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.
இதுவரையிலும் ரேகையிலுள்ள கோடுகளை குற்றவாளிகளின் ரேகையுடன் ஒப்பிட்டு
பார்ப்பது வழக்கம். விரல்களால் தொடும் பொருட்களின் நுண்ணிய துகள்கள்
விரலில் ஒட்டிக்கொள்ளுமாம். அது மட்டுமல்லாமல், உடலில் சுரக்கும்
திரவங்கள் கூட விரல்களில் தங்கி விடுவதுண்டாம். எனவே, ஒருவரது விரல்
ரேகையிலிருந்து அவர் என்னென்ன பொருட்களை தொட்டிருந்தார் என்பது முதல்
அவரது உடல் வெளியிட்ட திரவங்கள் வரை அனைத்தையும் தெரிந்து கொள்ள
முடியும் என்கிறது இந்த ஆய்வு. |
| செவ்வாய்
கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சான்று: நாசா கண்டுபிடிப்பு |
பல ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில்
மனிதன் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா? என்று நாசா விஞ்ஞானிகளின்
ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். தற்போது செவ்வாய் கிரகத்தில் உவர்ப்புத்
தன்மை கொண்ட தண்ணீர் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் வெப்பமான பருவத்தில் சிறிதளவில் தண்ணீர் ஆங்காங்கே
தென்படுகிறது. இது உப்புத்தன்மை கொண்ட தண்ணீராக இருப்பதால் ஆவியாகி
மறைந்து போகாமல் தேங்கி நிற்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன என்றும்,
பனிக்கட்டி நிலையை விட திரவவடிவில் இருப்பது உயிர்களின் வாழ்வாதாரத்திற்கு
மிக முக்கிய அம்சமாக கருதப்படுகிறது என்றும் நாசா ஆராய்ச்சி மையத்தின்
குழுவில் உள்ள நாசா விஞ்ஞானி கிறிஸ்டன்சென் கூறியுள்ளார். |
| மில்லியன்
ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கு இரு நிலவுகள்: ஆய்வாளர்கள் கருத்து |
| சூரிய
மண்டலத்தில் உள்ள பூமியினை சுற்றி துணைக்கோளாக நிலவு சுற்றி வருகிறது.
ஆனால் கலிபோர்னிய பல்கலைகழக ஆய்வாளர்களின் தகவல்படி, பூமிக்கு இரு
நிலவுகள் இருந்துள்ளன என தெரிய வருகிறது. அவர்களது கருத்தின்படி,
பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரக அளவில் ஒரு
பருப்பொருளானது பூமியின் மீது மோதி பல சிதைவுகளாக சிதறி போனது. பின்
ஈர்ப்பு விசையின் காரணமாக சிதைவுகள் இணைந்து நிலவு மற்றும் அதை விட
சிறிய மற்றொரு நிலவு தோன்றியுள்ளது. இவை சுற்று வட்ட பாதையில் பயணித்த
பொழுது ஒன்றுடன் ஒன்று மோதல் நடைபெற்றுள்ளது. மெதுவாக நடைபெற்ற அந்த
மோதலால் தற்போதுள்ள நிலவில் பெரிய பள்ளங்கள் ஏதும் காணப்படவில்லை.
ஆனால் மலை முகடுகள் போன்ற பகுதிகள் ஏற்பட்டுள்ளன என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
|
| நோயாளிகளை
தூக்கி செல்ல உதவும் புதிய ரோபோ: ஜப்பானில் கண்டுபிடிப்பு |
| தொழில்நுட்ப
துறையில் மிக வேகமாக முன்னேறி வரும் ஜப்பான் சமீபத்தில் புதிய வகை
ரோபோ ஒன்றை தயாரித்துள்ளது. ரிபா2 என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ
ரப்பர் சென்சார்கள், அனைத்து பக்கங்களிலும் இயங்க சக்கரங்கள் மற்றும்
ஸ்பிரிங்குகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. கட்டளைகளின் அடிப்படையில்
செயல்படும் இது அதிகபட்சமாக 80 கிலோ கிராம் எடையுள்ள மனிதர்களை தூக்கும்
திறன் கொண்டது. பெரும்பாலும் படுத்த நிலையில் இருக்கும் நோயாளிகளை
சக்கர நாற்காலி மற்றும் படுக்கைக்கு தூக்கி செல்வதற்கு பயன்படுகிறது.
மனிதர்களை மென்மையாக கையாளும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
|
| வெஸ்டா
எரிகல்லை ஆய்வு செய்யும் டான் விண்கலம் |
அமெரிக்காவின்
நாசா ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2007ம் ஆண்டு டான் என்ற விண்கலத்தை
விண்ணிற்கு அனுப்பினர். அது எரிகல் பற்றிய ஆய்வில் இதுவரை சிரீஸ்
மற்றும் வெஸ்டா ஆகியவற்றை ஆராய்ந்துள்ளது. பூமியிலிருந்து 117 மில்லியன்
மைல்கள் தொலைவில் உள்ள வெஸ்டாவின் செயல்பாடுகள் தற்போது புகைப்படம்
எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 500 புகைப்படங்களை டான்
எடுத்து தள்ளியுள்ளது. இந்த புகைப்படங்களில் வெஸ்டா எரிகல்லில் உள்ள
பனி மனிதன் போன்று காணப்படும் குழிகள் உட்பட 3 பெரிய பள்ளங்கள் குறிப்பிடத்தக்கவை
ஆகும். |
| மனித
மூளை பரிணாம வளர்ச்சியின் உச்சத்தை அடைந்து விட்டது: ஆராய்ச்சியில்
முடிவு |
| இங்கிலாந்து
நாட்டில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மனோதத்துவ பேராசிரியர்
எட் புல்மோர் மனித மூளையின் வளர்ச்சி பற்றி ஆய்வு மேற்கொண்டார்.
அதில், மனிதன் தனது மூளையின் ஆற்றலால் விண்வெளிக்கு விண்கலங்கள்
அனுப்புதல், கணினி செயல்பாடு, செயற்கை உடல் உறுப்புகள் பயன்பாடு
என பல்வேறு ஆச்சரியமூட்டும் செயல்களை செய்து வருகிறான். எனினும்
அதற்கு துணைபுரியும் மூளையின் பரிணாம வளர்ச்சியில் மேலும் முன்னேற்றம்
ஏற்பட வாய்ப்பில்லை என அவர் கூறுகிறார். தொடர்ந்து அவர் கூறுகையில்,
மனிதன் எடுத்து கொள்ளும் ஆற்றலில் பெரும்பங்கு மூளைக்கே அதிகமாக
செலவிடப்படுகிறது. அதிலும், பின்னி பிணைந்து நெருக்கமான நரம்பு மண்டலங்களை
கொண்ட மூளையானது மிக விரைவாக கட்டளைகளை உடனுக்குடன் உறுப்புகளுக்கு
அனுப்புகிறது. அத்தகையோரே சிறந்த அறிவாளிகளாக உள்ளனர். இந்நிலையில்
மூளை மேலும் அதிக ஆற்றல் பெற்று செயல்படுவதற்கு வாய்ப்பில்லை எனவும்
அதன் பரிணாம வளர்ச்சியானது உச்சத்தை அடைந்து விட்டது என்றும் தெரிவிக்கின்றார்.
|
| டி.கே.7
எரிகல்லால் பூமிக்கு ஆபத்து இல்லை: நாசா |
அமெரிக்காவை
சேர்ந்த நாசா அறிவியலாளர்கள் கடந்த 2009-ம் ஆண்டு வைஸ் என்ற தொலைநோக்கியை
செயற்கைகோள் உதவியுடன் விண்வெளிக்கு அனுப்பினர். அது பூமியை சுற்றிலும்
இயங்கும் பல்வேறு நடவடிக்கைகளை பற்றி ஆராய்ந்து வருவதோடு எரிகற்கள்
மற்றும் நட்சத்திரங்கள் போன்றவற்றின் செயல்பாடுகளையும் அறிந்து தகவல்களை
அறிவியலாளர்களுக்கு அனுப்பி வருகிறது. ஏறக்குறைய கிடைத்த 500 வகையான
தகவல்களில் 123 அறிவியலுக்கு புதியவை. இதில் 2010 டி.கே.7 என்ற எரிகல்லும்
அடங்கும். சுமார் 200 முதல் 300 மீட்டர்கள் அகலம் கொண்ட இந்த எரிகல்லானது
டிராஜன் எரிகல் எனறும் அழைக்கப்படுகிறது. தற்போது பூமியிலிருந்து
80 மில்லியன் கி.மீ. தொலைவில் சுற்றி வரும் இதனால் பூமிக்கு ஆபத்து
இல்லை என்றும் இன்னும் 10 ஆயிரம் வருடங்களுக்கு தனது பாதையில் நிலையாக
சுற்றி வரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். |
| அணு
பொருள் பற்றிய ஹிக்சின் கோட்பாட்டிற்கு அடுத்த வருட இறுதிக்குள் தீர்வு |
|
ஸ்காட்லாந்து
நாட்டை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ். இவர் கடந்த 1964-ம்
ஆண்டு, இயற்பியலின் ஸ்டாண்டர்டு மாடல் என்ற பகுதியை அடிப்படையாக
கொண்டு ஓர் அணுவிற்கு நிறையை தரும் கண்ணுக்கு புலப்படாத பொருள் பற்றி
ஆய்வு மேற்கொண்டார். அந்த பொருள் அறிவியல் உலகில் கடவுள் பொருள்
(காட் பார்டிகிள்) என அழைக்கப்படுகிறது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட
தியரியை, செய்முறை விளக்கத்தின்படி செயல்படுத்திட கடந்த 2008ல் சோதனை
நடத்தப்பட்டது. இதற்காக பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய இரு
நாடுகளுக்கிடையே பூமியில் 300 அடி ஆழத்தில், அணு துகள்களை இரு கற்றைகளாக
ஒளியின் வேகத்திற்கு ஈடாக அதிக சக்தி வாய்ந்த காந்தங்களின் வழியே
பாய்ச்சினர். பின்னர் அவை ஒன்றுடன் ஒன்று மோதச்செய்யப்பட்டன. ஆனால்
இச்சோதனையில் ஹீலியம் கசிவு மற்றும் பிற காரணங்களால் ஆய்வு தடைபட்டது.
கடந்த சில வருடங்களாக தொடர்ந்த முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.
தற்போது, ஐரோப்பிய அணு ஆராய்ச்சி அமைப்பின் இயக்குநர் ரால்ப் &
டையடர் ஹியூர், "இது பற்றி அறிவியலாளர்கள் தொடர்ந்து ஆய்வு
மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான தீர்வினை நெருங்கியுள்ளோம். அடுத்த
வருட இறுதிக்குள் ஹிக்சின் தியரிக்கு சரியான விடை கிடைத்து விடும்
என்றார். இதனால் அண்டத்தில் நடைபெறும் பல்வேறு செயல்பாடுகள் மற்றும்
விண்வெளியின் கருப்பொருள் ஆகியவற்றுக்கு விளக்கம் கிடைக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
|
| 11
வகை பதார்த்தங்கள்: சமையலறையில் புதிய வரவு சூப்பர்செப் |
அறிவியல்
கண்டுபிடிப்புகளின் பயனாக மாவு அரைப்பதற்கு, துணி துவைப்பதற்கு என
பல வேலைகளை பகிர்ந்து கொள்வதற்கு இயந்திரங்கள் வந்து விட்டன. தற்போது
சமையலறைக்கு வந்துள்ள புதிய வரவு சூப்பர்செப். வறுத்தல், கொதிக்க
வைத்தல், வேக வைத்தல் என பல வேலைகளை செய்யும் இந்த நவீன கருவி ஏறத்தாழ
11 வகை உணவு பதார்த்தங்களை தயாரிக்கிறது. தேவையான சமைக்கும் பொருள்களை
அதற்கென்று உள்ள பாத்திரத்தில் போட்டு விட்டு பட்டனை தட்டி விட்டால்
போதும். சுமார் 45 முதல் 50 நிமிடங்களில் சுவையான உணவு தயாராகி விடும்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக 24 மணி நேரங்களுக்கு பின் சமையல்
செய்ய வேண்டியதை முன்கூட்டியே புரோகிராம் செய்யும் வசதி உள்ளது.
மேலும் உணவு தயாரானவுடன் அதனை வெளியே எடுக்காமல் விட்டு விட்டாலும்
பொறுப்பாக நீண்ட நேரம் உணவை சூடாக வைத்து கொள்ளும் பணியை மேற்கொள்கிறது.
சிறிய கிண்ணம், நீரை சூடாக்க பாத்திரம் மற்றும் சமையல் புத்தகம்
ஆகியவற்றுடன் விற்பனைக்கு வரும் இதன் சிறப்பம்சங்களை பட்டியலிட்டால்,
தேவையல்லாத இடத்தை அடைக்கும் அதிகப்படியான பாத்திரங்களை சமையலறையில்
அடுக்க வேண்டாம். சமைத்து முடிக்கும் வரை அங்கேயே இருக்க வேண்டாம்.
மேலும் இதன் வடிவமைப்பு எங்கும் கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது
ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். |
| ஆண்களின்
மலட்டு தன்மைக்கு காரணமான புரோட்டின் |
ஆண்களின்
விந்தணுவை கவசம் போல் காத்து வருகிறது ஒருவிதமான புரோட்டீன். இதற்கு
DEFB126 என
பெயர். இந்த வகை புரோட்டீன் தான் விந்தணு பெண்களின் கரு முட்டையை
சரியாக சென்று சேர்வதையும் உறுதிப்படுத்துகிறது. இந்த புரோட்டீனின்
செயல்பாடுகள் குறைந்து போவது ஆண் மலட்டுத்தன்மைக்கான பல காரணங்களுள்
ஒன்று என அமெரிக்காவின் யூ சி டேவிள் பொடேகா மரைன் லாபரட்டரீஸ் மற்றும்
சுற்று சூழல் சுகாதார மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆய்வில், ஆண்களில் 25 சதவீதம் பேருக்கு இந்த புரோட்டின் குறைபாடு
இருப்பது தெரியவந்துள்ளது. |
| மனிதனின்
தோற்றம் குறித்து ஆராய்ச்சியில் புதிய தகவல் |
விலங்குகளிலிருந்து
மாறுபட்டு, மனிதன் எப்போது தரையிலிருந்து கைகளை தூக்கி எழுந்து,
நிமிர்ந்து கால்களை ஊன்றி நிற்கவும், நடக்கவும் ஆரம்பித்தான்? இதுவரையிலும்
கிடைத்த ஆதாரங்களின்படி சுமார் 1.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு
என்பதுதான் நாமறிந்த தகவல். ஆனால் 3.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே
கால் தடம் பதித்த மனிதன் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றது.
தான்சேனியாவிலுள்ள லேடோலி என்னுமிடத்தில் பாறைப்படிமங்களில் 11 மனித
கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கால் தடங்கள் சிம்பன்சிக்கள்,
உரங்க்-உட்டான்கள் மற்றும் கொரில்லாக்களின் பாத அமைப்பிலிருந்து
வேறுபடுகின்றன. இதற்கு முன்பு இதே போல் காணப்பட்ட காலடி சுவடுகள்
ஒன்றே ஒன்றாக இருந்ததனால் அவற்றை ஒப்பிட்டுப்பார்ப்பது இயலாமல் போயிற்று.
ஆனால், தற்போது கிடைத்துள்ள 11 சுவடுகளினால் ஒப்பிட்டுப்பார்ப்பது
சுலபமாகி இருக்கிறது. இன்றைய நாகரீக மனிதனுக்கு இதுவே முன்னோடி என்று
கருதப்படுகிறது.
ஆதிமனிதன் இரண்டே பிரிவு தான் என்பது நாம் அறிந்தது. ஒன்று ஆப்பிரிக்காவை
மையமாக கொண்டது. மற்றொன்று நியாண்டர்தாலை ஆதாரமாகக்கொண்டது. தற்போது
கண்டுபிடிக்கப்பட்ட ஆதி மனிதனின் எக்ஸ் க்ரோமோசோம்கள் நியாண்டர்தால்
மனிதனிடமிருந்து தோன்றியிருக்க வேண்டும் எனவும் அது நிச்சயமாக ஆப்பிரிக்காவை
சேர்ந்த மனிதனுடையதல்ல என்றும் ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இந்த
இரண்டு பிரிவும் ஒரு கால கட்டத்தில் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்க
வேண்டுமெனவும் அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.
நியாண்டர்தால் மனிதனின் முன்னோர்கள் சுமார் 4 லட்சத்திலிருந்து 8
லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி தற்போதைய
பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் ரஸ்யா பகுதிகளில் கடந்த 30
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்திருக்க வேண்டும் என அந்த
ஆய்வில் மேலும் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் தற்போதைய நாகரீக
மனிதன் சுமார் 50 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்
ஆப்பிரிக்காவிலிருந்துதான் வெளியேறியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
உடல் பலமும், பகுத்தறிவும் பெற்றிருந்த நியாண்டர்தால் மனிதனுக்கு
தற்போதைய நாகரீக மனிதன் தோன்றிய இனத்தோடு தொடர்பு இருந்ததா? என்ற
கேள்விக்கு ஆம் என்பது தான் பதில். நியாண்டர்தால் மனிதனும் தற்கால
நாகரீக மனிதனும் ஒருவ்ருடன் ஒருவர் இரண்டற கலந்து போனவர்கள் தான்
என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கருத்து. |
| பறக்கும்
காருக்கு அமெரிக்க அரசு அனுமதி |
அமெரிக்க
அரசாங்கம் டெரபியூஜியா என்ற பெயர் கொண்ட பறக்கும் காருக்கு அனுமதி
அளித்துள்ளது. இந்த கார் விமானம் போன்று வானில் பறக்கும். காராக
பயணிக்கும் பொழுது இதன் உச்ச வேகம் மணிக்கு 65 மைல்கள் மற்றும் பறக்கும்
பொழுது மணிக்கு 115 மைல்கள் வேகத்தில் செல்ல கூடியதாகும். இரண்டு
பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த காரின்
இரு இறக்கைகளும் சேர்ந்து அதன் நீளம் 28 அடி 6 இஞ்ச் ஆக உள்ளது.
மேலும், இறக்கைகளை 15 வினாடிகளில் மடித்து பழைய நிலைக்கு கொண்டு
வர இயலும். சுமார் 20 மணி நேர பயிற்சியில் இதனை சுலபமாக இயக்க முடியும்.
5 வருடங்களில் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படும் அதே வேளையில்
இதற்கு அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளிலும் அமோக வரவேற்பு இருக்கும்
என எதிர்பார்க்கப்படுகிறது. |
| சுனாமி
தாக்குதலை முன்கூட்டியே கண்டறிய புதிய முறை கண்டுபிடிப்பு |
|
அமெரிக்காவின்
இல்லினாய்ஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் மகேலா என்பவர் தலைமையில்
சுனாமி தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு
முடிவுகள் தெரிய வந்தன. கடந்த மார்ச் மாதம் ஜப்பான் நாட்டில் சுனாமி
பேரலைகள் அதி பயங்கர தாக்குதல்களை நடத்தின. சுனாமி வருவதற்கு முன்பு
பூமியிலிருந்து 250 கி.மீ. உயரத்தில் காற்று மண்டலத்தில் சில மாறுபாடுகள்
ஏற்பட்டுள்ளன. வழக்கமாக சூரிய கதிர்கள் வாயு மண்டலத்தில் காற்று
மூலக்கூறுகளை ஊடுருவி செல்லும் பொழுது உள்ள காற்றின் அடர்த்தியும்,
சுனாமியின் போது காற்றின் அடர்த்தியில் ஏற்படும் மாற்றமும் கண்டறியப்பட்டன.
இதனை அறிவியலாளர்கள் வரைபடம் வழியே விளக்கியுள்ளனர். வரைபடத்திலுள்ள
சிவப்பு நிற கோடுகள் சுனாமி தாக்குதலை குறிக்கிறது. எனவே, சுனாமி
வருவதற்கு முன்பே காற்றில் ஏற்படும் இத்தகைய மாற்றத்தை கருத்தில்
கொண்டு அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும்
என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
|
| பார்வை
இல்லையா... இனி கவலை இல்லை |
பார்வை
குறைபாடு உடையவர்களுக்கான அபூர்வ கண்ணாடி ஒன்றை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை
கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு அரிய கண்டுபிடிப்பு.
இந்த கண்ணாடியின் பிரேமிலுள்ள ஸ்குருக்களே ஒரு விதமான காமிராக்களால்
ஆனது. இந்த காமிராக்கள் ஒரு மொபைல் போன் அளவிலான சிறிய கம்ப்யூட்டருடன்
இணைக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய கம்ப்யூட்டரை பாக்கெட்டிலேயே வைத்துக்கொள்ளலாம்.
இந்த கண்ணாடியின் முன் வரும் எவரையும் அல்லது எதையும் இந்த காமிராக்கள்
படம் பிடித்து கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. கம்ப்யூட்டர் அதனுடன்
இணைந்த கண்ணாடியின் உள்பக்கம் அமைந்துள்ள எல் ஈ டி க்களை ஒளிரச்செய்வதன்
மூலம் கண்ணாடியை அணிந்திருக்கிறவருக்கு தனக்கு எதிரே வருபவரை அல்லது
வருபவற்றை அறிவுறுத்துகிறது. இந்த கண்ணாடியை பயன்படுத்தி பஸ் நம்பர்கள்,
ரயில்வே அட்டவணை போன்றவற்றை தெரிந்து கொள்ளமுடியும் என்பது இதன்
சிறப்பு. இந்த கண்ணாடியை பயன்படுத்துபவர்கள் ஏ டி ஏம் வசதியைக்கூட
சிரமமின்றி பயன்படுத்த முடியுமென்று இதனை வடிவமைத்த விஞ்ஞானிகள்
கூறுகின்றனர். 2014 ல் சந்தைக்கு வர இருக்கிற இந்த கண்ணாடி நிரந்தர
பார்வை குறைபாடு உடையவர்களுக்கு மட்டுமல்ல முதுமை காரணமாக பார்வை
குறைபாடடைந்தவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரியவருகிறது.
இதனை குறைந்த விலைக்கு வழங்கவும் அதிக எடை இல்லாததாக செய்யவும் மேற்கொண்டு
ஆராய்ச்சி நடந்து வருகிறது. |
| எரிகல்
பாதிப்பை சந்திக்கும் அபாயம் கொண்ட 10 நாடுகள் பட்டியலில் இந்தியா
|
இங்கிலாந்து
நாட்டில் அமைந்துள்ள சவுத்தாம்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிக்
பெய்லி என்ற அறிவியலாளர் பூமியின் மக்கள் தொகை அதிகமுள்ள பகுதியை
எரிகல் தாக்கும் அபாயம் உள்ளது என்று கூறுகிறார். எரிகல்லால் அதிகமாக
பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலை தனது கண்டுபிடிப்பான நியோஇம்பாக்டர்
என்ற சாப்ட்வேரின் உதவியுடன் வரிசைப்படுத்துகிறார். இதில் சீனா முதலிடத்தையும்,
இந்தோனேசியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், இத்தாலி,
பிரிட்டன், பிரேசில் மற்றும் நைஜீரியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும்
பிடிக்கிறது. ஏறத்தாழ 65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு 10 மைல்கள்
விட்டம் கொண்ட மணிக்கு 25 ஆயிரம் வேகத்தில், 100 மெகா டன்கள் விசையுடன்
பூமியின் மீது எரிகல் ஒன்று மோதியதால் டைனோசர் இனம் அழிந்து போனது
என்று கருதப்படுகிறது. வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு விசையால் தான்
பூமியின் மீது மோத இருக்கும் பெரும்பாலான எரிகற்களின் ஆபத்து தவிர்க்கப்படுகிறது
என்றும் கூறப்படுகிறது. |
| 170
ஆண்டுகள் பழமையான பீர் கண்டுபிடிப்பு |
பால்டிக் கடல் பகுதியில் உள்ளது
அலாண்ட் என்னும் தீவு. சுமார் 170 ஆண்டுகளுக்கு முன் இந்த தீவுக்கு
அருகில் கப்பல் ஒன்று மூழ்கிப்போனது. உடைந்து போன கப்பலுக்குள் இருந்து
உலகின் மிக பழமையான பீர் பாட்டில் ஒன்றை பின்லாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள்
கண்டுபிடித்தனர். துரதிர்ஷ்டவசமாக, கடல் நீர் பாட்டிலுக்குள் எப்படியோ
புகுந்திருந்ததால் பீர் கலப்படமாகிப்போனது. தற்போது பீர் தயாரிக்க
பயன்படுத்தப்படும் பொருட்களும், முறைகளுமே இந்த பழைய பீரிலும் காணப்பட்டாலும்
ஈஸ்ட் பயன்படுத்தப்படவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால்
இந்த வகை பீரை எப்படி தயார் செய்வது என்பது தெரியாமல் அவர்கள் குழப்பத்தில்
உள்ளனர். |
| பூமியை
நெருங்கும் விண்கல் |
பூமியின்
தென் முனையை நோக்கி மிக நெருங்கி வந்து கொண்டிருக்கும் விண்கல் ஒன்றை
விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். ஆபத்தான விண்கற்கள் ஏதேனும் பூமியை
நெருங்குகிறதா என்பதை கண்காணிக்கும் மெக்சிகோவைச்சார்ந்த விண்வெளி
ஆய்வு நிறுவனம் ஒன்று, கடந்த புதன் கிழமையன்று, ஒரு விஷேச தொலை நோக்கியின்
மூலம் இதனை கண்டறிந்துள்ளது. 2011 MD என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல்
வருகிற 27.06.2011 அன்று பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 11
ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு நெருங்கி வருவதாகவும் அப்போது அது
மிகவும் பிரகாசமாக தோன்றும் எனவும் தெரிகிறது. இந்த தகவலை இங்கிலாந்து
விண்வெளி ஆய்வு மையம் ஒன்று உறுதி செய்துள்ளது.
|
| செவ்வாய்
கிரகத்தில் கண்ணீர் துளி வடிவில் தீவுகள் |
அமெரிக்க
நாட்டின் டெக்சாஸ் பல்கலைகழக புவியியலாளர் லோர்னா மஸ்கர்டெல்லி என்பவர்
மேற்கொண்ட ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் காணப்படும் கண்ணீர் துளி
வடிவம் கொண்ட தீவுகள் அங்கே ஆழமான பகுதியில் நீர் இருந்ததற்கான ஆதாரத்தை
தெரிவிப்பதாக தகவலளித்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டில் செவ்வாயில்
ஆய்வு மேற்கொள்ள சென்ற ஒடிசி விண்கலம் அனுப்பிய புகைப்படங்களில்
கால்வாய்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் போன்றவை காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இத்தீவுகளின் நீளம் 3 முதல் 30 மைல்கள் தொலைவு இருக்க கூடும்
என்றும், சுமார் 1.5 முதல் 150 சதுர மைல்கள் பரப்பளவை கொண்டிருக்கும்
என்றும் கூறப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் பல இலட்சம் ஆண்டுகளுக்கு
முன்பு நீர் தோன்றியிருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை
தெரிவிக்கின்றனர்.
|
| உலகளவில்
பல சமுத்திரங்கள் வற்றி விடும்: ஆய்வாளர்கள் கருத்து |
| சமுத்திரங்கள்
பற்றி ஆய்வு மேற்கொள்ளும் சர்வதேச சமுத்திர நிபுணர்கள் குழு ஒன்று
ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் கூடி உலகில் சமுத்திரங்களின் நிலை குறித்து
தகவல் ஒன்றை வெளியிட்டனர். அதில், வளிமண்டலத்தில் அதிகரித்துள்ள
கார்பன் டையாக்சைடு வாயுவால் சமுத்திரங்களின் வெப்பநிலை உயர்ந்து
ஆல்காவின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதனால் ஆக்சிஜன் அளவு குறைந்து
நீரானது அமில தன்மை மிக்கதாக மாறி பவள பாறைகளின் பெரும் பகுதி அடுத்த
தலைமுறைகளில் முற்றிலும் மறைந்து போகும் அபாயம் உள்ளது. மேலும் மீன்
பிடித்தல் அதிகரித்து வருவதால் குறிப்பிட்ட இன மீன்களை வருங்காலங்களில்
பார்க்க முடியாத சூழல் ஏற்படும். இதனை தடுக்க கார்பன் வெளிப்பாடை
சீர்செய்வதும், அதிகப்படியான மீன் பிடித்தலை குறைத்திடவும், கடலில்
பாதுகாக்கப்பட்ட இடங்களை ஏற்படுத்தவும் மற்றும் சுற்றுபுற சீர்கேடுகளை
களையவும் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவியலாளர்கள்
தெரிவித்துள்ளனர். மாறி வரும் பருவ காலங்களால் சமுத்திரங்கள் வற்றி
விடுவதென்பது கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளதாக வரலாறு கூறினாலும்,
தற்போது, எதிர்பார்க்கப்பட்டதை விட மிக விரைவில் இம்மாற்றம் வர கூடும்
என்றும் எச்சரித்துள்ளனர்
|
| பிரான்சு
நாட்டின் அதி நவீன விமானத்தின் திட்ட வடிவம் வெளியீடு |
லண்டன்
நகரிலிருந்து டோக்கியோவிற்கு 2 மணி நேரங்களில் பயணம் செய்யும் வகையில்
மேக் 4 என்ற பெயரிடப்பட்ட அதி நவீன விமானத்தை தயாரிப்பதற்கான திட்ட
முன் வடிவை பிரான்சு நாட்டின் ஏர் பஸ் என்ற விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த விமானத்தில் ஏறத்தாழ 100 பேர் வரை பயணம் செய்ய முடியும். ஹைட்ரஜன்
மற்றும் ஆக்சிஜன் வாயுக்கள் கொண்ட கொள்கலன் மற்றும் ராக்கெட்டுகளுக்கு
பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின்கள் ஆகியவை பயன்படுத்தப்படுவதால்
அதிக சப்தம் ஏற்படாதவாறும், கழிவுகளாக நீர் மட்டுமே வெளியேறுவதும்
இதன் சிறப்பம்சங்களாக அமைந்துள்ளன. மேலும் மிக வேகமாக பறப்பதற்கு
ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட இறக்கைகளும் மணிக்கு 3,125 மைல் வேகத்தில்
பறக்கும் தன்மையும் கொண்ட இவ்விமானங்கள் வர்த்தக அடிப்படையில் செயல்பட
இன்னும் 40 வருடங்கள் ஆகும் என்று திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
|
| மனிதர்களை
போன்று உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தேனீக்கள் |
|
இங்கிலாந்து
நாட்டிலுள்ள நியூகேசில் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்
மெலிசா பேட்சன் மற்றும் ஜெரி ரைட் ஆகியோர் தேனீக்களை பற்றி ஆராய்ந்ததில்
அவை மனிதர்களை போன்று உணர்ச்சியை வெளிப்படுத்த
கூடியவை என்று அறிந்தனர். பொதுவாக முதுகெலும்பற்ற வகையை சேர்ந்த
பூச்சி இனமான தேனீக்கள் இதுவரையிலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த தெரியாதவை
என்றே கருதப்பட்டு வந்தன. இந்நிலையில் அவர்கள் பயிற்றுவித்த தேனீக்கள்
வசித்த தேன் கூட்டின் மீது எதிராளிகள் தாக்குவது போன்று போலியான
தாக்குதலை நடத்தினர். பின் அவற்றின் நடவடிக்கைகள் கவனிக்கப்பட்டன.
மிக சிறிதளவே கொண்ட அவற்றின் மூளையில் அழுத்தத்தை தோற்றுவிக்கும்
வேதிபொருள்களான டோபமைன், செரோடனின் மற்றும் ஆக்டோபமைன் ஆகியவற்றின்
அளவுகள் மாறுபடுவதை கண்டறிந்தனர். இதனடிப்படையில் பார்க்கும் பொழுது
தேனீக்களானது விலங்குகள் மற்றும் மனிதர்கள் போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது
ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் தேனீக்களின் பிற உணர்வுகளையும்
பற்றி அறிந்து கொள்ள ஆய்வானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
|
| சுவையான
தேனீர் தயாரிப்பது எப்படி?: ஆய்வில் புது தகவல் |
சுவையான
தேனீர் தயாரிப்பது எப்படி என்று கண்டறிய விரும்பிய இங்கிலாந்து பால்
உற்பத்தி நிறுவனம் ஒன்று நார்தம்ப்ரியா பல்கலை கழக விஞ்ஞானிகளை கேட்டுக்கொண்டது.
சுமார் 180 மணி நேர ஆய்வுக்குப்பின் ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்தனர்
விஞ்ஞானிகள். தேனீர் தயாரிப்பது ஒரு கலை என்றால் அதை சுவையானதாக
தயாரிப்பது ஒரு விஞ்ஞானம் என்று கூறிய அவர்கள், இதற்கென ஒரு பார்முலாவையே
உருவாக்கியுள்ளனர். அவர்களது ஆய்வின்படி, தயாரித்து 6 நிமிடங்களுக்குப்பின்னரே
தேனீர் சுவை மிகுந்ததாக இருப்பதை கண்டறிந்துள்ளனர். தயார் செய்யப்பட்டு
6 நிமிடங்களில் அது 60 டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலைக்கு வரும்
போதுதான் அதன் சுவை அதிகரிப்பதாகவும் சரியாக 17 நிமிடம் 30 வினாடிகளில்
அது 45 டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலைக்கு வருவதால், தன் சுவையையும்
மணத்தையும் இழக்க தொடங்குவதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், தேனீர்
தயாரிக்க 2 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக்கொள்ளக்கூடாதென்றும்; வெறும்
10 மில்லி பால் மட்டுமே சேர்த்துக்கொள்ளலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர். |
| தண்ணீரை
வெளியிடும் நட்சத்திரம்: நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு |
எந்திர
துப்பாக்கியிலிருந்து வெளியேறும் குண்டுகளின் வேகத்தைப்போல் 80 மடங்கு
வேகத்தில் நீரை சிதற அடிக்கும் நட்சத்திரம் ஒன்றை நெதர்லாந்திலுள்ள
லெய்டன் பல்கலை கழக விஞ்ஞானிகள், இன்ஃப்ராரெட் கதிர்களை பயன்படுத்தி
கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து சுமார் 750 ஒளி ஆண்டுகள் தூரத்தில்
அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நட்சத்திரத்தின் வயது 1 லட்சம் ஆண்டுகள்
என கணக்கிடப்பட்டுள்ளது. அதனை ஒருவிதமான வாயு மண்டலம் சூழ்ந்துள்ளது.
இந்த வாயுக்கள் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அணுக்கள் என தெரியவந்துள்ளது.
இந்த ஆக்ஸிஜனும் ஹைட்ரஜனும் ஆயிரக்கணக்கான டிகிரி செல்ஸியஸ் வெப்ப
நிலையில் தண்ணீராக மாறுவதாக மேலும் ஆய்வில் கண்டறியபட்டுள்ளது. இந்த
தண்ணீர், நட்சத்திரத்தின் துருவங்கள் வழியே வெளியேறும் போது 1 லட்சம்
டிகிரி செல்சியஸ் வெப்பத்தை எட்டி வாயு நிலையை அடைகிறது. சுற்றியுள்ள
வாயு மண்டலத்தில் மோதி, விரைவில் குளிர்ந்து மீண்டும் திரவ நிலையை
அடைகின்றது. அமேசான் நதி 1 வினாடியில் எந்த வேகத்தில் பாய்கிறதோ
அதைப்போல 100 மில்லியன் மடங்கு அதி வேகத்தில் தண்ணீரை சிதறியடிக்கிறது
இந்த நட்சத்திரம் என்னும் ஆச்சரியமான உண்மையையும் இந்த குழுவினர்
கண்டறிந்துள்ளனர். அதாவது, அதன் வேகம் மணிக்கு 2 லட்சம் கி மீ அல்லது
ஒரு எந்திர துப்பாக்கியின் குண்டுகள் சீறிப்பாயும் வேகத்தைப்போல்
80 மடங்கு ஆகும். |
| 10
ஆயிரம் வருடங்களில் 10 சதவீதம் சுருங்கிய மனித மூளை |
மனிதன்
தனது மூளையை பயன்படுத்தி இயற்கையை பல்வேறு வழிகளில் தனக்கு சாதகமாக
பயன்படுத்தி வருகிறான். ஆனால் தற்போது, இங்கிலாந்து நாட்டிலுள்ள
கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் பேராசிரியர் மார்தா லார்
என்பவர் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் கிடைத்த
கற்கால மனிதர்களின் மண்டை ஓடு படிவங்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில்
கடந்த 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் மூளையை
விட தற்கால மனிதர்களின் மூளையளவு 10 சதவீதம் சுருங்கியுள்ளது தெரிய
வந்துள்ளது. கிரோ-மேக்னன் என்றழைக்கப்படும் அவர்களின் மூளையளவான
1,500 கன செ.மீ.லிருந்து நவீன மனிதர்களின் மூளையளவு 1,350 கன செ.மீ.
ஆக சுருங்கியுள்ளது. இதற்கு, இக்காலத்தில் மேற்கொள்ளப்படும் உணவு
பழக்க வழக்கம், நகரமயமாதலால் ஏற்படும் ஆரோக்கிய சீர்கேடுகள் மற்றும்
பரவி வரும் வியாதிகள் ஆகியவை காரணமாக கூறப்படுகிறது. எனினும் இன்றைய
மனிதர்களின் அறிவு வளர்ச்சி மேலோங்கி இருக்கிறது என்பதில் எந்த மாற்றமுமில்லை
என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
|
| மரபணு
மாற்றிய அரிசியை 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பயன்படுத்திய குகை
மனிதர்கள் |
|
ஜப்பான்
நாட்டின் கோப் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் யமசகி தலைமையில்
ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்டு
விற்பனைக்கு வரும் காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றிற்கு முன்னோடியாக
ஏறத்தாழ 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே குகை மனிதர்கள் இந்த பணியை
செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. அரிசியில் காணப்படும் எஸ்.டி.1
என்ற ஒரு வகை மரபணுவை உருமாற்றம் செய்து பயிர்செய்து பயன்படுத்தி
வந்துள்ளனர். மரபணு மாற்றத்திற்கு பின்பு செடியின் தண்டு மிக சிறியதாகவும்,
அதிக விளைச்சல் தருபவனவாகவும் அமைந்தது. கடந்த ஐம்பது ஆண்டுகளில்
நவீன மரபணு மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் அரிசி வகையில் எஸ்.டி.1
பெரும் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
|
| 2013ல்
ஏற்படும் சூரிய புயலால் பூமிக்கு ஆபத்து |
| அமெரிக்க
நாட்டின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல அமைப்பின் உதவி செயலாளரான
காத்ரின் சுல்லிவன் என்பவர் 2013-ஆம் ஆண்டில் சூரிய புயலால் பூமியில்
ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். 11 வருட இயற்கை
சுழற்சியில் சூரியன் அதிக பலம் பெறும் அந்த ஆண்டில் இந்நிகழ்ச்சி
நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. முதன்முதலாக கடந்த 1859ஆம் ஆண்டு
இங்கிலாந்து வானியலாளர் ரிச்சர்ட் கேரிங்டன் என்பவர் சூரிய புயலை
கண்டறிந்தார். சூரியனில் ஏற்படும் மிக பெரும் வெடிப்பால் சூரிய புயல்
உண்டாகிறது. இதன் மூலம் எக்ஸ் கதிர்கள் மற்றும் புற ஊதா கதிர்கள்
ஆகியவை பெருமளவில் வெளிப்படும். இவை பூமியின் காந்த புலத்தினை அதிகமாக
பாதிக்கும் வலிமை கொண்டது. எனவே, இங்குள்ள கணினியின் செயல்பாடுகளில்
தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பாதிப்பு ஏற்படும். குறிப்பாக
வானொலி அலைவரிசையில் பாதிப்பு, செயற்கைகோள் தகவல் தொடர்புகள் மற்றும்
வரைபட வழிகாட்டி ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
20-ஆம் நூற்றாண்டில், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தில் 1972-ஆம்
வருடம் தகவல் தொடர்பில் பாதிப்பு மற்றும் 1989-ஆம் வருடம் கனடா நாட்டின்
கியூபெக் மாகாணத்தில் மின்சார பரிமாற்ற பணிகளில் பாதிப்பினை ஏற்படுத்தி
இருளில் மூழ்க செய்தது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியதில் சூரிய புயல்
பெரும் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.
|
| ஆழமான
நிலப்பரப்பில் வாழும் உயிரினம் கண்டுபிடிப்பு |
| அமெரிக்காவின்
நியூ ஜெர்சி நகரில் அமைந்துள்ள பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த
டல்லிஸ் ஆன்ஸ்டாட்
என்பவர் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் நிலப்பரப்பில் மிக ஆழமான பகுதியில்
வாழும் உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில்
உள்ள தங்க சுரங்கத்தில், ஏறக்குறைய ஒரு மைல் ஆழத்தில் வாழும் நெமடோடு
என்னும் வகையை சேர்ந்த கொக்கி புழுவே அந்த உயிரினம் ஆகும். இதன்
அறிவியல் பெயர் ஹேலிசெபலோபஸ் மெபிஸ்டோ. பொதுவாக, பயோஸ்பியர் எனப்படும்
பூமியின் ஆழமான பகுதியில் வெப்பநிலை வேறுபாடு, குறைந்தளவு ஆக்சிஜன்
மற்றும் இடப்பற்றாக்குறை ஆகிய மாறுபட்ட சூழ்நிலையில் காணப்படும்
இவ்வுயிரினம்,
தான் உண்ணும் பாக்டீரியாவை போன்று 10 லட்சம் மடங்கு பெரியது என கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை அறிவியலாளர்கள் நான்கு வகையான கொக்கி புழுக்களை கண்டறிந்துள்ளனர்.
4.6.2011
|
| சார்ஜ்
செய்து கொள்ளும் வசதி கொண்ட நவீன பிகினி ஆடை |
மேலை
நாடுகளில் சூரிய குளியல் மிக பிரபலமானது. ஆண், பெண் வேறுபாடின்றி
மிக குறைந்த ஆடையில் சூரியக்கதிர்கள் விழும் கடற்கரை மணற்பரப்பின்
மீது ஓய்வாக படுத்திருப்பர். இதனால் சூரியனிலிருந்து நேரடியாக வைட்டமின்
டி கிடைப்பதுடன் தங்களை உற்சாகப்படுத்தி கொள்வதற்கும் இதனை அவர்கள்
மேற்கொள்கின்றனர்.இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த
ஆன்ட்ரூ ஸ்னீடர் என்பவர் புதிய முயற்சியாக சூரிய குளியல் எடுத்து
கொள்வோர்களுக்கென்று பிகினி உடையை தயாரித்துள்ளார். அதிலிருந்து
கேமெரா, ஐ&பாட் உள்பட பல்வேறு மின்னணு கருவிகளை சார்ஜ் செய்து
கொள்ள முடியும். ஒரு பிகினி உடையை தயாரிப்பதற்கு ஏறத்தாழ 80 மணி
நேரங்களாகும். இந்த உடையில் சூரிய ஒளியை ஆற்றலாக மாற்றும் கருவிகளும்
மற்றும் கடத்திகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்துவோர் உடலில்
ஈரமில்லாமல் காய்ந்த நிலையில் இருக்க வேண்டுமென்பது மட்டும் அவசியம்.
பிகினி பெண்களுக்குரியது என்னும் நிலையில் ஆண்களுக்கான ஆடையை தயாரிக்கும்
முயற்சியிலும் ஸ்னீடர் ஈடுபட்டுள்ளார்.
3.6.2011
|
| தாம்பத்ய
இன்பத்தில் மூளையின் பங்கு: ஆய்வில் புதிய தகவல் |
அமெரிக்காவின்
நியூ ஜெர்சி மாகாணத்தில் அமைந்துள்ள ரட்ஜர்ஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த
பேராசிரியர் பேரி கோமிசருக் என்பவரின் தலைமையில் பெண்கள் தாம்பத்யத்தின்
போது அடையும் இறுதிநிலை இன்பம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக பெண்கள் சிலரை வரவழைத்து அவ்வாறு இன்பம் பெறுவது போன்று
கற்பனை செய்யும்படி கேட்டு கொள்ளப்பட்டனர். பின்னர் அவர்களின் மூளை
பகுதிகள் தனியாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கொண்டு படம் பிடிக்கப்பட்டு ஆய்வு
செய்யப்பட்டன. அந்த ஆய்வில், முடிவெடுக்கும் பகுதி, அவசர நிலையில்
செயல்படுதல் மற்றும் கற்பனை திறன் ஆகிய செயல்பாடுகளுக்கான பகுதியாக
விளங்கும் ப்ரிப்ரன்டல் கார்டெக்ஸ் (பி.எப்.சி.) உள்பட மூளையின்
30 பாகங்கள் எழுச்சி பெற்று பெண்களின் இன்பத்தின்போது உறுதுணையாக
இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், தனிமையில் இருக்கும்போது மேற்குறிப்பிட்ட
பாகங்களில் ஒன்று தாம்பத்ய இன்பம் பற்றி கற்பனையை வளர்த்து அதன்
வழியே திருப்தியடைவதாகவும், ஆடவன் துணையுடன் தாம்பத்யத்தில் ஈடுபடும்
போது மற்ற பாகங்கள் எழுச்சி பெறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மனிதர்களின் உடலியல் உணர்வுகளான வலி, மகிழ்ச்சி போன்றவற்றை பற்றி
ஆராய்ந்து தெளிவு பெறும் நோக்கத்துடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
|
| செவ்வாயில்
உயிரினங்கள் பற்றி அறிய நாசாவின் புதிய விண்கலம் |
| அமெரிக்காவின்
நாசா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்திற்கு கியுரியாசிட்டி என்ற பெயரிலான
விண்கலம் ஒன்றை அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இதற்கு முன்னர் செவ்வாயின்
சுற்றுவட்ட பாதையில் வலம் வந்து படங்களை எடுத்து அனுப்பி கொண்டிருந்த
பீனிக்ஸ் விண்கலம் பழுதடைந்ததை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விண்கலம் சென்று இறங்குவதற்காக பட்டியலிடப்பட்ட 60 இடங்களிலிருந்து
குறிப்பாக 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவை மாவ்த் வேலிஸ்,
கேல் கிரேடர், ஹோல்டன் கிரேடர் மற்றும் எபெர்ஸ்வேல்ட் ஆகியவை ஆகும்.
இதற்கு முன் அங்கே நுண்ணுயிரிகள் ஏதும் வாழ்ந்ததற்கான அடையாளங்கள்
உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய ஏற்ற வகையில் புதிய தொழில்நுட்பங்கள்
கொண்டு விண்கலமானது தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக குளிர் நிறைந்த
பகுதியிலும் பணிபுரிதல், வெகு விரைவாக வேகத்தை கட்டுப்படுத்தும்
திறன் மற்றும் மிக குறைந்த பரப்பளவுள்ள இடத்தில் தன்னை நிலைநிறுத்தி
கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.
|
| 49
ஆண்டுகளாக மரணத்தோடு போராடும் ஹாகிங்: சொர்க்கம் என்பது அழகிய கதை
என்கிறார் |
| இங்கிலாந்து
நாட்டின் புகழ் பெற்ற அறிவியலாளர் ஸ்டீபன் ஹாகிங். தனது 21 வயதில்
நரம்பு செல் வியாதியால் பாதிக்கப்பட்டு கடந்த 49 வருடங்களாக வாழ்க்கையில்
போராடி வருகிறார். கதிரியக்கத்தை உமிழும் கருப்பு துளைகள் பற்றிய
இவரது இயற்பியல் கருத்துகள் மகுடம் சூட்டும் சாதனைகளாகும். இவர்,
மரணத்தை பற்றிய தனது எண்ணங்கள் பற்றி கூறுகையில், கடந்த 49 வருடங்களாக
மரணத்தோடு தான் போராடி வருகிறேன். எனவே, மரணத்தை கண்டு பயமில்லை.
ஆனால் இறப்பதற்கு நான் அவசரப்படவில்லை. நான் விரும்பியவற்றை செய்வதற்கென்று
நிறைய விசயங்கள் உள்ளன. எனது மூளையை பல பாகங்கள் அடங்கிய ஒரு கணினியாகவே
கருதுகிறேன். அப்பாகங்கள் பழுதடையும் பொழுது கணினி (மூளை) ஆனது அதன்
செயலை நிறுத்தி விடுகிறது. இருளை கண்டு பயப்படுகிற மக்களுக்கென்று
கூறப்படுகிற அழகிய கதையான மரணத்திற்கு பின் வாழ்வு அல்லது சொர்க்கம்
என்பது பழுதடைந்து முடிந்து போன கணினிகளுக்கு கிடையாது என்கிறார்.
|
| கல்லீரல்
சிகிச்சைக்கு பயன்படும் புதிய ஸ்டெம் செல் சிகிச்சை முறை |
மருத்துவ
உலகில் ஒரு சாதனையாக கருதப்படுவது ஸ்டெம் செல் சிகிச்சை முறை. செல்லின்
அடிப்படை பண்புகளை கொண்டிருப்பதோடு வேறு எந்த செல்லாகவும் மாற்றம்
பெற்று வளர்ச்சியடையும் தன்மை வாய்ந்த ஸ்டெம் செல்கள் பெரும்பாலும்
கருப்பகுதியிலிருந்து பிரித்தெடுத்து உருவாக்கப்படும் நிலையில் தற்போது
தோல் மற்றும் இரத்த செல்களில் இருந்து ஸ்டெம் செல்லானது உருவாக்கப்பட்டு
கல்லீரல் செல்களாக மாற்றப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் உடலிலிருந்தே
பல லட்சக்கணக்கான எண்ணிக்கையில் எளிதான முறையில் உருவாக்கப்படும்
பக்கவிளைவுகள் அற்ற இத்தகைய செல்களை தூண்டுவிக்கப்பட்ட புளுரிபொடென்ட்
ஸ்டெம் செல் (ஐ.பி.எஸ்.சி.) என அழைக்கின்றனர். பாதிக்கப்பட்ட இடத்தில்
புதிய உறுப்பாக வளரும் அளவிற்கு தன்மை கொண்ட இந்த ஸ்டெம் செல்கள்
குறித்து மேரிலேண்டில் அமைந்துள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கிம்மல் புற்றுநோய்
மையத்தின் பேராசிரியர் யூன்&யங் ஜேங் என்பவர் கல்லீரல் பாதிப்படைந்தவர்களுக்கு
சிகிச்சை செய்வதற்கும் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை பெறுபவர்களுக்கும்
மிக பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.
|
| கடவுள்
நம்பிக்கை மனிதர்களிடம் அதிகமாக உள்ளது: ஆய்வு முடிவு |
|
இங்கிலாந்து
நாட்டில் இப்சோஸ் நகரில் அமைந்துள்ள சமூக ஆராய்ச்சி அமைப்பானது கடவுள்
நம்பிக்கை குறித்து ஓர் ஆய்வு மேற்கொண்டது. அதில் 23 நாடுகளை சேர்ந்த
18,829 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 51 சதவீதம் பேர் மரணத்திற்கு
பின் வாழ்வு இருக்கிறது என நம்புகின்றனர். அதே வேளையில் 18 சதவீதம்
பேர் கடவுள் நம்பிக்கை இல்லை என்றும் 17 சதவீதம் பேர் எதை நம்புவது
என தெரியவில்லை என்றும் தெரிவித்தனர். இந்தோனேசியா, துருக்கி மற்றும்
பிரேசில் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டுள்ளனர்.
இந்தியாவில் 24 சதவீதம் பேரும், சீனாவில் 14 சதவீதம் பேரும் மற்றும்
ரஷ்யாவில் 10 சதவீதம் பேரும் பல்வேறு கடவுள்களின் மீது நம்பிக்கை
கொண்டுள்ளனர். கடவுளை நம்பாதவர்கள் வரிசையில் 40 சதவீதம் பேர் பிரான்சு,
சுவீடன், பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள்
வருகின்றனர். மேலும், மறுபிறப்பின் மீது ஹங்கேரி நாட்டினர் அதிகமாக
நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அவர்களில் சுமார் 13 சதவீதம் பேர்
மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டுள்ளனர். கடவுள் இருக்கிறாரா, இல்லையா
என்ற ஆராய்ச்சி ஒருபுறம் நடந்து கொண்டிருக்க கடவுள் நம்பிக்கையும்
மனிதர்களிடம் பரவலாக காணப்படுகிறது என்பது ஆராய்ச்சியிலிருந்து தெரிய
வருகிறது.
|
| ஆஸ்திரேலியாவில்
உருவாகும் உலகின் மிக பெரிய தொலைநோக்கி மெகல்லன் |
|
ஆஸ்திரேலிய
நாட்டின் கேன்பெரா நகரில் அமைந்துள்ள ஆஸ்திரேலிய தேசிய பல்கலைகழகத்தின்
விஞ்ஞானிகள் இன்டர்நேஷனல் கன்சார்டியத்துடன் இணைந்து உலகின் மிக
பெரிய தொலைநோக்கி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஹப்பிள் தொலைநோக்கியை காட்டிலும் 10 மடங்கு துல்லியமாக படங்களை காட்டும்
திறன் பெற்ற இதற்கு மெகல்லன் என பெயரிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து
12.5 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில், விண்வெளியில் உள்ள எந்த ஒரு
பொருளையும் பற்றி ஆராய்வதற்கு ஏற்ற வகையில் இது இருக்கும். ஏறத்தாழ
700 மில்லியன் அமெரிக்க டாலர் பொருட்செலவில் தயாராகும் இத்தொலைநோக்கி
பற்றி ரிசர்ச் ஸ்கூல் ஆப் அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோபிசிக்ஸின் இயக்குநரான
ஹார்வே பட்சர் என்பவர் கூறும்போது, "புதிய தொழில்நுட்பத்துடன்
உருவாகும் மெகல்லன், விண்வெளியின் பல அரிய விசயங்களை பற்றி அறிந்து
கொள்வதற்கு உதவும். மேலும், 6 அல்லது 7 பில்லியன் வருடங்களுக்கு
முன்பு பால்வெளிவீதி எவ்வாறு இருந்தது என்பதை பற்றியும் அறிந்து
கொள்ள முடியும்" என்று கூறினார். வரும் 2018& ஆம் ஆண்டில்
இந்த தொலைநோக்கி முழு வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|
| உலக
மொழிகளின் பிறப்பிடம் ஆப்பிரிக்கா: ஆய்வில் தகவல் |
|
ஆஸ்திரேலிய
நாட்டில் அமைந்துள்ள குயின்ஸ்லாண்ட் பல்கலைகழகத்தின் ஆய்வாளர் குயென்டின்
அட்கின்சன் என்பவர் தலைமையில் முதன்முதலில் மொழியானது எங்கு தோன்றியது
என ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு
முன்பு ஆப்பிரிக்க கண்டத்தில் வாழ்ந்த கற்கால மனிதர்களின் பேச்சில்
இருந்து தான் தற்போது பரவலான மக்களால் பேசப்படும் மொழிகளான ஆங்கிலம்,
வங்காளம், ஜப்பான் மற்றும் இந்தி
உட்பட உலகின் பல்வேறு மொழிகளும் தருவிக்கப்பட்டுள்ளன என தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்விற்காக அட்கின்சன், உலகளவில் பேசப்படும் 504 மொழிகளை எடுத்து
கொண்டார். அந்த மொழிகளில் பயன்படுத்தப்படும் உச்சரிப்புகள் மற்றும்
வெவ்வேறு சப்தங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தார். ஆய்வில், மொழியானது ஏறத்தாழ
1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், தற்காலத்தில் வாழும் மனிதர்கள் சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு
முன்பு ஆப்பிரிக்காவை மையமாக கொண்டு வாழ்ந்துள்ளனர். பின்னர் 70
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து உலகின் பல இடங்களுக்கும்
பரவி வாழ ஆரம்பித்துள்ளனர். அதிக மக்கள் தொகை கொண்டவர்கள் ஓரிடத்தில்
நிலையாக இருந்து வாழ்ந்த போது அங்கு பேசப்பட்ட மொழியும் நிலைத்துள்ளது.
அதுவே, சிறு சிறு குழுக்களாக மக்கள் பிரிந்து செல்லும் போது அவர்களின்
இடையே பேசப்பட்ட மொழி காலப்போக்கில் மாற்றம் பெற தொடங்கியது. தலைமுறைகள்
மாற மாற மொழிகளும் மாற்றம் பெற்றுள்ளன. அதில், ஆப்பிரிக்காவில் ஆரம்பகாலத்தில்
பேசப்பட்ட மொழியின் சப்தங்கள் மற்றும் உச்சரிப்புகள் ஆகியவை படிப்படியாக
மறைந்து போயுள்ளன என அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
|
| காபி,
டீ அதிகமாக குடிப்பதற்கு
மரபணு தொடர்களே அடிப்படை: ஆய்வாளர்கள்
கருத்து |
| அமெரிக்காவின்
மேரிலேண்ட் என்ற இடத்தில் அமைந்துள்ள தேசிய புற்றுநோய் கழகத்தை சேர்ந்த
ஆய்வாளர் நீல் கேபோராசோ என்பவர் ஆய்வு ஒன்று மேற்கொண்டார். அந்த
ஆய்வானது காபீன் என்ற பொருள் அடங்கிய டீ, காபி, சாக்லேட், குளிர்பானம்
போன்றவற்றை அதிகமாக எடுத்து கொள்வதை அடிப்படையாக கொண்டு அமைந்தது.
இதற்காக ஏறத்தாழ 40 ஆயிரம் பேர் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டனர்.
அதில், இரண்டு மரபணு தொடர்கள் காபீன் என்ற பொருளை அதிகமாக உட்கொள்ள
வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது என தெரிய வந்துள்ளது. உடலில்
உள்ள காபீன் பொருளை உடைக்கும் பணியோடு சி.ஒய்.பி.1.ஏ.2 என்ற ஜீன்
தொடர்பு கொண்டுள்ளது. இந்த ஜீனின் செயல்பாடுகளை ஏ.எச்.ஆர். என்ற
மற்றொரு ஜீன் ஒழுங்குபடுத்துகிறது. எனவே ஒருவர் காபி அல்லது கோலா
அருந்துவது இத்தகைய இரு மரபணுக்களின் தூண்டுதலின் அடிப்படையிலேயே
அமைகிறது என ஆய்விலிருந்து தெரிய வருகிறது.
|
| புத்தகம்
வாசிக்கும் பழக்கம் மன அழுத்தத்தை குறைக்கும் ஆய்வில் தகவல் |
அமெரிக்காவின்
பிட்ஸ்பர்க் ஸ்கூல் ஆப் மெடிசின் பல்கலைகழகத்தின் மருத்துவ துறையின்
பேராசிரியர் பிரையன் ப்ரைமேக் தலைமையிலான குழு ஆய்வொன்று நடத்தியது.
அதில், டீன்&ஏஜ் பருவத்தை அடைந்த 106 பேர் கலந்து கொண்டனர்.
அவர்களிடம், இசை, திரைபடங்கள் அல்லது டி.வி., நாளிதழ்கள், இணையதளம்,
புத்தகங்கள் மற்றும் வீடியோ கேம்ஸ் ஆகிய 6 வகை ஊடகங்களின் பயன்பாடு
குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக இரு மாதங்களாக 60 முறை
அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த ஆய்வில், இசையை அதிகமாக
கேட்கும் இளம் வயதினர், இசையினை மிக குறைவாக கேட்பவர்களுடன் ஒப்பிடும்
பொழுது 8.3 மடங்கு அதிகமாக மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர் என்பது
தெரிய வந்துள்ளது. அதே வேளையில், புத்தகங்கள் அதிகம் வாசிப்போர்,
குறைவாக புத்தகங்கள் வாசிப்பவர்களுடன் ஒப்பிடும் பொழுது பத்தில்
ஒரு பங்கு அளவே மிக குறைவாக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். எனவே,
வாசித்தல் என்பது மன அழுத்தத்தை வெகுவாக குறைப்பதில் பெரும் பணியாற்றுகிறது.
மேலும், படிப்பதை தவிர்த்து பிற ஊடகங்களிலேயே அதிகமானோர் கவனத்தை
செலுத்துவது தற்போது அதிகரித்துள்ளது என்றும் ப்ரைமேக் தனது ஆய்வில்
தெரிவித்துள்ளார. |
| சோதனை
குழாய் வழியே விந்தணுக்களை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை |
ஜப்பான்
நாட்டின் யோகோஹமா சிட்டி யுனிவர்சிட்டியின்
ஆராய்ச்சியாளர் டகேஹிகோ ஒகாவா. இவர் செயற்கை முறையில் சோதனை குழாய்
உதவியுடன் விந்தணுக்களை உற்பத்தி செய்யும் முறையை கண்டறிந்துள்ளார்.
இவரது ஆய்வின்படி, எலிகளின் இனப்பெருக்க பகுதியிலிருந்து டெஸ்டிகுலார்
திசுக்கள் சேகரிக்கப்பட்டு அதனுடன் சரியான அளவில் புரதங்களும் சேர்க்கப்பட்டன.
பின்பு அதன் வளர்ச்சி கவனிக்கப்பட்டன. அதில் சோதனை குழாய் முறையில்
விந்தணுக்கள் உருவாகின. இதனை பின்னர் அவை ஐ.வி.எப். எனப்படும் செயற்கை
கருத்தரிப்பு முறையில் கரு முட்டைகளுடன் சேர்த்து வளப்படுத்தப்பட்டன.
இதில் ஆண் மற்றும் பெண் என 12 எலிக்குஞ்சுகள் பிறந்தன. அவை தற்போது
நன்றாக உள்ளன. மேலும் எலிகளிலிருந்து பிரித்தெடுத்து பதப்படுத்தப்பட்ட
திசுக்களும் நல்ல பலனை தந்தன.
எனவே, இந்த ஆராய்ச்சியின்படி
வருங்காலத்தில், தந்தையாகும் வாய்ப்பில்லாத மனிதர்களும் எளிதாக குழந்தை
பெற முடியும் என அவர் கூறுகிறார். இம்முறையில் குழந்தை பெறுவது என்பது
இங்கிலாந்து நாட்டில் சட்டப்படி தவறு என்றாலும், அமெரிக்காவின் புற்றுநோய்
அமைப்பொன்று இதற்கு வரவேற்பு அளித்துள்ளது. ஏனெனில், புற்றுநோய்க்கு
சிகிச்சை பெறுபவர்களின் இனப்பெருக்க அணுக்கள் அச்சிகிச்சையினால்
பாதிப்படைய வாய்ப்புள்ளது. அவர்களுக்கு புற்றுநோய் சிகிச்சைக்கு
முன்பு இனப்பெருக்க அணுக்கள் பிரித்து எடுக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு
பின்பு தேவையான போது பயன்படுத்தி கொள்ளலாம் என்பது இவ்வாய்வின் சிறப்பம்சமாகும்.
|
| தாம்பத்ய
வாழ்க்கையில் மனிதனை விட சிறந்த சிம்பன்சிகள் |
அமெரிக்காவின்
கலிபோர்னியா மாகாணத் திலுள்ள ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தின் மருத்துவ
பிரிவின் தலைமை ஆராய்ச்சியாளர் டேவிட் கிங்ஸ்லி. இவரது தலைமையிலான
குழு ஒன்று மரபணுவில் காணப்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வில் நமது மூதாதையர்கள் மற்றும் நியாண்டர்தால் இனத்தை சேர்ந்தவர்களின்
37,251 மரபணு தொடர்கள் காலப்போக்கில் அழிந்து போயுள்ளன என கண்டறிந்துள்ளனர்.
அதனால் தற்போதுள்ள மனிதர்களின் உடற்கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஏறக்குறைய 510 மரபணு தொடர்கள் முற்றிலும் அழிந்து விட்டதும் ஆய்வில்
தெரிய வந்துள்ளது. இதில் பல நன்மைகள் மற்றும் தீமைகள் ஏற்பட்டுள்ளன.
அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, இந்த மரபணுக்கள் மறைவினால் மனிதர்களின்
மூளை பகுதிகள் விரிவடைந்து நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன.
இந்த மரபணுக்கள் மறைவின் மற்றொரு விளைவாக மனிதர்களின் இனப்பெருக்க
உறுப்பில் உள்ள முள்ளெலும்பு போன்ற உறுப்பு ஒன்று மறைந்து போயுள்ளது.
ஆனால் இந்த முள்ளெலும்பு உறுப்பு சிம்பன்சியின் ஆண் இனப்பெருக்க
உறுப்பில் தற்போதும் காணப்படுகிறது. இந்த உறுப்பு இனப்பெருக்க நேரத்தில்
சில சமயங்களில் பெண் சிம்பன்சிக்கு காயத்தை ஏற்படுத்தி விடுகிறது.
இதனால் பெண் சிம்பன்சிகளிடம் இனப்பெருக்கம் பற்றிய தூண்டுதல் அதிகம்
காணப்படுவதில்லை. மேலும் குறிப்பிட்ட ஆண் சிம்பன்சி தவிர்த்து வேறு
சிம்பன்சிகளிடம் இனப்பெருக்கம் என்பது அறவே தவிர்க்கப்படுகிறது.
இதனால் சிம்பன்சிகளில் கள்ளக்காதல் என்பது அரிதாக காணப்படுகிறது.
|
| பூமியை
நெருங்கும் நிலவால் ஆபத்து: ஆராய்ச்சியாளர்கள்
தகவல் |
பூமியின் துணைகோளான நிலவு பூமியிலிருந்து
சராசரியாக 2,38,857 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. வரும் மார்ச்
19-ந்தேதி ஏறத்தாழ 2,21,567 மைல்கள் தொலைவில் பூமியின் அருகில் அது
வருகிறது. 19 வருடங்களுக்கு ஒரு முறை விண்வெளியில் நிகழும் இந்த
அரிய நிகழ்வு சூப்பர்மூன் என அழைக்கப்படுகிறது. இதனால் பூமியில்
பருவ நிலைகளில் மாற்றம் ஏற்படும். மேலும் பூமியில் நிலநடுக்கம்,
சுனாமி போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்களால்
கூறப்படுகிறது. கடந்த 1974-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில், ஆஸ்திரேலியாவின்
டார்வின் என்ற இடத்தில் டிரேசி என்ற சூறாவளி கடுமையாக தாக்கியது.
மேலும் ஜனவரி 2005-ல் சூப்பர்மூன் வருவதற்கு 2 வாரங்களுக்கு முன்பு
தான் சுனாமி பாதிப்பு ஏற்பட்டது. எனவே, மார்ச் 19 அன்று பூமியை நெருங்கி
வரும் நிலவால் ஆபத்து ஏற்படுமோ என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். |
| பிரிட்டன்
மற்றும் நார்வே நாடுகளில் அதிகரித்து வரும் இளம் வயது குடிபழக்கம்:
ஆய்வில் தகவல்
|
சுவீடன் நாட்டில், ஸ்டாக்ஹோம் நகரில் குடிபழக்கத்திற்கு
ஆளாகும் இளம்வயதினர் பற்றி ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுமார்
23 நாடுகளை சேர்ந்த 38,370 பேர் அந்த ஆய்வில் கலந்து கொண்டனர். அவர்கள்
அனைவரும் 15 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட டீன் ஏஜ் பருவத்தினர்.
ஆய்வில், பிரிட்டன் மற்றும் நார்வே ஆகிய
ஐரோப்பிய நாடுகளில் உள்ள இளம் வயது பெண்கள், ஆண்களை காட்டிலும் அதிகமாக
குடிபழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. சாதாரணமாக
இவ்வயது பெண்கள் அளவுக்கு அதிகமாக குடிப்பதால் படிப்பில் கவனமின்மை,
பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுதல் போன்ற தீய செயல்களுக்கு ஆளாகின்றனர்.
பெற்றோருடன், குறிப்பாக தாயின் அரவணைப்பில் அதிகமாக வளரும் டீன்
ஏஜ் பெண்கள் மற்றும் குடும்பத்துடன் அதிக நெருக்கமாக உள்ளவர்கள்
இது போன்று மொடா குடியர்களாக இருப்பதில்லை. டீன் ஏஜ் ஆண்கள் தங்களது
பெற்றோர்களால் அதிகமாக கண்காணிக்கப்படுவதால் அவர்களின் குடிபழக்கம்
பெரும்பாலும் குறைந்தே காணப்படுகிறது என்றும் அந்த ஆய்விலிருந்து
தெரிய வருகிறது.
|
| வேற்றுக்கிரகவாசிகள்
பூமியில் இருப்பதை என்னால் நிரூபிக்க முடியும்: நாசா விஞ்ஞானி |

இப்பிரபஞ்சத்தில் எல்லா இடங்களிலும் உயிரினங்கள் வாழ்கிறது.
அதே போல் நாம் வாழும் இந்தப் பூமியிலும் வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்கள்
என்றும் அதை தன்னால் நிரூபிக்க முடியும் என்று நாசாவைச் சேர்ந்த
விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் ஹூவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக
அவர் தன் ஆய்வு கட்டுரையில், அண்டார்டிக்கா, சைபீரியா, அலாஸ்கா போன்ற
பகுதிகளில் நிலத்தில் வாழும் உயிரினங்களின் அடிப்படை குணாம்சத்தை
ஒத்துள்ள, சாதாரண கண்களுக்குத் தெரியாத பாக்டீரியாக்களின் படிமங்களை
தன் ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடித்துள்ளதாகவும், இதைத் தன்னால்
அறிவியல ்பூர்வமாக நிரூபிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். |
| குழந்தைகள்
குற்றவாளிகளாக வளருவார்களா? என்பதை கண்டறியும் ஆய்வு |
அமெரிக்காவின்
பென்சில்வேனியா பல்கலைகழக முன்னாள் பேராசிரியர் மேற்கொண்ட ஆய்வொன்றில்,
நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பிற்காலத்தில் குற்ற செயல்களில்
ஈடுபடுவார்களா? என்பதை அவர்களுடைய மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை
ஸ்கேன் செய்து அதன் வழியாக அறிய இயலும் என தெரிவித்து உள்ளார். அவரது
ஆய்வின்படி, மனிதர்களின் செயல்பாடுகள் மற்றும் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்தி
கட்டுக்குள் கொண்டு வரும் மூளையின் பகுதிகளான அமிக்டலா மற்றும் ப்ரிப்ரென்டல்
கார்டெக்ஸ் ஆகியவை குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சிறியதாக
உள்ளது தெரிய வந்துள்ளது. இத்தகையோர்களுக்கு மூளையை வளப்படுத்தும்
ஒமேகா 3 நிறைந்த உணவு கொடுப்பதனால் அவர்களுடைய நடத்தையில் மாற்றம்
கொண்டு வர இயலும் என அவர் தெரிவிக்கிறார். மேலும், அடி உதவுவது போல்
அண்ணன் தம்பி உதவுவது இல்லை என்ற பழமொழி இவர்களுக்கு பொருந்துவதில்லை.
மாறாக, நல்ல பழக்க வழக்கங்களை சிறு வயது தொட்டே கற்று கொடுத்து வருவதே
அவர்களை தண்டனைக்கு உட்படுத்துவதை காட்டிலும் மிக சிறந்தது என்றும்
அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. |
| கி.மு.
600 ஆம் நூற்றாண்டுக்குமுந்தைய மம்மியின் செயற்கை உறுப்பு |
இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பல்கலைகழகத்தை
சேர்ந்த தலைமை ஆராய்ச்சியாளர் ஜாக்கி பின்ச் எகிப்து நாட்டின் புகழ்
பெற்ற மம்மிகள் பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்டார். அதில் மனித உடலின்
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னோடியாக எகிப்து நாட்டின்
கெய்ரோ நகரில் உள்ள மம்மி ஒன்றின் வலது கால் பெருவிரல் ஒன்று உறுப்பு
மாற்று சிகிச்சையின்படி ஒன்றிணைக்கப்பட்டு உள்ளதாக கின்ச் நடத்திய
ஆய்வில் தெரிய வந்துள்ளது. கார்பன் ரேட்டிங் அடிப்படையில் அதன் காலம்
கி.மு. 600 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என கண்டுபிடிக்கப்பட்டு
உள்ளது. இது பற்றி பின்ச் கூறுகையில், "3 பங்கு மரத்தாலும்
மற்றும் தோலாலும், ஒரு மனிதனின் 40 சதவீத உடல் எடையை தாங்க கூடிய
அளவில் அந்த வலது கால் பெருவிரல் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இது உலகின் மிக பழமையான செயற்கை உறுப்பு என்ற பெருமையை பெறுகிறது
என்றார். எனினும், இந்த செயற்கை உறுப்பு குறிப்பிட்ட அந்த மனிதனால்
பயன்படுத்தப்பட்ட ஒன்றா? அல்லது மம்மியாக மாற்றுவதற்கு என வடிவமைக்கப்பட்டதா-?
என்ற அடிப்படையில் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன"
என்றும் அவர் கூறினார். இதுவரையில், சில நூறு ஆண்டுகளுக்கு முந்தைய
காலத்தை சேர்ந்த ரோமானிய செயற்கை கால் மிக பழமையான செயற்கை உறுப்பு
என்ற பெருமையை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. |
| உலக
நாடுகளின் விண்கலங்கள் அடங்கிய குடும்ப புகைப்படம்
எடுப்பதற்கு
நாசா திட்டம் |
| அமெரிக்காவின்
நாசா விண்வெளி மையம் தன்னுடைய விண்கலமான டிஸ்கவரியின் பயணத்தை நல்ல
நிலையில் முடித்து கொள்ள முடிவு செய்துள்ளது. இதற்கான திட்டம் பிப்ரவரி
மாத இறுதியிலிருந்து மார்ச் மாத ஆரம்பத்திற்குள் செயல்படுத்தப்பட
இருக்கிறது. இந்நிலையில் ஒரு புது முயற்சியாக, சர்வதேச விண்வெளி
மையத்தில் வைத்து அனைத்து விண்கலங்களையும் ஒன்று சேர்த்து ஒரு குடும்ப
புகைப்படம் எடுப்பதற்கு சில திட்டங்களை வகுத்துள்ளது. இதனடிப்படையில்
ஜப்பான் நாட்டின் ஹெச்&2.டி.வி&2, ஐரோப்பாவின் ஏ.டி.வி&2
(ஜோகன்னஸ் கெப்ளர் என பெயரிடப்பட்டது), பல்நோக்கு அம்சம் சார்ந்த
விசயங்களுக்காக இத்தாலியில் வடிவமைக்கப்பட்ட லியோனார்டோ விண்கலம்,
எக்ஸ்பிரஸ் எல்.சி&4, மற்றும் டிஸ்கவரி விண்கலம் போன்ற உலக நாடுகளின்
அனைத்து விண்கலங்களும் இந்த குடும்ப புகைப்படத்தில் இடம் பெற செய்ய
நாசா முடிவு செய்துள்ளது. கடந்த 1995ஆம் ஆண்டு அட்லாண்டிஸ் என்ற
விண்கலத்தை புகைப்படம் எடுத்த ரஷ்யாவின் அனுபவமிக்க சோயுஸ் விண்கலம்
இந்த புகைப்படத்தை எடுக்கும் என தெரிகிறது. விண்வெளி சகாப்தத்தில்
இது ஒரு அரிய புகைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|
30
இலட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது மனித இனம் |
அமெரிக்காவின்
மிசவுரி பல்கலைகழக பேராசிரியர் கேரல் வார்டு தலைமையில் மனித இனம்
பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆராய்ச்சியில், உலகின்
மிக பழமையான மனித மூதாதையர்கள் என ஹோமோ எரக்டஸ் இனம் கருதப்பட்டது.
அவர்கள் வாழ்ந்த காலம் 1.8 மில்லியன் முதல் 70 ஆயிரம் வருடங்களுக்கு
இடைப்பட்டவை ஆகும். தற்போது எத்தியோப்பியா நாட்டில் மனித கால் எலும்பு
ஒன்று புதைபொருளாக கண்டெடுக்கப்பட்டது. தொல்லியல் ஆய்வில் அதன் காலம்
3.2 மில்லியன் வருடங்கள் என கணக்கிடப்பட்டு உள்ளது. இது கடந்த 1974-ஆம்
ஆண்டு எத்தியோப்பியாவில் கண்டெடுக்கப்பட்ட லூசி என்ற பெயரிடப்பட்ட
எலும்பு கூடுடன் பொருந்துகிறது. மேலும் அந்த இனம் ஆஸ்டிராலொபிதிகஸ்
அபாரென்சிஸ் வகையை சேர்ந்தது. மரத்திலிருந்து
கீழிறங்கி தரையில் கால் பதித்து நடப்பதற்கு ஏற்ற கால் எலும்புகள்
மற்றும் பழங்கள், பருப்புகள், கொட்டைகள் ஆகியவற்றை நன்கு கடித்து
உண்பதற்கு ஏற்ப அமைந்த பெரிய தாடைகள் ஆகியவை இந்த இனத்தின் சிறப்பம்சங்கள்
ஆகும். எனவே இதனடிப்படையில் பார்க்கும் போது, மனித இனத்தின் மூதாதையர்கள்
சுமார் 3.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்க கூடும்
என பேராசிரியர் கேரல் தெரிவித்துள்ளார்.
|
| ஆழ்ந்த
விண்வெளி பயணம் இனப்பெருக்க திறனை பாதிக்கும் |
நாசாவை
சேர்ந்த விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்கள்
பற்றிய புதிய ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அதில், ஆழ்ந்த விண்வெளியில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத நிலையில்
பயணம் செய்யும்போது அங்குள்ள கதிரியக்கம் காரணமாக ஆண்களின் இனப்பெருக்க
செல்லில் பாதிப்பு ஏற்படும். மேலும், அந்த குழுவில் கர்ப்பிணி பெண்கள்
இடம் பெற்றிருந்தால் அவர்களின் சிசு வளர்ச்சி பாதிக்கப்படும். சிசு
வளர்வதற்கு முக்கியமான மரபணு, கதிரியக்கத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படுவதால்
அது பிறக்கும் குழந்தையின் மூளை உட்பட எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்
அபாயம் உள்ளதென்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும், வளிமண்டலம்
வழியே பயணம் செய்யும்போது அது கதிரியக்க கதிர்களை உறிஞ்சி கொள்கிறது
என்பது சற்று ஆறுதல் தரும் விசயம் என அவர்கள் மேலும் கூறுகின்றனர்.
|
| ஸ்குவிட்
பற்றிய விஞ்ஞானிகள் ஆய்வு மனிதனுக்கு உதவுமா-? |
அமெரிக்காவின்
மசாசூசெட்ஸ் என்ற இடத்தை சேர்ந்த உயிரியியலாளர்கள் கடல் வாழ் உயிரினமான
ஸ்குவிட் பற்றி ஆராய்ச்சி செய்தனர். அதில் குறைந்த அலைவரிசை கொண்ட
ஒலி அலைகளை கேட்டு அதற்கேற்ப ஸ்குவிட்கள் செயல்படுவதாக தெரிய வந்துள்ளது.
மனிதன் சுமார் 20 ஹெர்ட்ஸ் முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரை உள்ள ஒலி அலைகளை
கேட்க இயலும். ஆனால் 500 ஹெர்ட்ஸ் வரை உள்ள ஒலியை மட்டுமே ஸ்குவிட்கள்
கேட்க முடிவதால் சில சமயங்களில் டால்பின்கள் மற்றும் சில வகை திமிலங்களுக்கு
இரையாகவும் நேரிடுகிறது. நகர்ந்து கொண்டே ஸ்குவிட்கள் ஒலிகளை உணர
முடியும். அதன் மூளையின் அடிப்பகுதியில் ஹேர் செல்கள் அமைந்துள்ளன.
இது ஒலியினை கண்டறிந்து உடனே தகவலாக மூளைக்கு அனுப்புகிறது. மனிதனின்
காதுகளும் இதே போன்ற பணியினை செய்கின்றன. எனவே ஸ்குவிட் பற்றிய இந்த
ஆராய்ச்சி மனிதன் தனது கேட்கும் திறன் இழப்பை தடுப்பது எப்படி என்பதற்கு
விடை காண வழி வகுக்கும் என ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.
|
| பாட்டு
பாடும் கிப்பன் குரங்குகள்: ஆய்வில் தகவல் |
| ஜெர்மனி
நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சீனா, லாவோ, கம்போடியா மற்றும்
வியட்நாம் போன்ற ஆசிய நாடுகளின் மழை காடுகளில் காணப்படும் கிப்பன்
வகை குரங்குகள் பற்றி ஆய்வு மேற்கொண்டனர். பெரும்பாலும் மனிதனை ஒத்து
காணப்படும் இந்த கிப்பன் குரங்குகள் தங்களுக்கென்று பாடல்கள் வைத்திருக்கின்றன.
தனது இணையை கவரவும், எல்லைகளை பிறருக்கு தெரியபடுத்தவும், பிறரோடு
தொடர்பு கொள்வதற்கும் என்று பல விசயங்களுக்கு பாடல்களை பயன்படுத்துவதை
வழக்கமாக கொண்டுள்ளன. இதில் டூயட் பாடல்களும் அடங்கும். ஆய்வுக்கு
92 டூயட் பாடல்கள் உட்பட 400 பாடல் மாதிரிகளை சேகரித்தனர். பின்னர்
அந்த பாடல்களை ஏறத்தாழ 53 வேறுபட்ட அலைவரிசைகளில் பிரித்து சோதனை
செய்தனர். அதில் கம்போடியா, லாவோ மற்றும் வியட்நாம் ஆகிய பகுதிகளை
சேர்ந்த கிப்பன்கள் ஒரே மாதிரியான டி.என்.ஏ. அமைப்பை கொண்டிருந்தது.
மேலும் 4 ரகமான தனித்தன்மை வாய்ந்த பாடல்களை அவை பாடுவதும் தெரிய
வந்தது. குறிப்பாக வடக்கு வியட்நாம், சீனா ஆகிய பகுதிகளை சேர்ந்த
கிப்பன்கள், தெற்கு பகுதியை சேர்ந்த கிப்பன்களை காட்டிலும் பல வகைகளில்
வேறுபட்டிருப்பது ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.
|
| வசீகரம்
நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர்: ஆய்வில் தகவல் |
அமெரிக்காவின்,
நியூயார்க் நகரில் அமைந்துள்ள மாநில பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்
கார்வின் சென்கோ மற்றும் விவியானா வைஃப் ஆகியோர் பல்கலை கழகத்தை
சேர்ந்த 70 மாணவிகளை தங்களது ஆய்வுக்கு உட்படுத்தினர். அந்த ஆய்வில்,
பெண்களை கவர்வதற்கு ஆண்களின் நகைச்சுவை இழைந்தோடும் பேச்சு மற்றும்
அதனை பெண்கள் அணுகும் முறை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கேள்விகள்
கேட்கப்பட்டன. இதில் பல முடிவுகள் தெரிய வந்துள்ளன. பெண்களிடம் வெளிப்படையாக
தங்களின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் ஆண்களை, நகைச்சுவை மிக்கவர்கள்
மற்றும் சமுதாயத்தில் சுமூகமாக பழகும் தன்மை கொண்டவர்கள் என மதிப்பிடுகின்றனர்.
அதே வேளையில் அவர்களை, நம்பகம் இல்லாதவர்கள் மற்றும் அறிவில் குறைந்தவர்கள்
என்றும் மதிப்பீடு செய்துள்ளனர். நீண்ட நாளைய உறவுமுறைக்கு புத்திசாலித்தனமும்,
நம்பகத்தன்மையும் மட்டுமே மிக அவசியம் என பெண்கள் மதிப்பிட்டுள்ளனர்.
பொதுவாக நகைச்சுவையாக பேசுவது, குறைந்த புத்திசாலித்தனத்திற்கு அடையாளமல்ல
என்றாலும் அவர்களின் பேச்சில் அது தென்படுகிறது என்று ஆய்வாளர்கள்
கூறினர். வசீகரம் மற்றும் ஆரோக்கியம் நிறைந்த ஆண்களே நகைச்சுவையாக
பேசுபவர்களை காட்டிலும் அதிகமாக பெண்களை கவருகின்றனர் என்று அந்த
ஆய்வின் முடிவில் தெரிய வருகிறது. |
| பேரழிவில்
இருந்து தப்பி வாழ்ந்த தாவர வகை டைனோசார்கள் |
| கனடா,
ஜன. 31-
ஜூராசிக்
பார்க் என்ற ஹாலிவுட் திரைபடத்தில் டைனோசார் தோன்றுவதை பார்த்திருப்போம்.
சுமார் 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசார் இனம் வாழ்ந்து
வந்துள்ளது. அப்பொழுது பூமியின் மீது விண்வெளியில் இருந்து சக்தி
வாய்ந்த பெரிய விண்கல் ஒன்று மோதியதாகவும் அதனால் ஏற்பட்ட பேரழிவால்
அந்த இனம் அடியோடு அழிந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கருதி வந்தனர்.
தற்போது டைனோசார் பற்றி புதிய தகவல் கிடைத்துள்ளது. இந்த டைனோசார்கள்
தாவரம் மட்டும் உண்பவை, மாமிசம் உண்பவை, நில வாழ்வன, நீர் வாழ்வன
என பல பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் ஹேட்ரோசார்
என்ற டைனோசார் தாவர உண்ணி வகையை சேர்ந்தது. அளவில் மிக பெரியதாக
காணப்படும் இதனுடைய வாய் பகுதி பிளாட்டிபஸ் என்ற நீர்வாழ் உயிரினத்தின்
அலகு போல் காணப்படும். தற்போது நியூ மெக்சிகோவில் இவ்வகை டைனோசார்
ஒன்றின் எலும்பு புதைபொருளாக கிடைத்து உள்ளது. இதனை ஆய்வு செய்ததில்
அதன் வயது 64.8 மில்லியன் ஆண்டுகள் என கணக்கிடப்பட்டு உள்ளது. அதன்
அடிப்படையில் முன்பு குறிப்பிட்ட வருடங்களை விட 7 லட்சம் ஆண்டுகள்
அதிகமாக இவ்விலங்கு பூமியில் வாழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் தலைவர் லேரி ஹீமேன்
கூறும்போது, தாவரங்களை உண்டு வாழ்ந்த இந்த டைனோசார்களுக்கு போதுமான
அளவு தாவர உணவு சில இடங்களில் கிடைத்துள்ளது. அதனால் குறிப்பிட்ட
அளவு ஹேட்ரோசார்கள் பேரழிவு காலத்திலிருந்து தப்பி மீதமிருந்த தாவரங்களை
உண்டு உயிர் வாழ்ந்துள்ளன என அவர் கூறினார். 31.01.2011
|
| ஒரங்குட்டன்
குரங்குடன் ஒத்து போகும் மனிதன்: ஆய்வில்
தகவல் |
குரங்கிலிருந்து தோன்றியவன் மனிதன்
என்றொரு கருத்து அறிவியலாளர்களிடம் நிலவி வருகிறது. இதனை மறுப்பவர்களும்
உண்டு. மனிதனின் டி.என்.ஏ. மூலக்கூறு எந்த விலங்குடன் பொருந்துகிறது
என்ற ஆராய்ச்சியின் பயனாக சிம்பன்சி இன குரங்குகளின் டி.என்.ஏ. மூலக்கூறு
99 சதவீதம் ஒத்துபோவது கண்டறியப்பட்டது. தற்போது ஒரங்குட்டன் எனப்படும்
வாலில்லா குரங்கு வகையின் டி.என்.ஏ. மூலக்கூறு 97 சதவீதம் மனிதனின்
டி.என்.ஏ. மூலக்கூறுடன் பொருந்தி காணப்படுவதை ஆராய்ச்சியாளர்கள்
கண்டறிந்துள்ளனர். சர்வதேச ஆராய்ச்சி குழுவை சேர்ந்த ஆய்வாளர்கள்
சூயிஸ் என்ற பெயரிடப்பட்ட சுமத்ரா இன பெண் ஒரங்குட்டனை தங்களது ஆய்வுக்கு
உட்படுத்தினர். பின்பு ஐந்து போர்னியன் மற்றும் ஐந்து சுமத்ரா இன
ஒரங்குட்டன்களை ஆய்வு செய்தனர். ஆய்வில் இரு இனங்களுக்கும் இடையே
டி.என்.ஏ. அமைப்பில் 13 மில்லியன் வேறுபாடுகள் இருப்பதை பதிவு செய்தனர்.
மேலும் 4 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்விரு இனங்களும் பிரிந்திருக்கக்கூடும்
என அவர்கள் கண்டறிந்தனர். தற்போது 50,000 போர்னியன் மற்றும் 7,000
சுமத்ரா இன ஒரங்குட்டன்கள் மட்டுமே எஞ்சியிருப்பதாக கணக்கிட்டுள்ளனர்.
காடுகள் அழிக்கப்படுவதால் அழிந்து வரும் நிலையில் உள்ள ஒரங்குட்டன்
இன குரங்குகளின் மறுவாழ்வுக்கு இந்த ஆய்வு முடிவானது ஒரு தீர்வை
தரும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
|
| முன்னோர்
வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும்: ஆய்வில் தகவல் |
| சாதாரணமாக
எந்தவொரு நல்ல செயல் ஆரம்பிப்பதற்கு முன்பும் இறைவனை வழிபடுவது பெரும்பாலானோரின்
வழக்கம். சிலர் தங்களது பெற்றோரிடம் ஆசி பெறுவர். மேலும் சிலர் தங்களது
முன்னோர்களை நினைத்து ஒரு செயலை தொடங்குவார்கள். தற்போது இதனை மெய்ப்பிக்கும்
வகையில் ஆஸ்திரிய நாட்டில் அமைந்துள்ள கிராஸ் பல்கலை கழக ஆராய்ச்சியாளர்களின்
ஆராய்ச்சி முடிவுகள் அமைந்துள்ளன. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்
மற்றும் நேர்முகத்தேர்வுக்கு செல்வோர் தங்களது முன்னோர்களை நினைத்து
வழிபாடு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கிறது என அந்த ஆய்வில் தெரிய
வந்துள்ளது. இதற்காக அவர்கள் 80 மாணவர்களை தேர்ந்தெடுத்தனர். அவர்களிடம்
தாத்தா, தாத்தாவிற்கு தாத்தா மற்றும் 15-வது நூற்றாண்டினை சேர்ந்த
முன்னோர்கள் ஆகியோரை 5 நிமிடங்கள் நினைத்து கொள்ளுமாறு கூறினர்.
மேலும் தாத்தா, பாட்டி சென்று வந்த இடங்களை சுற்றி பார்த்து வருமாறு
கேட்டு கொண்டனர். இதன் பின் அவர்களிடம் பல்வேறு அறிவுப்பூர்வமான
கேள்விகள் கேட்கப்பட்டன. முந்தைய தலைமுறையை நினைவு கூர்ந்தவர்கள்
அதிக நினைவாற்றலுடனும், நம்பிக்கையுடனும் காணப்பபட்டனர். அவர்கள்
16க்கு 14 என்கிற வகையில் சரியான பதிலை அளித்தனர். இவ்வாறு முன்னோர்
வழிபாடு செய்யாத மற்றொரு பிரிவினர் 16-க்கு 10 என்ற அளவிலேயே சரியான
பதிலை அளித்தனர். இந்த ஆய்வு முடிவு ஆனது முன்னோர் வழிபாடு நன்மை
தரும் என்ற நம்முடைய பழங்கால முறையை நிரூபிப்பதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
|
| இடி
இடிக்கும் போது காமா கதிர்கள்
வெளிப்படும்: கண்டறிந்தனர் நாசா ஆய்வாளர்கள் |
சாதாரணமாக
மின்னல் தோன்றும் போது இடி இடிப்பது வழக்கமாக நடைபெறும் ஒன்று. அந்த
சமயத்தில் வானில் ஆன்டிமேட்டர் துகள்கள் நிறைந்த மேகக்கூட்டம் தோன்றுவது
போன்ற நிகழ்வு காணப்படுகிறது. இதனை ஆன்டிமேட்டர் கிளவுட்ஸ் என ஆராய்ச்சியாளர்கள்
கூறுகின்றனர். வழக்கமான அணுக்களில் இருந்து வேறுபட்டு நெகட்டிவ்
உட்கரு பகுதியும், பாசிட்டிவ் தன்மை வாய்ந்த எலெக்ட்ரான் துகள்களும்
கொண்டது ஆன்டிமேட்டர் துகள்கள். இந்த துகள்கள் வானில் இடி இடிக்கும்போது
மேக கூட்டம் போல் பூமியில் இருந்து வானத்தை நோக்கி செல்கிறது. அப்போது
மின்புலம் தோன்றி காமாகதிர் வெளிப்பட்டு சிதறும் நிகழ்வு ஏற்படுகிறது.
இந்த நிகழ்வை நாசா விஞ்ஞானிகள் தங்களது பெர்மி காமா கதிர் விண்வெளி
தொலைநோக்கி ஒன்றின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர். இதுவரை ஆன்டிமேட்டர்
கிளவுட்ஸ் நிகழ்வு இடியின் உச்ச பகுதியில் இருந்தே தோன்றுவதாக கருதப்பட்டு
வந்துள்ளது. கடந்த 2008&ஆம் ஆண்டில் இருந்து தொலைநோக்கி உதவியுடன்
இந்த காமா கதிர் வெளிப்படும் நிகழ்வினை கவனித்து வந்துள்ளனர். அதில்
இதுவரை 130 முறை இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது என தகவல் தெரியவந்துள்ளது.
வழக்கமாக தினமும் உலகம் முழுவதிலும் 500 முறை கூட இந்த காமா கதிர்
நிகழ்வு ஏற்படும். இந்த கண்டுபிடிப்பினால் தற்போது ஆன்டிமேட்டர்
கிளவுட்ஸ் தன்மை வாய்ந்த ஒரு புது உலகம் நம்மை சுற்றி காணப்படும்
சாத்தியக்கூறுகள் உள்ளதென ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இது
தொடர்பான ஆய்வுகள் தற்போது தீவிரபடுத்தப்பட்டுள்ளன.
|
| விண்வெளியில்
பாலுறவு பற்றி நாசா ஆராய வேண்டும் - கலிபோர்னிய டாக்டர் கருத்து. |
பல்வேறு
ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் நாசா விண்வெளியில் பாலுறவு மற்றும்
குழந்தை பிறப்பு பற்றியும் ஆராய வேண்டுமென கலிபோர்னியாவை சேர்ந்த
டாக்டர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். டாக்டர் ராண் ஜோஸப் கலிபோர்னியாவிலுள்ள
மூளை ஆராய்ச்சி அமைப்பை சேர்ந்த விஞ்ஞானி. பூமியின் ஈர்ப்பு விசையில்லாத
விண்வெளியில், பாலுறவு கொள்வது குறித்து நாசா ஆராய வேண்டும். ஏனெனில்
விண்வெளி செல்லும் வீரர்கள் பெருமபாலான நேரம் ஓய்வாக இருப்பதால்
அவர்கள் பாலியல் உணர்வுகளால் தூண்டப்படும் வாய்ப்பு உள்ளது. இது
ஒரு சராசரி உணர்வு தான். எனவே, அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டுமென்பது
பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது. அது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில்
மனிதனை பிற கிரங்களில் குடியேற்றும் முயற்சி ஒன்று ஆய்வில் உள்ளதால்,
மனித இனம் தழைக்க வேண்டுமெனில் விண்வெளியில் பாலுறவு சாத்தியமாக
இருக்க வேண்டியது அவசியமாகிறது என்று அவர் கூறியதாக அமெரிக்க பத்திரிக்கையான
பாக்ஸ் நியூஸ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து, கருத்து
தெரிவித்த நாசா விஞ்ஞானி மைக்கேல் பின்னரன் என்பவர், நாசா தற்போது
இதுகுறித்த ஆராய்ச்சி எதிலும் ஈடுபடவில்லை எனவும் எதிர்காலத்தில்
இந்த ஆராய்ச்சிக்கான வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து இப்போதே கருத்துக்கூற
இயலாது என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள
ஆஸ்திரேலிய பத்திரிக்கை ஒன்று ஈர்ப்பு விசை இல்லாத இடங்களில் பாலுறவு
சாத்தியமில்லை என்றும் விண்வெளியில் கரு சரியாக வளரும் வாய்ப்பு
இல்லை எனவும் கூறுகிறது. 14.01.2011 |
| 6,000
வருடங்களை கடந்த மிக பழமையான ஒயின் உற்பத்தி இயந்திரம் கண்டெடுப்பு
|
தெற்கு
அர்மீனிய நாட்டில் 6,000 ஆண்டுகள் பழமையான ஒயின் உற்பத்தி இயந்திரத்தை
தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர். இதற்காக உயிரிவேதியியல் தொழில்நுட்பத்தை
பயன்படுத்தியுள்ளனர். இது பற்றி கலிபோர்னிய பல்கலைகழகத்தை சேர்ந்த
கிரிகோரி ஏர்ஷியன் கூறும்போது, உலகின் பழமையான ஒயின் உற்பத்தி இயந்திரம்
இது என கூறினார். இதற்கு அருகில் காய்ந்த நிலையில் காணப்பட்ட திராட்சை
செடி ஒன்று கார்பன் டேட்டிங் முறையில் 6,000 வருடங்களுக்கு முந்தையது
என கண்டறியப்பட்டது. இந்த கிராமத்தில் தொன்றுதொட்டு ஒயின் உற்பத்தி
செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது. பல இனத்தை சேர்ந்த மக்கள்
ஒன்று சேர்ந்து இந்த இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர் என அவர் மேலும்
கூறினார். மூன்று அடி (ஒரு மீட்டர்) விட்டம் கொண்ட அந்த வைன் உற்பத்தி
செய்யும் இயந்திரம் திராட்சை விதைகளாலும், காய்ந்த திராட்சை செடிகளாலும்
சூழப்பட்டுள்ளது. இது ஒரு குகையின் அருகில் அமைந்துள்ளது. ஏரெனி-1
என பெயரிடப்பட்ட இந்த குகையின் அமைவிடம் ஈரானை ஒட்டிய தெற்கு அர்மீனியாவிற்கு
அருகில் அமைந்த சிறிய காகசஸ் மலை பகுதியில் உள்ளது. இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் 5,500 வருடங்களுக்கு முன்பு உலகின்
மிக பழமையான தோலால் செய்யப்பட்ட காலணி இந்த குகைக்கருகே கண்டுபிடிக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது. 11.01.2011
|
| நிலாவில்
நீர் வால்நட்சத்திரங்களால் வந்தவை: ஆய்வில் தகவல் |
நிலவில்
நீர் இருப்பது பற்றி மிடில்டவுன் என்ற இடத்தில் அமைந்துள்ள வெஸ்லெயன்
பல்கலைகழகத்தை சேர்ந்த புவி மற்றும் சுற்றுசூழல் அறிவியல் துறையின்
பேராசிரியர் ஜேம்ஸ் கிரீன்வுட் என்பவர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் மூன்று வால்நட்சத்திரங்களின் வாயிலாக தான் நிலவில்
நீர் உண்டானது என தெரிய வந்துள்ளது. இதற்கான தகவல்கள் நாசாவின் அப்பல்லோ
விண்கலம் வழியாக சேகரிக்கப்பட்டன. மேலும் இந்த குறிப்பிட்ட வால்
நட்சத்திரங்கள் தான் பூமியில் சமுத்திரங்கள், மற்ற நீர் நிலைகள்
போன்றவற்றில் நீர் உண்டாவதற்கு காரணமாக அமைந்துள்ளது என அந்த ஆய்வு
முடிவுகள் தெரிவிக்கின்றன. 11.01.2011
|
| யுரேனிய
பொருள் தட்டுப்பாடுக்கு புதிய தொழில்நுட்ப முறை சீனா சாதனை |
உலக
அளவில் சீனாவிடம் யுரேனிய சுரங்க அளவு 2 சதவீதம் தான் உள்ளன. இதற்காக
சீன நாட்டில் உள்ள விஞ்ஞானிகள் யுரேனிய பொருள் தட்டுப்பாடுக்கு புதிய
தீர்வினை கண்டறிந்துள்ளனர். அதன்படி பயன்படுத்தப்பட்ட எரிபொருள்
மறுசுழற்சி அடிப்படையில் மீண்டும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்ப
முறையை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இதற்கான சோதனை சீனாவின் கன்சு
மாகாணத்தில் உள்ள கோபி பாலைவனத்தில் சீன தேசிய அணு கழகம் முறையாக
மேம்படுத்தப்பட்ட வகையில் சோதனை மேற்கொண்டது. அதன்படி, கதிரியக்க
தன்மையற்ற எரிபொருள் அணு தொழிற்சாலையில் யுரேனியம் மூலப்பொருள்களுடன்
சேர்த்து பயன்படுத்தப்பட்டது. இதனால் யுரேனிய பொருள்கள் பயன்பாடு
ஊக்குவிக்கப்பட்டு முன்பை விட 60 மடங்கு அதிகமாக பயன் தந்தது தெரிய
வந்தது. இந்த புதிய தொழில்நுட்ப முறையால் வருங்காலத்தில் யுரேனிய
மூலப்பொருள் தட்டுப்பாடு நீங்குவதுடன் இன்னும் 3,000 வருடங்களுக்கு
உபயோகமானதாக அமையும் என அந்நாட்டிலுள்ள தொலைக்காட்சி ஒன்று தகவல்
தெரிவித்துள்ளது. இந்த தொழில்நுட்ப முறையை சீனாவை தவிர பிரான்ஸ்,
இங்கிலாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் வரவேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
10.01.2011 |
| சிலந்தியின்
அதி வேக காதல்: வித்தியாசமான தகவல் |
| பூச்சி
இனத்தை சேர்ந்த சிலந்தியின் இனப்பெருக்கம் சற்று வித்தியாசமானது.
இவற்றுள் பருவத்திற்கு வந்த ஆண் சிலந்திகள் பெண் சிலந்தியை தேடி
செல்கின்றன. அதனை கண்டவுடன் இனப்பெருக்கம் நடைபெற்று விடுவதில்லை.
முதலில் பெண் சிலந்தியின் வலையை ஆண் சிலந்தி தனது காலால் மெல்ல தட்டுகிறது.
அதற்கேற்ப பெண் சிலந்தியிடம் இருந்து பதில் வந்தவுடன் ஆண் சிலந்தி
இனப்பெருக்கத்திற்கு உரிய சில அங்க அசைவு களை செய்கிறது. அதில் ஈர்க்கப்படும்
பெண் சிலந்தியுடன் ஆண் சிலந்தி ஒன்றாய் கூடுகிறது. எனினும் சில சமயங்களில்
இனப்பெருக்கம் முடிந்தவுடன் பெண் சிலந்தி ஆண் சிலந்தியை கொன்று விடுகிறது.
இந்த நிலை நீடித்தால் அந்த சிலந்தியின் இனமே பிற்காலத்தில் இல்லாத
வாய்ப்பு ஏற்பட்டு விடும். இதை தவிர்த்து அவை எவ்வாறு வாழ்கின்றன
என கலிபோர்னிய பல்கலைகழகத்தை சேர்ந்த ஜோனாதன் ப்ரூட் மற்றும் அவரது
சகாக்கள் ஆய்வில் ஈடுபட்டனர். அதற்காக ஆய்வகத்தில் இனப்பெருக்கத்திற்கு
தயாரான நிலையிலுள்ள சில இளம் சிலந்திகளை ஜோடியாக விட்டனர். சில இளஞ்சிலந்திகளை
தனியாக வைத்திருந்தனர். இனப்பெருக்கத்திற்கு உரிய பருவத்தில் சிலந்திகளில்
ஒரு ஜோடி மிக வேகமாக தங்களுக்குள் ஒன்றாக கூடின. இந்த வேகம் தங்களது
சரியான ஜோடியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அவ்வாறு
இல்லாவிட்டால் வேறு சிலந்தியால் குறுக்கிடப்பட வாய்ப்பு உள்ளது.
அதை தவிர்ப்பதற்காக தான். மேலும் அதி விரைவாக செயல்படுவதால் அது
ஜோடிகளுக்கு பாதுகாப்பினை தருகிறது. இந்த கூடுதலில் பெண் சிலந்திக்கு
ஏதேனும் நன்மை ஏற்படுகிறதா-? என ஆராய்ந்ததில் ஆம் என்பதே பதிலாக
இருந்தது. ஜோடிகள் ஒன்றாக கூடும் இந்த நிகழ்வில் ஆண் சிலந்தி சாதனை
செய்த பெரியவராகி விடுகிறது. மேலும் வேறு சிலந்தியினால் தொல்லை ஏற்படுவதில்
இருந்து விடுபட்டு போதுமான பாதுகாப்பும் ஏற்பட ஏதுவாகிறது என ஆய்வாளர்
ப்ரூட் தெரிவித்தார். 9.01.2011
|
| பெண்களின்
கண்ணீர் அவர்களை பாதுகாக்கிறது: ஆராய்ச்சியில் தகவல் |
பெண்கள்
தங்களது அழுகையினால் காரியம் சாதிக்க கூடியவர்கள் என்று கூறப்படுவதுண்டு.
ஒருவரின் காதலியோ அல்லது மனைவியோ அழும்போது அதனை அவரால் தாங்கி கொள்ள
முடிவதில்லை. எவ்வளவு கல் நெஞ்சு படைத்தவராக இருந்தாலும் அவரையும்
கரையச்செய்து விடும் பெண்களின் அழுகை. இதற்கு அறிவியல் ஆய்வின் அடிப்படையில்
விளக்கம் பெறும்போது, பெண்களின் கண்ணீரில் ஒரு வித வேதிபொருள் காணப்படுகிறது.
அது அவர்களை பார்க்கும்போது களையிழந்து காணப்படுவது போல் தோன்ற செய்கிறது.
அழும் பெண்ணின் முகம் இந்த வேதிபொருளால் பொலிவு இழப்பதால் அவரது
துணை அதனை பார்ப்பதற்கு விரும்புவதில்லை. மேலும் கண்ணீரில் காணப்படும்
வேதிபொருள் அவர்களை மறைமுகமாக பாதுகாக்கிறது. எவ்வாறென்றால் அழுவதை
பார்க்கும் ஆண்களில் வன்முறையை தூண்டும் டெஸ்டோஸ்டீரான் அளவை அது
வெகுவாக குறைக்கிறது எனவும் ஆய்வு தெரிவிக்கிறது. 8.01.2011 |
| செயற்கை
கருத்தரிப்பில் உருவாகும் சிக்கலை தீர்க்கும் சோயா கலந்த திரவம் |
இயற்கையான
முறையில் குழந்தை பெற்று கொள்ள இயலாதவர்கள் ஐ.பி.எப். என்ற சிகிச்சை
முறையை மேற்கொள்கின்றனர். செயற்கை முறையில் கருவானது வளர்க்கப்பட்டு
பின்னர் அதன் மூலம் அவர்கள் குழந்தை பெற்று கொள்கின்றனர். எனினும்
இந்த முறையில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தை உருவாவதற்கு
முன்பு கரு சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்க தற்போது கொழுப்பு
மற்றும் கலோரி நிறைந்த இன்ட்ராலிபிட் என்ற திரவம் கொடுக்கப்படுகிறது.
இதில் சோயா சத்து காணப்படுகிறது. இதனால் குழந்தை பிறப்பு சிக்கல்
இன்றி நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சோயா கலந்த திரவம்
கரு சிதைவை ஏற்படுத்தும் வேதிபொருள்களின் நச்சுத்தன்மையை உடலில்
இருந்து வெகுவாக குறைக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது.5.01.2011 |
| 4
லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் வாழ்ந்துள்ளான்: ஆய்வில் தகவல்
|
மனிதன்
எந்த இடத்தில் இருந்து தோன்றினான் என்பதில் இன்னும் சர்ச்சை நீடித்து
வருகிறது. சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில்
இருந்துதான் முதல் மனிதன் தோன்றினான் என இதுவரை நம்பப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் ஆச்சரியமிக்கதாக உள்ளது. இஸ்ரேல்
நாட்டில் 4 லட்சம் ஆண்டுகளுக்கு
முன்பு பழங்காலத்தை சேர்ந்த ஹோமோ சேப்பியன்ஸ் வகை மனிதன் வாழ்ந்ததாக
கூறப்படுகிறது. இது பற்றி இஸ்ரேல் நாட்டில் அமைந்துள்ள டெல் அவிவ்
பல்கலை கழகத்தை சேர்ந்த அவி கோபர் மற்றும் ரேன் பர்கை ஆகிய தொல்லியலாளர்கள்
ஆய்வு மேற்கொண்டனர். இஸ்ரேலில் அமைந்துள்ள கீசெம் என்ற குகையில்
இதற்கான சான்று கிடைத்துள்ளது. இந்த குகையில் மனிதனுடைய 8 பற்கள்
கிடைத்துள்ளன. இந்த பற்களை ஆய்வு செய்ததில் அவற்றின் வடிவம் மற்றும்
அளவு ஆகியவை தற்கால மனிதர்களோடு பெருமளவில் ஒத்து காணப்பட்டன. இந்த
கீசெம் குகைகள் 4 லட்சம் ஆண்டுகள் முதல் 2 லட்சம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டது
என தொல்லியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மேலும் இக்குகையில் வாழ்ந்த
மனிதர்களிடம் நெருப்பு பயன்பாடு, வேட்டையாடுதல், விலங்கு இறைச்சியினை
உபயோகித்தல் மற்றும் தங்களது பாதுகாப்புக்காக ஆயுதம் தயாரித்தல்
போன்ற செயல்பாடுகள் காணப்பட்டுள்ளன. கடந்த சில வருடங்களில் ஸ்பெயின்
மற்றும் சீனா ஆகிய நாடுகளில் கிடைத்த மனித எலும்பு கூடுகள் மற்றும்
தொல்லியல் சான்றுகள் ஆகியவை மனிதன் ஆப்பிரிக்காவில் தான் முதலில்
தோன்றினான் என்ற கோட்பாட்டிறகு மாறுபட்டதாக அமைந்திருந்தன. தற்போது
இந்த குகையில் கிடைத்துள்ள சான்றுகள் தனித்தன்மை வாய்ந்தவையாக உள்ளன.3.01.2011
|
| உலகின்
முதல் அணு ஆயுத விமானம் எக்ஸ்பி-70 |
அமெரிக்க
ராணுவம் கடந்த 1950ல் எதிரிகளின் இலக்கை தாக்குவதற்கு பலம் வாய்ந்த
பி-52 என்ற போயிங் ரக விமானத்தை பயன்படுத்தி வந்தது. இந்நிலையில்
தனது அணு ஆயுத பலத்தை பெருக்கும் வகையில் உயரத்தில் பறந்து சென்று
அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் வாய்ந்த விமானங்களை உருவாக்க
முடிவு செய்தது. இதற்காக உருவாக்கப்பட்டது தான் உலகின் முதல் அணு
ஆயுத விமானம் என கருதப்படும் எக்ஸ்பி&70அ என்ற அதி நவீன விமானம்
ஆகும். எதிரி விமானங்களின் தாக்குதலில் இருந்து எளிதில் தப்பிக்கும்
வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த விமானம் சுமார் 70,000 அடி உயரத்தில்
பறக்கும் திறன் வாய்ந்தது. 1950&ஆம் ஆண்டு உருவாக்கப்படும்போது
இது பிரபலமாகவில்லை. ஆனால் 80 மற்றும் 90களில் பலரது வீடுகளில் இந்த
விமானத்தின் மாதிரி இடம்பெற தவறவில்லை. விமானத்தின் பாகங்கள் துருபிடிக்காத
உலோக கலவையால் உருவாக்கப்பட்டன. அதிக வெப்பத்தை வெளியிடும் இந்த
சூப்பர்சோனிக் விமானத்தின் சில பாகங்கள் ரெனி 41 என்ற உலோக கலவையை
கொண்டும் உருவாக்கப்பட்டது. எனினும் தற்காலத்தில் ஏவுகணைகளை தாங்கி
செல்லும் ராக்கெட் வரவால் இத்தகைய விமானங்களின் பயன்பாடு முற்றிலும்
குறைந்து விட்டது. துரதிருஷ்டவசமாக எக்ஸ்பி&70யின் கதை நடுவானிலேயே
முடிந்து போனது. 1966-ஆம் வருடம் எப்-104 விமானம் பறந்து செல்லும்
போது உடன் பறந்த அதனுடைய வலது இறக்கையை பதம் பார்த்து விட்டது. இதனால்
எக்ஸ்பி-70 வெடித்து சிதறியது. தயாரிக்கப்பட்ட இரு விமானங்களில்
தற்போது ஒன்று மட்டுமே மீதமுள்ளது. இது பற்றிய விவரங்களை அமெரிக்காவின்
ஓஹியோ மாகாணத்தில் அமைந்துள்ள அமெரிக்க விமான படை தேசிய அருங்காட்சியகத்தில்
காணலாம். 30.12.2010
|
| ஆயிரம்
வார்த்தைகள் தெரிந்த அதிசய நாய் |
நன்றியுள்ள
பிராணி என நாம் நாயை குறிப்பிடுவோம். இது பலரது வளர்ப்பு பிராணியாக
வீட்டில் செல்லமாக வளர்க்கப்படுகிறது. பொதுவாக நாய்கள் புத்திசாலியானவை.
இந்த நாய் இனத்தில் பார்டர் கோலி என்றொரு வகை
உள்ளது. இது வளர்ப்பு பிராணியாக மட்டுமல்லாமல் நாம் கற்று கொடுக்கும்
வார்த்தைகளையும் புரிந்து கொள்கிறது. இது பற்றி ஸ்பார்டன்பர்க் நகரில்
அமைந்துள்ள வோபர்டு கல்லூரியின் உளவியல் பயிற்சியாளர்கள் அலிஸ்டன்
ரீட் மற்றும் ஜான் பிள்ளே ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். அதற்காக சேஸர்
என்ற பெயரிடப்பட்ட பார்டர் கோலி வகை ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இது அதிகபட்சமாக 1,022 வார்த்தைகளை கற்று கொண்டுள்ளது. அவர்க· Cருவரும்
சேஸருக்கு 3 வருடங்களாக பயிற்சி தந்துள்ளனர். நூற்றுக்கு மேற்பட்ட
பொம்மைகளின் பெயர்களை ஒவ்வொன்றாக மிக பொறுமையாக கற்று கொடுத்துள்ளனர்.
தற்போது சேஸருக்கு 6 வயதாகிறது. இதற்கு ஏறத்தாழ 838 முறை தனித்தனியாக
தேர்வுகள் நடத்தியுள்ளனர். அதன்படி 16 பிளாஸ்டிக் டப்பாக்கள் பயன்படுத்தப்பட்டன.
அவற்றில் 20 பொம்மைகள் நிரப்பப்பட்டன. பின்னர் ஓர் அறையில் வைக்கப்பட்டன.
சேஸரை அழைத்து ஒரு பொம்மையின் பெயரை சொன்னவுடன் அது அறையில் சென்று
20-க்கு 18 பொம்மைகள் என்ற கணக்கில் மிக சரியான பொம்மையை எடுத்து
வந்தது. இதற்கு முன்பு ரிகோ என்ற பார்டர் கோலி இனம் 200 வார்த்தைகள்
கற்று தேர்ந்தது குறிப்பிடத்தக்கது. 25.12.2010
|
| பூமியின்
உட்புற காந்த சக்தி மைய வலிமையின் அளவு முதன்முதலாக ஆய்வில் கண்டுபிடிப்பு
|
நாம்
வாழும் பூமியில் உள்ள புவி ஈர்ப்பு விசைக்கு முழு காரணம் காந்த சக்தி
மையமே இந்த காந்த சக்தி மைய வலிமையை பற்றி கலிபோர்னிய பல்கலைகழக
பூமி மற்றும் கோள் அறிவியல் துறை பேராசிரியர் புரூஸ் ஏ. பபெட் என்பவர்
ஆராய்ச்சி மேற்கொண்டார். அதன்படி பூமியின் உட்புறம் ஏறத்தாழ 1800
மைல்கள் (2,896 கி.மீ.) ஆழத்தில் இந்த காந்த சக்தி மையம் அமைந்திருக்கிறது
என கண்டறிந்துள்ளார். இது பூமியின் மேற்பரப்பில் காணப்படும் காந்த
சக்தி மையத்தை விட 50 மடங்கு வலிமை வாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
வெப்பமானது பூமிக்கு 3 விதமான வழிகளில் கிடைக்கிறது என விஞ்ஞானிகள்
கூறுகின்றனர். அவை
1) சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமி உருவானபோது ஏற்பட்ட
வெப்பம்
2) பூமிக்குள் காணப்படும் தனிமங்கள் வெளியிடும் புவியீர்ப்பு ஆற்றல்
வழியாக கிடைக்கும் வெப்பம் மற்றும்
3) நீண்ட காலமாக பூமியில் உள்ள பொட்டாசியம், யுரேனியம் மற்றும் தோரியம்
போன்ற கதிரியக்க தனிமங்களின் சிதைவுகளால் வெளிப்படும் வெப்பம் என
வெப்பமானது பூமிக்கு கிடைக்கும் காரணிகளாக கூறப்படுகிறது.
மேலும், பூமியின்
உட்புறம் உள்ள காந்தபுலம் தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான வருடங்களாக
நீடித்து வருகிறது. அதற்கு பூமியில் காணப்படும் இந்த வெப்பமே அடிப்படை
ஆகும். உற்பத்தியாகும் வெப்பமானது தொடர்ந்து காந்தபுலத்தை தோற்றுவிக்கும்
ஒரு சிறந்த சக்தியாக விளங்கி வருகிறது. ஏறத்தாழ 1,400 மைல்கள் (2,253
கி.மீ.) அளவிற்கு அடர்த்தி மிகுந்த பூமியின் வெளிப்புற அடுக்கு வெப்பத்தின்
உதவியால் கொதிப்படைகிறது. இதனால் உள்ளே உள்ள தனிமங்கள் ஆற்றலை உற்பத்தி
செய்து பின்னர் சிறிது சிறிதாக அவற்றை மின்னாற்றலாக மாற்றுகிறது.
அந்த மின்னாற்றல் காந்த சக்தி மையம் பூமியில் தொடர்ந்து நீடிக்க
உதவுகிறது. இந்த காந்த சக்தி மையம் பின்னர் பூமியின் மேற்புறம் வரை
பரவுகிறது. இது பற்றிய தகவல்களை கண்டறிந்துள்ள அறிவியலாளர் புரூஸ்
பூமியின் உட்புறம் காணப்படும் அரிய விசயங்கள் பற்றிய தனது ஆராய்ச்சியினை
தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். 22.12.2010
|
| சூரியனின்
ஹீலியோபாஸ் பகுதியை நெருங்கியது வாயேஜர் 1 |
கடந்த
1977ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வாயேஜர் 1 மற்றும்
வாயேஜர் 2 என்ற இரு விண்கலங்களை விண்ணிற்கு அனுப்பியது. வாயஜர் 1
விண்கலம் ஆனது மணிக்கு 38,000 மைல்கள் வேகத்தில் சூரியனின் வடக்கு
பகுதியிலும், வாயேஜர் 2 விண்கலம் மணிக்கு 35,000 மைல்கள் வேகத்தில்
சூரியனின் தென் பகுதியிலும் சுற்றி வருகிறது. பூமியில் காற்று இருப்பது
போல் சூரியனின் வெளிப்பகுதியில் காற்று மற்றும் வாயுக்கள் ஆகியவை
உள்ளன. ஆனால் இவை மணிக்கு 1 மில்லியன் மைல்கள் அளவு திசைவேகம் கொண்டவை.
இந்த பகுதியை ஹீலியோபாஸ் என அழைக்கின்றனர். இந்த காற்று பகுதியை
2004 ஆம் ஆண்டிலிருந்து வாயேஜர் விண்கலம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
கடந்த ஜூன் மாதம் இந்த பகுதியை விண்கலம் வாயேஜர் 1 நெருங்கியதை நாசா
விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஹீலியோபாஸின் எல்லை பகுதியில் உள்ள காற்றின்
திசைவேகம் விண்கலத்தின் சுற்றுவேகத்திற்கு இணையாக இருப்பது இதற்கு
சான்றாக அமைந்துள்ளது. இதனை கடந்த சில மாதங்களாக நாசா ஆராய்ச்சியாளர்கள்
கண்காணித்து வருகின்றனர். நாசாவின் விஞ்ஞானியான எட்வர்டு ஸ்டோன்,
இந்த தருணத்தை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். விண்கலம், ஹீலியோபாஸ்
பகுதியை நெருங்கி கொண்டிருக்கிறது, இன்னும் 4 வருடங்களில் விண்கலம்
வாயேஜர் 1 சூரிய மண்டலத்தை கடந்து மிகவும் குளிர்ந்த மற்றும் அடர்ந்த
வாயுக்கள் அடங்கிய இன்டர்ஸ்டெல்லார் என்ற பகுதிக்குள் நுழையும் என
எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார். 14.12.2010
|
| 100
மைல் தொலைவில் இருந்து எதிரிகளை தாக்கும் நவீன துப்பாக்கி: அமெரிக்கா
கண்டுபிடிப்பு |
அமெரிக்காவின்
கப்பற்படையில் புதிய வகை துப்பாக்கி ஒன்று சேர்க்கப்பட இருக்கிறது.
இதில் இருந்து வெளிப்படும் துப்பாக்கி குண்டு ஒலியை விட எட்டு மடங்கு
வேகத்தில் சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது. 20 பவுண்டு எடை
கொண்ட இந்த துப்பாக்கி குண்டு சிறிய வகை ராக்கெட் போல் காணப்படுகிறது.
அமெரிக்காவின் விர்ஜினியாவில் அமைந்துள்ள கப்பற்படை மையத்தில் இந்த
துப்பாக்கி சோதனை முயற்சியாக பரிசோதிக்கப்பட்டது. அப்போது அது 33
மெகா ஜூல்கள் அளவு ஆற்றலை வெளிப்படுத்தி சீறி பாய்ந்து சென்றது.
(ஒரு மெகா ஜூல் என்பது ஒரு டன் எடையுள்ள கார், மணிக்கு 100 மைல்
வேகத்தில் செல்வதற்கு சமம்). ஒரு சில நிமிடங்களிலேயே 100 மைல்கள்
தூரம் செல்ல கூடிய இந்த ராக்கெட் மற்ற சாதாரண வகை துப்பாக்கிகளை
விட அதிக துல்லியம் வாய்ந்தது. தற்போது அமெரிக்காவின் கப்பற்படையில்
13 மைல்கள் தூரம் சென்று தாக்கும் திறன் வாய்ந்த துப்பாக்கிகளே உள்ளன.
இவ்வகை துப்பாக்கி பயன்பாட்டுக்கு வந்த பின் பாதுகாப்பான இடத்தில்
இருந்தே எதிரி படைகளை தாக்க இயலும். அதற்கு இன்னும் 5 அல்லது 10
வருடங்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது. வரும் 2025-ஆம் ஆண்டில் இருந்து
6 நிமிடங்களில் 200 மைல்கள் சென்று தாக்கும் தன்மை வாய்ந்த நவீன
தொழில்நுட்பம் வாய்ந்த துப்பாக்கிகள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவியலாளர்கள்
கூறுகின்றனர். 14.12.2010
|
| பைசா
கோபுரம் சாய்விலிருந்து
தடுத்து நிறுத்தப்படுகிறது |
| உலக
அதிசயங்களுள் ஒன்று இத்தாலியின் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம். சுமார்
14500 மெட்ரிக் டன் எடையும் 183 அடி உயரமும் கொண்ட இந்த கோபுரத்தின்
வயது 838 ஆண்டுகள். ஆண்டுதோறும் உலகெங்கிலுமிருந்து 10 லட்சம் சுற்றுலா
பயணிகளை கவர்ந்து வரும் இந்த கோபுரம் தன்னிலையிலிருந்து கொஞ்சம்
கொஞ்சமாக சாய்ந்து வருகிறது என்பது தான் பல நூற்றாண்டுகளாக உலக மக்களை
கவலை அடைய செய்வதாக உள்ளது. ஏழு அடுக்குகளைக்கொண்ட இந்த கோபுரம்,
வெறும் 10 அடி அஸ்திவாரத்தில் மட்டுமே அமைந்துள்ளது மட்டுமல்லாமல்,
இவ்வளவு எடையை தாங்கும் அளவிற்கு அந்த இடத்தின் மண் வலுவானதல்ல என்பதும்
தான் இந்த கோபுரம் சாய்வதற்கான காரணங்களென்று கூறப்படுகிறது. மேலும்
மத்திய தரை கடலிலிருந்து வரும் உப்புக்காற்றும் மழைகாலங்களில் ஏற்படும்
மண் அரிப்பும் கேட்டினை அதிகப்படுத்தி வருகின்றன. கோபுரம் சரிவதிலிருந்து
காப்பாற்றுவதற்கு அந்நாட்டு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. யுனெஸ்கோ
அமைப்பும் இந்த கோபுரத்தை பாதுகாக்கும் பணியை கடந்த 1989 ஆம் ஆண்டு
ஏற்றுக்கொண்டது. சுமார் 6 மில்லியன் பவுண்டு செலவில் கோபுரம் சாய்விலிருந்து
மீட்கப்படுகிறது. கோபுரத்திற்கடியில் சேர்ந்துள்ள மண் மற்றும் கழிவுப்பொருட்களை
லேசர், உளி மற்றும் சிறிய வகை ஊசிகளை பயன்படுத்தி நீக்கி வருகின்றனர்.
இதன் மூலம் கிட்டத்தட்ட 5.5 டிகிரி சாய்ந்திருந்த கோபுரம் மீட்கப்பட்டு
தற்போது 3.9 டிகிரி சாய்வு நிலைக்கு நேர் செய்யப்பட்டுள்ளது. இந்த
முயற்சி இன்னும் 200 வருடங்களுக்கு போதுமானது என்று இதன் மீட்பு
பணியில் ஈடுபட்டுள்ள பொறியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 14.12.2010
|
| விக்கிலீக்ஸ்
ஆவணங்கள் பாதுகாப்பு மையம் பற்றி பரபரப்பு தகவல் |
சர்வதேச
நாடுகள் பற்றி பல பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ்
இணையதளத்தின் தகவல் திரட்டிகள் அடங்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள
இடம் பற்றி தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. சுவீடனின் ஸ்டாக்ஹோம்
என்ற இடத்தில் பூமிக்கு அடியில் 100 அடி ஆழத்தில் பையனென் என்ற தகவல்
மையம் அமைந்துள்ளது. ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வரும் பிரமாண்ட செட்
மாதிரியாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் தான் விக்கிலீக்ஸ்
இணையதளத்தின் ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த தகவல்
மையத்தில் உள்ள சூப்பர் செர்வர்கள் பல நிறுவனங்களுக்கு தங்கள் பணியினை
வழங்கிவருகிறது. பெரிய குகை போல் காணப்படும் இந்த தகவல் மையம் கிரானைட்டை
குடைந்து கட்டப்பட்டுள்ளது. இங்கு மிதக்கும் கருத்தரங்கு அறை, கண்ணாடி
கதவுகள், மரவேலைபாடுகளுடன் அமைந்த அறைகள் ஆகியவை பார்ப்பதற்கு பிரமிப்பூட்டுகின்றன.
மேலும் செயற்கையான நீர்வீழ்ச்சிகள், அடர்ந்த உயிருள்ள செடிகள், சோலார்
விளக்குகள் போன்றவையும் அமைந்துள்ளன. விக்கிலீக்ஸ் வைத்துள்ள தகவல்கள்
அனைத்தும் அதிக கொள்ளளவு கொண்ட ஒரு மெமரி ஸ்டிக்கின் உதவியால் சேமித்து
வைக்கப்பட்டுள்ளன என்றும் தகவல் தெரிவிக்கிறது. |
| நாசாவின்
ஆர்செனிக் பாக்டீரியா பற்றிய தகவலை ஏற்க விஞ்ஞானிகள் மறுப்பு |
பூமியை
தவிர வேறு கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன என நாசா விஞ்ஞானிகள்
கருத்தரங்கில் அறிவித்திருந்தனர். மேலும் அவர்கள் கலிபோர்னியா மாகாணத்தில்
உள்ள மோனோ ஏரியில் வாழும் பாக்டீரியா தனது டி.என்.ஏ. மூலக்கூறில்
பாஸ்பரஸிற்கு பதிலாக ஆர்செனிக் என்ற நச்சு தன்மை வாய்ந்த பொருளை
கொண்டு உயிர் வாழ்கிறது என கூறியிருந்தனர். இதனை மற்ற விஞ்ஞானிகள்
ஏற்க மறுத்துள்ளனர். இது பற்றி அலெக்ஸ் பிராட்லி என்ற நுண்ணுயிரியியலாளர்
கூறும்போது, பாக்டீரியாவின் டி.என்.ஏ. ஆர்செனிக் கலந்த நீரில் அமிழ்ந்து
வைத்திருக்கும்போது, அது கண்டிப்பாக தன்னுள் பாஸ்பேட் பொருளை கொண்டிருக்கும்
என கூறினார். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வில், பாக்டீரியாவானது
குறைந்த அளவிலான பாஸ்பேட் பொருளை தன்னுள் கொண்டு உயிர் வாழும் தன்மை
பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவ்வகை பாக்டீரியா இனங்கள்
பல உள்ளன என்றும் கூறப்படுகிறது. பாக்டீரியா குறித்து கருத்தரங்கில்
தகவல் வழங்கியிருந்தவர்களில் ஒருவரான ரொனால்ட் ஒரெம்லேண்ட் கூறும்போது,
இந்த விவாதங்களுக்குள் தற்போது நாங்கள் நுழைய விரும்பவில்லை. நாங்கள்
தெரிவித்த கருத்து தவறானால் மற்ற விஞ்ஞானிகள் எங்கள் கண்டுபிடிப்பை
பற்றி ஆராய்ந்து தெளிவு பெற ஒரு உந்துசக்தியாக அது இருக்கும். நாங்கள்
தெரிவித்தது சரி என்றால் எங்களுடன் போட்டியிடுபவர்கள் அதனை ஏற்று
கொள்வார்கள். மேலும் இந்த விசயத்தில் அவர்கள் எங்களுக்கு உறுதுணையாகவும்
இருப்பார்கள். அதற்காக நான் ஆவலாக உள்ளேன் என கூறினார்.
இது போன்ற தகவல்களை
கூறுவது நாசா மையத்திற்கு புதிதல்ல. கடந்த 1996-ஆம் ஆண்டு, குறிப்பிட்ட
ஒருவகை பாறையின் மீது வேற்று கிரகத்தில் வாழும் நுண்ணுயிர் படிவங்கள்
இருப்பதாக தெரிவித்திருந்தது. புகைப்படங்களும் வெளியிடப்பட்டது.
அது அப்போது பலராலும் விமர்சிக்கப்பட்டது. மேலும், அதிக வெப்பம்
உண்டாகி அதனால் பாறை வெடித்து தாதுபொருள்கள் உற்பத்தியாகி இருக்கிறது.
அது நுண்ணுயிர் படிவங்கள் என தவறாக கருதப்பட்டுள்ளது என்றும் விமர்சனத்திற்குள்ளானது
குறிப்பிடத்தக்கது. 8.12.2010
|
| ஜெர்மனி
நாட்டில் குழந்தை பிறப்பு முதன்முறையாக எம்.ஆர்.ஐ. கருவியில் பதிவு
|
ஜெர்மனி
நாட்டில் பெர்லின் நகர மருத்துவமனையில் முதன்முறையாக குழந்தை பிறப்பினை
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உதவியுடன் புகைபடமாக பதிவு செய்துள்ளனர். இது
மருத்துவ வரலாற்றில் ஒரு சாதனையாக கருதப்படுகிறது. பொதுவாக இந்த
கருவிகள் குழாய் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் சாரைட் மருத்துவ
குழுவினர் இதற்காக திறந்த நிலைகொண்ட ஸ்கேனரை உருவாக்கினர். அது குழந்தை
பிறப்பின்போது தாய்மார்களுக்கு எளிதான நடைமுறையை தந்தது. பெர்லின்
நகரத்தின் சாரைட் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் எர்ன்ஸ்ட் பீண்டர்
கூறும்போது, குழந்தை இயல்பான முறையில் பிறந்தது. அது கருப்பையில்
இருந்த நிலை, அதன் இயக்கங்கள் மற்றும் இயல்பாக நடைபெற்ற பிரசவம்
ஆகியவை கருவியின் உதவியால் பதிவு செய்யப்பட்டன. குறிப்பாக குழந்தையின்
இதய துடிப்பும் அந்த கருவியால் பதிவு செய்யப்பட்டது என்றார். மேலும்
மருத்துவமனை அதிகாரிகள் கூறும்போது, பல தாய்மார்கள் இந்த முறையில்
குழந்தை பெற்று கொள்ள முன்வந்துள்ளனர். மேலும் ஐந்து குழந்தை பிறப்புகள்
எம்.ஆர்.ஐ. கருவியின் புகைபட பதிவுடன் நடைபெறும் என்று தெரிவித்தனர்.
தற்போது சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பானது
அதிகரித்து வருகிறது. இந்த சாதனையின் மற்றொரு அம்சமாக, வருங்காலத்தில்
சிசேரியன் குழந்தை பிறப்பில் உள்ள பல சிக்கல்கள் தவிர்க்கப்படும்
என தெரிகிறது.
8.12.2010
|
| இந்தோனேஷிய
தீவில் வாழ்ந்த பெரிய பறவையினத்தின் படிவங்கள் கண்டுபிடிப்பு |
இந்தோனேஷிய
தீவுகளில் ஒன்று புளோரஸ். இங்கு மிகப்பெரிய மாரபவ் வகை நாரை இனம்
ஒன்று வாழ்ந்ததற்கான அடையாளம் தற்போது தெரிய வந்துள்ளது. தொல்லியல்
ஆய்வாளர்கள் அந்த பறவையின் படிவங்களை கண்டுபிடித்துள்ளனர். ஏறத்தாழ
1.8 மீ உயரமும், 16 கிலோ எடையும் கொண்டது இந்த பறவை. இதன் அறிவியல்
பெயர் லெப்டப்டிலொஸ் ரொபஸ்டஸ். இந்த இடத்தில் தற்போதைய மனிதர்களை
போன்ற தோற்றம் கொண்ட மிகச்சிறிய மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்கள்
ஹோபிட்் என்றழைக்கப்படுகின்றனர். உருவத்தில் ஒப்பிடும் பொழுது அந்த
பறவை ஹோபிட்் இனத்தை விட பெரியதாக இருந்துள்ளது. இந்த பறவையின் 4
கால் எலும்புகள் கொண்ட படிவங்கள் புளோரஸ் தீவின் லியங் புவா குகைகளில்
கிடைத்துள்ளது. இந்த பறவை 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்பு வாழ்ந்திருக்கக்கூடும் என கணக்கிட்டுள்ளனர். மேலும் இங்கு
குள்ள யானைகள், பெரிய எலிகள், பெரிய வகை பல்லிகள் மற்றும் சிறிய
இன மனிதர்கள் ஆகியோர் வாழ்ந்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது. 7.12.2010
|
| சூரியனை
சுற்றி சூழ்ந்த பாம்பு உருவம்: நாசாவின் அரிய புகைப்படம் வெளியீடு
|
|
விண்வெளியில்
நடக்கும் அதிசய நிகழ்வுகளை அடிக்கடி தனது செயற்கைகோள்கள் உதவியுடன்
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் புகைப்படமாக வெளியிட்டு வருகிறது.
தற்போது, நாசாவின் சூரியமண்டலத்தை ஆய்வு செய்யும் ஆய்வகமான எஸ்.டி.ஒ.
ஒரு அரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில், சூரியனின் தென்பகுதியில்
சூரிய இழை போன்று கிட்டத்தட்ட 4 இலட்சத்து 35 ஆயிரம் மைல்கள் தூரம்
சூரியனை சூழ்ந்து ஒளிகற்றை ஒன்று காணப்படுகிறது. இந்த தொலைவானது
பூமியில் இருந்து நிலவிற்கு உண்டான தூரத்தை விட இரு மடங்கு ஆகும்.
இது சூரியனை விட அதிக அடர்த்தியான நிறத்தினை கொண்டுள்ளது. இது பார்ப்பதற்கு
சூரியனை ஒரு பாம்பு சூழ்ந்து இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
அதிக அடர்த்தி கொண்ட சூரிய இழைகளில் வாயுக்கள் உள்ளன. இது சூரியனின்
வெளி வளிமண்டலம் என அழைக்கப்படும் கரோனா என்ற பகுதியில் இருந்து
உருவாகிறது. அறிவியலாளர்கள் கூற்றுப்படி, இந்த புதிய இழை சூரிய புயலை
தோற்றுவிக்கும் பலம் வாய்ந்தது அல்லது அது சூரியனுடனேயே மறுபடியும்
ஒன்று சேர்ந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.
7.12.2010
|
| வேற்று
கிரக வாசிகள் உள்ளதா இல்லையா?: ஆராய்ச்சியாளர்கள் விவாதம் |

வேற்று கிரக வாசிகள் எனப்படும் ஏலியன்ஸ் பூமியில் யாருக்கும் புலப்படாமல்
அவ்வப்போது வந்து செல்கிறது என கூறப்படுகிறது. இதனை நம்புவோரின்
எண்ணிக்கை தற்போது பரவலாக அதிகரித்து வருகிறது. கலிபோர்னியா நகரில்
மோனோ என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியில் அதிக விஷ தன்மை கொண்ட ஆர்சனிக்
என்ற நச்சு பொருள் கலந்துள்ளது. இதில் உயிர்கள் வாழ்வது என்பது அரிதான
ஒன்று என கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆராய்ச்சியாளர்கள்,
ஏரியின் கீழ்பகுதியில் நுண்ணிய பாக்டீரியா வகையினை கண்டறிந்துள்ளனர்.
இது ஆர்சனிக் என்ற நச்சு பொருளை எடுத்து கொண்டு வாழ்வது தெரிய வந்துள்ளது.
இதனை அடிப்படையாக கொண்டு, வேற்று கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய
சாத்தியக்கூறுகள் உள்ளது என அவர்கள் கூறுகின்றனர். மேலும் விஞ்ஞானிகள்,
பல நூறு பில்லியன் டிரில்லியன் ஆண்டுகளை கடந்து விண்வெளியில் அமைந்திருக்கும்
பூமி போன்ற வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழும் வாய்ப்புள்ளது
என கணித்துள்ளனர். கடந்த 10 வருடங்களில், சூரிய குடும்பத்தை தவிர்த்து
500 கிரகங்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டம்பர் மாதம், வானியலாளர்கள் பூமி போன்று 3 மடங்கு பெரிதான
கிரகம் ஒன்றை கண்டறிந்துள்ளனர். இந்த கிரகத்தில் நம்முடைய பூமியில்
இருப்பது போல் வளிமண்டலம், புவியீர்ப்பு விசை மற்றும் மேற்பரப்பில்
நீர் ஆகியவை இருப்பதற்கான ஆதாரங்கள் தெரியவந்துள்ளது. இதற்கு கிளீஸ்
ஜி என பெயரிட்டுள்ளனர். இது ஏறத்தாழ 118 ,000, 000,000,000 மைல்கள்
அளவிற்கு தூரமும், மேலும் இதிலிருந்து வெளிப்படும் ஒளியானது பூமியை
வந்தடைய 20 வருடங்கள் ஆகும் எனவும் கணக்கிட்டுள்ளனர். இதனையடுத்து
வேற்று கிரகத்தில் உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சி மேலும் வலுவடைந்துள்ளது.
அது தொடர்பான விவாதங்களும் சூடுபிடித்துள்ளன. இதுவரை நமக்குத் தெரிந்த
வைரஸ் முதல் மனிதன் வரை அனைத்து உயிர்களும் கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன்,
ஆக்ஸிஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர் இந்த 6 ரசாயனங்களால் உருவானவை
இந்த பாக்டீரியாவின டி.என்.ஏ.வில் பாஸ்பரஸ் இல்லை என்பது தான் அந்த
பகீர் தகவல். அதன் டி.என்.ஏ.வி்ல் பாஸ்பரசுக்குப் பதிலாக ஆர்சனிக்
என்ற ரசாயனம் தான் உள்ளது .ஆர்சனிக்-பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டதன்
மூலம் 'உயிரின் அடிப்படை விதியே தகர்க்கப்பட்டுள்ளது. |
| பருவமடைந்த
பெண்கள் அதிகம் உரையாடுவது தாயிடமா அல்லது தந்தையிடமா? |

வயதுக்கு வந்த பெண்கள் தங்களது தந்தையிடம் அதிகமாக பேசுவது, பழகுவதை
பெருமளவில் தவிர்க்கின்றனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது பற்றி
மியாமி பல்கலைகழகத்தின் மனோதத்துவயியலாளர் டெப்ரா லீபெர்மேன் கூறும்
போது, பொதுவாக இனப்பெருக்க வளமிக்க காலத்தில் எந்த ஒரு நெருங்கிய
ஆண் துணையினையும் தவிர்த்தல் என்பது விலங்குகளின் வழக்கம் என்றார்.
ஆனால் இது மனிதர்களுக்கும் பொருந்தும் என்பதை எவ்வாறு எடுத்து கொள்வது?
அதற்கு புதுமையான ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 48 பெண்கள்
அவர்களின் தாய் மற்றும் தந்தையிடம் மேற்கொள்ளும் செல்போன் தொடர்புகள்
குறித்து கொள்ளப்பட்டன. அதில் மேற்குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாளில்,
தந்தையிடம் மிக குறைவான நேரம் (1.7 நிமிடங்கள்) மட்டும் பேசுவதும்
மற்ற காலங்களில் சாதாரணமாக 3.4 நிமிடங்கள் வரை பேசுவதும் தெரிய வந்தது.
இது அவர்களின் சமூக மற்றும் உளவியல் அடிப்படையில் அமைந்துள்ளது எனவும்
ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுவே இந்தியாவில், தந்தையிடம் மிக மிக
குறைவான நேரமே பேசுவர். |
| பொருளாதார
வளர்ச்சியால் உலக வெப்பமயமாதல் அதிகரிக்கும் அபாயம் |
| வரும்
2010-ஆம் ஆண்டில் உலக வெப்பமயமாதல் அளவு அதற்காக நிர்ணயிக்கப்பட்ட
இலக்கை கடந்து விடும் என இங்கிலாந்து பல்கலைகழக ஆய்வு தெரிவிக்கிறது.
கடந்த ஆணடு உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. மற்றும் எரிபொருள்
பயன்பாடும் மிக குறைவாக இருந்தது. இதனால் கார்பன்டை ஆக்சைடு வெளிப்பாடு
அளவு அதற்கு முந்தைய ஆண்டான 2008-ஐ காட்டிலும் குறைவாக இருந்தது.
இந்த பொருளாதார நெருக்கடியில் மேற்கத்திய நாடுகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டன.
குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் 2008-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது
2009ல் கார்பன்&டை&ஆக்சைடு வெளிப்பாடு 8.6 சதவீதம் குறைவாக
இருந்தது. இதே நிலைதான் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி
ஆகிய நாடுகளிலும் காணப்பட்டது. இந்த நெருக்கடியிலும் வலுவான பொருளாதார
நிலையை கொண்ட நாடுகளான இந்தியா (6.2 சதவீதம் கூடுதல்), சீனா (8 சதவீதம்
கூடுதல்) என்ற அளவில் கார்பன்டைஆக்சைடு வெளிப்பாடு இருந்தது என ஆய்வு
தெரிவிக்கிறது. இது பற்றி ஆய்வின் தலைவரும், பேராசிரியருமான பியரி
பிரீடுலிங்ஸ்டீன் கூறும்போது, எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சியை
எட்டினால் 2010ஆம் ஆண்டை கணக்கிடும் பொழுது கார்பன்டை ஆக்சைடு வெளிப்பாடு
3 சதவீதம் வரை அதிகரிக்கும். இதனால் உலக வெப்பமயமாதல் அதிகரிக்கும்
அபாயம் உள்ளது என்றும் அவர் கூறினார். |
| எய்ட்ஸ்
நோயை தடுக்க மாத்திரை: அமெரிக்கா கண்டுபிடிப்பு |
|
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் எய்ட்ஸ் நோயை தடுக்க புதிய மாத்திரையை
அமெரிக்க டாக்டர்கள் கண்டு பிடித்துள்ளனர். நல்ல உடல் ஆரோக்கியத்துடன்
இருப்பவர், `துருவதா' எனப்படும் அந்த மாத்திரையை இரண்டு ஆண்டுகளுக்கு
தினமும் சாப்பிட்டால் `எய்ட்ஸ்' கிருமிகள் அணுகாது என கலிபோர்னியா
பல்கலைக் கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வுக்காக
பிரேசில், பெரு, தென்ஆப்பிரிக்கா, தாய்லாந்து, அமெரிக்கா, ஈக்குவடார்
ஆகிய 6 நாடுகளை சேர்ந்த 2500 ஆண்களிடம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.
அப்போது, எய்ட்ஸ் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் வரை குறைந்திருப்பது
தெரிய வந்தது. இந்த மாத்திரையை சாப்பிட்டாலும் பாதுகாப்பான உடலுறவை
தொடருவது சிறந்தது என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். ஒரு ஆண்டுக்கு
`துருவதா' மாத்திரையை சாப்பிட எவ்வளவு செலவு தெரியுமா? ரூ.7 லட்சம்.
|
| அமேசான்
காட்டில் கண்டு பிடிக்கபட்ட இந்திய பழங்குடிகள் |

பெரு நாட்டின் எல்லைக்குட்பட்ட அடர்ந்த அமேசான் காடுகளில் இந்திய
பழங்குடியினர் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமேசான்,
ஆப்ரிக்கா மற்றும் பெரு நாட்டு பழங்குடி மக்கள் குறித்து ஆராய்ச்சி
செய்யும் அமைப்பு ஒன்று கடந்த ஓராண்டாக தீவிர முயற்சிக்கு பின் இந்த
இந்திய பழங்குடியினரை அமேசான் காட்டுக்குள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலாடை அணியும் வழக்கமில்லாதவர்களாக, எந்த மொழியையும் அறிந்திராதவர்களாக
அவ்வளவு ஏன் தங்களுக்கென்று பெயர்கள் கூட இல்லாதவர்களாக அவர்கள்
உள்ளனர். உணவுக்காக வேட்டையாடுவதும், மூங்கில் மற்றும் பனையோலை வேய்ந்த
குடில்களில் வசிப்பதும் இவர்களது வாழ்க்கை முறை. உணவை தேடி நாடோடிகளாக
வாழ்கிறார்கள். இவர்களை பாதுகாக்க அந்நாடு முயற்சிகள் மேற்கொண்டு
வருகிறது.
|
| |