.
சற்று முன் :
ஆட்சியை பிடிப்பதற்காக பாரதீய ஜனதா வதந்திகளை பரப்பி வருகிறது சோனியா குற்றச்சாட்டு
இந்தியா இதுபோன்ற ஊழல் மற்றும் திமிரான அரசை பார்த்தது இல்லை காங்கிரஸ் மீது மோடி தாக்கு
பிரதமரின் செயல்பாடுகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தரவில்லை: பிரதமர் ஊடக ஆலோசகர்

Advertisement

இந்திய சினிமா 100 ஆண்டுகள்

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A
 
சினிமாவின் வரலாறு, ஆச்சரியங்களின் சுரங்கம்.
 
மற்ற கண்டுபிடிப்புகளுக்கு எல்லாம் ஏதாவது நோக்கம் இருந்தது. ஆனால், எந்த ஒரு அடிப்படை நோக்கமும் இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட சாதனம், சினிமா. 
 
கற்பனைக்கெட்டாத பல ஆச்சரியங்களையும், அமானுஷ்யங்களையும் சினிமாவினால் நம் கண் முன்பு படைக்க முடிகிறது.  கடவுள்களும், தேவலோகமும் இப்படித்தான் இருப்பார்கள் என்று கூட நமக்கு அடையாளம் காட்டுகிறது, சினிமா.  இத்தனை சிறப்பு மிக்க சினிமா இந்தியாவுக்கு வந்து 100 ஆண்டுகள் ஆகிறது. 
 
இந்திய சினிமாவுக்கு 100 வயது ஆனதையொட்டி நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் இன்று (21–ந் தேதி) தொடங்கி 24–ந் தேதி வரை இந்திய சினிமா நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. 
 
சென்னை நேரு உள்அரங்க விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்கிறார். நிறைவு நாள் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 4 மாநில முதல் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.
 
இந்திய சினிமா கடந்த 100 ஆண்டுகள் கடந்து வந்த பாதையினை சுருக்கமாக இந்த தொடரில் காணலாம்.   
 
சினிமா –
 
மாயா ஜாலங்கள் நிறைந்த இந்த மந்திர உலகில் மயங்காதவர்கள் யாரும் இல்லை.
 
பெரும்பாலானவர்களின் முதல் முக்கிய பொழுதுபோக்கு என்ற விசேஷ அங்கீகாரம் பெற்ற இந்த வெள்ளித்திரை வினோதம், முதலில் பிறந்தது வெளிநாட்டில் என்றாலும், இந்தியாவில் இது ஜனித்த நேரம் 1913 –ம் ஆண்டு மே மாதம் 3–ந் தேதி ஆகும்.
 
 அன்றுதான் இந்தியாவில் தயாரான  முதல் சினிமா படமான , ராஜா ஹரிச்சந்திரா, மும்பையில் உள்ள ஒரு தியேட்டரில் திரையிடப்பட்டது.
 
அன்று தொடங்கிய இந்திய சினிமாவின் வரலாறு, இப்போது நூற்றாண்டை தொட்டுவிட்டது.
 
 சினிமா என்ற அபூர்வ சாதனம் வெள்ளித்திரையை முதன்முதலாக தொட்டது, பிரான்சு நாட்டில்தான். 
 
1895–ம் வருடம், டிசம்பர் மாதம் 28–ந்தேதி. குளிர்காலத்தின் மாலை நேரம். பாரீஸ் நகரில் உள்ள கிராண்ட் கபே என்ற ஓட்டலின் கீழ்தளத்தின் விசாலமான ஹாலில், ஒரு பிராங்க் கட்டணம் செலுத்திவிட்டு, 35 பேர் படபடப்புடன் அமர்ந்திருந்தார்கள்.
 
ஹாலின் விளக்குகள் அணைக்கப்பட்டு, இருள் உருவாக்கப்படுகிறது. எதிரில் கட்டப்பட்டுள்ள திரையில் திடீர் என்று வெளிச்சம் பரவுகிறது. 
 
கண்ணிமைக்கும் நேரத்தில், அந்த திரையில் பிரமாண்டமான காட்சியாக மரக்கதவுகள் விரிய திறக்கின்றன. அதன் வழியாக வெளியேறும் தொழிலாளர்கள் கூட்டமாக நடந்து சென்று பிரதான சாலையை அடைகிறார்கள். இது முதல் காட்சி.
 
அடுத்ததாக சில பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதும், படகு ஒன்று அலைகள் எழுப்பிய நுரைகளுக்கு இடையே கரையை நெருங்குவதும், ரெயில் நிலையத்தில் ஒரு ரெயில் வந்து நிற்பதும், அதில் இருந்து பயணிகள் இறங்குவதுமாக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத அசையும் பட காட்சிகள் தனித்தனியாக அடுத்தடுத்து திரையிடப்பட்டு, முதல் சினிமாவாக அரங்கேறியது. 
 
இதை அரங்கேற்றிய பெருமைக்குரியவர்கள் லூமியர் மற்றும் லூயிஸ் லூமியர் என்ற பிரான்சு நாட்டை சேர்ந்த இரட்டையர்கள்.
 
இந்த கண்டுபிடிப்புக்கு முழுமையான சொந்தக்காரர்கள் லூமியர் சகோதரர்கள் என்றும் சொல்ல முடியாது. இவர்களின் கண்டுபிடிப்புக்கு பின்னால் பல விஞ்ஞானிகள் உள்ளனர்.
 
அந்த காலகட்டத்தில் இந்தியா, சீனா, ஜாவா போன்ற நாடுகளில் சினிமா போன்று திரையில் காட்டப்படும் பாவைக்கூத்து நடைமுறையில் இருந்தது. 
 
ஒளி ஊடுருவும் வகையில் மெல்லியதாக இழைத்து பக்குவப்படுத்தப்பட்ட மிருகங்களின் தோலில் வண்ண உருவங்களை வரைந்து, அவற்றை ஒளி உமிழும் விளக்குக்கும், வெண்திரைக்கும் நடுவில் அசைய செய்து, அதன் மூலம் நாடகம் போன்ற பாவைக்கூத்து கலை நிகழ்ச்சியை நடத்தினார்கள். பெரும்பாலும் அதில் புராண கதைகளே இடம்பெற்றன.
 
 
திரைக்கு முன்னால் அமர்ந்திருக்கும் பார்வையாளர்கள், இன்றைய சினிமா காட்சி போலவே இதையும் ரசித்தார்கள். திரையின் பின்புறத்தில் இருந்து கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களையும், விளக்கங்களையும் உண்மையான மனிதர்கள் தங்கள் குரலில், அந்த கதாபாத்திரங்களுக்காக பேசினார்கள்.
 
இதற்கு மாற்று என்ன? அல்லது அடுத்த முன்னேற்றம் என்ன? என்று ஆலோசிக்கப்பட்டது.
 
விஞ்ஞானத்தின் சாத்தியக்கூறுகளைக் கொண்டு ஒளி ஊடுருவும் பிலிமில் படங்களை பிரிண்ட் செய்தால், அதை மனித மனங்களை கவரும் வகையில் ஒரு காட்சிப்பொருளாக மாற்ற முடியும் என்ற அதிசயத்தை முதன்முதலில் கண்டறிந்தவர், பெல்ஜியம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய ஜோசப் பிளாட்டே.
 
அதன்பிறகு, துல்லியமாக படம் பிடிப்பது எப்படி, அதைக்கொண்டு எண்ணற்ற பிரதிகள் எடுப்பது எப்படி, என்று யோசிக்க தொடங்கினார்கள். இதுதொடர்பான முயற்சிகளில் பல நாடுகளில் பல்வேறு மனிதர்கள் ஈடுபட்டார்கள். படங்களை ஒன்றிணைத்து சலனமடைய செய்த முறையும், படம் பிடிக்க செலுலாயிட் பிலிமும் கிடைத்த பிறகு பலரும் இதை வைத்துக் கொண்டு பலவிதமான சோதனைகளில் ஈடுபட்டார்கள்.
 
ஏற்கனவே பல கண்டுபிடிப்புகள் மூலம் புகழ் பெற்றிருந்த தாமஸ் ஆல்வா எடிசனும் அவர்களில் ஒருவர். விரைவிலேயே தனது ஆராய்ச்சியின் பயனாக ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே பார்க்கக்கூடிய ‘கினிட்டோஸ்கோப்’ என்ற கருவியை அவர் கண்டுபிடித்தார். இது நடைபெற்ற வருடம், 1893.
 
சி.பிரான்சிஸ் ஜென்கின்ஸ் என்ற அமெரிக்க நாட்டு குமாஸ்தா ஒருவர் அசையும் படத்தை பலரும் பார்க்கும் வகையில் திரையில் விழச்செய்யும் கருவி ஒன்றை முதன்முதலாக வடிவமைத்தார். இவருடைய கண்டுபிடிப்பின் அடிப்படையிலேயே தற்போதைய சினிமா புரொஜக்டர்கள் இயங்குகின்றன.
 
தாமஸ் ஆல்வா எடிசனின் கினிட்டோஸ்கோப்பை பற்றி கேள்விப்பட்டிருந்த அகஸ்டே லூமியர், லூயிஸ் லூமியர் சகோதரர்கள், சலனப்படம் கண்டுபிடிப்பதில் தீவிர கவனம் செலுத்தினார்கள்.
 
அதில் கிடைத்த வெற்றி மூலம் அவர்கள் சினிமா படத்தை தயாரித்தனர். உலகின் முதல் சினிமா தயாரிப்பாளர்கள் என்ற பெருமை இவர்களையே சாரும். இவர்கள்தான் படம் பிடிக்கும் பிலிமின் அளவை முதன்முதலாக 35 மி.மீட்டர் என நிர்ணயம் செய்தனர். லூமியர் சகோதரர்களின் கேமரா ஒரு வினாடியில், 16 படங்களை பதிவு செய்தது.
 
சீரான ஒரே வேகத்தில் படம் எடுத்து, புரொஜக்டரிலும் அதே வேகத்தில் படத்தை ஓட்டியபோது, உலகின் முதல் சலனப்படம் பிறந்து விட்டது.
 
சினிமா பிறந்த நேரத்தில், அதிசயத்தக்க விதமாக படங்கள் திரையில் சலனங்களுடன் தென்பட்டதும், அவை சட்டென்று ஓடி மறைந்ததும், பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியது.
 
ரெயில் நிலையத்தில் ரெயில் வந்து நிற்கும் காட்சியை திரையிட்டு காட்டியபோது, ரெயில் என்ஜின் ஒன்று தங்களை நோக்கிப்பாய்ந்து வருவதை ஒரு நிழற்படம் என்று கருதாததால் பலர் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து பயத்துடன் எழுந்து ஓடினார்களாம். சிலர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்களாம். உலகின் முதல் விந்தையாக சினிமா இருந்ததே அதற்கு காரணம்.
 
திரையுலக வரலாற்றிலேயே முதன்முதலாக ஸ்டூடியோ, செட் ஆகியவற்றை அமைத்து படம்பிடித்த முதல் தயாரிப்பாளரும், டைரக்டருமாக மெலிஸ் இடம்பெறுகிறார். அதேபோல் சினிமாவில் வண்ணத்தை பயன்படுத்திய முதல் மனிதரும் இவர்தான்.
 
விஞ்ஞானி மற்றும் கண்டுபிடிப்பாளர் என்ற முறையில், ஆரம்பகால படங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர், தாமஸ் ஆல்வா எடிசன். சினிமாவின் பதிவு உரிமை அவரிடம் இருந்ததால், எடிசன் மற்றும் சில தயாரிப்பாளர்கள் இணைந்து உருவாக்கிய ஜெனரல் பிலிம் கம்பெனியின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டே அன்றைய படத்தயாரிப்பு நடைபெற்றது.
 
சினிமா பிரான்சில் பிறந்தாலும், அது வளர்ந்து சரியான வடிவம் பெற்று செழித்தது என்னவோ அமெரிக்க மண்ணில்தான். அங்கிருந்துதான் டைரக்டர்கள் என்ற புதிய இனம் பிறந்தது.
 
தொடரும்...
 
***
 
இந்திய  திரையுலகின் பிரபலங்கள்
 
கடந்த 100 ஆண்டுகளில், இந்திய சினிமா உலகில் சாதனையின் உச்சத்தை தொட்டவர்களில் சிலர் பற்றிய பட்டியல் இங்கே ஆங்கில அகர வரிசைப்படி தொகுத்து தரப்பட்டுள்ளது.
 
அடூர் கோபாலகிருஷ்ணன்– இந்திய திரையுலகில் குறிப்பிட்டு சொல்லும்படியான தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர். பல தேசிய விருதுகளையும், மாநில அரசின் விருதுகளையும் பெற்றவர். கேரளாவில், ‘பிலிம் சொசைட்டி’ என்ற அமைப்பை தொடங்கி, மலையாள திரையுலகின் வளர்ச்சிக்கு முன்னோடியாக இருந்து வருகிறார்.
 
அமிதாப்பச்சன்– ‘வர்த்தக ரீதியிலான இந்திய சினிமாவின் ராஜா’ என்று சொல்லும் அளவுக்கு இந்தியில் பல வெற்றி படங்களில் நடித்து சாதனை புரிந்தவர். ‘இந்தியாவின் சூப்பர் ஸ்டார்’ என்று ரசிகர்களால் மரியாதையுடன் அழைக்கப்படுகிறார்.
 
ஆஷா போன்ஸ்லே – மனதை கொள்ளை கொள்ளும் ஏராளமான பாடல்களை பாடியுள்ள இவர் பிரபல இந்திப்பாடகி லதாமங்கேஷ்கரின் தங்கை.
 
அசோக்குமார்–இந்திப்பட உலகில் தனக்கென தனி இடம் பிடித்த பிரபல கதாநாயகர்களில் ஒருவர்.
 
பி.ஆர்.சோப்ரா–இந்திப்பட உலகின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர். பல பிரம்மாண்டமான படங்களை தயாரித்த இவருக்கு மத்திய அரசு, ‘தாதாசாகேப் பால்கே விருது’ கொடுத்து கவுரவித்து இருக்கிறது.
 
தாதாசாகேப் பால்கே–இவருடைய சொந்தப்பெயர், துந்திராஜ் கோவிந்த் பால்கே. இந்திய திரையுலகின் முன்னோடி.
 
தேவ் ஆனந்த்–இந்திப்பட உலகின் முதல் ஸ்டைல் மன்னன். 1946 முதல் 1990 வரை கதாநாயகனாகவே நடித்து சாதனை புரிந்தவர்.
 
திலீப்குமார்–இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் இவர். இந்திப்பட உலகில் பல சாதனைகள் புரிந்தவர்.
 
குல்சார்–இவர், பாகிஸ்தானில் பிறந்து இந்தியாவில் வளர்ந்தவர். இந்திய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவர்.
 
குருதத்–‘இந்திய சினிமாவின் காதல் மன்னன்’ என்று இந்திப்பட ரசிகர்களால் அழைக்கப்பட்டவர்.
 
ஹேமமாலினி–தமிழகத்தில் இருந்து சென்று இந்திப்பட உலகின் ‘கனவுக்கன்னி’யாக இருந்தவர். அமிதாப்பச்சன், தர்மேந்திரா, ஜிதேந்திரா போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர்.
 
கமல்ஹாசன்–ஐந்து வயது சிறுவனாக சினிமாவில் அறிமுகமாகி, நடன உதவியாளர், கதாநாயகன், டைரக்டர், எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர். ஒரே படத்தில் (தசாவதாரம்) பத்து வேடங்களில் நடித்து சாதனை புரிந்தவர்.
 
லதா மங்கேஷ்கர்–‘இந்திய சினிமாவின் குயில்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட பாடகி. திரை இசை ராணி என்றும் புகழப்பட்ட மகத்தான சாதனையாளர்.
 
மம்முட்டி–மலையாள பட உலகின் ‘மெகா ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர். கேரள மாநிலம் கோட்டயத்தில் பிறந்த இவர், மலையாள படங்களில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதுகளை பெற்று இருக்கிறார்.
 
மணிரத்னம்–எந்த ஒரு டைரக்டரிடமும் உதவி டைரக்டராக பணிபுரியாமலே மிக சிறந்த படங்களை இயக்கி, இந்திய அளவில் புகழ் பெற்றவர். இவருடைய டைரக்ஷனில் நடிப்பதை லட்சியமாக கொண்ட பல நடிகர்கள் இருக்கிறார்கள்.
 
எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் பல சினிமா பிரபலங்கள் நாளை...

category:

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Most Read